Add1
logo
பாகிஸ்தானின் தேவாலயத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்! - 8 பேர் உயிரிழப்பு || கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது || சுதந்திரத்திற்குப் பின் முதன்முதலாக மின்வசதி பெற்ற கிராமம்! || நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! || கட்சி பிரமுகர்களை விருந்துக்கு அழைத்துள்ள ராகுல் || ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி || கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல் || வாக்கு எந்திரங்களை ஹேக் செய்ய பொறியாளர்கள்! - பாஜக மீது ஹர்தீக் பட்டேல் குற்றச்சாட்டு || முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை! || வங்கதேசிகளை சட்டவிரோதமாக கடத்திய மலேசிய அதிகாரிகள் 600 பேர் பணியிட மாற்றம்! || தேசிய அளவிலான மோட்டார் வாகன பந்தயம் || அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி || டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை! ||
Logo
பொது அறிவு உலகம்
உலக அழகி - 2017 : மானுஷி ஷில்லார்
 ................................................................
பேராசிரியர் மா. நன்னன்
 ................................................................
ஜி.எஸ்.டி. வரி மறுத்திருத்தம்
 ................................................................
டெங்கு காய்ச்சல் : புதிய கண்டுபிடிப்பு
 ................................................................
மாற்றம் காணும் இந்தியப் பொருளாதாரம்
 ................................................................
01-12-17    ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்பட்டது.

    இதன்படி, 0, 5, 12, 18, 28 என 5 அடுக்கு வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. அதிகபட்ச வரி (28) விதிப்பு பட்டியலில் 228 பொருட்கள் கொண்டுவரப்பட்டன. எனினும் அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூடி வரி விகிதங்கள் குறித்து ஆராயும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஜிஎஸ்டி வரி, 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது; சில சொகுசு பொருட்களுக்கு கூடுதல் செஸ் வரியும் விதிக்கப்படுகிறது.

    இந்த வரி விதிப்பால் உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

    இதனிடையே, பல பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக எதிர்க் கட்சிகளும் தொழில் துறையினரும் குற்றம்சாட்டி வந்தனர். குறிப்பாக, அதிகபட்ச வரி விதிப்பு பட்டியலில் உள்ள பொருட்களின் எண்ணிக்கையை 62 ஆகக் குறைக்க வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்தது.

    இதைத் தொடர்ந்து சிறு தொழில்களுக்கு குறைவான ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

 ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-வது கூட்டத்தில் 233 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்டது. அதிகபட்ச வரியான 28 சதவீத பட்டியலில் இருந்து பெரும்பாலான பொருட்கள் 18 சதவீத வரி பட்டியலில் கொண்டு வரப்பட்டது. தற்போது, 28 சதவீத வரையறைக்குள் 50 பொருட்கள் மட்டுமே வருகின்றன.

    அனைத்து வகையான ஓட்டல்களுக்கும் 5 சதவீத வரியாக குறைக்கப்பட்டது. ஷேவிங் க்ரீம், ஷேவிங் லோஷன், பற்பசை, ஷாம்பூ, அழகுசாதனப் பொருட்கள், பெண்களுக்கான முக அழகு க்ரீம், சுவிங்கம், சாக்லெட், உள்ளிட்ட பொருட்களுக்கு 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது.

அதிக வரி விகிதப் பட்டியலிலிருந்த பண்டங்கள் குறைந்த வரி விகிதப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதற்கு குஜராத் சட்டப்பேரவை பொதுத் தேர்தல்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    மொத்தம் 213 பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதன்படி, 48 பொருட் களுக்கு மட்டுமே அதிகபட்ச வரி (28%) விதிக்கப்படும். 178 பொருட்களின் வரி 28-லிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.

    மேலும் 13 பொருட்கள் மீதான வரி 18-லிருந்து 12 சதவீதமாகவும், 6 பொருட்கள் மீதான வரி 18-லிருந்து 5 சதவீதமாகவும், 8 பொருட்கள் மீதான வரி 12-லிருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 5 சதவீத வரி விதிக்கப்பட்ட 6 பொருட் களின் வரி முற்றிலும் ரத்து செய்யப் பட்டுள்ளது. மேலும் இரண்டு பொருட் களுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதம் 28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 228 பொருட்கள் மீது ஜிஎஸ்டி யின் கீழ் அதிகபட்ச அளவான 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. இனி 48 பொருட் களுக்கு மட்டுமே 28 சதவீத வரி விதிக்கப் படும். 178 பொருட்கள் மீதான வரி 28-லிருந்து 18 சதவீதமாகவும் மாவு இயந்திரம் மற்றும் ராணுவ கவச வாகனங்கள் ஆகிய 2 பொருட்களுக்கான வரி 28-லிருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்படும்.

    குறிப்பாக, சாக்கலேட், சூயிங்கம், ஷாம்பு, ஷூ பாலிஷ், சோப்புத் தூள், மார்பிள், அழகு சாதன பொருட்கள், ஊட்டச்சத்து பானங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. பெயிண்ட் மற்றும் சிமெண்ட், ஆடம்பர சாதனங்களான ஏசி, வாஷிங் மெஷின் ஆகியவை 28 சதவீத ஜிஎஸ்டி விகிதத்திலேயே நீடிக்கும்.

    இந்த வரிக் குறைப்பு மூலம் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு ரூ. 20,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

    ஜவுளிகளுக்கான வரியைக் குறைக்க வேண்டுமென்று குஜராத் வணிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ஜவுளிகள் மீதான வரியை 18-லிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.

    மேலும் வேளாண்துறைக்கு தேவையான டிராக்டர் உள்ளிட்ட சில கருவிகளுக்கான உதிரி பாகங்கள் மீதான வரி விகிதம் 28-லிருந்து 18 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது.

    சாதாரண ஹோட்டல்களில் உணவுப் பொருட்கள் மீது இப்போது 12 சதவீதமும் ஏசி ஹோட்டல்களில் 18 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. இனி இந்த இரு வகை ஹோட்டல்களிலும் உணவுப்பொருட் களுக்கு 5 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப் படும். மேலும் இந்த ஹோட்டல்களில் உள்ளீட்டு வரி வரவு கிடையாது என ஜி.எஸ்.டி. மறுதிருத்தத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :