Add1
logo
தண்ணீரை தேடி வந்த புள்ளிமான்: வேட்டையாடிய தெரு நாய்கள் (படங்கள்) || டிடிவி.தினகரன் அதிர்ச்சி அடையவில்லை: பா.ஜனதாவின் சதிதிட்டம் -நாஞ்சில் சம்பத் || லஞ்சம் வாங்குபவர்களை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு பாராட்டு விழா: கலெக்டர் பேச்சு || என்.கே.விஸ்வநாதன் மறைவு: விஜயகாந்த் இரங்கல் || விவசாயிகளுக்கு ஆதரவான பந்த் போராட்டம் (படங்கள்) || மாவோயிஸ்ட் தாக்குதலில் 26 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் || துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் செந்தில்குமார் உடல் அடக்கம் || குடிகார மகனை கொலை செய்த தந்தை கைது || லாரி ஓட்டுனர்களிடம் பணம், செல்போன் பறிப்பு, லாரி கடத்தல்: போலீஸ் காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் (வீடியோ) || நிர்வாணப்படுத்தி, ஆபாசமாகப் பேசியதை கண்டித்து திருச்சி மத்திய சிறையில் மாணவிகள் உண்ணாவிரதம்! || விவசாயி வீட்டில் 28 பவுன் நகை- ரூ.40 ஆயிரம் கொள்ளை ||
சிறப்பு கட்டுரை
விவசாயிகளுக்கு ஆதரவாக ஒருமித்த குரல் (வீடியோ)
......................................
பயங்கரவாதிகளின் பிடியில் நெடுவாசலா?
......................................
வாருங்கள் வரவேற்கிறோம்... ஊட்டியில் உங்களை வரவேற்கும் குரங்குகள்
......................................
எத்தனை அமைதிப்படை அமாவாசைகள்! முன்னாள் எம்.எல்.ஏ., கமெண்ட்!
......................................
அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் அது வேற வாய்...
......................................
விட்டுக்கொடுப்பாரா? ஆட்சி நீடிக்குமா?
......................................
விஜய் மல்லையா! - கடன், கைது, விடுதலை!!
......................................
லேடீஸ் ஹாஸ்டலுக்குள் ஆண்கள் அட்டகாசம்!
......................................
தமிழக பெண் கேதன் தேசாய்!
......................................
டி.டி.வி. தினகரன்... அதிர்ச்சியடைந்த இந்திய அரசியல் ஜாம்பாவான்கள்!
......................................
பா.ஜ.க காட்டும் அம்பேத்கர் மாயை! அம்பேத்கர் வேண்டிய புதிய இந்தியா
......................................
மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்.கே.நகரில்... திமுக பொதுக்கூட்டம் (வீடியோ)
......................................
டாஸ்மாக் என்கிற மதுக்கடைகளுக்குப் பின்னால் மயங்கிக் கிடக்கும் அரசியல்!
......................................
சாமளாபுரம் போலீஸ் அராஜகம்..! - உருகவைக்கும் நேரடி சாட்சிகள்
......................................
மரண பயம் காட்டும் மெட்ரோ பள்ளங்கள்!
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 4, ஜனவரி 2017 (9:45 IST)
மாற்றம் செய்த நாள் :4, ஜனவரி 2017 (9:45 IST)




கோபாலபுரம் வீட்டுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் வந்தது கலைஞரின் உதவியாளர்களுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. "நாங்க கரூர்காரங்க. எங்கம்மா சமாதியில அஞ்சலி செலுத்த வந்தோம். அப்படியே அய்யாவோட உடல்நலனை விசாரிச்சிட்டுப் போகலாம்னு வந்தோம்'’’ என்றனர். அங்கிருந்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களை வீட்டுக்குள் வரவேற்றுப் பேசினார். 

அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை  பெற்றபோது மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலன் விசாரித்தார். ராஜாஜி ஹாலில் ஜெ. உடல் வைக்கப்பட்டிருந்தபோதும் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசியலில் ஏறத்தாழ 30 ஆண்டுகளாகக் காணாமல் போன இந்த அடிப்படை நாகரிகத்தை  மீட்கும்வகையில் அமைந்த ஸ்டாலினின் செயல்பாடுகள், கட்சி எல்லைகளைக் கடந்த கவனத்தைப் பெற்றன.

திருவள்ளூர் மாவட்ட கிராமப்புறங்களில் வாரந்தோறும் இளைஞர்களைத் திரட்டி திராவிட இயக்கக்  கொள்கைகளையும், தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களால் அனைத்து மக்களும் அடைந்த பலன்களையும் விளக்கி வரும் தி.மு.க.வின் சட்டத்துறை இணைச்  செயலாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமன் நம்மிடம், “""கட்சி சார்பற்ற இளைஞர்கள்கூட எங்க தளபதி மு.க.ஸ்டாலினின் "நமக்கு நாமே' பயணத்தாலும் தொடர்ச்சியான அவரது அணுகுமுறையாலும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். அரசியலில் ஒரு மாற்றத்தைக் காண முடிகிறது''’ என்கிறார்.

""கலைஞருக்கும் அவர் குடும்பத்திற்கும் எதிரான அரசியலை எம்.ஜி.ஆர்., ஜெ. இருவரும் தீவிரமாகக் கையில் எடுத்து செயல் பட்டனர். தி.மு.க.மீது அவர்களிருவரும் வைத்த "குடும்ப அரசியல்' என்ற குற்றச்சாட்டு, இன்று அ.தி.மு.க.வுக்கும் அப்படியே பொருந் தும் என்பதை ஜெ. உடலைச் சுற்றி நின்ற சசிகலா வகையறாக்கள் அப்பட்டமாக வெளிப்படுத்தின. அ.தி.மு.க. ஆதரவாளர்கள் தரப்பி லேயே இது பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கலைஞர் மீது அ.தி.மு.க. தலைமை விதைத்த பகையுணர்ச்சி, ஸ்டாலின்மீது அவ் வளவாக இல்லை. சசிகலாவா ஸ்டாலினா என்றால் ஸ்டாலினின் அரசியல் அனுபவமும் செயல்பாடுகளும் புதிய தலைமுறையை அதிகம் ஈர்க்கின்றன'' என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.

அதேநேரத்தில், அ.தி.மு.க.வின் அடிமட்டத் தில் அதிருப்தி இருந்தாலும் நிர்வாகிகள் தரப்பில் முனகல்கூட வெளிப்படாமல் தன்னை ஒருமனதாகத் தேர்வுசெய்ய வைத்துள்ளார் சசிகலா. அவரது குடும்ப உறவுகளுக்குள்ளேயே அதிகாரப் போட்டி இருக்கிறது. ஆனால் வெளியில் விட்டுக் கொடுக்காமல் செயல்படுகிறார்கள். தி.மு.க.விலோ கலைஞரின் பிள்ளைகளான ஸ்டாலின் -அழகிரி -கனிமொழி இடையிலான அரசியல் போட்டி அடிக்கடி வெட்ட வெளிச்சமாகிறது. இதனை சரிப்படுத்தி -ஒருங்கிணைப்பின் மூலம் தி.மு.க.வைப் பலப்படுத்துவதுதான் மு.க.ஸ்டாலினுக்குள்ள முதல் சவால்.

"ஜெ. மரணத்தினால் அ.தி.மு.க.வில் வெற்றிடமும் சலசலப்புகளும் ஏற்படும்' என அக்கட்சியின் ஆதரவாளர் களே எதிர்பார்த்த நிலையில், சசிகலாவுக்கான லாபி அதனை சென்னை முதல் டெல்லிவரை சரியாக சமாளித்தது. தி.க. தலைவர் வீரமணியின் ஆதரவு அறிக்கை, விடுதலை சிறுத் தைகள் திருமாவளவன் சந்திப்பு என எதிர்த்தரப்பை யும் தங்கள் பக்கம் திருப்பு வதில் அது வெற்றி பெற்றது. தி.மு.க. தரப்பிற்கோ தமிழக அரசியல் களத்திலும் டெல்லியிலும் இதுபோல வலுவாக லாபி செய்ய நம்பிக்கையான ஆட்கள் இல்லை. அதை உருவாக்கவும் முடியவில்லை.



"ஆரோக்கியமான அரசியல் என்பது  பெயர் வாங்கித் தரும்; அதிரடி அரசியல்தான் ஓட்டு வாங்கித் தரும்' என்கிற தி.மு.க.வின் சீனியர்கள், ""2006-2011 தி.மு.க. ஆட்சியின்போது ஊருக்கு ஊர் அ.தி.மு.க. தரப்பில் தொடர்ச்சியான ஆர்ப் பாட்டங்கள் நடத்தப்பட்டன. கடைசி 6 மாதங்களில் ஜெ.வே முக்கிய நகரங்களில் கூட்டம் போட்டு குடும்ப அரசியல் பற்றி ஆவேசமாகப் பேசினார். அதற்கான ஆதாரங்களைத் தருவதி லிருந்து கூட்டத்தை லைவ்வாக ஒளிபரப்புவது வரை ஜெயா டி.வி. முழுமையாக செயல்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளிலும் சரி, இந்த 6 மாதத்திலும் சரி... தி.மு.க. நடத்திய பெரும்பாலான போராட்டங்கள் அடையாள போராட்டங் களாகத்தான் இருந்தன. ஊடகத்தின் மூலம் அதை மக்கள் மனதில் பதிய வைக்கும் செயல்பாடுகளும் சுத்தமாக இல்லை''’என்கிறவர்கள், கலைஞரை நினைவுபடுத்துகின்றனர்.

""1991ஆம் ஆண்டில் தி.மு.க.வுக்கு சட்ட மன்றத்தில் ஒரே ஒரு  எம்.எல்.ஏ.தான். பலமான ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வையும் அதன் தலைமையையும் கண்டு எல்லோரும் பயந்தனர். ஜெ.வை "ஜான்சி ராணி' என்று புகழ்ந்தனர். அப்போது கலைஞர்தான், "அவர் ஜான்சி ராணி இல்லை. டான்சி ராணி' என்று டான்சி ஊழலை திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டி, ஒவ்வொரு ஊழலாக அம்பலப்படுத்தி 1996 தேர்தலில் ஜெ. உள்பட அ.தி.மு.க.வைப் படுதோல்வியடையச் செய்தார். "கலைஞரின் இந்த வேகத்தைத்தான் தி.மு.க.வின் எதிர்காலத் தலைவரான ஸ்டாலினிடம் எதிர்பார்க்கிறோம். சசிகலா குடும்பத்தின் 1000 கோடி ஜாஸ் சினிமாஸ் தொடங்கி எல்லாவற்றையும் வெட்டவெளிச்சமாக்க வேண்டும்'' என்கின்றனர்.

மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறை சித்ரவதைக்குள்ளான நெருக்கடிநிலை காலத்தில் கலைஞருக்குப் பெரும்பலமாக இருந்து தி.மு.க.வை காப்பாற்றியவர்கள் அதன் தொண்டர்கள்தான்.  வாக்கு வலிமைமிக்க தொண்டர் பலம்தான், பொதுக்குழுவில் புதிய பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு இன்றைய நெருக்கடியிலிருந்து மீள உதவும். சவால்களை சந்திக்கும் தருணம் இது.

-லெனின்





தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : vijay Country : India Date :1/4/2017 12:09:30 PM
வீரமணி , திருமா எல்லாம் ஒரு தலைவரா ! அவர்களின் ஆதரவை வைத்து கொண்டு ஒரு வார்டு conucilor கூட ஜெயிக்க முடியாது !