Add1
logo
நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி || வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ) || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! ||
Logo
இனிய உதயம்
சொல்ல மறக்காத கதை!
 ................................................................
நாகேஷ் எனும் மகா கலைஞன்!
 ................................................................
பாரதி காவியம்
 ................................................................
தமிழ் இலக்கியத்தில் தேவதாசிகள்
 ................................................................
தேவதேவனுக்கு கவிக்கோ விருது!
 ................................................................
குறுந்தொடர்
 ................................................................
மாணவர் கவிதைப் போட்டி - 3
 ................................................................
01-12-2017


வேலூர் தமிழ்ச் சங்கமும் கவிக்கோ அறக்கட்டளையும் இணைந்து  “கவிக்கோ விருது விழா’வை வேலூரில் 9-11-2017-ல் நடத்தின. இந்த விழாவில் கவிஞர் தேவதேவனுக்கு விருதும் ரூபாய் ஒரு லட்சம் பொற்கிழியும் வழங்கப்பட்டன.

கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு 1998 ஜூலையில்சென்னை ராஜாஜி அரங்கில் கலைஞர்தலைமையில் நிகழ்ந்த மணிவிழாவின் போது அவருக்கு அளிக்கப்பட்ட அன்பளிப்புத் தொகையிலிருந்து கவிக்கோ அறக்கட்டளை நிறுவப்பட்டது. 2000-வது ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞருக்கு விருதாக ரூ. 30,000 வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை உயர்த்தப்பட்டு 2015-ம் ஆண்டுக்கான விருதுத் தொகையாக ரூபாய் ஒரு லட்சம் வழங்குவது எனத்தீர்மானிக்கப்பட்டு, கவிஞர் முத்துலிங்கத்துக்கு வழங்கப்பட்டது. 

கலைஞர் கருணாநிதி, கவிஞர்கள் சுரதா, மீரா, புவியரசு, அபி, நா.காமராசன், சிற்பி பாலசுப்ரமணியன், இன்குலாப், மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், இரா.மீனாட்சி, புலமைப்பித்தன், கா.வேழவேந்தன், நீலமணி, பொன் செல்வகணபதி, முத்துலிங்கம் ஆகியோர் இதுவரை விருதுபெற்றவர்கள்.

“”விருதுகள் வழங்கப்படுவதாக கவிக்கோ அறக்கட்டளையினர்கூறுவதில்லை. விருதுகள் சம்பந்தப்பட்ட கவிஞர்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றது’ கவிக்கோ உடல்நலமின்றி மருத்துவமனையில் இருக்கும்போதே 2016-ம் ஆண்டின் விருதுக்குரியவர் கவிஞர் தேவதேவன் என்று கூறிவிட்டார். 2017-ம் ஆண்டுக்குரிய கவிஞர் பெயரையும் அவர் தெரிவித்துவிட்டார். ஆனால், அதை அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதிக்கு முன் அறிவிப்போம்!’’ என்று விழாத் தலைவர் வெ.சோலைநாதன் தன் உரையில் குறிப்பிட்டார்.

குடியேற்றம் பெரும்புலவர் வே.பதுமனார், “”ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி, கவிக்கோவின் பிறந்தநாள். அதுகவிதை பிறந்தநாள் என்பதாக விழா கொண்டாடுகிறோம்.

தனக்கு ஞானம் பிறந்தது எங்கே என்று கவிக்கோ குறிப்பிட்டிருக்கிறார். ஒரு மசூதியின் முன் வீதியில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர் கடை போட்டிருந்தார். அவர் நெற்றி நிறைய திருநீறும் குங்குமமும் அணிந்திருந்தார். காலையில் கடையைத் திறந்துவைத்து அவர் எதிரிலிருக்கும்மசூதியை நோக்கிக் கைகூப்பி “கடவுளே, இன்று எனக்கு நல்ல வருமானத்தைக் கொடு அப்பா!’ என்று வாய்விட்டுக் கூறி வணங்கினாராம். அருகிலிருந்த கவிக்கோ, “ஏனப்பா, நீ இந்த மசூதியை வணங்கிக் கோரிக்கை வைக்கிறாயே?’ என்று அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியைக் கேட்க, அவர் “ஏன் சாமி, அப்ப இங்கே கடவுள் இல்லையா?’ என்று அப்பாவியாய்க் கேட்டாராம். அந்தப் போதில் கவிக்கோ தனக்கு ஞானம் பிறந்தது என்று சொல்லியிருக்கிறார்.வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தரும் வேலூர் தமிழ்ச் சங்கத் தலைவருமான கோ. விசுவநாதன் பேசும்போது சொன்னார்: தேவதேவன் குழந்தையாக இருந்தபோது அவரின் பெற்றோர் தந்தை பெரியாரிடம் போய் தங்கள் குழந்தைக்குப் பெயர் சூட்டக் கோரினார்களாம். பெரியார் இவருக்குகைவல்லியன் என்று பெயர் சூட்டினார். நல்ல தமிழில் நாம் முழுமையாகப் பேசுவதில்லை. நான்கூட சற்றுமுன் ஈஒபஆபஒஞச என்றுதான் சொன்னேன். நல்ல தமிழ் கேட்கவேண்டுமானால் நாம் சிங்கப்பூர், மலேஷியா, இலங்கைதான் செல்ல வேண்டும். வெளிநாடுகளில் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரைச் சூட்டுவார்கள். ஆனால், அந்தக் குழந்தைகளுக்குத் தமிழ் பேசத் தெரிவதில்லை. இந்த நிலையை நீக்க நாம் என்ன செய்திருக்கிறோம்?

அமெரிக்காவில் உள்ள தமிழ்ச்சங்கம் தமிழர் குழந்தைகளுக்குத் தமிழ் கற்க வசதிகள் செய்து தந்திருக்கின்றது. வேலூர் தமிழ்ச்சங்கம் ஆர்வமுள்ள அனைத்துத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து, அண்டை மாநிலங்கள், அயல்நாடுகளில் தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்துவருகிறது.  

மதம், மொழி போன்ற பிரச்சினைகளைப் பாராமல் திருக்குறளை 1730-ல் இலத்தீன் மொழியில் வீரமாமுனிவர் மொழிபெயர்த்தார். ஐரோப்பாவை அப்போது இலத்தீன் மொழிதான் ஆண்டுகொண்டிருந்தது. 1856-ல் கால்டுவெல் போப் திராவிட ஒப்பிலக்கணம் எழுதினார். தமிழ் எந்த மொழியிலிருந்து பிறந்தது என்று எல்லோரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கால்டுவெல் போப் தமிழ்மொழி எந்த மொழியிலிருந்தும் வரவில்லை. அது தனித்தன்மை வாய்ந்தது! என்று அழுத்தம்திருத்தமாக எடுத்துரைத்தார்.

அப்படிப்பட்ட தமிழில் உயர்ந்த இலக்கிய வடிவமான கவிதையில் சாதித்த தேவதேவன் போன்றவர்கள் போற்றப்பட வேண்டும் என்பதாலேயே இந்த விழா இன்று எடுக்கப்பட்டுள்ளது!’’ என்று குறிப்பிட்டார்.

பேராசிரியர் அப்துல்காதர், “”கவிஞர் தேவதேவன் அற்புதமான 30 நூல்களை எழுதியுள்ளார். தலைசிறந்தகவிஞர். இவருக்கு விருது வழங்க வேண்டும் என்பதை கவிக்கோ தன் மருத்துவமனை நாட்களிலேயே கூறிவிட்டார். கவிக்கோ தன் மரணப்படுக்கையில், “”என் மரணத்துக்குப் பின் எந்தக் காரணத்தாலும் சிறந்த, நலிந்த கவிஞர்களுக்கு ரூ. ஒரு லட்சம் விருது வழங்கும் நிகழ்வு தடைப்பட்டுவிடக்கூடாது. என் சொத்தை விற்றாவது இந்த ஒரு லட்சம் ரூபாயைக் குறைக்காமல் அவர்களுக்கு வழங்க வேண்டும்!’’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்!

“மௌனத்தின் நாவுகள்’ புகழ் அபி சொன்னார்: தேவதேவன் அவர்களின் ரசிகன் நான். கவிதையைக் காண்பது அழகன்று. காண்பதில் காண்பதுதான் அழகு என்கிறார் தேவதேவன். எழுத்தாளர் கு.ப.ரா. 1942 ல் மறைந்தார். அவர் நிறையச் சிறுகதைகளும் 20 கவிதைகளும் எழுதியவர். “கண் கவர்வது காண்பதற்கு எப்போதும் குறைவுதான்!’ என்று கூறியுள்ளார். கவிதைகளுக்குள் போவதற்கு, காண்பதற்கு மேலாக நுழையவேண்டும் என்பது இதன் பொருள்.  சங்க இலக்கியங்களுக்குப் பிறகு, இயற்கையை அதிகமாகத் தன் பாடுபொருளாக எடுத்துக் கொண்டு எழுதியவர் தேவதேவன். என் நண்பர் எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு விழாவில் கவிக்கோவைச் சந்தித்துவிட்டு, “கவிஞர் போன்று தோற்றமளிப்பவர்கள் எனக்குத் தெரிந்தவரை இருவர். ஒருவர் கவிக்கோ, இன்னொருவர் தேவதேவன்’ என்று சொன்னார்.  நவீன கவிதை கலைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றார் எஸ்ரா பவுண்டு. கவிஞர் தேவதேவன் மின்னலை விளக்காக மாற்றி வாழ்கிற கலைஞன்!’’

இந்த விழாவுக்குத் தொழிலதிபர் சோலைநாதன் தலைமை தாங்கினார். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் விருதை வழங்கி உரை நிகழ்த்தினார்.  வேலூர் தமிழ்ச் சங்கச் செயலாளார் மு.சுகுமார் வரவேற்புரையாற்றினார். கவிஞர் ‘அபி’, பேராசிரியர் அப்துல்காதர், புலவர் வே.பதுமனார் ஆகியோர் கவிஞர் தேவதேவனை வாழ்த்திப் பேசினர். அயாஸ் பாஷா சான்றிதழ் வாசித்தார்.  பேராசிரியர் த.அன்பு தொகுப்புரை நிகழ்த்தினார். அல்ஹாஜ் எஸ்.எஸ். ஷாஜஹான் நன்றியுரை பகர்ந்தார்.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :