Add1
logo
நீதிபதி கிருபாகரனை விமர்சித்த விவகாரம் - மன்னிப்பு கோரிய ஆசிரியர்கள்! || ஓபிஎஸ் அணி என எங்களை ஒதுக்க வேண்டாம்: மைத்ரேயன் || விமானங்களை விற்பனைக்கு வைத்து டோர் டெலிவரி செய்த அலிபாபா! || பிற மாநிலத்தவரை தமிழக அரசுப் பணிகளில் அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன் || மிரட்டும் தொணியில் பேசக்கூடாது: அமைச்சர்களுக்கு பிரகாஷ்ராஜ் எச்சரிக்கை || புதிதாக 70 மணல் குவாரிகள் திறப்பதை அதிமுக அரசு கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் || கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக ஆர்.கே.நகர் தேர்தல்? || ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி; சாய்னா 2வது சுற்றுக்கு முன்னேற்றம் || தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: கடலோர காவல்படை மறுப்பு || சர்க்கரை விலையேற்றத்தை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் || துணை முதல்வர் தொகுதியில் கந்துவட்டி அராஜகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி! || “அடித்தே கொன்று விட்டது போலீஸ்..” -இருவரின் சாவுக்கு நியாயம் கேட்கும் கிராமம்! || என் கேள்விக்கு ஸ்டாலினை பதிலளிக்க சொல்லுங்கள் பார்ப்போம்: சைதை துரைசாமி ஆவேசம் ||
சிறப்பு செய்திகள்
டிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை!
 ................................................................
யார் இந்த பைனான்சியர் அன்புச்செழியன்...
 ................................................................
முட்டைக்கும் வந்துருச்சா ஆபத்து?
 ................................................................
மூன்று பெண்களின் மகனான விவேக்கின் கதை!
 ................................................................
பூனைகளுக்குப் பதவி தரும் ஆங்கிலேய அரசு...
 ................................................................
ஜெயலலிதாவை ஒன்னும் தெரியாத குழந்தையாக்கும் மீடியா!
 ................................................................
சிசுக்களின் உயிர்! தனியார் மருத்துவமனைகளின் தரம்!
 ................................................................
இந்தியாவின் உலக அழகிகள்!
 ................................................................
கலைஞரின் சரியான முடிவும், தவறான முடிவும்!
 ................................................................
சிதைகிறது மோடியின் இமேஜும், பில்டப்பும்!
 ................................................................
மெர்சலைத் தொடர்ந்து பத்மாவதி?
 ................................................................
மைசூர்பாகிற்கும் போட்டி போடும் கர்நாடகா!!!
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று...
 ................................................................
அரசியல் பின்னணி, சதி, வன்மம் இருக்கிறது:
 ................................................................
ஜெ. வீட்டில் ரெய்டு... செம்மலை கருத்து
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (1:25 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (8:20 IST)


சிறைக்கு செல்ல வேண்டியது யார்?
மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ‘பணமதிப்பு இழப்பு பொருளாதாரத்தை முடக்கிய பொறுப்பற்ற செயல்’ என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.

கையில ரூபா நோட்டு இருந்தால் எடுத்து பாருங்க. I PROMISE TO PAY நான் வாக்குறுதி தருகிறேன். இந்த காகிதத்தை என்னிடம் கொண்டு வந்தால் இதற்கு ஈடான மதிப்பை நான் தருகிறேன் என்று ஒருவர் கையெழுத்துப் போட்டிருப்பார் ரிசர்வ் வங்கியின் கவர்னர். இது அரசினுடைய வாக்குறுதி அல்ல. பிரதமருடைய வாக்குறுதி அல்ல. அமைச்சரவையினுடைய வாக்குறுதி அல்ல. ரிசர்வ் வங்கியினுடைய வாக்குறுதி. 

ஒவ்வொரு தாளையும் எடுத்துச் சென்றால் ரிசர்வ் வங்கி உடனடியாக அதற்கு ஈடான பணத்தை தரணும். அந்த தாள் செல்லாது என்று அறிவிப்பதற்கு அரசுக்கு அதிகாரம் கிடையாது. ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதே சர்ச்சைக்குரிய விஷயம். 

1948ல் பெரும் மதிப்பு ரூபாய் தாள்களை செல்லாது என்று நாடாளுமன்றத்திலே சட்டம் நிறைவேற்றினார்கள். அதேபோல முராஜிதேசாய் பிரதமராக இருந்த காலத்தில் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றினார்கள். 

ஆனால் நவம்பர் 8ஆம் தேதி அன்று பிரதமர் அறிவித்தபோது, அவசர குடுக்கையாக சில காரியங்களை செய்தாரையொழிய, அவசர சட்டம் கிடையாது. ரிசர்வ் வங்கியினுடைய இயக்குநர்கள் கூடி இதனை விவாதித்து, இன்னென்ன காரணங்களுக்காக இந்த ரூபாய் தாள்கள் இனி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்கிறோம் என்று சொல்லனும். நவம்பர் 8ஆம் தேதி மாலை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூடியதாக சொல்கிறார்கள். ரிசர்வ் வங்கியில் கவர்னர் இருக்கிறார். துணை கவர்னர்கள் இருக்கிறார்கள். அதனைத் தாண்டி 14 பேர் டைரக்டர்கள் இருக்க வேண்டும். காங்கிரஸ் அரசு ஆட்சி செய்தபோது 14 டைரக்டர்கள் இருந்தார்கள். 

நவம்பர் 8ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் டைரக்டர்கள் 4 பேர் தான். கடந்த இரண்டரை ஆண்டு காலமாக 10 டைரக்டர்கள் பதவியை காலியாக வைத்திருந்தார்கள். இப்போது இருப்பது 4 டைரக்டர்கள். அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டது வெரும் 3 டைரக்டர்கள். ரிசர்வ் வங்கியின் கவர்னர், 4 துணை கவர்னர்கள் ஏற்கனவே அரசு தயாரித்து தந்த ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். எந்த டைரக்டர் எந்த கேள்வியை கேட்டார். என்ன விளக்கங்களை ரிவர்வ் வங்கியின் கவர்னர் தந்தார். அந்த அஜண்டா பேப்பரில் என்ன எழுதியிருக்கு. யாருக்கும் இதுவரைக்கும் தெரியாது. 

நானும் ஒரு மாதமாக கேட்கிறேன், ஒரு கூட்டம் நடந்தால் ஒரு மினிட் புக்கில் எழுதனும். என்ன தீர்மானம், என்ன நிறைவேறியது. என்ன காகிதம் வைச்சாங்க. எந்த பொருளை வைச்சாங்க. விவாத பொருள் இருக்கனுமுல்ல. ரிசர்வ் வங்கியின் விவாதப் பொருள் என்ன. என்ன விவாதம் நடந்தது. எந்த செய்திகள் டைரக்டர்களிடம் சொல்லப்பட்டது. எந்தக் கேள்விகளை அந்த டைரக்டர்கள் கேட்டார்கள். எந்த ஐயங்களுக்கு விளக்கம் தரப்பட்டது. யார் அதனை எதிர்த்தார்கள். யார் ஆதரித்தார்கள். இதுவரைக்கும் ரிசர்வ் வங்கியில் இருந்து எந்த பதிலும் கிடையாது. அரசு தரப்பில் இருந்தும் பதில் கிடையாது. ஐந்தரை மணிக்கு கூடியவர்கள், இவ்வளவு பெரிய முடிவை 6 மணிக்கு எடுக்கிறார்கள். முடிவு எடுத்தப்பிறகு அந்த முடிவு அரசுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. அங்கு அமைச்சரவை தயாராக கூடியிருக்கிறது. நாடகத்திலே காட்சி ஒன்று மும்பையில் நிறைவேறுகிறது. நாடகத்தின் காட்சி இரண்டு டெல்லியில் அரங்கேறுகிறது. அந்த தீர்மானத்தை அமைச்சரவையில் வைத்து ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்திருக்கிறது. அதை ஏற்றுக்கொள்கிறோம் என்று ஏதோ அவர்கள் பரிந்துரை செய்த மாதிரியும், இவங்க ஏத்துகிற மாதிரியும். இது ஒரு மோசமான நாடகம். மோசடியான நாடகம் என்றுகூட சொல்லலாம். ஏற்கனவே பேசி வைத்த, எழுதி வைத்த, தயாரித்து வைத்த காகிதங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதைப்போல ஏற்றுக்கொண்டு, பரிந்துரை செய்வதைப்போல பரிந்துரை செய்து, இவர்கள் அமைச்சரவையில் விவாதித்தைப்போல விவாதித்து, திடீரென்று 7 மணிக்கு கூட்டம் முடிகிறது. அனைத்து அமைச்சர்களும் சிறை வைக்கப்படுகிறார்கள். வெளியே போகக் கூடாது. அனைத்து அமைச்சர்களின் மொபைல்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. பிரதமர் 8 மணிக்கு உரையாற்றுகிறார். அந்த உரை முடிந்த பிறகுதான் நீங்கள் வெளியே போக வேண்டும் என்று மும்பையில் அந்த 3 டைரக்டர்களும் சிறை வைக்கப்பட்டார்கள். இங்கே டெல்லியில் அனைத்து அமைச்சர்களும் சிறை வைக்கப்பட்டார்கள். பிரதமர் பேசி முடித்தப் பிறகுதான் வெளியே செல்ல அனுமதித்தார்கள். இடையில் கழிப்பறைக்கு செல்லக் கூட அனுமதித்தார்களா என்றுக் கூட தெரியாது. 

ஒரு நாட்டில் இவ்வளவு பெரிய முடிவை, இவ்வளவு மோசமான முறையில் எடுத்ததாக உலகத்தில் சரித்திரமே கிடையாது. கடந்த 50 ஆண்டுகளிலே எந்த பெரிய பொருளாதாரத்திலே இதைப்போன்று demonetisation செய்திருக்கிறார்கள். எந்த நாடு செய்திருக்கிறது. எந்த சூழ்நிலையில் பணமதிப்பை நீக்குவதென்று ஒரு அரசு முடிவு எடுக்க முடியும். ஒன்று பணவீக்கம் 10 ஆயிரம் சதவீதம், 20 ஆயிரம் சதவீதம் என்று பணவீக்கம் கட்டுக்கு மீறி போய்விட்டால் அந்தப் பணத்திற்கு மதிப்பு கிடையாது. அதாவது காலையில ஒரு நோட்டுக்கு மதிப்பு 10 ருபா, சாய்ங்காலம் 8 ருபா, மறுநாள் காலையில 6 ருபான்னா என்ன மதிப்பு அது. எனவே அந்த காகிதத்தை செல்லாது என்று அறிவிப்பதில் பொருள் இருக்கிறது. அல்லது currency instability. அதாவது காலையில ருபாய்கு டாலருக்கு 68 ருபா. மாலையில டாலருக்கு 100 ருபா. மறுநாள் டாலருக்கு 50 ருபா. 3வது நாள் டாலருக்கு 100 ருபா என்று காலையிலே ஒரு தாறுமான நிலை, மாலையில ஒரு தாறுமாறான நிலை, மறுநாள் ஒரு தாறுமாறான நிலை என்றால் அதற்கு currency instability கரன்சி நிலைக்குலைந்துபோய்விட்டது என பொருள். அப்ப செய்யலாம். இந்திய ரூபாய் நிலைக்குலையவும் இல்லை. இந்தியாவின் பணவீக்கம் 10 ஆயிரம், 20 ஆயிரம் சதம் என்று எட்டவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவினுடைய exchange rate டாலருக்கு 68, 67 என்று நிலையாகத்தான் இருக்கிறது. இந்தியாவின் பணவீக்கம் 5 சதவீதம், ஐந்தேகால் சதவீதம் என நிலையாகத்தான் இருக்கிறது. இந்த நேரத்தில் செல்லாது என்று அறிவித்ததற்கு என்ன காரணம். ரிசர்வ் வங்கி என்ன காரணத்தை சொன்னது. அரசு அமைச்சரவை கூட்டத்தில் என்ன விவாதம் நடந்தது என்று நாங்களும் கேட்கிறோம். இதுவரை எந்தவிதமான பதிலும் வரவில்லை.

எனக்கு தெரிந்த செய்தி என்னவென்றால் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்னால் ஒரு கேபினட் நோட் வைக்க வேண்டும். அந்த கேபினட் நோட்டில் இருக்கும் விஷயத்தை பார்த்துதான் அமைச்சர்கள் ஆம், இல்லை என்று சொல்வார்கள். அந்த கேபினட் நோட்டில் இன்று உங்களுக்கும், எனக்கும் தெரிந்த செய்தி எதுவும் கிடையாது. உதாரணமாக 1000 ரூபாய் நோட்டு, 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் மதிப்பு மொத்த மதிப்பில் 86 சதவீதம் என்று குறிப்பிடப்படவில்லை. செல்லாது என்று அறிவித்தால் 2400 கோடி நோட்டு செல்லாது என்ற நிலை ஏற்படும் என்று குறிப்பிடப்படவில்லை. 

இந்திய அரசு ரிசர்வ் வங்கியினுடைய, நோட்டு அச்சகங்களுடைய மொத்த capacity மாதம் 300 கோடிதான் என்பது குறிப்பிடப்படவில்லை. 2400 கோடி நோட்டை, நோட்டுக்கு நோட்டு புது நோட்டு வைக்கனுமுன்னா 8 மாதம் ஆகுமுன்னு குறிப்பிடப்படவில்லை. இந்தியாவிலே பண மாற்றம், பணபரிமாற்றம் என்பது 97 சதவீதம் cash, காசுதான், ரூபாய் நோட்டுதான் பணப்பரிமாற்றத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய, மக்கள் பயன்படுத்தக்கூடிய மார்க்கமாக இருக்கிறது என்று குறிப்பிடப்படவில்லை. எந்த செய்தியும் இல்லாமல், எந்த தகவலும் இல்லாமல், எந்த புள்ளி விவரமும் இல்லாமல், இவ்வளவு பெரிய முடிவை, இவ்வளவு பெரிய மோசமான முடிவை ஒரு அரசு எடுக்கும் என்றால் நான் கேட்க கடமைப்பட்டிருக்கிறேன், இந்த அரசின் கையிலே இந்த நாடு பத்திரமாக இருக்கிறதா என்பதை இந்த நாட்டு மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். 

பொருளாதார நிபுணர்கள் சொல்வார்கள் பணப்புழக்கம் இருந்தால்தான் ஒரு பொருளாதாரம் இயங்கும். சாதாரணமாக வியாரிகளை கேட்டுப்பாருங்க. மணி மார்க்கெட் ரொம்ப டைட்டா இருக்கு. மணி மார்க்கெட் டைட் என்றால் என்ன அர்த்தம் பணப் புழக்கம் குறைவா இருக்குன்னு அர்த்தம். பணப்புழக்கம் இருந்தால் தான் பொருளாதாரம் இயங்கும். பணப்புழக்கம்தான் பொருளாதார நிலையை தீர்மானிக்கிறது. 

2400 கோடி நோட்டு தாள்கள் செல்லாது என்று ஒரே நாள் இரவிலே அறிவித்துவிட்டால் பணம் புழங்காது. பணம் புழங்காததின் விளைவு என்ன. நவம்பர் 9ஆம் தேதி பல பேர் வீட்டில் சாப்பிடவே இல்ல. காய்கறி வாங்க பணம் கிடையாது. பால் வாங்க பணம் கிடையாது. மருந்து வாங்க பணம் கிடையாது. எனக்கு தெரிந்து டெல்லியில் பேருக்குத்தான் பணக்காரனே ஒழிய வீட்டுல சாப்பாடு கிடையாது அன்னைக்கு. வங்கிக்கு போகலாம் என்றால் 9ஆம் தேதி வங்கியை இழுத்து மூடினார்கள். பிரதமரும், நிதியமைச்சரும் மிக கம்பீரமாக அறிவிக்கிறார்கள் 10ஆம் தேதி வங்கிகள் திறந்துவிடும். நீங்கள் போகலாம். 24 ஆயிரம் ரூபாய் வரை வாரத்திற்கு எடுக்கலாம். நிதியமைச்சர் அறிவிக்கிறார் அடுத்த செவ்வாய்க்கிழமை அன்னைக்கு நவம்பர் 15ஆம் தேதி. அவர் சொன்னது நவம்பர் 11ஆம் தேதி, அடுத்த செவ்வாய்க்கிழமை நவம்பர் 15ஆம் தேதி எல்லாம் சரியாகப் போய்விடும். ஒரு 3, 4 நாள் சிரமம் இருக்கும்.  3, 4 நாள் சிரமம் இருக்குமாம். குறித்துக்கொள்ளுங்கள் 6 மாதத்திற்கு இந்த நிலைமை மாறாது. மாற முடியாது. 2400 கோடி நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்துவிட்டீர்கள். அச்சடிக்கும் திறமை 300 கோடிதான். மாதம் 300 கோடி நோட்டு அச்சடித்தால் 2400 கோடி நோட்டு அச்சடிப்பதற்கு எத்தனை மாதங்கள். 8 மாதங்கள் ஆகும். நோட்டுக்கு நோட்டு அடிச்சால். அதனால்தான் இந்த புத்திசாலிகள் என்ன செய்தார்கள் தெரியுமா. ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டு அடிக்கணும்முன்னா நாளாகும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அடிக்கலாமுன்னு முடிவு எடுத்தாங்க. எவ்வளவு பெரிய புத்தாலி பாருங்க. ஆயிரம் ரூபாய் நோட்டுல கருப்பு பணமா. 500 ரூபா நோட்டுல கருப்பு பணமா. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுல கருப்பு பணம் வராதா. இதோ, ராமமோகன ராவ் வீட்டுல 30 லட்ச ரூபாய்க்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு இருக்கே. எங்கிருந்து போகிறது. 

நான் நாக்பூரில் பேட்டி அளிக்கும்போது கேட்டேன். ஒருவேளை ரிசர்வ் வங்கி அச்சகத்திலிருந்து நேரடியாக போகியிருக்குபோல இவங்க வீட்டுக்கெல்லாம். எனக்கு முதல்ல ஒரு இரண்டாயிரம் நோட்டு வாங்குவதற்கு வங்கியில 10 நாள் கழித்து ஒரு நோட்டு கொடுத்தான் எனக்கு. 10 நாள் கழித்து ஒரு இரண்டாயிரம் நோட்ட பார்த்தேன். யாருக்கும் அந்த நோட்டை பார்த்தால் நம்பிக்கை வரல. இரண்டாயிரம் ரூபாய் நோட்ட வைச்சு என்ன பண்றது. பிரேம் போட்டு வைச்சுக்கலாம். வாங்குவதற்கும் ஆள் கிடையாது. கொடுப்பதற்கும் ஆள் கிடையாது. 5 லட்சம் கோடிக்கு இரண்டாயிரம் நோட்டை அச்சடித்துவிட்டார்கள். அது புழக்கத்தில் வரல. இப்ப திடீரென்று ஞானோதயம் பிறந்து 500 ரூபாய் நோட்டை அடிக்கிறாங்க. நடுவுல 50 ரூபாய், 20 ரூபாய் நோட்டை அச்சடித்துள்ளார்கள். ஆக ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டு அடிக்க, 500 ரூபாய் நோட்டுக்கு 500 ரூபாய் நோட்டு அடிக்க 8 மாதம் ஆகும். ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு 50 ரூபாய், 20 ரூபாய் நோட்டை அடிச்சா 8 மாதம் அல்ல. 18 மாதம் ஆகும். ஆக 6 மாதத்திலே இந்த துயரம் நீங்காது. இவ்வளவு பெரிய புத்திசாலிகள் இந்த நாட்டை ஆளுகிறார்கள் என்று நீங்களும், நானும் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும். 

இதில் விளைவு என்னவென்றால், இப்ப எனக்கு வங்கியில கணக்கு இருக்கு. நான் பத்தாயிரம் ரூபாய்க்கு செக் எழுதி, ஒருத்தருக்கிட்ட கொடுக்கிறேன். அவர் வங்கியில போய் கொடுக்கிறார். வங்கில சொன்றான். வங்கில பணம் இருக்கு சார். அவர் கணக்குல பணமில்ல என்கிறான். அவர் கணக்குல பத்தாயிரம் ரூபாய் இல்ல. 3 ஆயிரம்தான் இருக்கு என்கிறான். உடனே அவர் என்கிட்ட வந்து 10 ஆயிரம் ருபாய்க்கு செக் கொடுத்த அது பவுண்ஸ் ஆகிடுச்சுன்னு கேட்கிறார். அதற்கு தண்டனை என்ன இன்றைய சட்டத்தின்படி சிறை தண்டனை. கணக்கில் பணம் இல்லாம செக் கொடுத்தால் சிறை தண்டனை. இல்லையா. வங்கியில கணக்கு இருக்கு. என் கணக்கில் பணம் இருக்கு. நான் செக் தரேன். வங்கியில பணம் இல்லை என்கிறான். வங்கியில் பணம் இருந்து, கணக்கில் பணம் இல்லை என்றால் எனக்கு சிறை தண்டனை. கணக்கில் பணம் இருந்து, வங்கியில் பணம் இல்லை என்றால் யாரை ஜெயிலுக்கு அனுப்புறது. செக்சன் 138ன் படி என்னை ஜெயிலுக்கு அனுப்புறீங்க. இப்ப எந்த செக்சன்ல உங்கள ஜெலுக்கு அனுப்புறது. இதைவிட ஒரு கேளவமே கிடையாது. எவ்வளவு கஷ்டப்படுறாங்க மக்கள். 

இந்தியாவில் ஒரு லட்சத்து 30 ஆயிரம், 40 ஆயிரம் வங்கி கிளைகள் இருக்கின்றன. இரண்டு லட்சத்து 15 ஆயிரம் ஏடிஎம் மையங்கள் இருக்கின்றன. அதில் 35 சதவீத ஏடிஎம்களுக்கு பணமே போனது கிடையாது. அதனை கழித்துவிடுங்கள். எஞ்சியுள்ள வங்கி கிளை, ஏடிஎம்களில் நாள் ஒன்றுக்கு 500 பேர் வரிசையில் நின்று பணம் வாங்குகிறார்கள் என்றால் கணக்கு போட்டு பாருங்கள், இந்தியாவில் உள்ள 135 பேர்களில், 11 கோடி பேர் ஒவ்வொரு நாளும் ஏடிஎம் வாசலில் நின்றிருக்கிறார்கள். 11 கோடி பேர் அவர்களின் வேலையைவிட்டுவிட்டு, தொழிலை விட்டுவிட்டு, விவசாயத்தைவிட்டுவிட்டு ஆயிரம் ரூபாய், 500 ரூபாய், 2000 ரூபாய் வாங்குவதற்காக க்யூ வரிசையில் மணிக் கணக்கில் நிற்கிறார்கள் என்றால் இந்த நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை கணக்குப்போட்டு பாருங்கள். 

கடந்த திங்கள்கிழமை 3 நாள் கழித்து வங்கி திறந்தார்கள். டெல்லியில் ஒரு ஏடிஎம்மில் கூட அன்றைக்கு பணம் கிடையாது. கேட்டால், வங்கி கிளைகளுக்கு பணம் கொடுக்கிறோம். ஏடிஎம்மில் பணம் கிடையாது. வங்கியில பணம் கிடையாது. ஏடிஎம்மில் பணம் கிடையாது என்றால் எப்படி பிரதமரும், நிதிமந்திரியும் கூசாமல் பதில் சொல்கிறார்கள். இந்தக் கணக்கை திரும்ப திரும்ப சொன்னோம். 2400 கோடி தாள்களை செல்லாது என்று அறிவித்துவிட்டு, மாதம் 300 கோடி தாள்கள்தான் அச்சிடுவதற்கு உங்களுக்கு திறமை இருக்கிறது என்றால் 8 மாதங்கள் ஆகும். எப்படி நீங்கள் டிசம்பர் 30ஆம் தேதிக்குள் முடியும் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டோம். இதுவரைக்கும் பதில் கிடையாது. 

நவம்பர் 8ஆம் தேதி பிரமாதமாக அறிவித்தார்கள். 4 நாளில், 5 நாளில் சரியாகிவிடும். 20 ஆயிரம் ரூபாய் வாரம் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் 24 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். ஆனால் யாருக்கும் 24 ஆயிரம் கிடைக்கவில்லை. அப்புறம் திரும்பி திரும்பி அதே ஆள் வருகிறார்கள் என்று விரலில் மை வைக்க ஆரம்பித்தார்கள். விரல்ல மை வைக்கிறதோட, பக்கத்துல ஒரு ஓட்டு பெட்டியையும் வைத்துவிடுங்கள் தெரிஞ்சுபோகும் உங்க வண்டவாலம். அந்த மை அழிந்துபோகுதென்று இரண்டு நாளில் அதை நிறுத்திவிட்டார்கள். மோடியின் படத்தை போட்டு போஸ்டரில் உங்கள் பணம் பத்திரமாக இருக்கிறது. டிசம்பர் 30ஆம் தேதி வரை இரண்டரை லட்சம் ருபாய் டெபாசிட் செய்யலாம் என்று இருக்கு. திடீரென்று டிசம்பர் 24க்கு பிறகு இனி பணத்தை மாற்ற முடியாது என்று அறிவித்தார்கள். திடீரென்று டிசம்பர் 15க்கு பிறகு பெட்ரோல் பங்க், மருத்துவமனை, ரயில் டிக்கெட்டுக்கு பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்கள். திடீரென்று இனி யாராவது பணத்தை போடவேண்டமென்றால் 5 ஆயிரம் ருபாய்தான் போடலாம் என்று அறிவித்தார்கள். 

நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் டிசம்பர் 30ஆம் தேதி வரைபோடலாம் என்றார். டிசம்பர் 11ஆம் தேதி நிதி மந்திரி டிசம்பர் 30ஆம் தேதி வரை போடலாம் என்றார். இப்ப திடீரென்று 5 ஆயிரம் ருபாய் வரைதான் போடலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கிறது. அதுவும் ஒரு முறைதான் போடலாம். அதற்கு மேல் போட்டால் இரண்டு வங்கி அதிகாரிகள் உங்களை விசாரிப்பார்கள். ஏற்கனவே வங்கி அதிகாரி பகல், இரவு என வேலை பார்த்து நொந்து நூலா போயிருக்கான். திடீரென்று வங்கி அதிகாரிய வருமான வரித்துறை அதிகாரியா மாத்திட்டாங்க. அவங்க விசாரிப்பாங்க. நீங்க வாக்குமூலம் தரணும். 

நான் டிவிட்டரில், பிரதமரும், நிதி மந்திரியும் சொன்னதை நம்பி நான் இதுவரை போடவில்லை. அவர்கள் தங்களது வாக்குறுதிகளை மீறுவார்கள் என்று எனக்கு தெரியாது என்று வாக்குமூலத்தில் எழுதுங்கள் என்று சொன்னேன். அதேபோல் டெல்லியில் ராம்குமார்ராம் என்பவர், வங்கி வாக்குமூலத்தில், பிரதமரும், நிதி அமைச்சரும் சொன்னதால் நான் இதுவரை வங்கிக்கு வரவில்லை. அவர்கள் தங்களது வாக்குறுதிகளை மீறிவிட்டால் நான் என்ன செய்வது என்று எழுதிவிட்டார். வங்கி அதிகாரி, இந்த மாதிரி எழுதினா என் வேலை போய்விடும் என்கிறார். இதுதான் உண்மை காரணம். வேறு காரணம் கிடையாது என்கிறார் இவர். 

நிதி மந்திரி சொல்கிறார், ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தால் பரவாயில்லை. கவலைப்படாதீர்கள். நீங்க எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம். திரும்பி திரும்பி போட முடியாதேயொழிய ஒரே தடவையில் போடலாம் என்கிறார். ரிசர்வ் வங்கி உத்தரவை வங்கி அதிகாரி வைத்துள்ளார். இவர், நிதி அமைச்சர் அறிவித்ததை எடுத்துச் செல்கிறார். நிதி அமைச்சர் அறிவிப்பையெல்லாம் நாங்க ஏற்றுக்கொள்வது கிடையாது. ரிசர்வ் வங்கி சொல்வதைத்தான் நாங்கள் கேட்க முடியும் என்கிறார் வங்கி அதிகாரி. இரண்டு நாள் கழித்து தனது பழைய முடிவை மாற்றிய ரிசர்வ் வங்கி டிசம்பர் 30ஆம் தேதி வரை பணம் போடலாம் என்கிறது. வெட்கப் பட வேண்டியது. வேதன்ப்பட வேண்டியது. 

எதற்காக இந்த துக்ளக் தர்பார் நடக்கிறது. எதற்காக இப்படி தாறுமாறாக, தலைகீழாக நிலைகுலைந்து முடிவை எடுக்கிறார்கள் என்றால், இவங்க ஏதோ ஒரு கணக்கு போட்டாங்க. 15 லட்சத்து 44 கோடி ரூபாய் 500, 1000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இதில் 10 லட்சம் கோடிதான் வங்கில வந்து போடுவாங்க. 5 லட்சத்து 44 ஆயிரம் கோடியை கருப்புப் பணம் என்று அறிவித்துவிடலாம். இதனால் ரிசர்வ் வங்கிக்கு லாபம். 5 லட்சத்து 44 ஆயிரம் கோடி லாம் என்றால், அதில் டிவிடெண்ட் தொகையாக எங்களுக்கு தரலாம் என்று சொல்லி 3 அல்லது 4 லட்சம் கோடி ரூபாய் வாங்கிடலாம் என்று கணக்கு போட்டார்கள். இப்ப என்ன ஆனது என்றால் 15 லட்சத்து 44 ஆயிரம் கோடியின் கடைசி தாளும் வந்து சேர்ந்துவிடும்போல. கோவாவில் ஒருத்தருக்கிட்ட பேசுனப்ப, 15 லட்சத்து 44 ஆயிரம் கோடியும் வந்துவிடும்போல இருக்கு என்றேன். அதற்கு அவர், அட போங்க சார் அதற்கு மேலேயே வரும் என்றார். அது எப்படி என்றேன். நேபாளத்தில் நம்ம பணம் புழங்குதுல்ல. அது வரும் என்றார். 

நவம்பர் 8ல் இருந்து 45 நாட்களில் 62 முறை விதிகளை மாற்றியுள்ளனர். பிரதமர் உடையை மாற்றுவது போல, ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மாற்றி வருகிறது என்று ராகுல் காந்தி சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. 45 நாளில் 62 முறை விதிகளை மாற்றினால், சிந்தித்து முடிவு எடுக்கப்பட்டதா. சிந்திக்காமல் முடிவு எடுக்கப்பட்டதா. விளைவு என்ன என்று பாருங்கள். திருப்பூரில் ஆயத்த ஆடை தொழில் முடக்கம். ஆக்ராவில் காலணி தொழில் முடக்கம். மொரோகதாபாத்தில் பிராஸ்வேர் முடக்கம். சூரத்தில் நகை தொழில் முடக்கம். ஜலந்தரில் சைக்கிள் தொழில் முடக்கம். தினமும் ஒவ்வொரு நாளிதழ்களில் ஒவ்வொரு ஊரில் நடக்கும் அவலங்களை சொல்கிறார்கள். ஒவ்வொரு ஊர்லேயும் தினம் காலையில தினத் தொழிலாளர்கள் ஒரு இடத்தில் கூடுவார்கள். லாரி, வேனில் வந்து 30 பேர் வேணும், 40 பேர் வேணும் என்று அழைத்துச் செல்வார்கள். அவர்களுக்கு 150 முதல் 200 ரூபாய் வரை சம்பளம் தருவார்கள். கடந்த 45 நாட்களாக முழுவதுமாய் முடங்கிப்போய் அவர்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. 

இந்திய நாட்டில் 45 கோடி மக்கள் அன்றாடம் சம்பாதித்து அன்றாடம் சாப்பிட வேண்டிய நிலையில் உள்ளார்கள். அதில் 30 கோடி மக்கள் சுய தொழில் செய்பவர்கள். அதாவது கோயில் முன்பு பூ விற்பது, சாலையோரம் இட்லி வியாபாரம் செய்வது, மும்பையில் பாவ்பாஜி விற்பவர்கள் என அன்றாட தொழில். 15 கோடி மக்கள் இன்னொருவரை நம்பி வேலை செய்பவர்கள். அதாவது சுமை தூக்கும் தொழிலாளி அல்லது நாள் கூலி, விவசாயி கூலி, கட்டுமான பணியாளர்கள் என்று இருப்பவர்கள். கைத்திறன் உள்ளது. ஆனால் அன்றைக்கு வேலை கிடைத்தால்தான் காசு கிடைக்கும். இந்த 45 கோடி மக்களில் பெரும்பான்யானவர்களுக்கு 45 நாளில் வேலையே கிடையாது. சுய தொழிலையும் செய்ய முடியாது. வேலையும் கிடைக்கவில்லை என்றால் எப்படி சாப்பிடுவது. 45 கோடி மக்களில் பெரும்பாலானவர்களை ஒரு வேளை சாப்பாட்டுக்கு கையேந்த வைத்த கொடுமை இந்தியாவில் நடந்துள்ளது. அவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. அவர்கள் கையேந்தவேண்டிய அவசியம் இல்லை. அவர்களது உடலுழைப்பு. கைத்திறனால் தங்களது குடும்பத்தை நடத்தியவர்கள். 

ஒரு பட்டியல். இதில் முதல் விலை நவம்பர் 8ஆம் தேதி இருந்த விலை. அடுத்த விலை டிசம்பர் 15ஆம் தேதி இருந்த விலை. 

குவிண்டால் 
தக்காளி 2659 ரூபாய் வீழ்ச்சியடைந்தது 1920 ரூபாய்
உருளைக்கிழங்கு 1400ல் இருந்து 924 ரூபாய் 
பட்டாணி 3167ல் இருந்து 2864
முட்டைக்கோஸ் 1448ல் இருந்து 964
காளிபிளவர் 1940ல் இருந்து 1079
கேரட் 2287ல் இருந்து 1355
கத்திரிக்காய் 1542ல் இருந்து 1086
கீரை 801ல் இருந்து 526
கொய்யா 2088ல் இருந்து 1802
ஆரஞ்சு 4081ல் இருந்து 3586
பூண்டு 8876ல் இருந்து 8421
பருப்பு 6650ல் இருந்து 5935

இந்திய விவசாயிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த இழப்பை ஈடுசெய்வதற்கு அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த பேச்சும், மூச்சும் கிடையாது. எந்த இடத்திலாவது பிரதமர் உங்களுக்கெல்லாம் விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதனை ஈடு செய்கிறேன் என்று பேசியிருக்கிறரா. 

முதலில் 3 லட்சியங்களை சொன்னார்கள். கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும். போலி நோட்டுக்களை ஒழிக்க வேண்டும். லஞ்சத்தை ஒழிக்க வேண்டும். இதுதானே அவர்கள் சொன்ன நோக்கம். கருப்புப் பணம் ஒழிந்துவிட்டதா அல்லது கருப்பு பணத்தை ஒழிக்க முடியுமா. நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தால் கருப்பு பணம் எப்படி ஒழியும். சேகர் ரெட்டி வீட்டில் இருந்து 100 கோடிக்கு மேல் எடுத்தார்கள். கருப்பு பணமா, வெள்ளை பணமா. 

கருப்பு பணம் என்றால் என்ன. வெள்ளைப் பணம் என்றால் என்ன என்பது தெரியாத புத்திசாலிகள் இந்த நாட்டை ஆளுகிறார்கள். இந்திய நாட்டில் பலருக்கு நியாயமான வருமானம் இருக்கிறது. வருமான வரி கிடையாது. விவசாய வருமானத்திற்கு வருமான வரி கிடையாது. 5 ஏக்கரில் கரும்பு போட்டு இரண்டு லட்சம் கிடைக்கிறது என்றால் உங்கள் கையில் இருப்பது கருப்பு பணம் கிடையாது. வெள்ளைப் பணம். சட்டப்படி அது நீங்க சம்பாதிச்ச பணம். அதுக்கு வருமான வரி கிடையாது. இரண்டு லட்சம் ரூபாய் கோயில் உண்டியலில் இருந்து எடுத்தால் அது கருப்பு பணம் அல்ல. அறக்கட்டளைக்கு வரக்கூடிய பணம் கருப்பு பணம் அல்ல. அதுக்கு வருமான வரி கிடையாது. வட மாநிலங்கள் நாக்பூர், நாகலாந்து அங்கெல்லாம் எந்த வருமானத்திற்கும் வருமான வரி கிடையாது. அதுவெல்லாம் நியாயமான வருமானம்.  

ஒரு விவசாயி 5 ஆயிரம் ரூபாய் வைத்துள்ளார். நியாயமாக அது வெள்ளைப் பணம். வக்கீல் ஒருவரிடம் ஆலோசனை கேட்க செல்கிறார். ஆலோசனை கிடைக்கிறது. அதற்கு பீஸாக 2 ஆயிரம் ரூபாய் வக்கீல் வாங்கினார். அதற்கு ரசீது தரவில்லை. வக்கீலின் வருமான கணக்கில் இரண்டாயித்தை போடவில்லை. அதனால் விவசாயிடம் இருந்த இரண்டாயிரம், வக்கீலிடம் போனதும் கருப்பு பணமாக மாறியிருக்கிறது. அந்த இண்டாயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு அந்த வக்கீல் அன்று மாலையே தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு ஓட்டல் சரவணபவனுக்கு போகிறார், அங்கு 7, 8 பேருடன் சாப்பிடுகிறார். அங்கு ஓட்டலில் 2 ஆயிரம் பில் தருகிறார்கள். இவர் இந்த இரண்டாயிரத்தை எடுத்துக் கொடுக்கிறார். அந்த ஓட்டல் அவர் அவர் கொடுத்த 2 ஆயிரத்தை கணக்கு காட்டுகிறது. அப்போது கருப்பு வெள்ளையாக மாறுகிறது. இதுதான் உண்மை. இதுதான் அடிப்படை பொருளாதாரம். கருப்பு பணம் என்பது சேர்த்து வைப்பது அல்ல. குவித்து வைப்பது அல்ல. புழக்கத்தில் கருப்பு, வெள்ளையாகிறது. வெள்ளை கருப்பாகிறது. நான் சொல்வது மிக எளிய உதாரணம். 3 முறை கைமாறுவதை சொல்கிறேன். ஒரு நாளைக்கு ஒரு நோட்டு என்பது 10 முறை, 12 முறை கைமாறுகிறது. அந்த நோட்டு கைமாறும்போது, யார் கையில் இருக்கிறதோ அதைத் பொறுத்துதான் கருப்பா மாறுகிறதா, வெள்ளையாக மாறுகிறதா என்பது. சேகர் கையில் இருந்தா அது கருப்பு. ஓட்டலுக்கு போனா அது வெள்ளையாகிடும். இந்த அடிப்படை பொருளாதாரம் புரியாமல் இந்த அரசு எல்லா பணமும் கருப்பு பணம். அடிப்படை பொருளாதாரம் புரியாமல் 86 சதவீதம் பணத்தை செல்லாது என்று அறிவிப்பதாக சொன்னார்களே. 

எனக்கு தெரிந்து ஜிப்பாப்வே, வடகொரியா, லிபியா, வெனிஸ்வேலா ஆகிய 4 நாடுகளில் தான் இதைப்போன் பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தார்கள். இந்திய நாடு வல்லரசு. நாங்கள் வளர்ந்து வரக்கூடிய நாடு. உலக நாடுகளுக்கு ஈடான நாடு. உலகத்திலே பெரிய பொருளாதாரத்தில் 4வது பொருளாதாரம். 

இது ஒரு மடத்தனமான முடிவு, முட்டாள் தனமான முடிவு, இந்த முடிவை எப்படி எடுத்தார்கள் என 100 பொருளாதார நிபுணர்கள் கையெழுத்துப் போட்டு அறிக்கை தந்திருக்கிறார்கள். இதற்கு இதுவரை பதில் கிடையாது. கருப்பு பணத்துக்கு ஆதரவாக பேசவில்லை. ஆனால் கருப்பு பணம் எப்படி வருகிறது என்பதை பார்க்க வேண்டும். 

ஒருவர் மகனை மெடிக்கல் சீட் வாங்கி சேர்க்கனும். அதற்கு 25 லட்சம் கேட்கிறார்கள். இவர் செக் தருவதாக சொல்கிறார். அவன் ரொக்கமாக வேண்டும் என்கிறான். வேறு வழியில்லாமல் ரொக்கமாக கொடுக்கிறார்கள். இது கருப்பு பணமாக மாறுகிறது. லஞ்சம் வாங்குபவர்கள் கருப்பு பணத்தை கேட்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் கேட்கிறார்கள். கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால், எங்கே கருப்பு பணம் கேட்கிறார்களோ அங்கே ஊற்று வாயை தடுக்க வேண்டும். கருப்பு பணம் டிமாண்ட் இருந்தால், கருப்பு பணம் சப்ளையை தடுக்க முடியாது. 

இரண்டாவது நோக்கம் லஞ்சத்தை ஒழிப்பது என்று சொன்னார்கள். ஆயிரம், 500 ரூபாய் நோட்டை செல்லாது என்று சொன்னதால் லஞ்சம் வாங்குவது நின்றுவிட்டதா. குஜராத்தில் தான் முதல் லஞ்ச குற்றவாளி பிடிப்பட்டான். கன்லா துறைமுகத்தில் 124 இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார்கள். பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில்தான் இரண்டாயிரம் ரூபாய் நோட்டின் முதல் லஞ்சம் உருவாகிறது. சோதனை போடும் வீடுகளில் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் இருக்கிறது. லஞ்ச ரேட்ட உயர்த்துவதற்காகவே இரண்டாயிரம் ரூபாய் நோட்ட கொண்டாந்தார்கள் என்று நினைக்கிறேன். யார் வாங்கினாலும், யார் கொடுத்தாலும் இரண்டாயிரம் லஞ்சம் இப்ப. ஆயிரம் ரூபாய் நோட்டா வந்த கருப்பு பணம், இரண்டாயிரம் நோட்டாக வருகிறது. 

3வது போலி நோட்டு இனிமே இருக்காது. அது எப்படி போலி நோட்டு இல்லாம இருக்கும். அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது வெறும் 400 கோடி ரூபாய் தான் போலி நோட்டு என்று. மொத்தம் புழக்கத்தில் இருப்பது 17 லட்சம் கோடி ரூபாய். இதில் 400 கோடி என்பது 0.02 சதவீதம். 400 கோடி ருபாய் கள்ள நோட்டை ஒழிப்பதற்காக 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாயை செல்லாது என்று அறிவித்த புத்திசாலிகள். வீட்ல கொசுத் தொல்லை இருக்கிறது என்றால் வீட்டையேவா எரித்துவிடுவது. 3 நோக்களில் எந்த நோக்கமும் நிறைவேறாது. ஊழலுடைய ஊற்று வாயை அடைக்க வேண்டும். கருப்பு பணத்தை கேட்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

யார் சொல்வதையோ கேட்டு செய்துள்ளார்கள். பிரதமர் முழு செய்தியை கேட்கவில்லை. எத்தனை நோட்டு செல்லாது என்று அறிவிப்பீர்கள். அச்சடிக்கும் திறன் எவ்வளவு. எத்தனை மாதங்கள் ஆகும் என கேட்கவில்லை. அடிப்படையான விஷயம், அச்சடிக்கும் நோட்டு ஏடிஎம் மெஷினில் பொருந்துமா என்றுக் கூட கேட்கவில்லை. வடகிழக்கில் உள்ள அசாம், மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், மேகாலயா, திரிப்பூரா மாநிலங்களில் 5,500 ஆயிரம் ஏடிஎம்கள்தான் உள்ளன. இதில் அசாம் மாநிலத்தில் மட்டும் 3500 ஏடிஎம்கள் உள்ளன. எஞ்சியுள்ள மாநிலங்களில் வெறும் 2 ஆயிரம் ஏடிஎம்கள் உள்ளன. அங்கு ஒரு ஏடிஎம் மையத்திற்கும் மற்றொன்றிக்கும் 20 கி.மீ. இருக்கும். அங்கு போனாலும், வங்கியிலும் ஏடிஎம் மையத்திலும் பணம் இருக்காது. வடகிழக்கு மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பு இருக்கிறது. 

மக்கள் படும் அவதிகளை மறந்துவிட்டு, இப்போது காசு இல்லாத சமுதாயத்தை பற்றி பேசுகிறார்கள். ஜெர்மனியில் 80 சதவீகிதம், ஆஸ்திரேலியாவில் 65 சதவிகிதம், கனடாவில் 52 சதவிகிதம், பிரான்சில் 55 சதவிகிதம், நெதர்லாந்து 50 சதவிகிதம், அமெரிக்காவில் 46 சதவிகிதம் கேஷில் புழங்குகிறார்கள். இவர்களையெல்லாம் தாண்டி 100 சதவீதம் காசு இல்லாத சமுதாயமாக மாற்றப்போகிறாராம் மோடி. என்ன வேடிக்கை. 

இந்தியாவில் இன்றைக்கு 97 சதவிகிதம் கேஷ். இதனை 90 சதவீதமாகக்கலாம். 85 ஆக மாற்றலாம். 80 ஆக மாற்றலாம். எப்படி பூஜ்யமாக முடியும். இந்த நாட்டு மக்களை அலைக்கழிப்பதற்கு, அவமதிப்பதற்கு இதைவிட புத்திசாலித்தனம் இருக்க முடியும். 

கீழே விழுந்தாலும் மீசையில் மண்ட ஒட்டவில்லை என்பது மாதிரி. ஒரு பிரதமர், தவறான யோசனையை கேட்டு தவறான முடிவை எடுத்துவிட்டேன். எத்தனை கோடி நோட்டுகள் செல்லாது என்று எனக்கு சொல்லவில்லை. நமது அச்சுத்திறன் எவ்வளவு என்று எனக்கு விளக்கப்படவில்லை. எத்தனை மாதங்கள் ஆகும் என்று எனக்கு தெரியப்படுத்தவில்லை. ஏடிஎம்கைளை திருத்தி அமைக்க எத்தனை காலம் ஆகும் என்று எனக்கு சொல்லவில்லை. அன்றாடம் வேலை செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. கருப்பு பணத்தை ஒழித்துவிட முடியும் என்று சொன்னதை நான் நம்பிவிட்டேன். 500, 1000 நோட்டை செல்லாது என்று அறிவித்து புதிய 2 ஆயிரம் நோட்டு அடிப்பதற்கு என்ன நியாயம், காரணம் என்று நான் கேட்கவில்லை. தவறு செய்துவிட்டேன். என்னை மன்னியுங்கள் என்று சொல்லியிருந்தால் பெரிய மனிதன். 

மோடியின் அறிவிப்பு இந்தியாவில் 45 கோடி மக்களை ஏழைகளாக, பிச்சைக்காரர்களாக ஆக்கியிருக்கிறது. நடுத்தர வர்க்க மக்கள் மெல்லவும் முடியாமல், விழுங்கமும் முடியாமல் தவிக்கிறார்கள். மக்களை 45 நாட்கள் அலைக்கழித்திருக்கிறார்கள். இந்த அலைக்கழிப்பு இன்னும் 6 மாதத்திற்கும் நீடிக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

தொகுப்பு: ராஜவேல்



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(8)
Name : sekhar Country : United States Date :1/7/2017 12:57:11 PM
சிதம்பரம் ஒரு நல்ல மேதை . இருப்பதோ காங்கிரஸ் . அதுதான் வேதனை.
Name : Muthusingaram Country : Australia Date :1/2/2017 10:48:29 AM
நூற்றுக்கு நூறு சரியாகத்தனே உயர்திரு சிதம்பரம் அவர்கள் புரியும்படியாகச் சொல்லியிருக்கிறார்கள் , கறுப்புப்பணம் ஒழியவேண்டும் என்றால் ஊ ற்றுக்கண்ணை அடைக்காமல் உழைப்பவர்தம் உணவு உடை உறைவிடத்துக்கு ஊறு விளைவித்தது தவறே !
Name : pathman Country : Canada Date :1/2/2017 8:23:39 AM
இவரின் அறிக்கை பொருளாதார மேதை என்பதை காட்டுகின்றது.ஆனால் அதில் காங்கிரஸ் வாடை அடிப்பது தான் தவறு.
Name : srinivasan Country : Australia Date :1/1/2017 10:39:09 PM
சிறைக்கு செல்ல வேண்டியது யார்? மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி தலைப்பில் உள்ள செய்திகள் மிகவும் நியாயமானவை. துக்ளக் ஆசிரியர், மத்திய அரசின் ஆலோசகர் திரு குருமூர்த்தி மத்திய அரசு செய்தது சரியே என்கிறார். திரு சிதம்பரமும் திரு குருமூர்த்தியும் ஒன்றாக கூடி மக்கள் முன்னால் பொது இடத்தில் வாதம் செய்தால் நன்றாக இருக்கும். நக்கீரன் இதற்கு முனைப்பு காட்டுமா??
Name : pulliyappan Country : Australia Date :1/1/2017 2:39:22 PM
பிரமாதமான பேச்சு. அற்புதம். மோடி போன்றவர் மண்டையில் உரைத்தால் சரி.
Name : Hari Sankar Date :1/1/2017 10:25:48 AM
இந்த நடவடிக்கையால் மிகவும் சிரமங்கள் இவரது கட்சிக்குத்தான் என்பது தெள்ளத் தெளிவு. மிகவும் சிரமப்பட்டு அவ்வளவு பணமும் விவசாயிகள் மூலம் வங்கியிலும் சேர்த்து விட்டார்கள் என்பது தெரிகிறது. எல்லாம் கணக்கில் வரவேண்டும் என்பது அரசின் நோக்கமாக இருக்கவேண்டும்.... வராத பணம் என்று லிஸ்ட் போடுவதை விட வந்த பணத்தை ஆராய்ச்சி செய்வது உத்தமம் அல்லவா? கறுப்புப் பண விளைவுகளை அனுபவித்த மக்கள் இந்த வியாக்யானத்தை ஒப்புக்கொள்வார்களா என்பது வரும் பொதுத் தேர்தலில் தெரிந்து விடும்.
Name : JP Date :1/1/2017 7:03:01 AM
இதைவிட தெளிவாக ஒருவரும் மோடி செய்த அலங்கோலத்தை எழுத முடியாது.! ஆனால் புரியாத மாதிரி நடிப்பார்கள் மத வாதிகள்..!! இந்திய தேசம் என்னவோ இவர்கள் ஆட்சிக்கு வந்தபின்தான் உருவாக்கப்பட்டது போல் பேச்சுகள் வேறு...!!! மக்களின் முடிவு காத்துக்கொண்டு இருக்கின்றது.
Name : shaha.bi Date :1/1/2017 3:09:46 AM
அருமையான - எளிமையான விளக்கம். உண்மையிலேயே ஒரு பொருளாதார மேதையின் அனுபவ பூர்வமான விளக்க கட்டுரை.