Add1
logo
தண்ணீரை தேடி வந்த புள்ளிமான்: வேட்டையாடிய தெரு நாய்கள் (படங்கள்) || டிடிவி.தினகரன் அதிர்ச்சி அடையவில்லை: பா.ஜனதாவின் சதிதிட்டம் -நாஞ்சில் சம்பத் || லஞ்சம் வாங்குபவர்களை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு பாராட்டு விழா: கலெக்டர் பேச்சு || என்.கே.விஸ்வநாதன் மறைவு: விஜயகாந்த் இரங்கல் || விவசாயிகளுக்கு ஆதரவான பந்த் போராட்டம் (படங்கள்) || மாவோயிஸ்ட் தாக்குதலில் 26 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் || துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் செந்தில்குமார் உடல் அடக்கம் || குடிகார மகனை கொலை செய்த தந்தை கைது || லாரி ஓட்டுனர்களிடம் பணம், செல்போன் பறிப்பு, லாரி கடத்தல்: போலீஸ் காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் (வீடியோ) || நிர்வாணப்படுத்தி, ஆபாசமாகப் பேசியதை கண்டித்து திருச்சி மத்திய சிறையில் மாணவிகள் உண்ணாவிரதம்! || விவசாயி வீட்டில் 28 பவுன் நகை- ரூ.40 ஆயிரம் கொள்ளை ||
சிறப்பு கட்டுரை
விவசாயிகளுக்கு ஆதரவாக ஒருமித்த குரல் (வீடியோ)
......................................
பயங்கரவாதிகளின் பிடியில் நெடுவாசலா?
......................................
வாருங்கள் வரவேற்கிறோம்... ஊட்டியில் உங்களை வரவேற்கும் குரங்குகள்
......................................
எத்தனை அமைதிப்படை அமாவாசைகள்! முன்னாள் எம்.எல்.ஏ., கமெண்ட்!
......................................
அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் அது வேற வாய்...
......................................
விட்டுக்கொடுப்பாரா? ஆட்சி நீடிக்குமா?
......................................
விஜய் மல்லையா! - கடன், கைது, விடுதலை!!
......................................
லேடீஸ் ஹாஸ்டலுக்குள் ஆண்கள் அட்டகாசம்!
......................................
தமிழக பெண் கேதன் தேசாய்!
......................................
டி.டி.வி. தினகரன்... அதிர்ச்சியடைந்த இந்திய அரசியல் ஜாம்பாவான்கள்!
......................................
பா.ஜ.க காட்டும் அம்பேத்கர் மாயை! அம்பேத்கர் வேண்டிய புதிய இந்தியா
......................................
மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்.கே.நகரில்... திமுக பொதுக்கூட்டம் (வீடியோ)
......................................
டாஸ்மாக் என்கிற மதுக்கடைகளுக்குப் பின்னால் மயங்கிக் கிடக்கும் அரசியல்!
......................................
சாமளாபுரம் போலீஸ் அராஜகம்..! - உருகவைக்கும் நேரடி சாட்சிகள்
......................................
மரண பயம் காட்டும் மெட்ரோ பள்ளங்கள்!
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 3, ஜனவரி 2017 (15:12 IST)
மாற்றம் செய்த நாள் :3, ஜனவரி 2017 (15:12 IST)


கப்பம் மறுத்த கட்டபொம்மு!

“வானம் பொழிகிறது- பூமி விளைகிறது உனக்கு ஏன் கொடுக்கவேண்டும் கப்பம்?” என்ற வசனத்தைக் கேட்டதுமே தமிழர்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனை நினைவுக்கு வந்துவிடும். ஆங்கிலேயர்க்கு கப்பம் கட்டமறுத்துப் போராடி, அவர்களால் தூக்கிலிடப்பட்ட கட்டபொம்மனின் பிறந்த தினம்தான் ஜனவரி 3. ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதிக்கு 1760-ஆம் ஆண்டு, ஜனவரி 3-ல் பிறந்தவன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். கிட்டத்தட்ட அதன்பின் 30 ஆண்டுகளுக்குப்பின் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தார் கட்டபொம்மன். அவரது சகோதரர்களான ஊமைத்துரையும், துரைசிங்கமும் ஆட்சிப்பொறுப்பில் அவருக்குத் துணைநின்றனர்.



கட்டபொம்மனுக்கு முதல் இடைஞ்சல், பாளையக்காரர்களிடம் வரிவசூலிக்க முடிவுசெய்த ஆங்கிலத் தளபதி மாக்ஸ்வெலிடமிருந்து வந்தது. பின் 1797-ல் ஆங்கிலத் தளபதி ஆலன் துரை என்பவன் பெரும்படையுடன் வந்து பாஞ்சாலங்குறிச்சி மீது போர்தொடுத்தான். எனினும் அம்முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.

இதையடுத்து ஆங்கிலேய கலெக்டர் ஜாக்சன் துரை கட்டபொம்மனை சந்திக்க அழைப்புவிடுத்தார். ஆனால், கட்டபொம்மன் சந்திக்கவந்தபோது, அதனைத் தவிர்த்தபடியே இருந்தார். இறுதியில் இராமநாதபுரத்தில் சந்திப்பு நடந்தது. சந்திப்பின்போதே, கட்டபொம்மனைக் கைதுசெய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. அதை முறியடித்து கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி திரும்பினார்.

1799-ல் ஆங்கிலேயத் தளபதி பானர்மேன் தலைமையில் பெரும்படையொன்று பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டது.

ஆங்கிலேயர்களோடு உள்ளூர் எட்டப்பர்களும் கைகோர்த்ததால், கட்டபொம்மனின் கோட்டை வீழ்ந்ததோடு, அவர் கைதுசெய்யப்பட்டு கயத்தாறில் வைத்து தூக்கிலிடப்பட்டார்.

பாஞ்சாலங்குறிச்சியைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், அவரது கோட்டையை இடித்துத் தகர்த்தோடு, பின் ஊமைத்துரை, துரைசிங்கத்தையும் ஒழித்தபின் தமிழக வரைபடத்திலிருந்தே பாஞ்சாலக்குறிச்சியை அகற்றினார்கள் என்பதை யோசித்தாலே, பொம்முவின் மீதிருந்த ஆங்கிலேயரின் கோபத்தை உணரமுடியும்.

இந்தியாவின் வடமுனையிலேயே பெரும்பாலான மன்னர்கள் ஆங்கிலேயரை எதிர்க்கத் துணியாத காலகட்டத்தில் எதிர்த்துப் போர்புரிந்ததில் இருக்கிறது கட்டபொம்மனின் முக்கியத்துவம். காங்கிரஸ் போன்ற ஸ்தாபனங்கள் உருவாகி அரசியல்ரீதியிலான சுதந்திரப் போராட்டங்கள் திரளாத நேரத்தில், மக்கள் அந்நியர் ஆட்சிக்கெதிராக போராடாத நேரத்தில், கட்டபொம்மன் ஆங்கில அரசை எதிர்த்துப் போராடியதில் இருக்கிறது. அதனால்தான் சுதந்திரப் போராட்ட முன்னோடி வீரர்களில் ஒருவராக கட்டபொம்மன் மதிக்கப்படுகிறார்.

-சுப்பிரமணியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : udayakumar [ tamil nadu ] [ coimbatore ] Date :1/18/2017 11:23:28 PM
சுதந்திர சரித்திரத்தில் தமிழ் வீரத்தின் முழு அடையாளம் , என்றும் எம் இதய சிம்மாசனத்தில் .
Name : Avai Nayagan Country : India Date :1/10/2017 2:19:45 PM
சிறப்பான கட்டுரை. 1799 இந்த ஆண்டு இந்திய விடுதலைப் போருக்கு முக்கியமானது. ஆங்கில அரசுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்த மாவீரன் திப்பு. இதே ஆண்டில்தான் அவரை வென்று மகிழ்ச்சியில் இருந்தார்கள். எனவே அடுத்த குறியாக கட்டபொம்மு ஆனார். அடுத்து மருது சகோதரர்கள் எதிர்க்குரலைத் தொடர்ந்தனர். மேற்குத் தமிழகத்தில் தீரன் சின்னமலை, கோபால் நாயக்கர் எனப் பல மாவீரர்கள் போரை முன்னெடுத்தனர். விடுதலைப்போரின் தொடக்கப்புள்ளி தமிழகம்தான். கட்டுரை இதனை வலியுறுத்துகிறது. நன்றி.