Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
Logo
ஓம்
சனியின் துயர் தணிக்கும் மாதா, பிதா, குரு, தெய்வம்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
டிசம்பர் மாத ராசி பலன்கள்
 ................................................................
ஜோதியும் முருகனே!
 ................................................................
பிரம்மிப்பூட்டும் அவதாரம்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
பார்வைகள் பலவிதம்!
 ................................................................
சிவஜோதி தரிசனம்!
 ................................................................
தவயோகத் திருவிழா!
 ................................................................
டிசம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
மங்குசனியை பொங்கு சனியாக்கும் சங்ககிரி
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
அர்ப்பணிப்பின் அன்னை!
 ................................................................
அஞ்சனை மைந்தனின் அவதாரம்
 ................................................................
01-12-17ந்த மாதம் 19-12-2017-ல், மார்கழி 4-ல் சனிப்பெயர்ச்சி. விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு சனி மாறுகிறார். இதன் பலாபலனையே இம்மாதம் 12 ராசிகளுக்கும் எழுதியிருக்கிறேன்.

மேஷம்

கடந்த மூன்றாண்டுகாலமாக மேஷ ராசிக்கு நடைபெற்ற அட்டமத்துச்சனி இப்போது முழுமையாக விலகிவிடுகிறது. நடந்துமுடிந்த அட்டமச்சனியில் பலருக்கு தொழில் பாதிப்பு, உடல்நலக்குறைவு, இடப்பெயர்ச்சி, குடியிருப்பு மாற்றம், வரவுக்குமேல் செலவு, கடன் தொல்லை, வட்டி நட்டம், வழக்கு விவகாரங்களினால் அலைச்சல் போன்ற துன்பத்தையே அதிகமாகச் சந்தித்திருப்பீர்கள். 2017 செப்டம்பர் 2-ஆம் தேதி துலா ராசிக்கு மாறிய குரு, 2018 செப்டம்பர் வரை உங்கள் ராசியைப் பார்ப்பதால் அட்டமச்சனிப் பெயர்ச்சிக்குபிறகு குரு பார்வை மிகச்சிறப்பான பலனைத் தரக்கூடும். குரு பார்க்கக் கோடி நன்மை. எனவே அட்டமச்சனி விலகியபிறகு மேஷ ராசிக்கு குரு பார்வை கிடைக்கும் காலம் (ஒன்பது மாதம்) உங்களுக்கு முழு அளவில் ராஜயோகம் உண்டாகும். தொழில் மேன்மை, லாபம் பெருகுதல், கடன் நிவர்த்தி போன்ற எல்லா நன்மைகளும் அற்புதமாக நடக்கும். ஆரோக்கியம் தெளிவாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு சனிப்பெயர்ச்சி எட்டாமிடத்துக்கு வருகிறது. செப்டம்பர் வரை சனிக்கு வீடு கொடுக்கும் குருவும் 6-ல் மறைவு. எனவே இந்த சனிப்பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சோதனைக்காலம் என்பதோடு சற்று வேதனைக்காலம் என்றும் கூறலாம். தொழிலதிபர்களுக்குத் தொய்வுகளை சந்திக்கும் காலம். போட்டி, பொறாமை, கடன், எதிர்ப்பு, இடையூறு, வழக்கு விவகாரங்களைச் சந்திக்கும் காலம். அரசியல்வாதிகள் ஆரோக்கியக்குறைவு அல்லது வருமான வரித்துறையினரின் கெடுபிடி நடவடிக்கைகள் போன்ற அசம்பாவிதங்களைச் சந்திக்கக்கூடும். விவசாயிகளுக்கு ஏமாற்றமும் நஷ்டமும் உண்டாகும். குடும்பத்தினருக்கு குடும்பக்குழப்பம் பிரச்சினைகளையும் தலைவலியையும் தரும். ஒருசிலரின் அனுபவத்தில் பேசிமுடித்த சுபமங்கள நிகழ்ச்சிகளும் தடைப்படலாம் அல்லது தள்ளிப்போகலாம். எதையும் நடந்துமுடியும் வரை கற்பனைக் கோட்டை கட்டவேண்டாம். சுய ஜாதக தசாபுக்திகள் நன்றாக இருந்தால் பெரிதாக பாதிப்பு வராது.

மிதுனம்

மிதுன ராசிக்கு 6-ல் இருந்த சனி இப்போது 7-ஆம் இடத்துக்கு மாறுகிறார். சனி இயற்கையில் அசுப கிரகம். அதற்கு கேந்திர ஸ்தானத்தில் பலம் அதிகம். மேலும் தனுசு ராசியில் உள்ள சனி 9-ஆம் இடத்தையும் ஜென்ம ராசியையும் 4-ஆம் இடத்தையும் பார்க்கக்கூடும். எனவே 9-க்குடையவரே 9-ஆம் இடத்தைப் பார்ப்பது சிறப்பு. உங்கள் முயற்சிகளுக்கு குருவருளும் திருவருளும் துணை நின்று வழிநடத்தும் என்பதால், வெற்றியும், திட்டங்கள் செயல்படுவதில் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். உங்கள் ஜென்ம ராசியை பாக்கியாதிபதி பார்ப்பதால் கௌரவப் பதவிகளும் செல்வாக்கும் உண்டாகும். 4-ஆம் இடத்தை சனி பார்ப்பதால் பூமி, வீடு, வாகனம் போன்ற திட்டங்களில் நற்பலன் உண்டாகும். புதிய வாகன யோகமும் எதிர்பார்க்கலாம். 7-ஆம் இடம் என்பது 10-க்கு 10-ஆம் இடம் என்பதால் புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். திருமணத்தடை விலகும். சனி நிற்கும் ராசிநாதன் குரு 5-ல் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பதால், திருமண யோகமும் புதிய தொழில் திட்டங்களும் வேலைவாய்ப்புகளும் மேலும் பல யோகங்களும் விரைவாக நிறைவேறும்.

கடகம்

கடக ராசிக்கு இதுவரை 5-ல் இருந்த சனி இப்போது 6-க்கு மாறுகிறார். சனி பகவானுக்கு கேந்திர ஸ்தானம் எப்படி யோக ஸ்தானமோ அதைவிட யோக ஸ்தானம் 3, 6, 11-ஆம் இடம் என்பது விதி. அத்துடன் 6-க்குடைய குரு 4-ல் நின்று 8-ஆம் இடம், 10-ஆம் இடம், 12-ஆம் இடங்களைப் பார்ப்பதால், சிலருக்கு தொழில், வேலை சம்பந்தமான குழப்பங்களும், மாற்றங்களும் கவலைகளும் ஏற்படலாம். என்றாலும் சிலருடைய அனுபவத்தில் ஸ்தாபனத்தில் ஆட்குறைப்புத் திட்டமும், தொழில் ஸ்தாபன தொய்வுகளும் காணப்பட்டாலும், உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றப்படலாம். நீங்கள் வேலை செய்யும் கிளையை மூடினாலும், வேறு ஒரு கிளையில் உங்களுக்கு  வேலை நிச்சயம் கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் உங்களுக்கு நல்ல பேரும் மதிப்பும் நிலவுவதால் உங்களை இழக்க விரும்ப மாட்டார்கள். திறமையும் விசுவாசமும் உண்மையும் உள்ளவர்களுக்கு எப்போதும் எங்கும் முக்கியத்துவம் உண்டாகும். கற்றார்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்புதானே!

சிம்மம்

சிம்ம ராசிக்கு 4-ல் இருந்த சனி இப்போது 5-ஆம் இடத்துக்கு மாறுகிறார்.  ஏற்கெனவே இருந்த 4-ஆம் இடம் சிறப்பான இடம் என்றாலும், 4-ல் இருந்த இரண்டரை வருடமும் பெரிதாக எந்த யோகத்தையும் சனி செய்தார் என்று பெருமைப்பட முடியாது. சொந்தத் தொழில் செய்தவர்களுக்குத் தொழில் துறையில் லாபம் இருந்தாலும், ஏட்டில் இருந்த லாபம் கையில் கிடைக்காமல் ஏமாற்றமானது. ஒருசிலரின் அனுவத்தில் வேலியே பயிரை மேய்ந்ததுபோல நம்பியவர்களே துரோகம் செய்துவிட்டார்கள். விசுவாசமானவர்களே பொய்க்கணக்கு காட்டி லாபத்தையும் அசலையுமே சுரண்டி ஊழல் செய்துவிட்டார்கள். சொந்தம் சுற்றத்தாருக்கு அனுதாபப்பட்டு பொருளுதவி, பணஉதவி, ஜாமீன் பொறுப்பேற்று செய்த உதவியை அவர்கள் திரும்பச் செய்யாத காரணத்தால் உங்கள் தலையில் அவை சுமையாக விழுந்தது. இப்போது 5-ல் வந்துள்ள சனி இதற்கெல்லாம் பரிகாரமாக 7-ஆம் இடம், 11-ஆம் இடம், 5-ஆம் இடங்களைப் பார்க்கப்போவதால் இழந்ததை மீட்டுத் தருவார். தவறு செய்தவர்கள் தண்டனைக்கு ஆளாவார்கள். ஒரு கதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கும்.கன்னி

கன்னி ராசிக்கு 3-ல் இருந்த சனி இப்போது 4-ஆம் இடத்துக்கு மாறுகிறார். சனி ஏற்கெனவே இருந்த இடம் அற்புத இடம்தான். ஏழரைச்சனியில் அனுபவித்த சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் 3-ல் இருந்த சனி தீர்வு காட்டி யோகத்தைத்தைச் செய்திருக்கலாம். என்றாலும் 5-ல் இருந்த கேது திருப்தியையும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரவில்லை என்பதே உண்மை! அதற்குப் பரிகாரமாக இப்போது 4-ல் வரும் சனி 6-ஆம் இடம், 10-ஆம் இடம், ஜென்ம ராசியைப் பார்க்கப்போவதால் கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி, வைத்தியச்செலவுக்கு விடுதலை, தொழில் முன்னேற்றம், புதிய தொழில் முயற்சிகள், செல்வாக்கு, சமூக- ஜாதி சமய அமைப்புகளில் பொறுப்புகள், பாராட்டு போன்ற நன்மைகளைச் சந்திக்கலாம். சிலர் கடல் கடந்து வர்த்தகத் தொடர்புகளில் ஈடுபட்டு பணம் சேர்க்கலாம். அதற்கு 2-ஆம் இடத்து குருவின் ஆசியும் உதவியும் எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் சுபமங்கள செலவுகளும் உண்டாகும்.

துலாம்

இந்த சனிப்பெயர்ச்சியால் முழுமையான யோகத்தை அடையப்போகும் ராசிக்காரர்களுள் நீங்களும் ஒருவர். மேஷ ராசிக்காரர்களுக்கு அட்டமச்சனி அடியோடு விலகும். துலா ராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனி முழுமையாக விலகும். எனவே ஏழெட்டு ஆண்டுகளாக கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் கஷ்டப்பட்டவர்களுக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்தும் ஏமாற்றத்தையும் பழிச்சொல்லையும் அடைந்தவர்களுக்கும் இப்போது நற்காலம் வந்துவிட்டது. பொற்காலம் தொடங்கிவிட்டது. கடந்த காலத்தில் தங்கத்தைத் தொட்டாலும் பித்தளையாக மாறியது. இனி மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் காலம். அதிலும் சனி வரும் இடம் 3-ஆம் இடம். 3, 6, 11-ஆம் இடங்கள்தான் சனிக்கு ராஜயோகமான இடங்களாகும். சனி பகவான் 5-ஆம் இடம், 9-ஆம் இடம், 12-ஆம் இடங்களைப் பார்க்கப் போவதால் திருமணம், புத்திர பாக்கியம், கிரகப் பிரவேசம், வாகன யோகம் போன்ற சுபவிரயச்செலவுகள் உண்டாகும். சிலர் குலதெய்வத்துக்கு கோவில் கட்டலாம்; திருப்பணி செய்யலாம்.

விருச்சிகம்

இதுவரை ஜென்மச்சனியாக நின்று உங்கள் தலையில் கொட்டிக்கொண்டிருந்த சனி இப்போது 2-ஆம் இடத்துச் சனியாக- பாதச்சனியாக- குடும்பச்சனியாக மாறுகிறார். இதுவரை வெறுங்கையால் முழம் போட்டவர்களுக்கு இனி அளப்பதற்கும் எடை போடுவதற்கும் பொருள் கிடைக்கும். அதாவது வெறும் வாயை மென்று கொண்டிருந்தவருக்கு அவல் கிடைத்த மாதிரி! அதிலும் குறிப்பாக 30, 35 வயதுக்குமேல் இரண்டாம் சுற்று ஏழரைச்சனியை சந்திப்பவர்களுக்கு இது பொங்குசனியாகும். கடந்த ஐந்து வருடம் செய்யாத யோகங்களையும் லாபங்களையும் நன்மைகளையும் 2-ஆம் இடத்துச்சனி உங்களுக்கு வாரி வழங்குவது உறுதி! அதேபோல கடந்த ஐந்து வருட ஏழரைச்சனியில் அனுபவித்த வைத்தியச்செலவுகளுக்கும், விபத்து போன்ற விபரீதங்களுக்கும் இப்போது நஷ்ட ஈடு கிடைத்த மாதிரி நன்மைகளை அடையும் காலம். முழுமையான ஆரோக்கியமும் தொழில் வளர்ச்சியும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம்.

தனுசு

இதுவரை விரயஸ்தானத்தில் இருந்த சனி உங்களுக்கு அற்புதமான கற்பனைகளையும் திட்டங்களையும் உருவாக்கியபோதும், உருப்படியாக எதையும் நிறைவேற்றாமல் தடுத்து வந்தார் என்பதைவிட கெடுத்துவந்தார் என்றே கூறலாம். பல காரியங்கள் நிறைவேறுவதுபோல மாயத்தோற்றத்தைக் காட்டி எல்லாவற்றையும் நிறைவேறவிடாமல் நிராசையாக்கிவிட்டது. நிற்கும் ரயிலில் நாம் உட்கார்ந்திருக்கும்போது- பக்கத்து ரயில் ஓடும்போது நமது ரயில் ஓடுவதுபோல ஒரு உணர்வு- தோற்றம் ஏற்படுவதுபோல, நினைவுகளும் முயற்சிகளும் நிறைவேறுவதுபோல தோற்றம் காட்டி- நின்ற இடத்திலேயே நம்மை நிற்கவைத்து, கிணற்றில் போட்ட கல் அசைவற்றுக் கிடப்பதுபோல ஏமாற்றமானது. ஏதோ நாளும் பொழுதும் ஓடுகிறது. எழுகிறோம்; உண்கிறோம்; உழைக்கிறோம் என்று பொழுதுபோகிறது. உருப்படியாக எதையும் சாதிக்க முடியவில்லை. ஆனால் இப்போது ஜென்மத்துக்கு வந்துள்ள சனி உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றுவார். திட்டங்களையெல்லாம் வெற்றிபெறச் செய்வார். அவருக்குத் துணையாக 11-ஆம் இடத்து குருவும்
அருள்புரிவார்.

மகரம்

11-ஆம் இடத்தில் இருந்த சனி இப்போது 12-ல் வந்துள்ளதால் ஏழரைச்சனி தொடக்கம். இதில் விரயச்சனி ஆரம்பம். 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இது முதல்சுற்று ஏழரைச்சனி. 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது இரண்டாம் சுற்று ஏழரைச்சனி. 60, 65 வயதைத் தாண்டியவர்களுக்கு இது மூன்றாவது சுற்று ஏழரைச்சனி. முதல் சுற்று மங்குசனி; இரண்டாம் சுற்று பொங்கு சனி; மூன்றாம் சுற்று மரணச்சனி. அதற்காக 60-65 வயதுக்காரர்களுக்கு மரணம் (மாரகம்) வந்துவிடும் என்று அர்த்தமல்ல. மாரகத்துக்கு ஒப்பான கண்டங்கள் அல்லது வைத்தியச்செலவுகள் ஏற்படலாம். சனி நடக்கும் இக்காலம் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடப்பவர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு இருக்கும். யாருக்கேனும் உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்படலாம். மற்றவர்கள் பயப்படத் தேவையில்லை. இதற்குப் பரிகாரம் ருத்ர ஜெப பாராயணம் செய்து, ருத்ரஹோமம் வளர்த்து சிவன், அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்யவேண்டும். திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்கு காலையில் அபிஷேகம் செய்ய பால் வாங்கித்தர வேண்டும். அதனால் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.

கும்பம்

கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சி பொங்கும் மங்களச்சனி பலனாக மாறும். இதுவரை 10-ல் இருந்த சனி இப்போது 11-ஆம் இடத்துக்கு வந்திருப்பது அற்புத யோகம். அத்துடன் சனிக்கு வீடு கொடுத்த குரு கும்ப ராசிக்கு 9-ல் நின்று கும்ப ராசியைப் பார்ப்பது அதனிலும் அதியற்புத யோகம். எனவே உங்களுக்கு வெற்றிமேல் வெற்றி வந்துசேரும். அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் சனிக்கும் குருவுக்கும் சேரும். காரிய ஜெயம், வழக்குகளில் வெற்றி, வியாபாரத்தில் லாபம், குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள், வீடு, வாகன யோகம், இடம்- பொருட்சேர்க்கை, ஆடை, அணிகலன்கள் சேர்க்கை, ஆரோக்கியம் என எல்லா இன்பங்களும் இணைந்து வந்துசேரும். இன்பமோ இணைந்து வருவதில்லை. துன்பமோ தனித்து வருவதில்லை என்று சொல்வார்கள். ஆனால் இந்த சனிப்பெயர்ச்சி மூலமாக "துன்பமே தூரமாகப் போய்விடு- இன்பமே எதிர்கொண்டு வா' என்று கூறுமளவு பெருமை சேர்க்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். தளர்ந்த சுகமும் வளர்ந்து நிம்மதியாகும். கனவுகள் நனவாகும். அடுத்த குருப்பெயர்ச்சி 2018 செப்டம்பருக்குள் இவை எல்லாம் ஈடேறும்.

மீனம்

மீன ராசிக்கு சனி 10-ல் வந்திருக்கிறார். 10-ஆம் இடத்துச் சனி பதிமாறச் செய்யும் என்பது பழமொழி. மீன ராசிக்கு ராசிநாதன் குரு 8-ல் மறைவதால் தொழில்துறையிலும் வீடு, வாகன வகையிலும் சில மாற்றங்கள் ஏற்படும். என்றாலும் சனி பகவான் குரு வீட்டில் நின்று 12-ஆம் இடம், 4-ஆம் இடம், 7-ஆம் இடங்களைப் பார்க்கப் போவதால் எந்த மாற்றமாக இருந்தாலும் அந்த மாற்றம் நல்ல மாற்றமாக, முன்னேற்றமாகத்தான் அமையும். 10-ஆம் இடத்துச் சனி 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். தொழில்துறையில் ஏற்படும் மாற்றங்கள் உங்கள் பெருமையையும் திறமையையும் பறைசாற்றும். ராசிநாதன் குரு மறைவால் உங்கள் பெருமைக்கு சவால் விடுமளவு வேண்டாத விமர்சனங்களும் மறைமுகமான கெடுதல்களும் உருவானாலும், அவற்றையெல்லாம் முறியடித்து சொக்கத் தங்கமாக ஜொலிக்கப்போவது உறுதி. வைரத்துக்குத் தான் பட்டை தீட்டுவார்கள். கரிக்கட்டைக்கு பாலிலீஷ் போடமாட்டார்கள். தீட்டத்தீட்ட வைரம் ஜொலிக்கும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :