Add1
logo
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு! || மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி || பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்! || பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன் || ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் || பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன் || மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர் || பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது || பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது || ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்) || எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம் || 7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் ||
சிறப்பு செய்திகள்
பேருந்து கட்டண உயர்வு, சாமானியனுக்கு சறுக்கல் - கதறும் தமிழகம்
 ................................................................
பெண்கள் சக்தியை புறக்கணிக்கிறதா திமுக?
 ................................................................
அனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்!
 ................................................................
பாஜகவுக்கு ஆதரவான பிரகாஷ்காரத் தீர்மானம்?
 ................................................................
"கீழடி நம் தாய்மடி" -சு.வெங்கடேசன்
 ................................................................
அவதூறு பரப்பக் கூடாது:
 ................................................................
42 பேர் கண்தானம், 35 பேர் உடல் உறுப்புதானம்!
 ................................................................
பஸ் கட்டண உயர்வா, கொள்ளையா?
 ................................................................
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 27, டிசம்பர் 2016 (16:8 IST)
மாற்றம் செய்த நாள் :27, டிசம்பர் 2016 (16:58 IST)
""சில மாதங்கள் முன்பு காவிரி விவகாரம் தொடர்பாக ஜெ.வை தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் சந்தித்தார். அலுவலக பேச்சுக்களை முடித்துவிட்டு ஜெ. ராமமோகனராவிடம் தனிப்பட்ட முறையில் பேசினார். "கிழக்கு கடற்கரை சாலையில் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு ஐநூறு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறீர்களே?' என ஜெ. கேட்க, ராவ் அதிர்ந்தார். ராம மோகனராவ் செய்து வந்த முறைகேடுகள் எல்லாம் ஜெ.வுக்கு தெரிந்தே நடந்தது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது'' என்கிறார்கள் கோட்டையில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

ஜெ.வின் ஆசியுடன் செயல்பட்ட ராமமோகன ராவ் "ஜெ.வைத் தவிர யார் கேள்வி கேட்க முடியும்' என இஷ்டத்திற்கு விளையாடி னார். அவரது தொழில் பங்குதாரரான ரெட்டி வருமானவரித்துறையின் பார்வையில் கடந்த சட்ட மன்றத் தேர்தலின்போதே சிக்கிக் கொண்டதை பற்றி ராவ் அறிந்திருக்கவில்லை.

அன்புநாதனின் ஆரம்பம்!

கரூரில் ஐந்து கோடி கரன்சி மற்றும் அதை கடத்துவதற்கான ஆம்புலன்ஸ் 50,000 கோடி பணத்தை எண்ணிய மெஷின் அடங்கிய சி.சி.டி.வி. காட்சிகளுடன் மாட்டிய அன்புநாதனை பற்றி ஆராய்ந்த வருமான வரித்துறையின் புலனாய் வுத்துறை தனது ஆவணங் களில் பதிவு செய்ததை நக்கீரன் அப்போதே வெளியிட்டது.

அன்புநாதன் GVPR ENGINEERS என்கிற கம்பெனியை ரெட்டி என்பவர் பெயரில் நடத்தி வருகிறார். (அன்புநாதன் சிக்கிய பிறகு அதன் பெயரை  INFRASTRUCTURE  என பெயர் மாற்றுகிறார் ரெட்டி) என வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடிக் கிறார்கள்.

அன்புநாதனை ரெய்டு செய்யும்போது ரெட்டி என்கிற பெயர் தான் வருமானவரித் துறைக்கு தெரிய வருகிறது. இந்த ரெட்டி, சேகர் ரெட்டிதான் என கண்டு பிடிக்க உதவியவர் பரஸ் மால் லோதா. "யார் இந்த பரஸ்மால் லோதா' என கேட்டதற்கு மறுபடியும் அன்புநாதன் விஷ யத்திற்கே நம்மை கொண்டு சென்றார்கள் வரு மானவரித்துறை அதிகாரி கள்.

அன்புநாதனுடன் தொடர்பு வைத்திருந்த மிக முக்கியமான நபர் பரஸ் மால் லோதா. இவர் கொல்கத்தாவில் ரௌடி   லிஸ்ட்டில் இருப்பவர். பியர்லெஸ் என்கிற கம்பெனியின் உரிமையாளரான இந்த லோதா மூலம்தான் அன்புநாதன் மும்பை, குர்கான், டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் முதலீடு செய்கிறார் இந்த பரஸ்மால் லோதா. தமிழக அமைச்சர்களின் ஊழல் பணத்தை வெளிநாடு களுக்கு ஹவாலா முறையில் கொண்டு செல்கிறார். அந்த பணம் KIT HUAT Trading Company என்கிற ஹவாலா முறையில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, முதலீடு செய்யப்படுகிறது. அத்தனையும் கார்டன் தொடங்கி அமைச்சர்கள் வரையிலான ஊழல் பணம்.

பலே பார்ட்டி பரஸ்மால் லோதா!


பரஸ்மால் லோதாவின் தொடர்புகளாக துபாயில் சுப்ரமணியன் ஐயர், அமெரிக்காவில் பாவா மற்றும் மேசன், பாங்காங்கில் நானி, சிங்கப்பூரில் சரவணன், இலங்கையில் சதக், கிரிதரன், தான்சானியாவில் சந்திரசேகர், இங்கிலாந்தில் கார்த்திக் மற்றும் அகமது ஆகியோர் அன்புநாதனுக்காக செயல்படுகிறார்கள். சீனாவின் வங்கியான பேங்க் ஆஃப் கம்யூனி கேஷன்ஸ். லாக்ஸிலி ஹோல்டிங்ஸ் மற்றும் தாய்லாந்தின் காசிகோன் வங்கி ஆகிய இடங்களில் லோதா, அன்புநாதனை முதலீடு செய்ய வைத்துள் ளார். அத்துடன் துபாயில் உள்ள டெய்ராசிட்டி என்ற இடத்தில் 1900 கோடி ரூபாய் செலவில் மனோஜ்குமார் கார்க் என்பவர் பெயரில் சொத்து வாங்கியுள்ளார். இந்த கார்க் ஒரு ஹவாலா ஆபரேட்டர். இவர் பரஸ் மால் லோதாவின் நண்பர் என வருமானவரித் துறையினர் குறிப்பிடுகிறார்கள்.

இந்த பரஸ் மால் லோதா பற்றி ஏற்கனவே அறிந்திருந்த வருமானவரித்துறை அதிகாரிகள், ரூபாய் நோட்டு மாற்றத்தின் போது தங்களின் பார்வையை கூர்மையாக்கியபோது பாகிஸ் தானில் இருக்கும் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் பணத்தை புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாக மாற்ற லோதா ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்       என கண்டுபிடிக்கிறார்கள். லோதாவைப் பிடிக்க மேற்கு வங்கத்தின் சுங்கச் சாவடிகளுக்கு ராணுவத்தை அனுப்பினார்கள். கல்கத்தாவில் ரியல் எஸ்டேட் நடத்தி வந்த லோதாவுக்கு பி.சி.சென் என்பவரிடம் இருந்து பியர்லெஸ் கம்பெனியை வாங்கிக் கொடுத்தவர் தாவூத் இப்ராகிம். அதற்கு நன்றிக்கடனாக ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொண்டிருந்த லோதாவை டிசம்பர் 5-ம் தேதி வலையில் வீழ்த்துகிறது வருமானவரித்துறை.

அப்போது அவர் வருமானவரித்துறை அதிகாரிகளிடம், ""நான் தாவூத் இப்ராகிமுக்கு பணத்தை மாற்றவில்லை. சேகர் ரெட்டிக்கும் டாண்டனுக்கும்தான் பணம் மாற்றிக் கொடுத்தேன்'' என சொன்னார் லோதா. டிசம்பர் 5-ந்தேதி முதல் சேகர் ரெட்டியை பின்தொடர்ந்த வருமான வரித்துறை அவரது போனை டேப் செய்தது.ரெட்டி-ராவ் கனெக்ஷன்!

ஜெ.வின் மரணச் செய்தி வந்தவுடன் சேகர் ரெட்டியின் போனில் பேசிய ராம மோகனராவ், ""இதுவரை ஜெ. இருந்தார். அவர் நம்மை காப்பாற்றினார். இப்பொழுது எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாம் மாட்டிக் கொள்வோம். உஷாராக இரு. நம்மிடம் கையிருப்பில் உள்ள 181 கோடி ரூபாயை தங்கமாகவும் பணமாகவும் மாற்றி விட்டாய். அதை வேறெங்காவது எடுத்து சென்று விடு. ஆந்திராதான் நமக்கு பாதுகாப்பான இடம்'' என சொல்ல, அதை டேப் செய்தது வருமானவரித்துறை. அத்துடன் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் அறைக்குப் பக்கத்தி லேயே அறை ஒன்றில் அமர்ந்திருந்த வழக் கறிஞர் அமலநாதன், சேகர் ரெட்டியிடம் தொடர்பு கொண்டு ராம மோகனராவின் முதலீடுகளை பற்றி பேசி வந்தார். அத னை பதிவு செய்ததுடன், ராம மோகன ராவின் டெலிபோனில் பண விவகாரத்தை பற்றிப் பேசிய ஐ.ஏ.எஸ். அதி காரிகள் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் லிஸ்டை யும் வருமான வரித் துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

டிசம்பர் 8-ம் தேதி சேகர் ரெட்டியின் வீட்டிற்குள் புகுந்தது வருமான வரித்துறை. அவர்களது கேள்வி எல்லாம் பரஸ் மால் லோதா-ராம மோகன ராவ் பற்றியே இருந்தது. ராம மோகனராவின் மகன் விவேக் பாபி செட்டி, நத்தம் விஸ்வநாதனின் மகன் அமர், ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் இரவீந்திரநாத், சைதை துரைசாமியின் மகன் வெற்றி ஆகியோர் வெளிநாடுகளில் செய்த முதலீடுகள் பற்றி குடைந்துள்ளனர்.

சேகர் ரெட்டி முதலில் வாய் திறக்கவில்லை. "பரஸ்மால் லோதா மேல் போட்ட வழக்கில் சேர்ப்போம்' என சொன்னபிறகு வாய் திறந் தார் ரெட்டி. அதையடுத்து ராம மோகனராவ் சிக்கிக் கொண்டார் என்கிறார்கள் வருமான வரித்துறை அதி காரிகள்.

சிக்னல் தந்த மோடி!


""இது ஒரு அகில இந்திய அளவிலான நடவடிக்கை. இதற்காக ராணுவத்தைக்கூட பயன்படுத்த நிதித்துறை அதிகாரிகளுக்கு நரேந்திரமோடி அனுமதி அளித் துள்ளார். பரஸ்மால் லோதா, சேகர் ரெட்டி, ராம மோகனராவ் உட்பட தமிழகத்தில் உள்ள 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் என மொத்த இந்தியா முழுவதும் 1096 பேர் சட்ட விரோதமாக வங்கி அதிகாரிகள் துணையுடன் பணத்தை மாற்றுவதில் சிக்கியுள்ளனர். மேற்கு வங்கத்தில் ராணுவத்தை அழைத்து இந்த நடவடிக்கையை துவங்கிய நாங்கள் தமிழகத்திலும் நடத்தி யுள்ளோம்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான காண்ட்ராக்டர் ராமலிங்கம் வீட்டில் ரெய்டும், சேலம் கூட்டுறவு வங்கித் தலைவரும் எடப்பாடியின் பி.ஏ.வுமான இளங்கோவன் ஆகியோர் சிக் குவது நோட்டு களை மாற்றிய தால்தான். இந்த 1096 பேர் லிஸ்ட்டில் தமிழகத்தின் எதிர்க்கட்சியை சேர்ந்த வர்களும் உள்ளனர்'' என்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்.

8-ம் தேதி சேகர் ரெட்டி சிக்கியதும் வர்தா புயலின் பெயரை சொல்லி ஓ.பி.எஸ்.சும் ராமமோகன ராவும் 140 பக்க கோரிக்கைகளுடன் டெல்லிக்குப் பறந்தார்கள். ஓ.பி.எஸ். மோடியை சந்தித்துவிட்டு உடனே திரும்பி விட்டார்.

ராமமோகன ராவ் டெல்லியில் தங்கி அவருக்கு நெருக்கமான கவர்னர் மூலமாக வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி ஆகியோரை சென்று பார்த்தார். ""இந்த ரெய் டெல்லாம் பிரதமர் நரேந்திரமோடி நேரடியாக கையாளும் விவகாரம். எங்களால் எதுவும் முடியாது'' என கைவிரித்து விட்டார்கள். சென்னைக்கு வந்த ராவ், போயஸ் கார்டன் தொடர்புகள் மூலம் டெல்லிக்கு தொடர்பு கொண்டார். அதுவும் அவருக்கு உதவவில்லை.

அதிகாலை 5.30 மணிக்கு ராமமோகனராவ் வீட்டில் நுழைவதற்கு முன்பு நள்ளிரவே மத்திய உள்துறை, முதல்வர் பன்னீரிடம், ராம மோகனராவ் வீட்டில் நடக்கும் ரெய்டு பற்றி சொல்லிவிட்டது. அவர் போனில் பேசாமல் ஆட் களை ராவ் வீட்டிற்கு அனுப்பினார். அவர் வீட்டு வாசலில் போடப் பட்டிருந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களை பார்த்துவிட்டு ஓ.பி.யின் ஆட்கள் ஒன்றும் சொல்லாமல் வந்து விட்டனர்.

ரெய்டும் நெஞ்சுவலியும்!

ராம மோகனராவின் வீடு உட்பட அவருக்கு தொடர்புடைய 13 இடங்களில் ரெய்டு நடந்தது. இந்த ரெய்டுகளை ஸ்ரீதர்குமார் என்கிற வருவாய் புலனாய்வுப் பிரிவு தலைமை அதிகாரி, பாலகிருஷ்ணா என்கிற சி.பி.ஐ. உயர் அதிகாரி, நாகேஸ்வரராவ் என்கிற அமலாக்கப் பிரிவு அதிகாரி ஆகியோர் தலைமையேற்று நடத்தி யதில் ஏராளமான டாக்குமெண்டுகள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள், கையால் எழுதப்பட்ட டைரிகள் என ஏராளமானவை சிக்கின.

ராம மோகனராவின் மகன் விவேக் வீட்டிலும், மகள் வீட்டிலும், அவர்களது குடும்ப நண்பர் அமலநாதன் வீட்டிலும் சிக்கிய ஆதாரங்களுக்கு பதில் சொல்லுங்கள் என வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு ராமமோகனராவ் ஆஜராகவில்லை. அவரது மகனும், மகளும் வரவில்லை. அமலநாதன் மட்டுமே ஆஜரானார். வருமானவரித்துறையின் முன்பு ஆஜரானால் கைது செய்யப்படுவோமோ என பயந்து தனது நண்பரான வெங்கடாசலத்திற்குச் சொந்தமான ராமச்சந்திரா மருத்துவமனையில் நெஞ்சுவலி என படுத்துக் கொண்டார் ராமமோகனராவ்.

அடுத்த லிஸ்ட்!


ராவைப் போலவே வருமான வரித்துறையின் பிடியில் ஏற்கனவே சிக்கிய ஓ.பி., நத்தம், வைத்தி லிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, சைதை துரைசாமி, எம்.சி.சம்பத் போன்றோர் தங்களுக்கு தெரிந்தவர் கள் மூலமாக சரிக்கட்ட முயற்சிக்கிறார்கள். வருமானவரித்துறையிடம் சிக்கிய சேகர் ரெட்டி தனது வாக்குமூலத்தில் ராமமோகனராவ் உட்பட 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அன்புநாதன் மற்றும் ரெட்டியின் தொடர்புகளால் பல இடங்களுக்குப் பறந்த திரிபாதி உட்பட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளை காட்டிக் கொடுத்ததோடு, மறைந்த முதல்வர் ஜெ. மற்றும் சசி வகையறாக்களை பற்றியும் கூறியுள்ளார்.

""மிகவும் சென்சிட்டிவ் ஆன இந்த வழக்கிற்காக 2,000 சி.ஆர்.பி.எப். வீரர்களை மத்திய உள்துறையிடம் பேசி வருமானவரித்துறை பெற்றுள்ளது. இது தவிர ஐ.ஆர்.எஸ். பயிற்சிக்கு வந்த அதிகாரிகளையும் தனது தலைமை அலுவலகத்தில் தங்க வைத்துள்ளது. இதில் யார் மீது பாய வேண்டும் என பிரதமர் அலுவலகம் உத்தரவிடுகிறதோ அவர்கள் மீது பாய நாங்கள் தயாராக உள்ளோம்'' என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.""ராம மோகனராவிற்கு அடுத்தபடியாக வருமானவரித்துறை ஹிட் லிஸ்ட்டில் சேலம் மற்றும் கடலூர் கூட்டுறவு வங்கிகளில் சேகர் ரெட்டிக்கு இளங்கோவன் மூலம் பணம் மாற்றிக் கொடுத்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் இளங்கோவனோடு சேர்ந்து கைதாவார் என்பதுதான் வருமான வரித்துறையின் அடுத்த டார்கெட்'' என்கி றார்கள் வருமானவரித்துறைக்கு நெருக்கமான வர்கள்.

"அடுத்தது யார் என்பதை பிரதமர் அலுவலகம் தீர்மானிக்கும்' என சொல்லும் மத்திய அரசு வட்டாரங்கள், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு பிறகு போயஸ் கார்டன் மீது தீவிரமாக கை வைக்கலாம். அதுவரை கார்டனுக்கு நெருக்கமான- விசுவாசமான மற்றவர்கள் மீது தினமும் ரெய்டு நடத்தலாம் என தீர்மானித்துள்ளதாக தெரி விக்கிறார்கள். எப்போது என்ன நடக்குமோ என்ற பதட்டத்தில்தான் கார்டன் உள்ளது.

-தாமோதரன் பிரகாஷ்
படங்கள் : ஸ்டாலின்


 கார்டனை நோக்கி...?

டெல்லி உத்தரவின்படி வெவ்வேறு மாநிலங்களிலிருந்து அனுப்பப்பட்ட அதிகாரிகள் சென்னை வருமானவரித்துறை டீமோடு இணைந்தனர். இதில் ஒரு பிரிவினர் 24-ந்தேதி விடியற்காலையில் கார்டனுக்குள் நுழைந்து மிக முக்கியமான 2 அறைகளை சீல் வைத்து விட்டுத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கிறார்கள் கார்டனுக்கு நெருக்கமானவர்கள்.

-இளையர்

 சிக்கும் அதிகாரிகள்!

முதல்வரின் செயலாளராக ராமமோகனராவ் நியமித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார், பொதுப்பணித்துறை செயலாளரான பிரபாகர், கல்வித்துறை செயலாளர் சபீதா, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய்த் துறை செயலாளரான சந்திரமோகன் ஐ.ஏ.எஸ். ராவோடு இணைந்து நடத்திய ரெய்டில் 6 கிலோ தங்கம், ஒன்றரைக்கோடி புதிய ரூபாய் நோட்டுடன் சேலத்தில் மாட்டிய நாகராஜன் ஐ.ஏ.எஸ்., பனீந்திர ரெட்டி ஐ.ஏ.எஸ்., வீட்டுவசதித்துறையை சேர்ந்த டி.பி.யாதவ், உயர் கல்வித்துறையை கவனிக்கும் கார்த்திக் ஐ.ஏ.எஸ்., முந்தைய தலைமைச் செயலாளரோடு சேர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ்., தற்போதைய போக்குவரத்துத் துறை செயலாளர் காம்ப்ளே ஐ.ஏ.எஸ்., டாஸ்மாக் எம்.டி.யான கிர்லோஷ்குமார் ஐ.ஏ.எஸ். ஆகியோருட னான தொடர்பு பற்றி சேகர் ரெட்டியிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.                       

-பிரகாஷ்


 நோட்டு மாற்றிய கூட்டுறவு!

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகளின் தலைவரான புத்திரகவுண்டன்பாளையம் இளங்கோவன், மன்னார்குடி வகையறாவுக்கு மிகவும் அணுக்கமானவர். பண மதிப்பை ரத்துசெய்ததை அடுத்து, வங்கிக் கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட் டுறவு வங்கிகளின் தலைவர் களைக் கூப்பிட்ட இவர், ஒவ்வொரு வங்கியில் இருந்த நூறு, ஐம்பது நோட்டுகளை எல்லாம் தன் கைக்கு வருமாறு செய்துகொண்டார்; அடுத்து மத்திய கூட்டுறவு வங்கிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வந்ததும், அவற்றையும் தனக்கு வரும்படி செய்தார் என்பது இளங்கோவன் மீதான குற்றச்சாட்டு.

மோடியின் அறிவிப்புக்கு மறுநாளான நவ. 9 அன்று காலையில், ஒவ்வொரு வங்கியிலும் இருந்த 1000, 500 ரூபாய் நோட்டு விவரங் களை ரிசர்வ் வங்கி கேட்டுவாங்கியுள்ளது. அதில், சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தரப்பினர், 150 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதலாக 1000, 500 ரூபாய் நோட்டுகளை சேலத்திலுள்ள ஐ.டி.பி.ஐ வங்கியில் உள்ள தங்களின் கணக்கில் செலுத்தியுள்ளனர். அதன்படி, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சோதனை நடத்த முடிவெடுத்தது, வருமான வரித்துறை. கடந்த 21, 22 இரு நாட்களும் வங்கியில் சோதனை செய்யப்பட்டது.

அதன் மூலம், 41 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடந்த 10-ம் தேதிவரை தலா ரூ.10 லட்சத்திற்கும்மேல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியது கண்டறியப்பட்டது.

இளங்கோவனோடு இந்த விவகாரம் முடிந்துவிடுமா, என்ன?

-பெ.சிவசுப்ரமணியம்


 குவாரி கொள்ளையர்கள்!

சேகர் ரெட்டியின் கூட்டாளியாக மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்ட புதுக்கோட்டை மணிவண்ணன் என்பவர் தப்பித்து வருவதாக வருமானவரித்துறையினருக்கு தகவல் தரப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுப்புறச்சூழல் மதிப்பீட்டு கமிட்டி சேர்மனும் ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ். அதிகாரியுமான கல்யாணசுந்தரத்தின் வீட்டை ரெய்டு நடத்திய வருமான வரித்துறையினர் அவரிடம் கடுமையாக விசாரணையை நடத்தினர். ""ராமமோகனராவிடம் என்னை அறிமுகப்படுத்தி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு கமிட்டியின் சேர்மன் பதவியை வாங்கித்தந்தது சேகர் ரெட்டிதான். மணல்குவாரி, கல்குவாரி, கிராவல் குவாரி தொடர்பான சுற்றுச்சூழல் துறையின் என்.ஓ.சி.யை யாருக்கு கொடுக்க வேண்டுமென சேகர் ரெட்டிதான் முடிவு செய்வார். மைனிங் ப்ளாண்ட் ஏஜெண்டான சேலத்தைச் சேர்ந்த இப்திக்கார் முகமதுவிடம் ஒரு சீட் கொடுத்தனுப்புவார் சேகர்ரெட்டி. அதை மட்டும் கமிட்டியில் வைத்து ஓ.கே. செய்து அனுப்புவேன்'' என்று வருமான வரித்துறையினரிடம் சொல்லியிருக்கிறார் கல்யாணசுந்தரம்.    

-இளையர் ஐடியா கொடுத்த மத்திய அமைச்சர்!

கைது நடவடிக்கையிலிருந்து ராமமோகன ராவைத்  தப்ப வைக்க ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான மத்திய அமைச்சர் ஒருவரும்  சொன்ன யோசனைப் படிதான் மருத்துவ மனையில் அட்மிட்டானார் ராமமோகனராவ் என்கிறார்கள் அதிகாரிகள்.

ஐந்து வருட கால ஊழலிலும்  பழைய நோட்டுகளை மாற்றிய விவகாரத்திலும் அவரோடு இணைந்து தவறுகளை செய்திருக்கும் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும், ராமமோகனராவ் மூலம் நிறைய சம்பாதித்திருக்கும் அந்த மத்திய அமைச்சரையும் காட்டிக்கொடுத்து விடக்கூடாது என்ற வியூகமாம்.

-செல்வன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(13)
Name : Murugan M Country : Japan Date :1/1/2017 1:58:21 PM
Who is தி central Minister ? Name him .
Name : ELANGO Date :12/30/2016 12:28:14 PM
அடுத்த புத்தாண்டு பரிசு எப்போது ?
Name : suresh Country : India Date :12/30/2016 10:19:34 AM
சார் இதை படிக்கும்போதே எங்களுக்கு பயங்கர அதிர்ச்சியை இருக்கு எவ்வளவு பணத்தை கொள்ளை அடிச்சுருக்கானுங்க
Name : suresh Country : India Date :12/30/2016 10:19:04 AM
சார் இதை படிக்கும்போதே எங்களுக்கு பயங்கர அதிர்ச்சியை இருக்கு எவ்வளவு பணத்தை கொள்ளை அடிச்சுருக்கானுங்க
Name : rajesh Date :12/29/2016 11:39:24 AM
நீங்க சோராதுலாம் சரிதான் ஆனா , இத்தலம் ஏப்ப நிருபிச்சி குற்ற வாளிகளுக்கு தண்டனை வாங்க போறீங்க ???????????????????????
Name : rajesh Date :12/29/2016 11:38:50 AM
நீங்க சோராதுலாம் சரிதான் ஆனா , இத்தலம் ஏப்ப நிருபிச்சி குற்ற வாளிகளுக்கு தண்டனை வாங்க போறீங்க ???????????????????????
Name : k.ganesan Date :12/28/2016 10:08:39 PM
சாமி சரணம் மலை வண்ணக்கம் தங்கள் கருத்து வெரி உண்மை சாமி சரணம் அய்யப்ப துணை
Name : arul Date :12/28/2016 7:16:38 PM
தமிழ்நாடடையே சூறையாடிய கூட்ட்ங்கள், மேலும் பலர் இருப்பார்கள் கட்சி வேறுபாடின்றி அணைத்து மாநிலங்களிலும் அணைத்து தரப்பினரையும் கண்டுபிடித்தது சடடத்தின்முன் நிறுத்தினால் அது மத்திய அரசின் சாதனை, இல்லையேல் அது இந்தியா மக்களுக்கு மிகப் பெரும் வேதனை.
Name : karikalan1 Country : United Kingdom Date :12/28/2016 2:59:12 PM
குள்ள நரிகள் மத்தியில் சிங்கமென உலா வரும் நக்கீரனுக்கு எமது வாழ்த்துக்கள் ....என்றும் எவருக்கும் அஞ்சாத நக்கீரன் வாழ்க
Name : Sivasankaran Ramaswamy Country : United States Date :12/28/2016 1:42:46 PM
மிகவும் சிறப்பான புலனாய்வு. நக்கீரனுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.
Name : baala Country : India Date :12/28/2016 10:49:02 AM
இவனுங்க ???????
Name : masila Country : India Date :12/28/2016 10:31:36 AM
சூப்பர். வெரி குட் க்ராப் ரிப்போர்டிங்
Name : nilanjala Country : Sri Lanka Date :12/28/2016 12:32:33 AM
Nakkheera unnai viddal yar ithai solluvaar ??? Supetb reporting. Well done.