Add1
logo
மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு! || மன்னார்குடியில் தினகரன் கொடியை கிழித்து அ.தி.மு.க கொடி ஏற்றம்! ||
Logo
ஓம்
சனியின் துயர் தணிக்கும் மாதா, பிதா, குரு, தெய்வம்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
டிசம்பர் மாத ராசி பலன்கள்
 ................................................................
ஜோதியும் முருகனே!
 ................................................................
பிரம்மிப்பூட்டும் அவதாரம்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
பார்வைகள் பலவிதம்!
 ................................................................
சிவஜோதி தரிசனம்!
 ................................................................
தவயோகத் திருவிழா!
 ................................................................
டிசம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
மங்குசனியை பொங்கு சனியாக்கும் சங்ககிரி
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
அர்ப்பணிப்பின் அன்னை!
 ................................................................
அஞ்சனை மைந்தனின் அவதாரம்
 ................................................................
01-12-17ருவர் உள் மனதில் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே காட்டக்கூடியது பார்வை. பார்வைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். கோபத்தோடு பார்த்தால் எதிரில் இருப்பவருக்கு பயம் தோன்றும். கனிவோடு பார்த்தால் அதில் ஒரு அன்பு இருக்கும். "அடேயப்பா! நேற்று அப்படி இருந்தவன் இன்று இப்படி ஆகிவிட்டானே!' என்று ஆச்சரியத்தோடு பார்த்தால் அது பொறாமைப் பார்வையாகிவிடும். ஒருவருக்கொருவர் ஏதோ ஒருவகையில் அறிவுரை வழங்கும்போது கேட்பவரின் பார்வை சிந்தனைப்பார்வையாக இருக்கும். நாம் எத்தனைமுறை வேண்டுமானாலும் இறைவனைப் பார்க்கலாம். ஆனால் இறைவன் ஒருமுறை நம்மைப் பார்த்தால் அந்தப் பார்வை நமக்குப் பல கோடி நன்மைகளைக் கொடுக்கும்.

""அவன் எந்த நேரத்தில் என்னுடைய புது டிவியைப் பார்த்து "பிரமாதமாக இருக்கிறதே' என்று சொன்னானோ,அதிலிருந்து இது சரியாக வேலை செய்வதில்லை'' என்று வெறுப்புடன் பேசுபவர்களுமுண்டு. சிலருடைய பார்வை இப்படியொரு அவலத்தை ஏற்படுத்திவிடும். இதை "கண்போட்டு விட்டான்' என்றும் "கண்திருஷ்டி' என்றும் சொல்வதுண்டு. காதலர்களின் பார்வை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது போலிருக்கும். ஒருவர் வறுமையில் வாடி ஒருவேளை சோற்றுக்கு நம்மிடம் கை நீட்டினால், "ஐயோ பாவம்... ஏதாவது கொடுப்போம்' என்று கொடுத்தால் அது கருணைப் பார்வையாகும்.

பரமேஸ்வரனின் நெற்றிக்கண் பார்வை மன்மதனை எரித்தது. முருகப் பெருமானைத் தோற்றுவித்தது.

ஒருசமயம் சூரிய பகவான் தனக்கு மகன் பிறந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டு ஆவலோடு பார்க்கப்போனார். பிறந்த குழந்தை வேறு யாருமல்ல; சனீஸ்வரன்தான். கருகருவென்று இருந்த அந்தக் குழந்தை தனது சிவப்புக் கண்களால் தந்தை சூரிய பகவானைப் பார்த்தது. அடுத்த நொடி சூரியனின் பிரகாசமான ஒளி இருண்டுபோனது. சூரிய பகவான் அலறிக்கொண்டு வெளியே வந்து தன்னுடைய சூரிய மண்டலத்திற்கே ஓடிப்போய்விட்டார்.

இப்படிப்பட்ட குரூரமான பார்வையைக் கொண்டவர் சனீஸ்வரன். சனி பகவானின் பார்வையில் ஒரு அபார சக்தியுண்டு.

அவரது பார்வைபட்ட மாத்திரத்திலேயே பல விபரீதங்கள் ஏற்படும்.

அதனால்தான் நவகிரக சந்நிதியை வலம் வரும்போது கூடுமானவரை சனீஸ்வரனுக்கு நேராக நின்று கும்பிடக்கூடாது என்பர். சனி பகவானை வணங்கும்போது அவரது இடப்புறமோ வலப்புறமோ ஓரமாக நின்று வணங்கவேண்டும்.

இராமாயண காவியத்தில், இலங்காபுரியை அரசாண்டு வந்த அரக்கர் குல மன்னன் இராவணனை இந்த சனியின் பார்வை இராம பானத்திற்கு பலியாக்கியது.
இலங்கையை ஆண்டு வந்த இலங்கேஸ்வரன் இராவணன் பெரும்  தவமிருந்து பரமேஸ்வரனிடத்தில் சாகா வரம் பெற்றிருந்தான். அவனுடைய வீரம், அருமை, பெருமை, தேஜஸ், கம்பீரம், தைரியம் போன்ற பிரதாபங்களைப் பேசாத நாடே இல்லை.

அப்படியொரு ஆற்றல் பெற்றவன். ஈசனிடம் வரம்பெற்ற மமதையால் முப்பத்து முக்கோடி தேவர்களையும், மாமுனிவர்களையும், மக்களையும் பற்பல தொல்லைகளுக்கு ஆளாக்கினான். தவசீலர்களை மதுக்குடத்தை ஏந்தச் சொன்னான். தொழுது நற்பேறு பெற வேண்டிய தெய்வங்களையும், நவகிரக தேவர்களையும் படாதபாடு படுத்தினான். நவகிரக நாயகர்களின் கைகளைக் கட்டிப்போட்டான்.
அவனுடைய அட்டகாசத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய காலகட்டம் நெருங்கியது. சனி பகவானின் அதிதேவதை எமதர்மன் ஆவார். ஒருவருக்கு வாழ்க்கையில் மூன்றுமுறை ஏழரைச்சனி வரும். முதல் சுற்று மங்குசனி; இரண்டாவது சுற்று பொங்குசனி; மூன்றாவது சுற்று மரணச் சனி என்பார்கள். மூன்றாவது சுற்றில் எமதர்மராஜன் கட்டளைப்படி சனீஸ்வரன் தன் கடமையாற்றி அந்த நபரின் உயிரைப் பிரித்துவிடுவார்.

இப்போது இராவணனுக்கு அந்த மூன்றாவது சுற்று வரவேண்டிய காலம் வந்தது. இராவணின் அகங்காரத்தையும் அராஜகப் போக்கையும் அடியோடு அழித்து அவனையும் ஒழித்துவிட இதுவே சரியான சந்தர்ப்பம் என்று கருதிய நாரதர் ஒரு அற்புதமான செயலைச் செய்தார். எப்பொழுதும் சனீஸ்வரன் தனது பார்வையை ஒருவர்மீது செலுத்தினால், அடுத்த நொடி அந்த மனிதர் தன் மதியிழந்து, திறனிழந்து சனியின் பிடியில் மாட்டிக்கொள்வார். ஒருவர் சனீஸ்வரன் பிடியில் இருந்தால் அவரை மிகச்சுலபமாக சிக்கலில் மாட்டிவிடுவார். இதை நன்கு தெரிந்து வைத்திருந்த நாரதர் ஒரு நாள் இராவணனது அரண்மனைக்குச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவருக்கு சாதகமாக இருந்தது. அதாவது இராவணன் தனது சிம்மாசனத்திற்கு ஏறிச்சென்று அமரவேண்டிய ஒன்பது படிகளிலும், நவகிரக நாயகர்கள் ஒன்பதுபேரையும், குப்புறப் படுக்கவைத்து, அவர்களின் முதுகின்மீது ஏறிச்சென்று சிம்மாசனத்தில் அமருவான். அப்படி அவன் அமரச் சென்றபோது நாரதர் அவைக்குள் நுழைந்தார். நாரதரைக் கண்டதும் இராவணன் அவரை வரவேற்று உயர்ந்த இருக்கையில் அமர வைத்தான்.

""நாரதரே! தேவலோகம், சொர்க்கலோகம், பாதாள லோகம், அதலம், விதலம், பூமி போன்ற இதர பதினான்கு லோகங்களிலும் சுற்றிவரும் தாங்கள் என்போன்ற ஒரு வீரதீரனைக் கண்டதுண்டா?'' என்று கேட்டான்.

இராவணனின் ஆணவ மொழியைக்கேட்டு நாரதர், ""இலங்கேஸ்வரா... நீ அந்த பரமேஸ்வரனிடம் வரம் பெற்றவன்.

உன்னுடைய பெருமை, தேஜஸ், கம்பீரம், தைரியம் எவருக்கு வரும்? உன் பெருமைகளைப் பேசாத உலகமே இல்லை. இருந்தாலும் நவகிரக தேவர்களில் வல்லமை பொருந்தியவன் சனீஸ்வரன். அவனும் உன்னைப்போல் ஈசனின் அருள் பெற்றவன். அவன் உன்னுடைய அருமை, பெருமைகளையும், வீரதீரத்தையும் காணவேண்டாமா? அவனைப்போய் இப்படி குப்புறப்படுக்க வைத்துவிட்டாயே. அவனைத் திருப்பிப்போட்டு, உன் காலால் அவன் நெஞ்சில் ஒரு மிதி மிதித்து உன் வலிமையைக் காட்ட வேண்டாமா?'' என்றார்.

நாரதரின் சூழ்ச்சியை உணராத இராவணன், சனி பகவானைத் திருப்பிப்போட்டு அவனை மிதிக்கத் தன் வலது காலை உயர்த்தினான். அப்போது சனி பகவான் தனது சிவந்த கண்களால் இராவணனைப் பார்த்தான். அடுத்த நொடி இராவணன் தனது வலிமையை இழந்தான். அவனுடைய ஆற்றல், வரத்தினால் பெற்ற பலன்கள் அனைத்தும் அவனைவிட்டு அகன்றது.

அன்றே சனியின் மூன்றாவது சுற்றான மரணச்சுற்று இராவணனைச் சுற்றிக்கொண்டது. அனுமனின் ஆர்ப்பாட்டத்தில் அவமதிப்படைந்தான். இராமனுடனான போரில் தனது மகனை இழந்தான். உடன்பிறந்தவர்களை இழந்தான். கடைசியில் இராமபிரானின் கருணையினால் "இன்று போய் நாளை வா' என்று உயிர்பிச்சை பெற்று அவமானத்துக்குள்ளானான். கடைசியில் இராமபானத்திற்கு இரையானான்.

இராவணனின் இத்தனை அவமானத்திற்கும் வேதனைக்கும் காரணமாக இருந்தவர் சனி பகவான். நாம் ஒன்றை மட்டும் இதில் கவனிக்க வேண்டும். அதாவது சனி பகவானுக்கு தண்டிப்பதுதான் கடமையென்று எண்ணக்கூடாது. அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு பலன்களைத் தரக்கூடியவர். பாவம் செய்தவருக்கு தண்டனை கொடுத்து பாவத்தைக் கழிப்பார்.

புண்ணியம் செய்தவருக்கு அள்ளிக்கொடுப்பார்.

"சனி கொடுத்த சொத்தை எவராலும் பறிக்க முடியாது' என்பது ஜோதிட சாஸ்திரம் கூறும் செய்தியாகும். அவர் இப்படி யாருக்குக் கொடுப்பார் என்றால், நீதி தவறாமல் நடப்பவர்களுக்கும், இன்னல் வந்தபோதும் இம்மியளவும் நெறிபிறழாத நேர்மையாளர்களுக்கும் மட்டுமே வழங்குவார்.

சனி கிரகத்திற்குரிய ராசிகள் மகரம், கும்பம். அதிதேவதை எமதர்மராஜன். பூஜிக்க வேண்டிய மலர் கருங்குவளை. பிரீதி தானியம் கருப்பு எள்.

சனி தோஷம் ஏற்பட்டவர்கள் சனிக்கிழமையன்று மாலை வேளையில் சனி தலங்களுக்குச் சென்று நல்லெண்ணெய் விளக்கேற்றி எள் தானம் செய்து, சனீஸ்வரனுக்கு கருப்பு அல்லது நீலநிற உடைசாற்றி, வன்னி மலர்களால் அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட துதியைச் சொல்லி சனீஸ்வரனைச் சுற்றி வந்தால் சனியின் பிடியிலிருந்து தோஷ நிவர்த்தி அடையலாம்.

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகாநெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா...'
சனி காயத்ரி
காக த்வஜாய வித்மஹே
கட்ஹ ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :