Add1
logo
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ) || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) ||
Logo
ஓம்
சனியின் துயர் தணிக்கும் மாதா, பிதா, குரு, தெய்வம்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
டிசம்பர் மாத ராசி பலன்கள்
 ................................................................
ஜோதியும் முருகனே!
 ................................................................
பிரம்மிப்பூட்டும் அவதாரம்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
பார்வைகள் பலவிதம்!
 ................................................................
சிவஜோதி தரிசனம்!
 ................................................................
தவயோகத் திருவிழா!
 ................................................................
டிசம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
மங்குசனியை பொங்கு சனியாக்கும் சங்ககிரி
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
அர்ப்பணிப்பின் அன்னை!
 ................................................................
அஞ்சனை மைந்தனின் அவதாரம்
 ................................................................
01-12-17ம்பிகை அஷ்டதசபுஜ மகாலட்சுமியாக, தன் பதினெட்டுக் கரங்களிலும் ஆயுதங்களுடன் தோன்றிய கோலம் அசாதாரணமானது. அதைக்காண கொடுத்துவைத்திருக்க வேண்டும். இப்படி ஒரு கோலம்கொண்டு காட்சிதர சந்தர்ப்பங்கள் அமையவேண்டும். இப்போது தேவர்களுக்கு அது மகிஷனால் அமைந்தது. ஒட்டுமொத்த தேவருலகமும் அந்தக் காட்சி கண்டு இன்புற்று கைகுவித்து வணங்கிற்று.

வியாசரும் இக்கட்டத்தில் இதுவரை சொல்லிவந்த தேவி பாகவத மகிஷாசுர வத படலத்தை சற்று நிறுத்தியவராக, தன் எதிரில் பாகவதம் கேட்டுப் பரவச நிலையிலிருக்கும் ஜெனமேஜெயனைப் பார்த்தார்.

அவனிடமும் பெரும் பரவசம்!

""என்ன ஜெனமேஜெயா... அம்பிகை தோன்றிய கோலம் உன் மனக்கண்களில் தெரிகிறதா?''

""நன்றாகத் தெரிகிறது... தாங்கள் கூறிய விதங்களில், தங்கள் வார்த்தைகளைக் கொண்டே அக்காட்சியைக் கற்பனை செய்து பார்த்தேன். அரிய காட்சி! பெரிய காட்சி!''

""சரியாகச் சொன்னாய்... என்போன்ற முனிபுங்கவர்கள் பாகவதம் கூறும் தருணங்களில் இக்கட்டத்தில் சற்று இளைப்பாறுவோம். அப்படியே அம்பிகையின் திருவுருவச் சிலைக்கு நிவேதனங்கள் செய்து தீபஜோதியைக் காட்டி வணங்குவோம்.''

""இப்போதும் அப்படிச் செய்தால் போயிற்று...'' என்ற ஜெனமேஜெயன் அதற்குத் தயாரானான். அடுத்த சில நிமிடங்களில் நிவேதனப் பிரசாதம் வந்து குவிந்துவிட்டது. வியாசரும் அம்பிகை உருவை பக்தியோடு வழிபட்டு கற்பூர ஆரத்தி காட்டி கண்களிலும் ஒற்றிக்கொண்டார்.

பின்னர் நிவேதனப் பிரசாதம் எல்லாருக்கும் விநியோகிக்கப்பட்டது. வியாசர் தான் சற்று ஓய்வெடுக்க விரும்புவதாகக்கூறி விலகிச்சென்றார்.

ஜெனமேஜெயனும் அமைதியாக அமர்ந்து,

அதுவரை தான்கேட்ட தேவி பாகவதத்தை அசைபோடத் தொடங்கினான். மனதுக்குள் ஏராளமான கேள்விகள்...

✷ தேவர்களோ மனிதர்களோ- இரு சார்பிலும் நல்லவர்கள், தீயவர்கள் இருக்கவே செய்கின்றனர்.

✷ இந்த உலகைப் படைத்து, பின் மும்மூர்த்திகளைப் படைத்து உலக நிர்வாகம் செய்யும் அம்பிகை ஏன் எல்லாரையும் நல்லவர்களாக, ஆசை இல்லாதவர்களாக, பசி தாகம் இல்லாதவர்களாகப் படைக்கவில்லை?

✷ அப்படிப் படைத்திருந்தால் சண்டை சச்சரவு, யுத்தம் என்று எதுவும் வராதே... உலகம் எப்போதும் நித்ய இன்பத்தில் அல்லவா இருந்திருக்கும்?

✷ ஒருவேளை இன்பத்திலேயே எல்லாரும் இருந்தால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விடும் என்பதன் பொருட்டே துன்பமும் தோற்றுவிக்கப்பட்டதோ?

✷ எதற்காக மதிப்பு தெரியவேண்டும்? தெரிந்து என்னாக வேண்டும்? இன்புற்றிருப்பதுதானே உயிரின் நோக்கு?

-இப்படி ஒருபுறம் கேள்விகள் எழும்பிட, மறுபுறம் மகிஷனுக்கு வரம் கொடுத்த பிரம்மாவே அந்த
வரத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டாலே போதுமே... மகிஷன் பெட்டிப்பாம்பாக அடங்கிவிட்டிருப்பானே? ஆனால் அவ்வாறு செய்யாமல் அவர் எதற்காக சிவா, விஷ்ணு என்று சென்று புலம்பவேண்டும்? பின் அவர்கள் ஏன் ஆதிசக்தியை அழைக்கவேண்டும்? இப்படி ஒரு ஆதிசக்தி இருக்கிறாள்- அவளாலேயே தான் படைக்கப்பட்டதை மகிஷன் எப்படி உணராமல் இருக்கிறான்? அவன்தான் உணரவில்லை...

அவனைச் சுற்றியிருப்பவர்களுக்குக்கூடவா அவனுக்கு புத்தி சொல்லத் தோன்றவில்லை? என்று இப்படியும் கேள்விகள் ஜெனமேஜெயனுக்குள் எழும்பின.

மொத்தத்தில் வியாசரின் தேவிபாகவதம் ஜெனமேஜெயனை கேள்வியின் நாயகனாக்கிவிட்டது. கேள்விகளை, அதற்கான சிந்தனைகளை அவனால் தடுக்கமுடியவில்லை. சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ளலாமென்றால், அப்படி ஏற்றுக்கொள்ளும் விதமாய் அந்த சம்பவங்கள் இல்லை. இதனால் தனக்குள் நம்பிக்கையின்மை என்னும் எதிர்த்தன்மை உள்ளதா என்றும் ஜெனமேஜெயன் எண்ணிப் பார்க்கத் தொடங்கினான்.வியாசரும் ஓய்வெடுத்து முடித்தவராய் திரும்பிவந்தார். வந்தவர் முகத்தில் புத்தொளி. தன் அன்றாடக் கடமைகளை முடித்தவராய், குறிப்பாக சந்தியாவந்தனம் செய்து முடித்தவராய் நெற்றியில் பஸ்பப் பூச்சும், குங்குமத் தீற்றலுமாய் வந்தவரை ஜெனமேஜெயன் சற்று ஆச்சரியமாகப் பார்த்தான்.

""என்னப்பா அப்படிப் பார்க்கிறாய்?''

""தங்கள் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிகிறது சுவாமி.''

""நித்யகர்மங்களை விடாது யார் செய்தாலும் அவர்கள்முகம் பிரகாசமடையுமப்பா.''

""நான் கேட்கிறேனென்று தவறாகக் கருதாதீர்கள். உங்களுக்குத் தெரிந்திருக்கிறது- செய்கிறீர்கள்! இப்படியெல்லாம் வாழவேண்டுமென்று தெரியாத எவ்வளவோ பேர் உள்ளனர். அதனால் உங்களைப்போல அவர்கள் நித்யவழிபாடுகளைச் செய்வதில்லை. அப்படிச் செய்யாமல்போனது அவர்கள் குற்றமுமில்லை. இந்நிலையில் அவர்களுக்குப் பிரகாசமோ அல்லது இறையருளோ இல்லை என்றாகிறது. இது சரியா?''

""ஜெனமேஜெயா... ஒரு வேதியனுக்குண்டான கடமையை நான் செய்வது போல், அவரவர்க்கான கடமைகளை அவரவரும் தவறாமல் செய்தாலே போதுமப்பா-

அவர்களுக்கு இறையருள் நிச்சயம்.''

""மேலும் சில கேள்விகளை நான் கேட்கலாமா?''

""எவ்வளவோ கேள்விகளை நீ கேட்டுவிட்டாய்... இனியும் என்ன தயக்கம். தாராளமாகக் கேள்.''

""தாங்கள் சொன்ன தேவியின் பாகவதம் எனக்குள் இன்னும் பல கேள்விகளை உண்டாக்கிவிட்டது. குறிப்பாக எதற்கு இரட்டை நிலை... அதாவது நல்லது- கெட்டது என்று! நல்லதாகவே இந்த உலகில் எல்லா உயிரினமும், எல்லா விஷயங்களும் படைக்கப்பட்டிருந்தால் இவ்வளவு பாடுகளும் இல்லையே? அடுத்து பிரம்மா எதற்காக இப்படியெல்லாம் வரம் தரவேண்டும்? அவர் தந்த வரத்தை மகிஷன் தவறாகப் பயன்படுத்தும்போது அதை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டால் சிக்கலே கிடையாதே? ஏன் அவ்வாறு அவர் நடந்துகொள்ளாமல் வரம் கொடுத்துவிட்டு அவரும் சேர்ந்து கஷ்டப்படவேண்டும்?''

ஜெனமேஜெயனின் கேள்விக்கு இம்முறை வியாசர் சிரிக்கவில்லை. மாறாக பெருமூச்சுவிட்டார்.

""சுவாமி... எதற்கிந்த பெருமூச்சு?''

""ஒன்றுமில்லை... உன் கேள்வியை ஒட்டி எனக்குள்ளும் இப்போது ஒரு கேள்வி... உன் பாதிப்பு எனக்கும் வந்துவிட்டதே என்று பெருமூச்செறிந்தேன்.''

""அப்படி என்ன கேள்வி?''

""எதற்கு இரட்டை நிலை...? ஒரே நிலை- அதாவது நல்ல நிலை மட்டுமே போதாதா என்று கேட்டாய். எனக்கோ எதற்கு இந்த உலகம்? அதில் உயிரினங்கள்...? பிறக்காமலே இருந்துவிட்டால் சிக்கலே இல்லைதானே என்று தோன்றிற்று...''

வியாசர் கேலியாகச் சொன்னாரா அல்லது ஒரு தீவிரத்தோடுதான் சொன்னாரா என்று புரியாமல் ஜெனமேஜெயன் அவரைப் பார்த்தான். வியாசர் தொடர்ந்தார்.

""ஜெனமேஜெயா... உன் கேள்விக்கு நிதர்சனமான பதில் தவமியற்றும் துறவிகள்தான்! உட்கார்ந்த இடத்தில் உலகை மறந்து, தன்னையும் மறந்து, ஊன் உறக்கமின்றி, ஒருசிறு அசைவுமின்றி தவமியற்றுபவர்க்கு ஒருநிலைதான். அதாவது அசைவற்ற நிலை. அசையத் தொடங்கினாலோ இருநிலைப்பாடு வந்தே தீரும். அசைவே வாழ்வு!

அப்படி வாழும்போது மாற்றங்களும் உண்டாகும். ஒன்று மாறாமல் அப்படியே இருக்கவேண்டுமென்றால் அது அசையக்கூடாது. இதை நீ முதலில் புரிந்துகொள்.

உலகில் மாறாதது மாற்றம் ஒன்றே! இந்த மாற்றம் இல்லையென்றால் உலகில் சுவை என்பதே இல்லாது போகும். உன் கேள்வி ஒரு கோணத்தில் சிறுபிள்ளைத்தனமானது. அடுத்து பிரம்மா தான் கொடுத்த வரத்தை தானே திரும்பப் பெற்றுக்கொள்வது என்பதும், ஒருவனுக்கு உணவளித்துவிட்டு பின் அவன் தவறானவன் என்று தெரிந்து அளித்த உணவை வாந்தியெடுக்க வைத்து அதை நாம் திரும்ப உண்பதற்குச் சமம்.

பாகவதம் போன்ற கதைகளை நாங்கள் சொல்வதும், உன் போன்றவர்கள் கேட்பதும் சிந்தனை தெளிவு பெறவேண்டும் என்பதற்காகவே... ஒரு பிரச்சினையின்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும், நாம் செய்யும் நல்லதும் கெட்டதும் நம் வாழ்வில் திரும்ப எப்படி எதிரொலிக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ளவே புராணங்கள் கூறப்படுகின்றன. வரலாறு உள்ளதை உள்ளபடி சொல்லும். நல்வழி எல்லாம் காட்டாது. புராணங்கள் அப்படியல்ல... அவை தன்னைக் கேட்பவரை புடம்போடும்'' என்று நீண்ட விளக்கமளித்தார்.

ஜெனமேஜெயனும், ""நான் தவறாக ஏதாவது கேட்டிருந்தால் அருள்கூர்ந்து என்னை மன்னித்துவிடுங்கள் சுவாமி'' என்றான்.

""எவ்வளவு வேண்டுமானாலும் கேள். கேட்பது மாணவன் கடமை. உரிய பதில் தருவது ஆசிரியர் கடமை. அதேசமயம் கேள்வி என்பது அரிய பதிலைப் பெற்றுத் தருவதாக இருக்கவேண்டும்... அந்த வகையில் பார்த்தால் அரிய பதிலுக்குரிய கேள்விகளையே நீ கேட்டுள்ளாய். எனக்கு அதில் மகிழ்வே...'' என்று ஜெனமேஜெயனைக் கட்டிக்கொண்டார் வியாசர். பின் தேவி பாகவதத்தின் மகிஷாசுர வத நிகழ்வுக்குச் சென்றார்.

""சுவாமி... அஷ்டதசபுஜ மகாலட்சுமியாகக் காட்சிதந்த அம்பிகை அதன்பிறகு என்ன செய்தாள் என்று விளக்கமாகக் கூறுங்கள்'' என்றான்.

வியாசரும் தொடர்ந்தார்.

அம்பிகை தோன்றிய விஷயம் மகிஷன் காதுகளையும் அடைந்தது. அவன் உடனே ஆவேசம் கொண்டான்.

""என்னை எதிர்த்து நிற்க துப்பில்லாத இந்த மும்மூர்த்திகள் இப்போது ஒரு பெண்ணை ஏவிவிட்டுள்ளனரா? இவர்களுக்குத்தான் எத்தனை ஆணவம்... இவர்களுக்குப் பாடம் கற்பிக்கிறேன் முதலில்...

என்னை எதிர்த்துவரும் அந்தப் பெண்ணை நான் நேரில் சென்று அழிப்பதுகூட அதிகபட்சம். அதற்கு என் தளபதிகளே போதுமானவர்கள். தளபதிகளிலும் ஒருவன் போதுமானவன்'' என்று கொந்தளித்த மகிஷன், தன் தளபதிகள் ஏழுபேரையும் வேகமாய் அழைத்தான்.

"சிஷீரன், சாமரன், மஹாஹனு, உதக்ரன், சுசிலோமன், பாஷ்கலன், பிடாலன்' என்னும் அவர்கள் ஏழுபேரும் மகிஷன்முன் பணிவோடு அணிவகுத்து நின்றனர். இந்த எழுபேருக்கும் ஏழுவிதமான விசேஷ சக்திகள் உண்டு.

சிஷீரன் உயிர்பிரிந்த நொடி அவன் உடம்பில் திரும்பச்சென்று சேர்ந்துவிடும். தொடர்ந்து பன்னிரண்டு முறை கொன்றால் மட்டுமே இவன் முற்றாக உயிர்துறப்பான்.

உதக்ரனுக்கு எந்தவிதமான ஆயுதங்களாலும் மரணம் ஏற்படாது. எனவே இவனை ஆயுதமற்ற முறையில்தான் கொல்லமுடியும்.

சுசிலோமனை அவன் மண்மீது நின்றுகொண்டிருக்கும்வரை கொல்ல முடியாது. விண்ணுக்கு அவனை ஏறச்செய்தபிறகே கொல்லமுடியும்.

பாஷ்கலன் உயிரோ தலையில் உள்ளது. அங்கே அடிபட்டால் மட்டுமே உயிர்பிரியும்.

பிடாலன் வெட்டப்பட்டு பின் அவன் உடல்பாகத்தை விழுங்கிவிடவேண்டும்.

மகாஹனுவை ஒருவரால் கொல்லமுடியாது. ஒரேசமயத்தில் ஒன்பதுபேர் முயன்றாலே கொல்லமுடியும்.

சாமரன் உயிர் அவன் தலைமுடியில் உள்ளது. அது எரிந்தாலே அவனைக் கொல்லமுடியும். இப்படி ஏழுபேரும் ஏழுவித சக்தியுடையவர்கள். இந்த ஏழு சக்தி படைத்தவர்களில் முதல்வனான சிஷீரனை மகிஷன் அம்பிகையை நோக்கி அனுப்பினான்.

""சிஷீரா... அந்தப் பெண்ணை விழுங்கிவிட்டு இங்கே என்முன் வந்துதான் ஏப்பம் விடவேண்டும். ஞாபகம் இருக்கட்டும்'' என்றான். சிஷீரனும் தொடை தட்டிக்கொண்டு புறப்பட்டான். அவன் வரும் விஷயம் அம்பிகைக்கும் தெரிந்தது. பதிலுக்கு அவளும் தன் மேனிமேல் உறைந்திருக்கும் சப்த கன்னியர்களில் ஒருத்தியான சாமுண்டியை அனுப்பினாள். இந்த சாமுண்டி சிஷீரனை ஒரு அம்பில் வீழ்த்தியதோடு, அவன் உயிர் திரும்ப அவன் உடலுக்குள் சேர்வதற்குள் உடம்பை தீயில் விழுமாறு செய்திடவும், அவன் உடல் கருகிச்சாம்பலான நிலையில் தன் உடல் கிடைக்காத காரணத்தால் சிஷீரன் மரணித்து எமதூதர்களால் இழுத்துச்செல்லப்பட்டான்.

சிஷீரன் மரணித்த செய்தி மகிஷனை அடையவும் ஆடிப்போன மகிஷன், அடுத்து அனுப்பியது சாமரனை... சாமரன் உயிர் தலைமுடியில் இருப்பதை தெரிந்து அவனை வீழ்த்த வேண்டும். அம்பிகையும் தனதுள்ளிருந்து இந்திராணியை அனுப்பிட, அவள் கச்சிதமாய் அவன் தலைமுடிமேல் அக்னி பாணம் போட அவன் உயிரும் பிரிந்தது.

அடுத்து மஹாஹனு! இவனை அம்பிகையின் அம்சமான வைஷ்ணவி தன்னுருவைப்போல ஒன்பது வடிவமெடுத்து, ஒன்பதுபேரும் ஒரேசமயத்தில் பாணம் போட்டுக் கொன்றனர். அடுத்து உதக்ரன்! இவனை மகேஸ்வரியும், சுசிலோமனை கௌமாரியும், பாஷ்கலனை பிராமியும், பிடாலனை வாராஹியும் அழித்தனர்.

மகிஷனின் சப்தபதிகளான தளபதிகளை அம்பிகையும் தன் சப்த கன்னிகளைக்கொண்டே அழிக்கவும் மகிஷன் மிகவும் ஆவேசமுற்றான். வேறுவழியின்றி அவனே அம்பிகையை எதிர்கொள்ளத் தயாராகி போர்க்களத்திற்கும் புறப்பட்டான். இதைத்தான் ஒட்டுமொத்த தேவருலகமும் எதிர்பார்த்தது. தாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல நாள் வந்துவிட்டதாக அவர்களும் நம்பினர்.

அதேசமயம் அம்பிகை மனதில் மகிஷன் குறித்து ஒரு இனம்புரியாத சலனம். இந்திரனின் தவறு என்னும் புள்ளிதான் அவன் தோன்றவே காரணம். அடுத்து வரமுனி என்னும் முனிவரின் ஆணவம்! இந்த இரண்டின் கலவையாகத் தோன்றியவனிடமும் ஒரு சிறு நியாயம் இருப்பது புலனானது. இந்த உலகைப் படைத்து, அதில் மகிஷன்போல உயிர்களையும் உருவாகும் விதத்தில் படைப்புச் சக்தியைப் படைத்த தானே அதை அழிப்பது எந்த வகையில் சரி என்ற கேள்வி அம்பிகைக்குள் அவளது கருணை நிமித்தம் எழுந்தது. எனவே மகிஷன் திருந்த ஒரு வாய்ப்புதர விரும்பியது அவள் தாயுள்ளம். அதன் நிமித்தம் அவள் தான் புறப்படாமல் தன் வாகனமான சிம்மத்தை அனுப்பினாள்.

அந்த கம்பீர சிம்மமும் புழுதிபறக்க களத்தில் நிற்கும் மகிஷன்முன் சென்று நின்று வீர கர்ஜனை புரியத் தொடங்கியது.

(தொடரும்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :