Add1
logo
எடப்படி பழனிச்சாமி பதவி வாடகை சேர் போன்றது: பொன்.ராதாகிருஷ்ணன் || சிறுபான்மை என்கின்ற வார்த்தையை மக்கள் மனதில் இருந்து எடுத்து குப்பையில் போட வேண்டும்: ராதாகிருஷ்ணன் || சட்டப்பேரவையில் என்ன நடந்தது? ஆளுநர் அறிக்கை கோரினார் || சிவகாசியில் 850 பட்டாசு தொழிற்சாலைகள் மூடல் - 5 லட்சம் பேர் வேலை இழப்பு || சொந்த ஊர் திரும்ப எம்.எல்.ஏக்கள் தயக்கம் || தயவு செய்து எந்த உடன்பிறப்பும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் :ஸ்டாலின் வேண்டுகோள் || ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை || சபாநாயகர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டார்: திருச்சி சிவா || கவர்னரிடம் தி.மு.க. எம்.பி.க்கள் மனு || அந்த தீர்மானம் செல்லாது; செல்லாத தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் ஏற்கத்தக்கத்தல்ல:ஸ்டாலின் || அமைச்சர் தங்கமணி தொகுதிக்கு வந்தால் விட மாட்டோம் -தீபா பேரவை முடிவு ! || சக்திவேல் எம்.எல்.ஏ வீட்டை முற்றுகையிட்டு 50 பெண்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்) || அண்ணாமலை பல்கலை மாணவர்களின் குருதிக் கொடையாளர்கள் பட்டியல் -அரசு இணையத்தில் பதிவேற்றம் ||
சிறப்பு கட்டுரை
ஒரு கைதியின் கதறல்...!
......................................
தமிழக சட்டமன்றத்தில் பலப்பரீட்சை : அன்றும்…… இன்றும்…
......................................
ஹீரோ குன்ஹா...
......................................
ஜெ. சாவை விட டாக்டர்கள் பேசுறது ... ராதாரவி
......................................
பெண்கள் அறிவியல் துறைகளில் பங்குபெறுவதற்கான சர்வதேச தினம்
......................................
பன்னீருக்கு ஜெட்லி! சசிகலாவுக்கு சாமி!
......................................
சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ் - வலுக்கும் எதிர்ப்பு குரல்.. (வீடியோ)
......................................
செம்மொழித் தமிழ் பொற்காலத் திறவுகோல் -மணவை முஸ்தபா
......................................
நிழல் நிஜமானது! மோடி-சசிகலா டீல்!
......................................
உலக புற்றுநோய் தினம்
......................................
பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி (வீடியோ)
......................................
எளிமையான முதல்வருக்கு பெயர் ஓ.பி.எஸ் அல்ல... ஓ.பி.ஆர்.
......................................
பெப்சி, கோக் - தடையும் விடையும்! - லெனின்
......................................
ஜல்லிக்கட்டு - தீர்வை நோக்கிய ஒரு பார்வை! மருத்துவர் வீ.புகழேந்தி
......................................
போராட்டத்தில் வன்முறை : பிரபலங்கள் கருத்து (வீடியோ)
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 3, ஜனவரி 2017 (17:22 IST)
மாற்றம் செய்த நாள் :3, ஜனவரி 2017 (17:22 IST)


சாவித்ரிபாய் பூலே

இன்றைக்கு பெண்களுக்காக எத்தனையோ பெண்ணுரிமை சங்கங்களும், பெண்ணுரிமைப் போராளிகளும் செயல்பட்டுவருகின்றனர். அவர்களெல்லாம் உதாரணமாகப் பின்பற்ற வேண்டியவர் சாவித்ரிபாய் பூலே.

சாவித்ரிபாய்க்கு மூன்று முகம் உண்டு. ஒன்று சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் பெண்கள் உரிமை குறித்து யோசித்தவர். இரண்டாவதாக, ஆதிக்க சாதிகளின்கீழ் நசுங்கி துயரப்பட்டுக்கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, விடுதலை குறித்து சிந்தித்தவர். மூன்றாவதாக, கவிஞர். நான்காவதாக ஓர் அம்சம் உண்டு. பிரபல சமூகப் போராளியான ஜோதிராவ் பூலேவின் மனைவி என்பதுதான் அது. அன்று சாவித்ரிபாய் ஆற்றிய பணிகள் குறைவாக இருந்தபோதும், பழமையும் ஜாதிய கெடுபிடியும் நிறைந்த இந்தியாவில் இப்பணிகள் எவ்வளவு முக்கியமானவை என நாம் இன்று உணரமுடியும்.

1831-ஆம் ஆண்டு, ஜனவரி 3-ஆம் தேதி மகாராஷ்டிராவின் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சாவித்ரிபாய். இந்தியாவில் அன்று பால்ய விவாகம் சர்வ சாதாரணம். பன்னிரண்டு வயதான ஜோதிராவ் பூலேவுக்கு, ஒன்பதாவது வயதில் மணமுடித்து வைக்கப்பட்டார் சாவித்ரி. அதிர்ஷ்டவசமாக, அன்றைய காலகட்டத்து ஆண்களைப் போலல்லாமல், அவரது கணவரான ஜோதிராவ் பூலே வித்தியாசமானவராக, சமூகச் சிந்தனையுடையவராக இருந்தார். தனது மனைவிக்கு எழுதப் படிக்க கற்றுத் தந்ததுடன், தனது சமூகச் சிந்தனைகளையும் அவரிடம் விதைத்தார். அது விரைவிலேய முளைவிட்டு வளர்ந்து, பூத்து, காய்த்து பலனளிக்கத் தொடங்கியது.

தனது கணவரின் மூலம் பெற்ற கல்வியறிவை, பூனேவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கற்றுத் தர பயன்படுத்தினார். அன்றைய காலகட்டத்தில் உலகையே அச்சுறுத்திய ப்ளேக் நோய், இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. பெண் கல்வி, ஆதிக்க சாதிகளால் தீண்டப்படாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டோருக்கு உதவுதல் என்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், பூனேவுக்கு அருகில், ஏழை மக்கள் சிகிச்சைபெற மருத்துவ மையமொன்றை ஆரம்பித்து தனது வளர்ப்புமகனான யஷ்வந்துடன் இணைந்து மருத்துவ உதவிகளையும் செய்தார்.

இச்சேவையின்போது சாவித்ரிபாய் பூலே ப்ளேக் நோய் தொற்று ஏற்பட்டு, மார்ச் 10,1897-ல் உயிரிழந்தார். இந்தியாவின் சிறந்த பெண்மணிகளின் பட்டியல் ஒன்றை தயார்செய்தால், அதில் சாவித்ரிபாய் பூலேயின் பெயரும் இடம்பெறுமென்பது நிச்சயம்.

க. சுப்பிரமணியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Rahumuthullah Country : United Arab Emirates Date :1/9/2017 2:11:42 PM
நன்றி நக்கீரர் ஐயா