Add1
logo
பாகிஸ்தானின் தேவாலயத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்! - 8 பேர் உயிரிழப்பு || கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது || சுதந்திரத்திற்குப் பின் முதன்முதலாக மின்வசதி பெற்ற கிராமம்! || நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! || கட்சி பிரமுகர்களை விருந்துக்கு அழைத்துள்ள ராகுல் || ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி || கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல் || வாக்கு எந்திரங்களை ஹேக் செய்ய பொறியாளர்கள்! - பாஜக மீது ஹர்தீக் பட்டேல் குற்றச்சாட்டு || முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை! || வங்கதேசிகளை சட்டவிரோதமாக கடத்திய மலேசிய அதிகாரிகள் 600 பேர் பணியிட மாற்றம்! || தேசிய அளவிலான மோட்டார் வாகன பந்தயம் || அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி || டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை! ||
Logo
ஓம்
சனியின் துயர் தணிக்கும் மாதா, பிதா, குரு, தெய்வம்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
டிசம்பர் மாத ராசி பலன்கள்
 ................................................................
ஜோதியும் முருகனே!
 ................................................................
பிரம்மிப்பூட்டும் அவதாரம்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
பார்வைகள் பலவிதம்!
 ................................................................
சிவஜோதி தரிசனம்!
 ................................................................
தவயோகத் திருவிழா!
 ................................................................
டிசம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
மங்குசனியை பொங்கு சனியாக்கும் சங்ககிரி
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
அர்ப்பணிப்பின் அன்னை!
 ................................................................
அஞ்சனை மைந்தனின் அவதாரம்
 ................................................................
01-12-17சனிப்பெயர்ச்சி- 19-12-2017

பூவுலகில் பிறந்த மானிடர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த நேரம், நட்சத்திரத்திற்கேற்ப பலன்களை அனுபவிக்க வேண்டுமென்பது விதியாகும். இந்த விதிப்பயனால் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளைத் தரும் பொறுப்பு நவகிரகங்களுக்கு உண்டு. அந்தவகையில் குருப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி போன்ற காலங்களில் மானிடர்கள் இன்பத்தையும், இன்னல்களையும் அனுபவிக்க நேருமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இறைவனே பூவுலகில் அவதரித்தாலும் நவகிரகங்களின் ஆட்சிக்கு உட்பட்டு சுக, துக்கங்களை அனுபவிக்கவேண்டியிருக்கிறது. அந்த நவகிரக வரிசையில் மிகவும் வலுப்பெற்றுத் திகழ்கிறது சனி கிரகம்.

இந்தச் சனிகிரகத்தின் ஆட்சி பீடமாக இருப்பவர் சனி பகவான் ஆவார்.

சனி பகவான் கருமை நிறம் கொண்டவர்; ஒரு கால் ஊனமானவர்; மெதுவாகச் செல்லும் இயல்புடையவர். அதேசமயம் நீதி நேர்மைக்குக் கட்டுப்பட்டவர்; பக்திமான். அப்படிப்பட்டவர் ஒரு
ஜாதகத்தின்படி தாக்கத்தை ஏற்படுத்தும் வேளையில் சிலருக்கு வசதி வாய்ப்பினையையும், சிலருக்குத் துன்பங்களையும் இடையூறுகளையும் கொடுத்து, அவர்களை நல்வழியில் செல்ல பக்குவப்படுத்துகிறார்.

மாண்டவ்ய மகரிஷி, சனியின் சஞ்சாரத்தால் துன்பத்திற்கு ஆளானார். பரிகாரங்கள் பல மேற்கொண்டும் சனியின் தாக்கம் மேன்மேலும் துன்பத்தைக் கொடுத்ததால் சனி பகவானுக்கு சாபம் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் மகரிஷி.

""ஏ! சனீஸ்வரனே, நீ என்னை சாதாரணமானவனாக நினைத்துவிட்டாய். எனக்கு நீ மேன்மேலும் துன்பத்தைக் கொடுக்கிறாய். நான் உனக்கு சாபம் கொடுத்தால் உன் நிலை என்னவாகும் தெரியுமா?''

என்று, சனி பகவான் தன்னெதிரில் நின்றுகொண்டிருப்பதாக நினைத்து ஆவேசமாகக் கூறினார். அவரது குரல் சனி பகவானுக்குக் கேட்டது.

""நான் என் கடமையைச் செய்கிறேன்.

இது உமக்கு ஒரு கண்டம் என்பதை நினைவுபடுத்துகிறேன். அதன் தாக்கம் போகப்போகத்தான் தெரியும். மகரிஷியே, நான் ஈஸ்வரனையே சில நொடிகள் பிடித்து ஆட்டிவைத்தவன்'' என்று சனி பகவான் இறுமாப்புடன் பதில் கூறவே, அந்த ஒலி மகரிஷியின்
காதில் விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த ரிஷி, ""என்னையா எச்சரிக்கிறாய்? நீ வாதநோயால் பாதிக்கப்பட்டு முடமாகத் துன்பப்படக்கடவாய்'' என்று சபித்தார்.

மகரிஷியின் சாபம் பலித்தது. ஏற்கெனவே தன் அண்ணன் எமன் கதையால் அடித்ததால் கால் ஊனமான சனி பகவான், தற்பொழுது மகரிஷியின் சாபத்தால் நடக்க முடியாமல் துன்பப்படும் நிலை ஏற்பட்டது.  இதற்கு நிவாரணம் என்னவென்று யோசித்தார் சனி பகவான். தன்னை ஈன்ற தாயிடம் சென்று முறையிட்டார். சனியின் அன்னை சாயாதேவி தன் மகன் சொன்னதைக் கேட்டு வருந்தியவள், தான் சாயாதேவியாக இருப்பதற்குக் காரணமான சமுக்ஞா தேவியிடம் (உஷா) சனி பகவானை அழைத்துச்சென்று நிவாரணம் கேட்டாள். மனம் வருந்திய சமுக்ஞா தேவி, ""ரவி புத்திரா,இதற்கான ஆலோசனையை உன் தந்தை சூரியபகவான் அருள்வார்'' என்றாள்.""என் தந்தையா? அவர்தான் என்னைப்
பகைவன்போல் பார்க்கிறாரே.''
""தவறாகப் புரிந்துகொண்டாய்.

அவரை சரணடைந்தால் சந்தோஷத்தை அருள்வார். வா, போகலாம்'' என்று சூரியபகவானிடம் சனியை அழைத்துச் சென்றனர். சூரிய பகவான் தன் மகன் மகரிஷியின் சாபத்தால் பாதிக்கப்பட்டதையறிந்து வேதனைப்பட்டார்.

""தனித்தியங்கும் சக்திகொண்ட சனைச்சரா... மாதா, பிதா என்று எங்களை மதித்துவந்த நீ, உன் குருவான பைரவரை சரணடைந்து இதற்கு நிவாரணம் கேள். அவர் உன் குருவானதால் உனக்கு அருள்புரிவார். திருவாதவூரில் தற்போது எழுந்தருளியுள்ள உன் குருநாதர் பைரவரிடம் சென்று அவரை வழிபட்டால் மகரிஷியின் சாபத்தால் பாதிக்கப்பட்ட வாதநோய் நீங்கும்'' என்று சூரிய பகவான் கூறினார்.

"தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை' என்ற முதுமொழி அறிந்த சனி பகவான், திருவாதவூர் திருத்தலத்திற்கு வந்து, அங்கு எழுந்தருளியிருக்கும் பைரவரை வழிபட்டார்.

""சீடனே, இது என்ன கோலம்? கையில் கோலூன்றி மிக சிரமப்பட்டு வந்திருக்கிறாய். உன் வாகனம் காகம் எங்கே?'' என்றார் பைரவர்.

""குருதேவா! வாதநோயால் என் உடல் பருத்துவிடவே, என் வாகனமான காகத்தால் என்னை சுமக்கமுடியாமல் ஒரு மரத்தடியில் படுத்துவிட்டது. அங்கே கீழே கிடந்த இந்தக் கோலினை எடுத்துக்கொண்டு ஊன்றி ஊன்றி வருகிறேன்''

என்றார் சனி.

""முதலில் அந்த ஊன்றுகோலைக் கீழே போடு. இதோ, இந்த சூலாயுதத்தை ஊன்றுகோலாகப் பயன்படுத்திக்கொள்''

என்று தன் வலக்கையில் வைத்திருந்த சூலாயுதத்தை சனி பகவானிடம் கொடுத்தார். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த பைரவரின் வாகனமான நாய் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து ஓடியது. (எங்கே சனிக்கு தன்னை வாகனமாக வழங்கிவிடுவாரோ என்ற எண்ணம்.)

இதை கவனித்த பைரவர் மேலே வானத்தைப் பார்த்தார். பெரிய கழுகு ஒன்று பறந்துகொண்டிருந்தது. அதன்மீது பைரவரின் பார்வைபட்டதும் அது வட்டமடித்துக் கீழே இறங்கி பைரவர்முன் நின்றது.

""கூர்மையான பார்வையுடைய கழுகே, நீ சில நாட்கள் எனது சீடனான சனைச்சரனுக்கு வாகனமாக இரு'' என்று பணித்தார். கழுகும் சம்மதித்தது. (சில தலங்களில் சனி பகவானுக்கு கழுகு வாகனமாக உள்ளதைக் காணலாம். மேலும் இத்தல பைரவர் தன் சீடனுக்கு சூலாயுதத்தைக் கொடுத்துவிட்டதால் திருவாதவூரில் சூலாயுதமின்றிக் காட்சிதருகிறார்.)

""சனைச்சரா, கவலைப்படாதே. உன் வாதநோய் விரைவில் குணமாகும்.

நீ இத்தலத்தில் எழுந்தருளியுள்ள திருமறைநாதரையும், அம்பாள் ஆரணவல்லியையும் வழிபட்டால் உன் சாபம் நீங்கும்'' என்று கூறியவர், அங்குள்ள விஷ்ணு தீர்த்தத்தில் நீராடி வழிபடும் முறைகளையும் கூறினார்.இந்த சிவாலயத்தில் விஷ்ணு தீர்த்தம் ஏற்படக்காரணம் என்ன? தேவர்களைத் துன்புறுத்திவந்த அசுரர்களையும், அசுரகுரு சுக்கிராச்சாரியாரின் தாயாரையும் அழிக்கவேண்டிய நிலை மகாவிஷ்ணுவுக்கு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க இத்தலத்தில் குளம்வெட்டி நீர் வடிவில் மகாவிஷ்ணு சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் ஒரு தாமரை மலரின் நடுவில் வேதநாதம் ஒலிக்க எழுந்தருளி, மகாவிஷ்ணுவின் தோஷத்தைப் போக்கியருளினார்.

தன் குருநாதர் அருளிய ஆலோசனைப்படி, சனி பகவான் விஷ்ணு தீர்த்தத்தில் நீராடி, திருமறைநாதர்முன் தவத்தில் ஆழ்ந்தார்.

சனியின் தவத்தை மெச்சிய இறைவன், ""சனைச்சரா, மகரிஷியின் சாபத்தால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் நீ இனி முழுவதும் குணமடைவாய். முன்போல் உன் பணியை மேற்கொள்ளலாம்'' என்று அருளினார்.

சிவபெருமான் திருமறைநாதரையும், அம்பாள் ஆரணவல்லியையும் மீண்டும் வழிபட்டுப் பேறுகள் பெற்றார் சனைச்சரன் எனப்படும் சனி பகவான்.

சனி பகவான் இத்தலத்தில் சங்கடங்கள் நீங்கி சுகம் பெற்றதால் இங்கு கைகளில் தண்டம், சூலத்துடன், காகத்தின்மீது கால்வைத்த நிலையில் காட்சி தருகிறார். இத்தலம் மதுரை- மேலூர் பாதையிலுள்ள ஒத்தக்கடையிலிருந்து பிரியும் வழியில் சுமார் 24 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும். வாகன வசதிகள் உள்ளன.

பொதுவாக மானிடர்களான நாம் நீதி, நேர்மையுடன், ஊழல் புரியாமல், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடன் இருந்தால் அவர்களுக்கு எந்தத் துன்பத்தையும் தராமல் சற்று விலகிநின்றே கவனிப்பது சனி பகவானின் வழக்கம்.

இதனால் சனி தசை நடக்கும்போது ஒருசிலருக்கு திடீர் செல்வச் செழிப்பு ஏற்படும். தீயகுணம் கொண்டவராக இருந்தால் அவர்களை அரசாங்க தண்டனை பெறும்படியும் செய்வார் சனி பகவான்.

எனவே, எந்தவித துன்பம் வந்தாலும் சனி பகவான் ஆலோசனை பெற்றதுபோல் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் வழிபட துன்பங்களிலிருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு அருள்புரியும் சிவபெருமானுக்கு சந்தனாபிஷேகம் செய்து, அம்பாளுக்கு வாசனை மலர்களால் மாலை சூட்டி, பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து, சனி பகவானுக்கு எள் தீபமேற்றி வழிபட்டால் துன்பங்கள் நீங்கும்; உடல் வளம் பெறும் என்று கூறப்படுகிறது.

கோவில்களில் நவகிரக சந்நிதியில் மேற்குமுகமாகக் காட்சிதரும் சனி பகவானை வழிபடும்போது கீழ்க்காணும் சுலோகத்தைச் சொல்லி வழிபட சனியின் தாக்கம் குறையும்; நன்மைகள் கிட்டும்.

"நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்.'

"மைபோன்று கருமை நிறம் கொண்டவரே, சூரியனின் மைந்தரே, எமதர்மனின் சகோதரரே, சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவரே, மெதுவாக சஞ்சாரம் செய்பவரே, சனி பகவானே, உன்னைப் போற்றுகிறேன்' என்பது இந்த சுலோகத்தின் பொருள்.

குறிப்பு:

சனி தசை நடப்பவர்களும், அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனியின் பிடியில் இருப்பவர்களும் இந்த சுலோகத்தை தினமும் மூன்றுமுறை பாராயணம் செய்யலாம்.

மேலும் ஆஞ்சனேயரை சனிக்கிழமைகளில் வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.

பொதுவாக, சனி பகவானை வழிபடும்போது அவருக்கு நேராக நின்று வழிபடாமல் வலது பக்கம் ஒதுங்கி பக்கவாட்டில் நின்றே வணங்கவேண்டும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :