Add1
logo
பாகிஸ்தானின் தேவாலயத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்! - 8 பேர் உயிரிழப்பு || கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது || சுதந்திரத்திற்குப் பின் முதன்முதலாக மின்வசதி பெற்ற கிராமம்! || நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! || கட்சி பிரமுகர்களை விருந்துக்கு அழைத்துள்ள ராகுல் || ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி || கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல் || வாக்கு எந்திரங்களை ஹேக் செய்ய பொறியாளர்கள்! - பாஜக மீது ஹர்தீக் பட்டேல் குற்றச்சாட்டு || முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை! || வங்கதேசிகளை சட்டவிரோதமாக கடத்திய மலேசிய அதிகாரிகள் 600 பேர் பணியிட மாற்றம்! || தேசிய அளவிலான மோட்டார் வாகன பந்தயம் || அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி || டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை! ||
Logo
ஓம்
சனியின் துயர் தணிக்கும் மாதா, பிதா, குரு, தெய்வம்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
டிசம்பர் மாத ராசி பலன்கள்
 ................................................................
ஜோதியும் முருகனே!
 ................................................................
பிரம்மிப்பூட்டும் அவதாரம்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
பார்வைகள் பலவிதம்!
 ................................................................
சிவஜோதி தரிசனம்!
 ................................................................
தவயோகத் திருவிழா!
 ................................................................
டிசம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
மங்குசனியை பொங்கு சனியாக்கும் சங்ககிரி
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
அர்ப்பணிப்பின் அன்னை!
 ................................................................
அஞ்சனை மைந்தனின் அவதாரம்
 ................................................................
01-12-17தேவர்செய்த சிருட்டிகள்போல் வேறு
                                செய்குவோம்
தேவர்களையு மெங்கள்கீழே வாழச்செய்குவோம்
தேவருடன் சமமாக நாங்களும் வாழ்வோம்
சித்தர்கள் செய்யும்செய்கையி தென்றாடு பாம்பே.
(சித்தர் வல்லபம்)

அகத்தியரைப் பற்றிய உண்மைகளை மற்ற சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள் கூறியுள்ளதை இன்னும் அறிவோம். சுந்தரானாந்த சித்தர்-

"சீராய்ந் துணர்மலியுந் தனிகன்
பண்பட்ட விதி திகழ்கின்ற பொதிகை முனிவன்'

என்கிறார்.

ஒரு மனிதன் இந்த பூமியில் நிலையாக இருப்பது, நிலையற்றது, உருவானது, உருவாக்கப்பட்டது என அனைத்தையும், தன் பகுத்தறிவைப் பயன்படுத்திதான் உண்மை- பொய்களை அறிந்துகொள்ளமுடியும் என்றுகூறி, வளமான வாழ்வை அடையும் வழிமுறைகளையும் நிர்ணயித்து, தமிழ் மக்களை உலகில் தலைநிமிர்ந்துவாழச்செய்தவர் பொதிகைமலையில் வாசம் செய்துவரும் குரு அகத்திய முனிவர் என்கிறார்.

கருவூர் சித்தர் கூறும்போது-

"மதுவொழுகும் யீஸ்வரனார் வாழுமெங்கள் நாடு
மலைநாடு களில்சிறந்த பொன்னம்பல நாடு'

என்கிறார்.

அடர்ந்த காட்டில் ஓங்கி வளர்ந்து நின்ற மரங்களிலுள்ள தேன் கூட்டிலிருந்து தேன் ஒழுகிக்கொண்டிருக்கும் வளம்நிறைந்த மலைகளில் சிறந்த மலையான பொதிகை மலையில், சித்தர்களின் தலைமை குருவான அகத்தியர் வாழ்ந்து வருகிறார்.

தமிழில் "ஈஸ்வரன்' என்ற வார்த்தை கடவுள் சிவனைக் குறிப்பிடுவதல்ல. தான் வசிக்கும் பகுதிக்கு உரிமையுள்ளவர், தலைவன், அரசன் என்ற பொருளில் அச்சொல் பயன்படுத்தப்பட்டது. இலங்கையை ஆண்ட மன்னன் இராவணன், அந்நாட்டின் தலைவன் என்ற பொருளில் இலங்கேஸ்வரன் என்று அழைக்கப்பட்டான். ஒரு குடும்பத்தின் தலைவன் அக்குடும்பத்திற்கு ஈஸ்வரனாவான். ஒரு நாட்டின் அரசன் அந்த நாட்டு மக்களுக்கு ஈஸ்வரனாவான்.

தென்தமிழ்நாட்டிலுள்ள பொதிகைமலையைச் சுற்றியுள்ள நிலப்பரப்பிற்கு பொன்னம்பல நாடு என்ற பெயருண்டு. இந்த மலை, மலை சார்ந்த பகுதிகளில் உள்ள மண் தாமிர சத்தினைக் கொண்டது என ஆராய்ச்சி மூலம் அறியப்பட்டுள்ளது. தாமிரம் பொன்போன்ற நிறம் கொண்டது. அதனால் இது "பொன்னம்பல நாடு' என அழைக்கப்பட்டது.

கருவூர் சித்தரின் இந்த பாடல்படி குரு அகத்தியர் தென்பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெளிவாகிறது.

தமிழ்மொழியைத் தந்து, தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்து, தமிழ் எழுத்துகளை அமைத்துத் தந்தவர் குரு அகத்தியர். தமிழும், எழுத்தும், மொழி நெறியும், இலக்கண அமைப்பும் எக்காலத்திலும் அழிந்துவிடாமல் தமிழ் மக்களின் வாரிசுகளுக்குக் கிடைக்கவேண்டும்; தாம் கூறியவற்றைக் கடைப்பிடித்து, சுயஅறிவுடன் செயல்பட்டு வளமான வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று பனையோலைச் சுவடிகளில் முதன்முதலில் எழுதிவைக்கும் முறையை உருவாக்கியவர் அகத்தியர்தான்.

ஆரிய வேதங்கள் குரு- சீடர் பரம்பரை முறையில், குருவின் வாய்மொழியாகக் கூறப்பட்டு, சீடனால் கேட்கப்பட்டு வந்தன. சனகாதி முனிவர்கள் கூறிய நான்கு வேதங்கள்தான் தொன்மையான வேதங்கள். அவை தைத்திரியம், பௌடிகம், தலவகாரம், சாமம் என்பவையாகும்.

அறவொழுக்கமாகிய ஐம்பெரும் வேள்விகளைப்பற்றிக் கூறுவது முதல் வேதமான தைத்திரியம்.

இரண்டாவதான பௌடிகமோ பொருள் பற்றிய ஒழுக்கம், அரச நீதியைக் கூறுவது.

மூன்றாவதாகிய தலவகாரம் ஆண், பெண் கற்பொழுக்க நெறியைக் கூறுவது.

நான்காவதான சாமவேதம் அறம், பொருள், இன்பம் என்னும் இம்மூன்றினைப் பற்றிக் கூறுவது.

ஆரியர்களின் வாழ்வுமுறையைக் கூறும்

தொன்மையான இந்த நான்கு வேதங்களையும் ஆரிய இனமக்கள் கடைப்பிடித்து வாழாமல், காலப்போக்கில் தங்கள் விருப்பம்போல் வாழத்தொடங்கினர். அதன்பிறகு துவாபர யுகத்திலும் பின்னர் கலியுக வாழ்க்கைக்கு ஏற்றவாறும் ஆங்காங்கே வாய்மொழியால் கேட்டறிந்த சிலரைக்கொண்டு, ரிக், எஜுர், சாமம், அதர்வணம் என்ற பெயர்களில் வேதங்களை உருவாக்கி வைத்தனர்.

அகத்தியர் தமிழ் மக்களுக்களித்த சைவசித்தாந்தம் யுகங்கள் கடந்த பழமையானது. ஆனால் இன்று தமிழ் மக்களிடையே இதுவும் அழிந்து வருகின்றது.

அகத்தியர் பனையோலையில் எழுதும்போது, அந்த ஓலை எழுதுவதற்குத் தகுதியானதா? எழுதும்
போது கிழிந்துபோகுமா என அறிந்துகொள்ள "உ' என்ற எழுத்தை முதலில் எழுதிச் சோதித்தார்.

இந்த "உ' என்ற எழுத்தை எழுதும்போது எழுத்தாணி குறுக்கு, நெடுக்கு என ஓலையின் எல்லா நார்களிலும் பட்டுச் செல்லும். அகத்தியர் ஓலையின்  உறுதியை அறிந்துகொள்ள எழுதிய இந்த "உ' என்ற எழுத்தைதான் பிற்காலத்தில் பிள்ளையார் சுழி என்று கூறினர்.

இந்த உலகில் எதனையும் கணக்கீடு செய்ய தமிழ் எழுத்துகளைக் கொண்டு முதன்முதலில் எண்களை உருவாக்கியவர் அகத்தியர்தான். சித்தர்கள் தங்கள் பாடல்களில், "எட்டும் இரண்டும் அறியாத' என்ற வரியில் "எட்டு' என்ற எண்ணையும் "இரண்டு' என்ற எண்ணையும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள்.

தமிழில் "எட்டு' என்ற இலக்கத்தைக் குறிப்பது "அ' என்ற எழுத்தாகும். "இரண்டு' என்ற இலக்கத்தைக் குறிப்பது "உ' என்ற எழுத்தாகும். இந்த இரண்டு எழுத்துகளையும் இணைத்தால் "அ+உ' என்ற நிலைவரும். இதனுடன் "ம்' என்ற எழுத்தைச் சேர்த்துப் படித்தால் (அ+உ+ம்) "ஓம்' என்ற ஒலி உண்டாகும். இந்த எண்களை இணைத்து சொற்களை உருவாக்கும் முறையை அகத்தியர்தான் உருவாக்கித் தந்துள்ளார்.

இந்த "ஓம்' என்ற சொல்லை அகத்தியர் ஏன் உருவாக்கினார் என்ற  உண்மைகளை வரும் தொடர்களில் அறிவோம்.

வாசியோகம்

தேய்பிறை, வளர்பிறை நாட்களில் காலையில் எழுந்தவுடன் முறையாக வரவேண்டிய சுவாசக்காற்று, முறைதவறி மாறி நடந்தால் அன்று என்ன விதமான பலன்களை அனுபவிப்போம் என்பதை வாசியோக முறையில் அறிந்து கொள்ளலாம்.

அமாவாசைக்கு அடுத்த நாளான வளர்பிறை பிரதமை திதியன்று காலையில் எழும்போது, அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணிவரை மூக்கின் இடப்பக்கத் துவாரத்தில் சுவாசக்காற்று ஓடாமல் வலப்பக்கத் துவாரத்தில் ஓடினால் அன்று ஏதாவது ஒரு கஷ்டத்தை அனுபவிக்கும்படி நேர்ந்துவிடும். கீழே விழுதல், அடிபடல், எதிரிகளால் தொல்லை, மனக்குழப்பம், எதிலும் தெளிவாக முடிவெடுக்கமுடியாத நிலை, பொருள், பணவிரயம், திருட்டு போதல், பொருள் தவறுதல், வாய்ப்பேச்சால் பிரச்சினை என ஏதாவது ஒரு வகையில் கஷ்டத்தை அனுபவிக்கச் செய்துவிடும்.

இதன் அடிப்படையில்தான் அமாவாசை, பௌர்ணமி திதிகளுக்கு அடுத்த நாளான பிரதிமை (பாட்டியம்மை) தினத்தில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது- தொடங்கக்கூடாது என்று பொதுவாகக் கூறிவிட்டார்கள்.

யார் ஒருவருக்கு முறையாக வரவேண்டிய சுவாசக்காற்று மாறி ஓடுகின்றதோ அவருக்கு மட்டுமே இதுபோன்ற சிரமப்பலன்கள் உண்டாகும். சரியான சுவாசம் நடைபெறுபவர்களுக்கு இந்த நாள் நன்மைகளையே தரும்.

வளர்பிறை இரண்டாம் நாளான துவிதியை திதியில் சுவாசக்காற்று மூக்கின் இடப்பக்கம் ஓடாமல் வலப்பக்கம் வந்தால் அன்று கலகம், சண்டை, வாக்குவாதம் போன்றவை உண்டாகும்.

வளர்பிறை மூன்றாம் நாளான திரிதியை திதியன்று காலையில் மூக்கின் இடப்பக்கம் வரவேண்டிய மூச்சுக்காற்று இடம் மாறி வலப்பக்கம் ஓடினால், பொருள் இழப்பு, விரயம், திருட்டு, தொலைந்துபோதல், பிறர் நம்மை ஏமாற்றிப் பணம் பறித்துவிடுதல், சொத்து, வாகனம், ஆபரணம் இழப்பு போன்றவை உண்டாகும்.

வளர்பிறை நான்காம் நாளான சதுர்த்தி திதியில் மூக்கின் வலப்பக்கத் துவாரத்தில் வரவேண்டிய சுவாசம் இடப்பக்கத் துவாரத்தில் ஓடினால் செயல்களில் தடை, தாமதம், காரியத் தோல்வி, நட்பு, உறவுகள் பகையாதல் அல்லது விலகுதல் என ஏதாவது ஒருவகையில் வருத்தமான பலனை அனுபவிக்க நேரிடும்.

வளர்பிறை பஞ்சமி திதி நாளில் மூக்கின் வலப்பக்கத் துவாரத்தில் ஓடவேண்டிய மூச்சுக்காற்று இடப்பக்கத் துவாரத்தில் ஓடினால் குடும்பத்தார்க்கு அல்லது உறவினர்களுக்கு நோய், சரீரம் சுகவீனமாகி அலைச்சல், பணம், பொருள் செலவு, போஜனக் குறைவு, மனக்கஷ்டம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும்.

வளர்பிறை சஷ்டி திதி நாளன்று முறையாக வரவேண்டிய மூச்சுக்காற்று மூக்கின் வலப்பக்கத் துவாரத்தில் ஓடாமல் இடப்பக்கத் துவாரத்தில் ஓடினால் குடும்பத் தலைவனுக்கு சிரமம், கஷ்டம், வருத்தமான நிகழ்வுகள் உண்டாகும். அலுவலகத்தில், தொழில் செய்யும் இடங்களில் உயரதிகாரிகளால் தொல்லைகள் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களால் சிக்கல்கள் உண்டாகும். அரசியலில் இருப்பவர்களால் தொண்டர்கள் மனவருத்தம் அடையத்தக்க நிகழ்வுகள், அவமானம், அவப்பெயர் உண்டாகும். அதிகார மட்டத்தில் பயம், அந்தஸ்தில் உள்ளவர்களால் பயம் உண்டாகும்.

வளர்பிறை சப்தமி, அஷ்டமி, நவமி திதி நாட்களில் மூச்சுக்காற்று மூக்கின் இடப்பக்கத் துவாரத்தில் ஓடாமல் வலப்பக்கத் துவாரத்தில் ஓடினால் அன்று துக்க வார்த்தை, நோய்த்தாக்கம், எதிரிகளால் பிரச்சினைகள், காரியத்தடை, தாமதம், தொடங்கிய காரியங்களில் தோல்வி, பொருள் செலவு, அடிமையைப் போன்ற நிலை என இதுபோன்று துன்பங்கள் நேரும்.

இதனால்தான் அஷ்டமி, நவமி நாட்களில் எதுவும் செய்யக்கூடாது. அன்று கோவிலுக்குச் சென்று பைரவருக்கு வழிபாடு செய்யவேண்டுமென்று பொதுவாகக் கூறிவைத்துவிட்டார்கள். அஷ்டமி நாளில் யாருக்கு முறையாக சுவாசம் ஓடாமல் தவறாக நடக்கின்றதோ அவர்களுக்குத்தான் அன்று தீமையான பலன்கள் நடைபெறும். முறையாக சுவாசம் நடந்தால், அஷ்டமி திதியில் எந்த தீமையும் நடக்காது. அஷ்டமி திதியில் சுவாசம் முறையாக நடப்பவர்கள் அன்று எக்காரியங்களையும் தைரியமாகச் செய்யலாம்.

இதேபோன்று பௌர்ணமிக்கு அடுத்த நாளான தேய்பிறைப் பிரதமை, துவிதியை, திரிதியை ஆகிய மூன்று நாட்களிலும் காலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மூச்சுக்காற்று மூக்கின் வலப்பக்கத் துவாரத்தில் முறையாக ஓடாமல் இடப்பக்கத் துவாரத்தில் நடந்தால் அந்த நாட்கள் தீமை தரும் நாட்களாக அறிந்துகொள்ளுங்கள்.

தேய்பிறை சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்களிலும் மூக்கின் வலப்பக்கம் ஓடவேண்டிய மூச்சுக்காற்று நிலைமாறி இடப்பக்கத் துவாரத்தில் ஓடினால் அன்று சிரமம், கஷ்டம், தீமையான பலன்களை அனுபவிக்கும் நாள்.

இதேபோன்று வளர்பிறை, தேய்பிறை என முப்பது நாட்களும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை வலப்பக்கம், இடப்பக்கம் என மாறிமாறி ஓடவேண்டும். இதனை தினமும் கவனித்துப் பார்த்து அன்றைய நாள் அவரவர்க்கு நல்ல நாளா? தீமையான பலன்களைத் தரும் நாட்களா என்பதை  அறிந்து கொள்ளலாம்.

முற்காலத்தில் நாடெங்கும் விவசாயம் மட்டுமே முக்கியத் தொழிலாக இருந்தது.

அவர்கள் வாழ்க்கைமுறை விடியற்காலை 4.00 மணிக்கு எழுந்து பயிர்த்தொழிலைச் செய்து, மாலை 6.00 மணிக்கு இரவு தொடங்கும் முன்பு சாப்பிட்டுவிட்டு உறங்கிவிடுவார்கள். பகல் முழுவதும் உழைப்பு, இரவு முழுவதும் தூக்கம்- ஓய்வு என்ற ஒரு நியதியில் தேகபலத்துடன் நிம்மதியாக,  ஒழுக்கத்துடன் வாழ்ந்தார்கள். இதனால் விடியற்காலை 4.00 மணி என்பது அக்காலத்தில் மக்கள் தூங்கியெழும் நேரத்தைக் கணக்கிட்டு வாசியோக மூச்சுக்காற்றின் நிலை கூறப்பட்டது.

இன்றைய நாகரிக வாழ்க்கையில், பலவிதமான தொழில்கள் உருவாகி விட்டன. அலுவலகம், தொழிற்சாலைகளில் எட்டு மணி நேரம், 12 மணி நேரம், இரவுப்பணி என ஒரு நாளில் இரவு, பகல் வித்தியாசம் இல்லாமல் வேலை செய்துவருகின்றனர்.

இந்த நிலையில் "நான் காலை 4.00 மணிக்கு எப்படி எழுந்து சுவாச நிலையை அறிவது? சூரிய உதயமே பார்க்கமுடியாத நிலை எனக்கு. நான் எப்படி எனக்கு நல்லநாள், கெட்டநாளை வாசியோக முறையில் அறிந்து கொள்வது?' என்ற கேள்வியுடன் உள்ளவர்களும் சரியான நிலையை அறிந்து கொள்ள வழி உள்ளது.

உதாரணமாக ஒருவர் இரவுப்பணி முடித்து வந்து வீட்டில் படுத்து, காலை 10.00 மணிக்கு தூங்கியெழுந்தால், அன்றைய நாள், திதி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அறிந்து, அந்த நாளில் காலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மூக்கின் எந்தப் பக்கத் துவாரத்தில் மூச்சு வரவேண்டும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதாவது வெள்ளிக்கிழமையென்றால் காலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மூக்கின் இடப்பக்கத் துவாரத்தில் மூச்சுக் காற்று ஓடவேண்டும். இது நன்மை தரும் நிலையைக் குறிப்பிடும். அடுத்து காலை 6.00 மணி முதல் காலை 8.00 மணி வரை வலப்பக்கத் துவாரத்தில் சுவாசம் நடைபெறவேண்டும். காலை 8.00 மணி முதல் 10.00 மணிவரை இடப்பக்கத் துவாரத்தில் சுவாசம் நடைபெறவேண்டும். காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை வலப்பக்கம் நடைபெறவேண்டும். நீங்கள் 10.00 மணிக்கு எழும்போது உங்கள் மூக்கின் வலப்பக்கத் துவாரத்தில் மூச்சுக்காற்று ஓடினால்  உங்கள் சுவாசக்காற்று வெள்ளிக்கிழமை விடியற்காலை வரவேண்டிய நன்மையான நிலையில் நடைபெற்றுள்ளது; அன்று நன்மைதரும் நாள் என்பதை அறிந்துகொள்ளலாம்.

இதைப்பற்றிய இன்னும் பல விளக்கங்களை வரும் தொடர்களில் அறிவோம்.

"வேதமோதாதே- அகப்பேய்
    மெய் கண்டோமென எண்ணாதே
பாதம் பணியாதே- அகப்பேய்
    பாவித்துப் பாராதே.'

சித்தரைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்.

(மேலும் சித்தம் தெளிவோம்)தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :