Add1
logo
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ) || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) ||
Logo
ஓம்
சனியின் துயர் தணிக்கும் மாதா, பிதா, குரு, தெய்வம்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
டிசம்பர் மாத ராசி பலன்கள்
 ................................................................
ஜோதியும் முருகனே!
 ................................................................
பிரம்மிப்பூட்டும் அவதாரம்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
பார்வைகள் பலவிதம்!
 ................................................................
சிவஜோதி தரிசனம்!
 ................................................................
தவயோகத் திருவிழா!
 ................................................................
டிசம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
மங்குசனியை பொங்கு சனியாக்கும் சங்ககிரி
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
அர்ப்பணிப்பின் அன்னை!
 ................................................................
அஞ்சனை மைந்தனின் அவதாரம்
 ................................................................
01-12-17கார்த்திகை மாதத்தில் மிகவும் சிறப்புவாய்ந்தது மகாகார்த்திகை தீபத் திருவிழாவாகும்.

"அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணசிவோம்
அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணசிவோம்'

என்னும் "அருணாபவநய தவத்துதி' மிகவும் தொன்மையானது. பண்டைக் காலத்தில், பல முனிவர்கள் ஒன்றுசேர்ந்து இத்துதியை ஓதியவாறு திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வர். மிகவும் சக்திவாய்ந்த இந்த அருணாசலத்துதி, சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி போன்ற மகான்களால் போஷிக்கப் பெற்றதாய், இவர்கள் காலத்துக்கும் மூத்ததாய் விளங்கும் பழமையானது.

அருணாபவநயத் துதியிலுள்ள "சிவோம்' என்பது "சி+ஓம்' என பரந்து விரிந்து நிறையும் பீஜசக்தி கொண்டது.

"நமசிவாய' என்பது சிவபஞ்சாட்சரம் அல்லவா? இதிலுள்ள "ந, ம, சி, வ, ய' எனும் ஐந்து சிவபீஜ ஜோதிகள் ஒன்றாய்த் திரண்டு ஜோதியாய் பொலிவது அருணாசலமலை. சிவஜோதி, அருணாசலத்தின் உச்சியில் என்றென்றும் பிரகாசிப்பது. இந்தப் பரம்பொருட்ஜோதியை முதன்முதலாய் அடிமுடி தேடும் படலத்தின்போது மகாவிஷ்ணுவும் பிரம்மமூர்த்தியும் தரிசித்தனர்.

ஆனால் இந்த அருட்பெருஞ் சிவஜோதியை தரிசிக்கும்  பார்வை யோக சக்தியை ஜீவன்கள் யாவரும் பெறவில்லையே. எனவே, மும்மூர்த்திகளும் பூலோக உயிர்களின்மீது பெருங்கருணை கொண்டு, நாம் அதனை தரிசிப்பதற்காக, கார்த்திகை மாதத்தின் மகாகார்த்திகை தீபநாளில், அருணாசல மகாதீபமாய் மலைமேல் தீபத்தை ஏற்றி, என்றென்றைக்கும் சாசுவதமான ஜோதியுடன் இணைந்ததாய் தரிசிக்க வைக்கின்றனர். இதன் மூலம் திருவண்ணாமலை உச்சியில் சதாசர்வ காலமும் பிரகாசிக்கும் அருணாசலஜோதியை தரிசித்த பலன்களை நமக்கு நல்குகின்றனர்.

மூச்சுவிடுதலும், உணவு உண்ணுதலும் ஒவ்வொரு மனிதரும் தினமும் ஆற்றும் ஆத்ம பூஜைகளே. மூச்சு என்பது, உடலினுள் ஆத்மாவாய் இருக்கும் இறைவனுக்கு ஆற்றும் நித்திய அக்னி பூஜை.

உணவுண்ணுதல் என்பது, உடலிலுள்ள ஜடராக்னிக்கு ஆஹுதி வார்த்து, தினமும் ஆத்ம வேள்வி செய்வது போலாகும்.

ஆக, மூச்சு, உணவு இரண்டுமே மகத்தான ஆத்மபூஜை சாதனங்கள். ஒவ்வொருவருடைய நியாயமான உறக்கத்தையும்கூட- ஆன்மாவை நோக்கி உடல் இயற்றும் யோகம் என்றே விளக்குகின்றனர்.

"இது சத்குருவின் வார்த்தை. எனவே இது அதி நிச்சயமான சத்தியம்' என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, அதனைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் இவற்றின் உண்மைகள் புரியவரும்.

புறபூஜையில், ஹோமத்தில் அக்னி பகவானை எழுந்தருளச்செய்து, அவருடைய மனைவியான "ஸ்வாஹா' தேவிமூலம் தெய்வங்களுக்கும் ஆஹுதி அளிக்கப்பெறுகின்றது. இறுதியில் அக்னி பகவானுக்கும் நன்றி பாராட்டி ஆஹுதி அளிக்கப்பெறுகின்றது.எந்தவித எதிர்பார்ப்புமின்றி இறைவனால் படைக்கப்பெற்ற அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்துதல்; அன்னதானம் செய்தல் போன்ற நற்செயல்கள், சேவைகள் போன்றவை அந்தப் பரம்பொருளுக்கே செய்வது போன்றது. வள்ளல்பிரானும் "அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை' என உபதேசித்தார். அவர் உருவ வழிபாட்டை வேண்டாம் என்று சொல்லவில்லை. அரூபமாக இருக்கும் இறைவனை தரிசிக்கும் வரையில்தான் உருவம் தேவை; பிறகு தேவையில்லை. புறபூஜைகள் யாவும் நல்லொழுக்கத்தை வளர்க்க ஏற்படுத்தப்பெற்றவை.

திருவண்ணாமலையில் இந்த ஆண்டு கார்த்திகையில் "மகாதன்மய ஆசக்தி' தீபோற்சவ விவரம்:

மகா கார்த்திகை தீபம்: 2-12-2017.

விஷ்ணு தீபம்: 3-12-2017.

பிரம்ம (சரண) தீபம்: 4-12-2017.

சண்டேஸ்வர சரண தீபம்: 5-12-2017.

ஆஞ்சநேய தீபம்: 6-12-2017.

மேலே உள்ள "தன்மய' என்பது ஐக்கியத்தைக் குறிக்கும். அதாவது, தீபத்தன்று 2-12-2017 காலையில் ஏற்றப்பெறும் பரணி தீபம், மாலை பஞ்சமூர்த்திகள் முன்பாக ஏற்றப்பெறும் மகாதீபத்துடன் சேர்க்கப்பெறும். அதாவது ஐக்கியமாகும். மற்றொன்று, அருணாசலத்து ஈசன் மிகவும் காருண்ய உள்ளம் கொண்டு, அவரை உணராத ஆத்மாக்களோடு சேர்ப்பதும் இந்த ஐக்கியம். "ஆசக்தி' என்பது நாம் தார்மீகமான விஷயங்களுக்கு மட்டுமே ஆசைப்பட வேண்டும் என்பதாகும்.

அவ்வைப் பிராட்டியார் "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்பதுபோல, இந்த நல்வாய்ப்பினைத் தந்த- இந்த பிறவிக்குக் காரணமான முன்னோர்களின் தியாகத்திற்கும், இறைவனுக்கும் நன்றி தெரிவித்து, சித்தர் பூமியான அருணாசலத்தில் தீப தரிசனம் காண்போம். வலம்வந்து மகிழ்வோம்.

இயன்ற அளவுக்கு அன்னதானம், மௌனம், பாரம்பரிய உடை அவசியம். கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள "அருணாபவநய தவத்துதியை' ஓதியவாறு, ஒரு கர்ப்பிணிப் பெண்போல கிரிவலம் செய்யவேண்டும். உங்கள் அருகில் ஒரு சித்தர்கூட எந்த உருவிலும் தொடர வாய்ப்புள்ளது. கிரிவல இறுதியில் நன்றி தெரிவித்து, தியானம் செய்து, அந்த கிரிவலப்பலன்களை இறைவனுக்கே அர்ப்பணம் செய்யுங்கள்.

அதுவே ஒரு முதலீடு!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :