Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
Logo
ஓம்
சனியின் துயர் தணிக்கும் மாதா, பிதா, குரு, தெய்வம்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
டிசம்பர் மாத ராசி பலன்கள்
 ................................................................
ஜோதியும் முருகனே!
 ................................................................
பிரம்மிப்பூட்டும் அவதாரம்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
பார்வைகள் பலவிதம்!
 ................................................................
சிவஜோதி தரிசனம்!
 ................................................................
தவயோகத் திருவிழா!
 ................................................................
டிசம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
மங்குசனியை பொங்கு சனியாக்கும் சங்ககிரி
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
அர்ப்பணிப்பின் அன்னை!
 ................................................................
அஞ்சனை மைந்தனின் அவதாரம்
 ................................................................
01-12-17லயங்களில் செய்யப்படும் பலவிதமான உற்சவங்களின் விதிமுறைகளை கடந்த இதழ்களில் கண்டோம். மேலும் சில உற்சவங்களை இங்கு காணலாம்.

டோலாரோகண உற்சவம் (ஊஞ்சல் திருவிழா)

ஊஞ்சல் விழாவானது, மாலையில் புஷ்ப மண்டபத்துள் முறைப்படி ஊஞ்சலை அமைத்து, அதைப் பூஜித்து, அந்த ஊஞ்சல் பலகையின்மீது சிவசக்திகளையும், நடுவில் கந்தரையும் அமரச்செய்து, பலவகையான சங்கீத நிருத்தம், வாத்தியங்களால் தெய்வங்களை மகிழ்விப்பதாகும். இவ்விழாவை பிரதிமாத ஆதிரையிலோ, நித்தமுமோ செய்யவேண்டுமென்று காமிகாகமத்தின் டோலாரோகண உற்சவப் படலம் கூறுகிறது. இவ்விழாவை பூந்தோட்டம் நடுவே செய்திடலாம்.

உடுபாரோபண உற்சவம் (தெப்பத் திருவிழா)

தெப்பத் திருவிழாவானது, பலநாள் பெருவிழாவின் கொடி அவரோகணத்திற்குப் பிறகு மறுநாளில், ஒரு புஷ்கரணி எனும் தடாக தீர்த்தத்தில் (குளத்தில்), சிறப்பாகக் கட்டிய மிதக்கும் தெப்பத்தில் இறைவனை ஏற்றி இருத்திவைத்து, கீதவாத்யாதிகளுடன் நீரின்மீதே வலம்வந்து இறைவனை மகிழ்வித்தலாகும். விரும்புகிற ஒருநாளிலும் செய்யப்படலாம். இதுமாலையில் மட்டுமே செய்யத்தக்க சிறப்பானதான தெப்பத்திருவிழா எனும் உடுபாரோபண உற்சவம் ஆகும். மெல்லிசைக் கலைஞர்களால் வீணை, குழல் முதலிய இசைக்கருவிகளால் மகிழ்வித்தல் இவ்விழாவின் முறையாகும்.

ரதாரோகண உற்சவம் (தேர்த் திருவிழா)

பொதுவாக தேர்த்திருவிழாவானது மகோற்சவத்தில் ஏழாவது நாளிலோ, ஒன்பதாவது நாளிலோ காலையில் ஒரு விசேஷ உற்சவமாய் இடம்பெறும். மேலும் ஆலயமூர்த்திகளுக்குரிய சிறப்புக்காலங்களில் இதனையே சிறுதேரில் காம்யோற்சவமாகவும் செய்யலாம். இதனை உற்சவ காலத்திலும், மேலும் ஸ்தாபன காலம், அயனாரம்ப காலம், விஷுவ காலம், மாதப்பிறப்பு, அமாவாசை, அரசனின் பிறந்தநாள், அற்புத புண்ணிய தினம் ஆகியவற்றிலும்  தேர் வீதிவலம் வருமாறு செய்யலாம். முதல்நாள் மாலையில் சுவாமிக்கு காப்புக்கட்டி பூஜித்து மறுநாள் காலையில் ரதோற்சவம் செய்யப்படவேண்டும்.

ஸ்யந்தனம் எனப்படுகிற சிறிய வண்டித்தேரில் கோவிலுக்கு உள்வீதியிலும், தேர்த்திருவிழாவை இறைவனுக்கு விரும்பும்நாளில் காமிய உற்சவமாக செய்விக்கலாம் என்பது ஆகமங்களால் அறியப்படுகிறது. பெரிய தேர்த்திருவிழா, பகலில் மட்டுமே நீராட்டல் முடிவாகச் செய்யப்படவேண்டும்.

கிராமதேவதா உற்சவம் (ஊர்க்காவல் தெய்வத் திருவிழா)

மக்களின் கிராமம் முதலான வசிப்பிடத்தில், அந்த ஒரு கிராம வாஸ்துவில், சிவனுக்குப் பல நாட்களில் மகோற்சவம் செய்யப்படுகிற அதே நாட்களில், அதே கிராமத்திலுள்ள மற்ற ஆலய உற்சவத்தைத் தனியே செய்வதோ, பிற தெய்வ உற்சவத்தையும் சமமாகக் கருதுமாறு சேர்த்துச் செய்வதோ கூடாது. சிவனை, பிற தெய்வங்களுக்கு நிகராக எண்ணி செயல்படக்கூடாது என்பது இங்கு உணரத்தக்கது. மேலும் ஒரு ஊரில் அங்குரம் உள்ளபோது, வேறு ஆலயங்களுக்கு முன்னதாக உற்சவத்தைச் செய்து முடித்தபின்னரே சிவனுக்கு விசேஷமாக தனியே உற்சவம் செய்யப்பட வேண்டும் என்கிறது சிவாகமம்.

கிராம தேவதை என்பது ஐந்து வகை என்றும்; அவை கணபதி, முருகன், விஷ்ணு, துர்க்கை- காளி, சாஸ்தா ஆகிய ஐந்து தெய்வங்களின் கோவில்கள் என்றும்;

அவை சிவன் கோவிலுக்கு நிகரானவை என்றும்; இக்கோவில் தெய்வங்கள் யாவும் சிவனைப் போன்றே கொண்டாடத்தக்கவை என்றும்; இதுவே கிராமதேவதைகளின் ஆலயங்கள் என்றும் சைவ ரௌரவாகமம் விளக்கியுள்ளது. இதனை கீழுள்ள ஆகமச் சான்றால் அறியலாம்.

"விக்னராஜோ குஹோ விஷ்ணூர் துர்கா சாஸ்தேதி பஞ்சகம்:
பஞ்ச சோகர மூர்த்தியாதி சிவவத் கிராமதைவதம்.'

இந்த தெய்வங்கள் ஒரு கோவிலின் பிராகாரங்களில் பரிவார மூர்த்தமாய் இருக்குமேயானால், அங்கு அவற்றுக்கு தனித்த உற்சவத்தைச் செய்யக்கூடாது.

இந்த தெய்வங்களே தனிக்கோவிலில், சுற்றுப்பிராகாரங்களுடன், தனது பரிவாரங்களுடன் இருக்குமேயானால் அதற்குக் கொடியேற்றத்துடன் உற்சவத்தைச் செய்ய வேண்டும்.

"பிரியாவஹம் கிராமதேவே சரேத் உத்ஸவ முத்தமம்'என்னும் ரௌரவாகம வசனப்படி, கிராமதேவதா உற்சவம் செய்வது சகல தேவதைகளுக்கும் பிரியத்தைத்தரும். ஒரு வாஸ்துவுக்குள் இடம் பெற்றுள்ள தெய்வங்கள் யாவும் சிவனது உற்சவத்தில் சூழ்ந்திருந்து தத்தமது பூஜையை ஏற்று மகிழ்வார்கள் என்பது சைவாகமக் கருத்தாகும். எனவே சிவோற்சவம் தலைசிறந்ததாகிறது.இஷ்டகாலோற்சவம்

ஒருவர் பக்தி மிகுதியால் தனது பிறந்தநாள், திருமணநாள், பிள்ளை பெற்ற நாள் (புத்திரப் பிராப்தி தினம்), தேச சுதந்திர தினம், வெற்றி நாள், நினைவுநாள் ஆகியவற்றில் இவை குறித்து கோவிலில் ஒரு யாமம் எனும் மூன்று மணி நேரத்தில் ஏதேனும் ஒருகால பூஜையில் விழாவைச் செய்வது இஷ்டகாலோற்சவம் எனப்படும்.

விஜயதசமி உற்சவம்- மிருகவதோற்சவம்
(அம்புவிடும் விழா, வேட்டைத் திருவிழா)

நவராத்திரி விழா முடிந்து மறுநாள் விஜயதசமியன்று அஸ்திர மந்திரங்களால் அக்னிதேவராக சமி விருட்சத்தைப் (வன்னி மரத்தை) பூஜித்து, வில், அம்புடன்கூடிய அலங்காரத்தில் தெய்வங்கள் எழுந்தருளி, மிருகத்திற்கு மாற்றாக- மான், ஆடு போன்றவற்றுக்குப் பிரதிநிதியாக வாழைமரத்திலோ, விலங்கின பொம்மையிலோ அம்பு தொடுக்கும் விழாவாகும். இது இறைவனது துஷ்டநிக்ரகத்ûயும், சிஷ்ட பரிபாலனத்தையும் உணர்த்துவதற்காகச் செய்யப்படுவதாகும். சிலர் மகிஷாசுர வதத்தை, தேவிவரலாற்றை நினைவுபடுத்தும் தேவி யுத்தலீலையாக காட்சியுடன் செய்திடுவார்கள். ஒருசிலர் தேவியே நாராயண தசாகிருதியானவள் எனக்கொண்டு இராவண வதத்தைச் செய்தும் தேவியின் மகிமையை விளக்குவர்.

கிருஷ்ணகந்தோற்சவம் (கருஞ்சந்தனப் பூச்சுவிழா- சுகந்த விழா)

சைவாகமங்களில் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் கூடியுள்ள சுபதினத்தில் நடராஜப்பெருமானுக்கு கிருஷ்ண கந்தத்தைச் சாற்றி உற்சவம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

குங்குமாகரு கஸ்தூரீ கர்பூரைஸ் சந்தனாதிபி:

ஹிமாம்புநா கந்தசாரைர் ரோசனா யக்ஷகர்தமை: (காரணாகமம்)மேற்காணும் வசனத்தின்படி எட்டுவகையான உயர்தர நறுமணப் பொருட்களை நன்கு அரைத்துக் குழைத்து, கருப்பு நிறத்தில் சாந்து தயாரித்து நடேசர் முதலான தெய்வங்களுக்கு நெற்றியில் திலகமிட்டும், இதையே பக்தர்களும் ஏற்றுத் திலகமிட்டுக்கொண்டும் கொண்டாட்டத்துடன் செய்யப்படுவதாகும். இதுவே கிருஷ்ணகந்தமாகும்.

மகர ராசியில் சூரியன்  உள்ள காலமான தை மாதத்தில் ஆதிரை நட்சத்திரத்தில் கிருஷ்ணகந்தம் சாற்றி உற்சவம் செய்வது ஆகமமுறையாகும். இந்த ஆதிரைவிழாவில் திரிபுரசம்ஹார உண்மையை உணர்த்திடும் பொருட்டு ரட்சை சாற்றப்படுகிறது. கிருஷ்ணகந்தம் எனப்படுவது குங்குமப்பூ, புனுகு, பச்சைக்கற்பூரம், சந்தனம், ஜவ்வாது, அரகஜா, கஸ்தூரி கலந்ததான கார்அகில் கட்டையை அரைத்து சாந்தெடுத்து, அதில் பன்னீர் (ஹிமாம்பு) அல்லது கங்கை முதலிய புனித நீர் கலந்து ஒன்றுசேர்க்கப்பட்ட, கருமைநிற நறுமணம்மிக்க சந்தனச் சாந்து ஆகும்.

அஷ்டகந்தைஸ் ஸமப்பர்ச்ய லேபயேத்து விசேஷத:

என்கிறது சைவாகமம். இதனை மாதபூஜையின் விதிப்படி பூஜித்து, ஸ்நபனாபிஷேகத்தைச் செய்துமுடித்து, பிறகு தெய்வத்திருமேனியில் கிருஷ்ணகந்தம், அஷ்டகந்தம் எனப்படுகிற கந்தசமாலேபனமத்தைச் செய்து, பிறகு வெகுசிறப்பாகப் பூஜித்து, நடராஜப்பெருமானுக்கு சுத்த நிருத்தத்துடன் உற்சவத்தைச் செய்வதே கிருஷ்ண கந்தோற்சவம் எனப்படும்.

கார்த்திகை தீபோற்சவம் (விளக்கீடு விழா- விளக்கேற்று விழா)

கார்த்திகே கிருத்திகாமாஸே தீபகர்ம ஸமாசரேத்தேவாலயம் அலங்கிருத்வா தீபஸாதன ஸங்கிரஹம்ஸ்நபனம் தத்ர குர்வீத யஜமானேச்ச யான்விதம்பிராஸா தாக்ரஸ்ய பரிதச் சாஷ்டதிக்ஷு விசேஷததீபாநி விந்யஸேத் தேஷு தீபஸ்தம்பாம்ஸ்து விந்யஸேத்.

மேற்கண்ட சுப்ரபேதாகம வசனத்தின்படி, கார்த்திகை மாதத்தில், வளர்பிறையில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் தீபோற்சவத்தை விசேஷ பூஜையுடன் செய்ய வேண்டும். ஆலயத்தின் அனைத்து முக்கியப்பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்ட பின்பு பூஜித்த தீபத்தை ஸ்தாபித்து, கோவில் முழுவதையும் எண்ணற்ற தீபங்களால் அலங்கரித்து திருவிளக்கு ஏந்தியவர்களுடன் தேவனுக்கு ஊர்வலமாக உற்சவத்தைச் செய்தல் வேண்டும். இவ்விழாவை ஆயிரம் அல்லது லட்சம் என்ற எண்ணிக்கையில் விளக்கேற்றியும் செய்யலாம்.

கோவிலுக்கு எதிரில் பனைமரத்தால் தீபஸ்தம்பம் நட்டு, அதனுச்சியில் தீபம்வைத்து, ஜோதி ரூபமாய் வழிபடுதலால் சுவர்க்கப் பிராப்தி ஏற்படும். ஆதலால் இதனை சுவர்க்கப்பனை என்றும், சொக்கப்பனை என்றும் கூறுவர்.

இதற்குப் பௌர்ணமி திதி முக்கியமில்லை. கிருத்திகை நட்சத்திரமே இதற்கு ஜீவன் என்றாகி முக்கியமானதாகும். தீபம் வைக்கவேண்டிய முகூர்த்த காலத்தை உத்தரகாரணாகமம் கூறுகிறது.

ரவே ரஸ்தமனாத் பூர்வம் திரிமூர்த்தம் விசேஷதகடிகா சதுர் விம்சத் யுபரி திரிமுகூர்த்தகே.

சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு மூன்று முகூர்த்த காலம் (நான்கரை நாழிகை), சூரிய உதயத்திற்குப் பின்பு 24 நாழிகைக்குமேல் கிருத்திகை நட்சத்திரம் உள்ளபோது கிருத்திகா தீபஸ்தாபனத்தைச் செய்தல் வேண்டும் என்கிறது. பூரணையுடன் சேர்ந்தது உத்தம அமைப்பாகும். அவ்வாறு பூரணை திதியுடன் சேராவிடினும் நட்சத்திரமாகிய கிருத்திகையே முக்கியம் வாய்ந்தது.

சிரத்தோற்சவம் (இணக்கத்திருவிழா- பக்தி விழா)

பக்தியின் சிரத்தையால் இறைவனுக்கு விரும்பிச் செய்யப்படுகிற விழாவே சிரத்தோற்சவம் எனப்படுகிறது. ஒரு எஜமானர் விரும்புகிற காலத்தில் இது செய்யத்தக்கதாகும்.

இதனையே இவ்வுற்சவமானது செய்முறையால் சாவசியம், சௌபாக்கியம், சௌக்கியம், மங்களம் என்று நான்கு வகையாகப் பெயர் பெறும். அவை முறையே, விரும்புகிறபொழுதில் அவசியமென்று கருதி, சிரத்தையுள்ள பக்தரின் தேவைக்காக, அவர் விரும்பும் காலத்தில் ஒரு நாளில் மட்டும் செய்யப்படுவது சாவசிய உற்சவம் ஆகும். கொடியேற்றம், ஹோமம், திக்பலி ஆகியவற்றை நீக்கி, மூன்று நாள், ஐந்து நாள், ஏழு நாட்கள் என்று உற்சவத்தின் 16 அங்கக் கிரியைகளுடன் மூர்த்தி பேர யானத்தைச் செய்வது சௌபாக்கிய உற்சவம் எனப்படுவது. கொடியேற்றமின்றி பலி, ஹோமம் ஆகியவற்றைச் செய்து ஐந்து நாள், ஏழு நாள், ஒன்பது நாள் வரையிலாக 20 அங்கக் கிரியைகளுடன் (பேரயானத்தை) உற்சவத்தைச் செய்வது சௌக்கிய உற்சவம் எனப்படுவதாகும். கொடியேற்றம் செய்து, ஹோமம், பலி, பேரயானம் ஆகியவற்றுடன் கூடியதாக ஏழு நாள் அல்லது ஒன்பது நாள்வரையாக சகலவிதமான 24 அங்கக் கிரியைகளுடன் செய்வது மங்கள உற்சவமாகும்.

தேவ்யா பிரணயோற்சவம் (திருவூடல் திருவிழா)

இது வசந்த காலத்தில், சிவசக்திகளுக்கு ஜகத் சிருஷ்டிக்காக செய்யப்படுகிற சிறப்பு விழா. இதில் உலகப் பெற்றோராகிய சிவசக்திகளிடையே ஊடல் காட்சி இடம்பெறும்.

இவ்விழா வழக்கத்தில், சிவனிடத்தில் கங்காதேவியைக் கண்டு கோபித்து, சிவனைவிட்டு விலகிய பார்வதி தேவியை மகிழ்விக்க விரும்பிய சிவனார், தமது ஊடல், பாடல், திருவிளையாடல்களால் தேவியோடு மீண்டும் ஒன்றுகூடி அருள்தருவார். சயனாலயத்தின் கதவு திறத்தல் (பள்ளியறை திறப்பு)அல்லது ஊஞ்சல் உற்சவம் இவற்றுடனும், காதலர்களுக்கிடையே ஏற்படும் திருவூடல் காட்சிகளுடனும் உலகின் ஆதிதம்பதிகளை மகிழ்விப்பதாக இந்தத் திருவூடல் திருவிழாவைச் செய்திடுவது மரபு.

மௌனோற்சவம் (அமைதி விழா- சொல்லற இருப்பு விழா- யோக விழா)

ஆச்சார்யார் இறைவனை வணங்கி விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின்பு, கைகூப்பியவராய், மௌனவிரதம் உடையவராக, சகல அலங்காரத்துடன் கூடியவராக, எவ்வித வாத்திய ஒலியும் இல்லாதவராக, மங்களப்பொருட்களுடன் பல்லக்கு, கேடயம் இவற்றில் ஒன்றில் அமர்ந்து, உற்சவபேரங்களுடன் ஆலயத்தைச் சுற்றிலும் வலம்வந்து, கொடி மரத்தடிக்கு வந்து, அந்த மூர்த்திகளின் நிலையான இருப்பிடத்திற்கு அடைவித்து நீராஞ்ஜனம் செய்வதே மௌனோற்சவம் எனப்படுவது. இதுவே சொல்லற நின்று இறைவனோடு ஆன்மலயம் ஏற்பட உதவும் தவயோகத் திருவிழா முடிவு நிலையாகும்.

(தொடரும்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :