Add1
logo
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர்: கோவை கிங்ஸ் அணியிடம் தோற்றது காரைக்குடி காளை || உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி; இந்திய அணியை தோற்கடித்து 4வது முறையாக கோப்பையை வென்றது இங்கிலாந்து || உங்களோட போராடுவேன்: நெடுவாசலில் விஜயகாந்த் பேச்சு (படங்கள்) || காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியை நல்ல கண்ணு பார்வையிட்டார் || சிபிஎம் செந்தொண்டர் பயிற்சிமுகாம் || உங்களோட போராடுவேன்: நெடுவாசலில் விஜயகாந்த் பேச்சு (படங்கள்) || பாஜக ‘எள்’ என்றால் எடப்பாடி பழனிச்சாமி ’எண்ணெய்’ போல மாறிக் கொண்டிருக்கிறார்: ஸ்டாலின் || குண்டர் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்:தெகலான் பாகவி || அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் : கமல் || மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்து அண்ணன் -தங்கை பலி || வில்லன் போல செயல்படுகிறார் கிரன்பேடி : சீமான் குற்றச்சாட்டு || நடிகர் சங்க ஊழலில் கமலுக்கு பங்கு உண்டு :வராகி || மக்களை தூண்டி விடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை: கமல் விவகாரத்தில் ஜே.கே.ரித்தீஷ் ||
சிறப்பு செய்திகள்
வாய்ச்சொல் வீரரா மோடி?
 ................................................................
ஓவியாதான் நிஜமான மனுஷி! பிக்பாஸ் குடும்ப உறுப்பினர்களின் குணாதிசயங்கள்!
 ................................................................
என்னடா இது எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய திட்டத்துக்கு வந்த சோதனை?
 ................................................................
வாய்க்கொழுப்பா? தெனாவெட்டா? தமிழர்களை என்ன நினைத்திருக்கிறார் நிர்மலா சீத்தாராமன்?
 ................................................................
தமிழக அரசியலில் திமுகவுக்கு எதிரான வெற்றிடத்தை நிரப்புவது யார்? ரஜினியா, கமல்ஹாசனா?
 ................................................................
பாழாகும் எம்.ஜி.ஆர். பங்களா! பரிதவிக்கும் அண்ணன் குடும்பம்! "நினைத்ததை முடிப்பவன்' என்பது எம்.ஜி.ஆ
 ................................................................
வரலாறு படைக்குமா இந்திய அணி?
 ................................................................
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஜி.எஸ்.டி. - கதறும் பொள்ளாச்சி சந்தை!
 ................................................................
ஒரு கலை இயக்குநரின் கலைஞர் படைப்புகள்! பேசாத மேடையிலும் பேசப்படும் கலைஞர்!!
 ................................................................
எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு! சசியின் சொகுசான சிறை வாழ்க்கை!!
 ................................................................
எண்ணூரில் ஆற்றைக் காணோம்!
 ................................................................
குடிசையிலிருந்து குடியரசுத்தலைவர் மாளிகைக்கு..!
 ................................................................
சிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை
 ................................................................
ராம்நாத் கோவிந்த் சில முக்கிய தகவல்கள்...
 ................................................................
குறை சொன்ன 'ஆர்ஜே'வைப் பழிவாங்கும் மாநகராட்சி !!! - அதிகாரத்தின் மொழி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 29, டிசம்பர் 2016 (9:58 IST)
மாற்றம் செய்த நாள் :4, ஜனவரி 2017 (15:49 IST)


முன்னோடி சுற்றுச்சூழல்வாதி ஜே.சி. குமரப்பா

ஜோசப் செல்லத்துரை கார்னேலியஸ் செல்லப்பா என்றால் பலருக்கும் உடனடியாகப் புரியாது- மாறாக, ஜே.சி. குமரப்பா என்றால் புரியும். காந்தியின் நெருங்கிய நண்பர், சுற்றுச்சூழல்வாதி, பசுமை காந்தியவாதி, இந்தியாவின் தொடக்க கால திட்டக் குழுவில் பங்கெடுத்தவர் என பல பெருமைகள் ஜே.சி. குமரப்பாவுக்கு உண்டு. ஜனவரி 4, 1892-ல் பிறந்த ஜே.சி. குமரப்பா காந்தியின் பிரியத்துக்குரியவராகவும், சுற்றுச்சூழலியவாதியாகவும், கிராமிய பொருளாதார அறிஞராகவும் மாறியது தனிக்கதை.

தேசத்தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்திக்கு தமிழகத்தின்மீது தனி அபிப்ராயம் உண்டு. தென்னாப்பிரிக்காவில் நடந்த போராட்டத்தில் உறுதியுடன் தில்லையாடி வள்ளியம்மை பங்குபெற்று, தனது இன்னுயிரை இழந்தது ஒரு காரணம்.

அதேபோல் தமிழகத்தின்மீது அபிப்ராயம் பெருகக் காரணமாக இருந்த இன்னொருவர் ஜே.சி.குமரப்பா.

தஞ்சாவூரில் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் ஜே.சி.குமரப்பா. சாலமன் துரைசாமி- எஸ்தர் ராஜநாயகம் தம்பதியின் ஆறாவது மகன். பிரிட்டனுக்குச் சென்று பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) படிப்பை முடித்த அவர், பொருளாதாரம் மற்றும் வியாபார நிர்வாகத்தில் மேற்படிப்பை முடிக்க அமெரிக்கா சென்றார்.

இந்தியா திரும்பிய குமரப்பாவை வணிகம் ஈர்க்கவில்லை. ஆங்கிலேயர் இந்தியாவைச் சுரண்டியது அவரது இதயத்தை உறுத்தியது. ஆங்கிலேயரின் வரிக் கொள்கை, இந்தியப் பொருளாதாரத்தை எப்படியெல்லாம் சுரண்டுகிறது என விளக்கி ஒரு கட்டுரை எழுதினார்.

காந்தியின் மீது நம்பிக்கைவைத்து, அவரைச் சென்றடைந்தார். காந்தி குஜராத்தின் கிராமப் பொருளாதாரத்தைக் குறித்து ஒரு சர்வே எடுத்துத் தருமாறு கேட்டார். அந்த சர்வே, காந்திக்கு கிராமப் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள உதவியது. கூடவே, குமரப்பாவுக்கும் கிராமத்தின் யதார்த்த சித்திரம் பிடிபட்டது.

காந்தியின் மதிப்பீடுகளையும் கிறித்துவ அற மதிப்பீடுகளையும் கலந்து தனது பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கிக்கொண்டார். சமூக- பொருளாதார முரண்கள், வேலையில்லாத் திண்டாட்டம், ஏழ்மை இவற்றை அகற்றி மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்யும் ஒரு பொருளாதாரத்தை குமரப்பா கனவுகண்டார்.

உப்புச் சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்ற காலத்தில், அவர் யங் இந்தியா பத்திரிகையின் ஆசிரியராகச் செயல்பட்டு வந்ததோடு, அகமதாபாத்தின் குஜராத் வித்யாபீடத்தில் பொருளாதாரப் பேராசிரியராகவும் செயல்பட்டுவந்தார். 1935-ல் அவர் நிறுவி செயல்படுத்திய அனைத்திந்திய கிராமத் தொழில் கூட்டமைப்பு குமரப்பாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும்.

காந்தியின் முக்கிய சீடர்களில் சிலர் ஒருங்கிணைந்து சுற்றுச்சூழல்வாதம் குறித்த சிந்தனையை இந்தியாவில் ஏற்படுத்தினர். இதற்காக 1930-40 காலகட்டத்தில் சில நூல்களை எழுதியுள்ளார் குமரப்பா. மாபெரும் அணைகளைவிடவும் சிறியளவிலான அணைகள், கால்வாய்களே பாதுகாப்பானவை, நலம்பயப்பவை, வேதியியல் உரங்களைவிடவும் இயற்கை உரங்களே பலன்மிக்கது, வருவாய்ப் பெருக்கத்துக்காக காடுகளை வளர்ப்பதைவிடவும் நீர்ப் பாதுகாப்பு நோக்கிலே வளர்க்கவேண்டும் போன்ற சிந்தனைகளுக்கு இந்தியச் சூழலில் வித்திட்டவர் குமரப்பாதான்.

சுதந்திரத்துக்குப் பின், இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவித்த திட்டக் குழுவில் பங்குபெற்று விவசாயம் மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசியக் கொள்கைகளை உருவாக்கியதில் குமரப்பாவின் பங்கு முக்கியமானது.

வாழ்வின் கடைசிக் கட்டத்தில் மதுரை டி.கல்லுப்பட்டி அருகிலுள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்தில் தங்கி கிராம பொருளாதாரத்தை முன்னெடுக்கும் சிந்தனைகளை பரிசோதித்துவந்தார். ஜனவரி 30, 1960-ல் மறைந்த ஜே.சி. குமரப்பாவை கெளரவிக்கும்விதமாக குமரப்ப கிராம சுயராஜ்ய தொழில்நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

-சுப்பிரமணி
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : sri Country : Australia Date :1/1/2017 10:08:28 PM
முந்தய கவர்னர் ரோசய்யா தாத்தாவிடம் இளங்கோவன் கொடுத்த புகாரையும் சேர்த்து கொள்ளவேண்டும்.
Name : subbu Country : Australia Date :12/29/2016 4:10:48 PM
வாழ்க ......வளர்க அரசியல்வியாதிகளும் அதிகாரிகளும் தமிழக மக்கள் ஒட்டு போட்டு முட்டாள் ஆகி .................... பரிகாரம் தினந்தோறும் சாவது
Name : baala Country : India Date :12/29/2016 2:19:53 PM
பட்டை தீட்டி இருக்காங்க அவனுக்கு மக்களுக்கு பட்டை போட்டு இருக்காங்க அவ்வளவு தான்