Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
Logo
ஓம்
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
 ................................................................
2018 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
உற்சவம் தரும் பயன்கள்!
 ................................................................
மூவுலக அதிபதி!
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
2018 ஜனவரி மாத ராசி பலன்கள்
 ................................................................
மதி வேண்டும் கருணை நிதி வேண்டும்!
 ................................................................
ஆடலரசனின் தத்துவம்!
 ................................................................
கண்ணனைக் குட்டிய கவியரசன்!
 ................................................................
அருள் பல தரும் ஆதிசக்தீஸ்வரர்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
உலகம் போற்றும் சூரியன்!
 ................................................................
01-01-18ன்னை தன் சிம்மத்தை மகிஷனை நோக்கி அனுப்ப பல காரணங்கள் உண்டு. சிம்மமும் அன்னையின் படைப்பே! அது ஒரு பயங்கரமான விலங்கு என்பதே மனிதர்களின் எண்ணம். அது ஓரளவு உண்மையும்கூட. ஆனாலும் இறைவன் படைப்பில் பெரிது- சிறிது என்கிற பாகுபாடு கிடையாது. ஒவ்வொன்றுக்கும் ஒரு தன்மை. ஒவ்வொரு உயிரும் அதனதன் போக்கில் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கின்றன இந்த மண்ணில். ஒரு வார்த்தையில் சொல்வதானால் இதுவே இயற்கை. அப்படியிருக்க மனிதன் தன் ஆறாம் அறிவைக்கொண்டு தன்னையே மேலானவனாகக் கருதிக்கொண்டு, பிற உயிர்களையெல்லாம் தன் அறிவால் அடக்கியாள முனைகிறான். இதனால் தானே மேலானவன் என்பதன் பொருட்டு ஆணவமும் ஏற்பட்டுவிடுகிறது.

அந்த ஆணவம் மனிதர்களிடம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே நம் இறைமூர்த்தங்கள் தங்கள் வாகனங்களாக விலங்குகளை அமைத்துக்கொண்டன. விலங்கும் மனிதமும் கலந்த உருவிலும் அனுமன், கணபதி, நந்தி, சுகர், நரசிம்மம் என்று பல தெய்வங்கள் தோன்றின.

"என் படைப்பில் பாரபட்சமில்லை; பெரிது- சிறிது இல்லை; மேலானவை- கீழானவை இல்லை' என்பதே ஆதிசக்தியின் அடிநாதம். எனவே தன் பொருட்டு தன் மேனியில் தோன்றிய சப்தமாதாக்களுக்கு இணையாக தன் அரிமாவையும் அவள் களத்தில் இறக்கினாள்.

அந்த அரிமாவின் கர்ஜனை தேவருலகையே வியப்பில் ஆழ்த்தி விண்ணில் இருந்து பரவசத்தோடு பார்க்கச் செய்தது. மூம்மூர்த்தியர் உலகங்களான கயிலாயம், வைகுண்டம், சத்யலோகத்திலும் அரிமா முழக்கம் கேட்டது. மகிஷாசுரனும் அன்னை நேரில் வராமல் அரிமாவை அனுப்பியதை ஒரு இழிவாகக் கருதினான். தன் தளபதிகளில் மிச்சம் இருந்த சாமரன் என்பவனை அரிமாவை எதிர்க்க ஒரு யானைமேல் அமர்த்தி அனுப்பினான்.

யானைமேல் சாமரனும், எதிரில் கர்ஜிக்கும் சிங்கமும் பார்ப்போரை திகைக்க வைத்தது. அன்னையின் அரிமா யானையின் முகப்படாகம்மேல் கால்வைத்துத் தாவி, மேலே அமர்ந்திருந்த சாமரன் கன்னத்தில் தன் கால்களால் ஒரு அறைவிட்டது. சாமரனுக்கு பொறிகலங்கிப்போனது. அப்படியே யானை மீதிருந்து விழுந்தவன்மேல் பாய்ந்த சிம்மம் அவன் கழுத்தைக் கவ்வி இரண்டாகத் துண்டித்தது. பின் சாமரன் தலையைக் கவ்விச்சென்று அன்னையின் காலடியில் போட்டது.

சாமரன் முண்டம் மகிஷனை அடையவும், மகிஷன் ஆவேசத்தின் உச்சிக்கே போனான். அந்த அரிமாவைக்கொன்று சுமந்து வருபவர்களுக்கு இந்த உலகில் பாதியைத் தருவதாக அறிவித்து தன் அசுரப்படையைத் தூண்டினான்.

அசுரப்படையும் சாரைசாரையாகப் புறப்பட்டது. ஆனால் அன்னையின் அரிமா, படைக்குள் புகுந்து துவம்சம் செய்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அது நூறுபேரை அடித்துச்சாய்த்தது. இறுதியில் படையில் ஒருவர் பாக்கியில்லை.  அரிமா அதே ஆவேசத்தோடு மகிஷன்முன் சென்று நின்றது.

மகிஷன் அதைக்கண்டு கைகளைப் பிசைந்தான்.

அரிமா அவனோடு பேசிற்று.

""அடேய் அசுரா! இவ்வளவு பேர்களைக் கொன்ற எனக்கு நீயும் ஒரு பொருட்டல்ல. ஆனால் என் தாய் உன்னைக் கொல்லச் சொல்லாததால் உன்னை விட்டுவிட்டு பேசிக்கொண்டிருக்கிறேன். அதேசமயம் உன் பொருட்டு போரில் இறந்தவர்கள் பாக்கியசாலிகளடா... அவர்கள் பாயும் அம்புகள்- ஏவியவன் நீதானே? எனவே அவர்கள் அன்னையின் திருவடிகளை அடைந்துவிட்டனர். நீ மட்டுமே மிச்சம். ஆணவம், அதிகாரம், ஆக்ரோஷம் என்று ஆட்டம்போடும் உனக்கும் அழிவுக்காலம் நெருங்கிவிட்டது. இப்போதுகூட பாதகமில்லை. நீயும் அன்னையைச் சரணடைந்தால் உய்வடைவாய். இல்லாவிட்டால் நீயும் அழியப்போவது சர்வ நிச்சயம்!'' என்று சொன்ன அதனிடம் மகிஷனும் தோள் தட்டினான்.

""ஏ சிங்கமே! என் சக்தியும் வரசித்தியும் தெரியாமல் பேசிவிட்டாய். துணிவிருந்தால் உன் அன்னையை நேரில் வரச்சொல்.

அப்போது தெரியும் நான் யாரென்று... என்னை நேரில் சந்திக்க அஞ்சித்தானே உன்னையெல்லாம் அனுப்புகிறாள் உன் அன்னை...

போ... போய்ச்சொல்'' என்று அவனும் கொக்கரிக்க அரிமாவும் புறப்பட்டது.

அதற்குமேல் அன்னையும் அவனை விட்டுவைக்கத் தயாரில்லை. ஒரு தாயாய், கருணை மிகுந்தவளாய், நியாய தர்ம ரூபினியாய் தன்னை எதிர்த்தவனுக்கும் அன்னை அநேக வாய்ப்புகளை அளித்தாள். ஆனால் எல்லாம் கடலில் பெய்த மழைபோல் வீணாகும்போது என்னதான் செய்வது?

படைத்து மட்டுமே இன்பம் கொண்டவள், அழிக்கவும் தயாரானாள். தன் அருமை அரிமாமேல் ஏறி அமர்ந்தவளாய் போர்க்களத்துக்கும் வந்தாள். அவள்வந்த கோலம் கண்டு விண்ணோர்கள் விடைத்தனர். இப்படி ஒரு நாளுக்காகவே எல்லாரும் காத்திருந்தனர். மகிஷனும் நேரில் வந்தான். தன் மானிட உடலை மறைத்து நான்கு கால்களுடன்கூடிய எருமையாகவே மாறி, அந்த ரூபத்தில்  விசுவரூபமும் எடுத்தான். அவன் கொம்புகள் மேகப்பொதிகளைக் கிழித்தன. அவன் பிளிறவும் விண்ணிடை அனல் பரவியது. ஓடிவர முற்படவும் பூமியே நடுங்கி நிலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டன.

முனிவர்களின் தவமெல்லாம் கலைந்து அவர்களும் கண் விழித்தனர். மகிஷனோ அன்னையோடு மோதுவதற்கு முன்பாய் தன் ஆவேசமான கோபத்தைக் காட்டும் விதத்தில் மலைகளைப் பெயர்த்தெடுத்து விண்ணில் எறிந்தான். மண்ணை மிதித்து கடலைப் பொங்கச் செய்தான். கடலில் நீந்திய திமிங்கலங்களைப் பிடித்து விண்மேல் வீசி எறிந்தான். அப்போது அவன் சற்றும் எதிர்பாராத விதமாய் அரிமாமேல் அமர்ந்து வந்த அன்னை, அரிமா மறைந்த நிலையில் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பதினெட்டுக் கரங்களில் ஆயுதங்களுடன் அஷ்டதசபுஜங்களோடு மகாலட்சுமியாகக் காட்சி தந்தாள்.

அந்தக் காட்சி மகிஷனை அப்படியே மயக்கியது.

என்ன ஒரு அழகு! என்ன ஒரு கம்பீரம்!

மகிஷன் அந்த கோலத்தைப் பார்த்தபடியே நின்றான்.

அவனது அட்ட காசமெல்லாம் அப்படியே அடங்கிவிட்டது.

அன்னையும் வாய் திறந்தாள்.

""மகிஷா! மனம் திருந்து... அசுரம் வென்றதாய் வரலாறு இல்லை. சகல ஜீவராசிகளும் என்னுள் இருந்தே தோன்றின. நானே அம்மட்டில் மூலம். உன்னுள்ளும் இருப்பது என் மூலமே. இதைப் புரிந்துகொள். உன் ஆணவம் அதைப்புரியாதபடி தடுக்கிறது'' என்றாள்.

மகிஷனும் அதற்குக் கட்டுப் பட்டவன்போல்தான் முதலில் மௌனமாய் நின்றான். சில நிமிடங்களிலேயே மனம் மாறினான்.

""ஏ மாயா...! ஒரு பெண் தானே சகலத்துக்கும் மூலம் என்பதா? இதை நான் ஏற்கமாட்டேன். ஆண்களின் தேவைக்கு உருவாக்கப்பட்ட இனத்தவளே... போரிட வந்துவிட்டு என்ன பேச்சு? எடு உன் ஆயுதத்தை. எனக்கு பதில் சொல்...'' என்று தன் வாயிலிருந்து நெருப்பைக் கக்கத் தொடங்கினான். அதற்குமேல் அன்னையும் அவனிடம் பேசவிரும்பவில்லை. தன் சூலாயுதத்தை விடுத்தாள். அது மகிஷனின் உடலை தைத்தது. இன்னொரு கரமோ வாளால் அவன் சிரசை வெட்டியெடுத்துப் பிடித்துக்கொண்டது. பீறிட்ட குருதி அன்னை முகத்தில் பட்டுத் தெறித்தது. மகிஷமாய்ப் பிளிறிய மகிஷாசூரன் மடிந்து அன்னை காலடியில் வீழ்ந்தான்.

அவன் வரசித்திப் படியே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. காத்திருந்த தேவர்கள் மலர்மாரி பொழியத் தொடங்கினர். அன்னையும் அமைதிக்குத் திரும்பி லக்ஷ்மிகரமாய் காட்சியளித்தாள். பரமன் முதல் விஷ்ணு, பிரம்மன் என்று சகலரும் அன்னையை வணங்கி துதிசெய்யத் தொடங்கினர்.

துர்க்கா சப்தசதீ எனும் நூல் இந்த கட்டத்தை அதிஅற்புதமாய் விவரிக்கிறது. இப்படியாக மகிஷவதத்தை வியாசரும் ஜெனமேஜெயனிடம் சொல்லி முடிக்க, ஜெனமேஜெயன் பக்திச் சிலிர்ப்பின் உச்சத்தில் இருந்தான்.

""முனி புங்கவரே! அன்னை எத்தனை கருணையுள்ளம் படைத்தவள் என்பதை மகிஷ சம்ஹாரம் மூலம் உணர்ந்தேன். அவள் இறுதிவரை அவனுக்கு கருணை காட்டினாள்.

ஆனால் அவன்தான் திருந்தவில்லை.'' என்ற ஜெனமேஜெயனிடம் வியாசரும், ""அவன் திருந்தமாட்டான்; திருந்தவும் இயலாது'' என்றார்.

""எப்படி ஸ்வாமி?''

""ஒருவேளை அவன் திருந்தினாலும்

அதுவரை செய்த பாவச்செயல்களுக்கு யார் பதில் சொல்வது? எந்த வகையில் பரிகாரம் செய்வது?''
""அப்படியானால் அன்னை எதற்கு அவனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்?''

""நல்ல கேள்வி... வாய்ப்பளிப்பவளே அன்னை. எதிரிக்கும் வாய்ப்பளிப்பவள் நல்லோர்க்கு எத்தனை வாய்ப்பளிப்பாள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.''

""என்றால் மணப்பதே மலர், நாற்றமே மலம் என்பதுபோல் இதை எடுத்துக் கொள்ளலாமா?''

""ஆம்... இதுபோன்ற புரிதல்தான் நல்லது. நமக்கும் நன்மை செய்யும்.''

""அருமை. இந்த சம்ஹாரத்திற்குப் பிறகு என்னாயிற்று? எல்லாம் சுபமாக முடிந்ததா...?''

""அதிலென்ன சந்தேகம்... ஆனாலும் அன்னை இவ்வேளையில் தேவர்களுக்கு ஒரு தேர்வு வைத்தாள்.''

""தேர்வா?''

""ஆம்... அவர்களுக்கு ஒரு பரிசோதனை.''

""எதற்காக?''

""அவர்கள் திருந்திவிட்டார்களா என்று பார்க்கத்தான்...''

""திருந்துமளவுக்கு அவர்கள் என்ன தவறிழைத்தனர்?''

""அவர்களின் தவறுதானே மகிஷன் தோன்றவே காரணம்.''

""ஆமல்லவா? வரமுனியின் ஆணவம், இந்திரனின் நேர்மையற்ற செயல்... இவை இரண்டும்தானே மகிஷன் பிறக்கவே காரணம்...''

""சரியாகச் சொன்னாய்... அதனாலேயே அன்னை அவர்கள் திருந்திவிட்டார்களா என்று பார்க்க பரீட்சை வைத்தாள்...''

""அது என்ன பரீட்சை?''

""உங்களுக்கு யாருக்கு என்ன வரம் வேண்டுமோ கேளுங்கள் என்றாள்...''

""இதுவா பரீட்சை...''

""ஆம்... பரீட்சையிலேயே பெரிய பரீட்சை இதுதான்...''

""சந்தோஷமாக வரமளிக்க முன்வருவது எப்படி பரீட்சையாகும்?''

""தேவர்கள் வரையில் அது பரீட்சைதான்... அவர்கள் அமிர்தம் அருந்தி சாகாவரம் பெற்றவர்கள். விரும்பிய உருவம் எடுக்க வல்லவர்கள். பசி, தாகமற்றவர்கள். ஆனாலும் மனிதர்கள்போல் காமம், ஆசை, பொறாமை, புகழாசை என்கிற மலிவான உணர்வுகளும் கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் தேவர்களாக இருப்பினும் மனிதர்களுக்கு வரும் துன்பங்கள் அவர்களுக்கு வந்தது.

இவர்களுக்கு புலனடக்கமும் தவமும் பெரிது. வேதங்களைக் கொண்டாடி எப்போதும் தூய்மையான புறவாழ்வு வாழவேண்டியவர்கள் தங்களுக்குள் சமயங்களில் சண்டையிட்டுக்கொண்டனர்.

அதனாலேயே அவர்கள் வரையிலும் பாவங்களும் சாபங்களும் உருவாயின! இதற்கு அநேக உதாரணங்களும் உள்ளன. குறிப்பாக இந்திரன் தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள எந்தத் தவறும் செய்பவனாக இருந்தான். பூவுலகில் மனிதர்களை வழிப்படுத்தி அவர்கள் புரியும் வேள்விகளுக்குப் பயனைத் தராமல் எப்போதும் ஆட்டம்பாட்டம் என்று இருந்தனர். அந்த ஆதிசக்தி இதற்காகவா இவர்களைப் படைத்தாள். வேதங்கள் சொல்லி அதன்படி நடக்கவேண்டியவர்கள் புலனின்பங்களுக்கு ஆட்படும்போது அவர்கள் கீழானவர்கள் ஆகிவிடுகின்றனர். கீழான நிலைக்கு இவர்கள் செல்லும் போதெல்லாம் ஒரு அசுரன் தோன்றி இவர்களை அடிமைகொள்ளும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதன்பின் ஆதிசக்தியே தோன்றி காப்பாற்றவேண்டியுள்ளது. இதுதானே தேவர்களின் யதார்த்தம்?''

""உண்மைதான்... சரி, அம்பிகை வரம் கேட்கச் சொல்லவும் என்னாயிற்று? எல்லாரும் வரங்களைக் கேட்டு அம்பிகையை திணறச் செய்தனரா?''

""இல்லை... மகிஷனால் பட்ட பாடு அவர்களுக்கு சத்தியத்தை உணர்த்தி விட்டபடியால் ஒருவரும் ஆசை வசப்பட்டு வரங்கள் எதையும் கேட்கவில்லை. மாறாக "தாயே, உன்னை எப்போதும் மறவாத உள்ளம் தருவாய்' என்று வேண்டி நின்றனர்.''

""அற்புதம்... இதுவல்லவா பிரார்த்தனை?''

""ஆமாம்... வரம் தா என்று அம்பிகையிடம் கேட்பதைவிட அம்பிகையையே கேட்டு விடுவது உண்மையில் எத்தனை பெரிய புத்திசாலித்தனம்?''

""உண்மை... உண்மை... முக்காலும் உண்மை. தேவர்கள் திருந்திவிட்டதையே இது காட்டுகிறது. அம்பிகையும் மனம் மகிழ்ந்து தேவர்களை ஆசிர்வதித்து மறைந் தாள்...''

""ஆஹா... கேட்பதற்கே உவப்பாக உள்ளது. மாமுனியே, தாங்கள் சொன்ன அம்பிகையின் பிரதாபங்களில் மகிஷனை அவள் சம்ஹாரம் செய்த பிரதாபம் உண்மையில் அருமை. அதில் எனக்கும் நிறைய பாடங்கள்! நான் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். இப்போது என் மனம் மிகவே அமைதி அடைந்துள்ளது. உண்மையில் என் பிதாவான பரீட்சித்து சர்ப்ப சாபத்துக்கு ஆளானதும் ஒருவகையில் நல்லதற்கே! இல்லாவிட்டால் தேவியின் பிரதாபத்தைக் கேட்க எனக்கு வாய்ப்பே அமைந்திருக்காது. இன்னமும் பிரதாபங்கள் உள்ளதா?'' என்று கேட்டான் ஜெனமேஜெயன்.

""நிறையவே உள்ளன. சும்ப நிசும்பர் வதம் மிக வேறுபட்டது.'' என்றார் வியாசர்!

(தொடரும்)


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :