Add1
logo
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் || தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள் || நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி || ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட் || மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்! || பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி! || எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி || கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி || கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்! || கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்! || மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி || மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!! || சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்! ||
Logo
பொது அறிவு உலகம்
தீவிரமாகும் டெங்கு காய்ச்சல்!
 ................................................................
அமைதி
 ................................................................
பொருளாதார அறிவியல்
 ................................................................
மருத்துவம்
 ................................................................
இலக்கியம்
 ................................................................
வேதியியல்
 ................................................................
இயற்பியல்
 ................................................................
நோபல் பரிசு
 ................................................................
01-11-17மிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், காய்ச்சல் காரணமாக ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சல் தமிழகத்துக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

டெங்கு என்பது வைரஸ் மூலமாக வரக்கூடிய காய்ச்சல்களில் ஒன்று. இந்த வைரஸை பரப்புவது ஏடிஸ் எனப்படும் கொசுக்கள். இந்த வகை கொசுக்கள் 16 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை யிலான வெப்பநிலையில் வளரக்கூடியவை. அதே போல, 60 முதல் 80 டிகிரி ஈரப்பதத்தில் வாழும். தென்னிந்தியாவில் நிலவும் காலநிலை ஏடிஸ் கொசு வளர்வதற்கு சாதகமாக உள்ளது.

இந்த கொசுக்கள் நன்னீரில் மட்டுமே முட்டையிடும். பெரும்பாலும் பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். இந்த வகை பெண் கொசுக்கள் முட்டையிடுவதற்கு புரதம் தேவை. அந்த புரதம் மனித ரத்தத்தில் இருந்து கிடைப்பதால் அது மனிதர்களைத் தேடிச் சென்று கடிக்கிறது.

டெங்கு பாதித்தவர்களைக் கடிக்கும் கொசு, மற்றவர்களையும் கடிக்க நேரிட்டால் ஒருவரிடம் இருந்து பலருக்கு டெங்கு காய்ச்சல் பரவும். பொதுவாக டெங்கு காய்ச்சல் என்பது ஒரே வகையான வைரஸால் வருவது என்கிற எண்ணம் பலருக்கு உள்ளது. ஆனால் உண்மையில் டெங்கு காய்ச்சல் 4 விதமான வைரஸ்கள் மூலம் பரவுகின்றன.

டெங்கு காய்ச்சலின் நான்கு கட்டங்கள்

* கடுமையான காய்ச்சல், கண்ணின் உள்புறத்தில் வலிலி, கடுமையான உடல் வலிலி, தலைவலி போன்றவை டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

ய் முதல் கட்ட பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சாதாரண காய்ச்சல், தலைவலிலி, உடல் வலி, கை-கால்களில் வலிலி இருக்கும். இரண்டாம் கட்டத்தில், வாந்தி, அதிகப்படியான காய்ச்சல்,தலைவலிலி, வயிற்றுவலிலி, சிறுநீர் குறைவாக வெளியேறுவது போன்றவை நிகழும். சிலருக்கு தோலில் தடிப்புகளும் தோன்றலாம்.

ய் மூன்றாவது கட்டத்தில், வாந்தி, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுவது, முகம் வீங்குவது, அதிகப்படியான சோர்வு இருக்கும். 4-வது கட்டத்தில் ரத்தத் தட்டணுக்கள் வெகுவாக குறைவதால்
உடலிலின் பல்வேறு பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்படும். குறிப்பாக தோலுக்கு அடியில் கல்லீரல், மூளை, உணவுப் பாதையில் ரத்தக் கசிவு இருக்கும். மேலும், ரத்த நாளங்களில் இருந்து பிளாஸ்மாக்கள் வெளியேறி நுரையீரல், வயிறு ஆகியவற்றில் நிரம்பும். இதன் காரணமாக ரத்த அழுத்தம் வெகுவாக குறையும். இதை டெங்கு ஹெமராஜிக்சின்ட்ரோம் என்று அழைப்பாகள். அதன் தொடர்ச்சியாக நாடித் துடிப்பு குறைந்து நோயாளி மயக்கநிலையை அடைவார். மூச்சு விட முடியாமல் கோமாநிலைக்குச் செல்லக் கூடிய அதிப்படியான டெங்கு காய்ச்சல், டெங்கு ஷாக்சின்ட்ரோம் எனப்படும்.

எல்லா காய்ச்சல்களும் டெங்கு அல்லதமிழகத்தில் தற்போது 60 முதல் 65 சதவீதம் பேருக்கு மழைக்காலங்களில் வழக்கமாக வரக்கூடிய சாதாரண காய்ச்சல் போன்று வேறுவிதமான காய்ச்சல்கள்தான் வருகின்றன. 30 முதல் 35 சதவீதம் பேருக்கு மட்டுமே டெங்கு அல்லது கண்டறிய முடியாத காய்ச்சல்களாக இருக்கும். டெங்கு பாதித்தவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட 3, 4-வது கட்டங்களில் மருத்துவமனைகளுக்கு வருபவர்கள்தான் அபாயகரமான டெங்கு நோயாளிகள் என்று கருதப்படுகின்றனர். தற்போது வரை 100 பேருக்கு டெங்கு வந்தால் அவர்களில் 80 சதவீதம் பேரை சாதாரண காய்ச்சல் நிலையிலேயே குணப்படுத்திவிட முடிகிறது. 20 சதவீதம் பேர் மட்டுமே அபாயகரமான நிலையில் வருவதால் அவர்களை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் காப்பாற்றப்பட்டு விடுகின்றனர்.

முறையான சிகிச்சை

பொதுவாக ஒருவர் டெங்குவால் பாதிக்கப்படுகிறார் என்றால் அவரின் நிலைக்குத் தகுந்தாவாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலில் எதிர் உயிரி மருந்து எனப்படும் ஆன்ட்டிபாயாடிக் மருந்துகள் வழங்கப்படும். நீர்ச்சத்து குறைந்தவர்களுக்கு குழாய்கள் மூலம் குளுக்கோஸ் உள்ளிட்ட நீர்ச்சத்துகளை வழங்குவார்கள். டெங்குவைக் குணப்படுத்த ஆன்ட்டிபயாட்டிக் வேலை செய்யாது. டெங்கு வந்துவிட்டால் இயற்கையாக இருக்கும் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடும். அதன் மூலம் வேறுவிதமான நோய்கள் வரக்கூடும்.

குறிப்பாக வயிற்றுப் போக்கு, நுரையீரலில் சளி போன்ற தொற்றுகள் ஏற்படலாம். அதை குணப்படுத்துவதற்காகவும், வேறு தொற்றுகள் ஏற்படாமல் இருக்கவுமே ஆன்ட்டிபயாட்டிக் வழங்கப்படும். முதல் இரண்டு கட்டங்களில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அவர்களின் நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றைப் பார்த்து ஆன்ட்டிபயாட்டிக் வழங்கினால் 4 நாள்களில் டெங்கு குணமாகிவிடும்.

ரத்தத்தில் தட்டணுக்கள் எனப்படும் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்களுக்கு ரத்தம் தேவைப்படும். நல்ல திடகாத்திரமான மனிதர்களுக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை ஒரு மைக்ரோலிட்டரில்1.50 முதல் 4.50 லட்சம் வரை இருக்க வேண்டும். இந்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் குறைந்தால் அவர்களுக்கு தானம் பெற்ற ரத்தத்தில் இருந்து தட்டணுக்களைப் பிரித்து செலுத்த வேண்டும்.

தட்டணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் நபர்களை உடனடியாகத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, அவரது முக்கிய உறுப்புகள் பாதிக்காதவாறு சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். 10 பேர் தீவிர டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களில் 2 பேருக்கு மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவம் தேவைப்படும். அவர்களில் ஒருவர் மட்டுமே இறக்கக்கூடும்.

டெங்கு காய்ச்சல் இரண்டாம் உலகப்போர் காலத்தில் இருந்தே பரவி வருகிறது. தற்சமயம் 103 நாடுகளில் டெங்கு பாதிப்பு உள்ளது. இவற்றில் பல வளர்ந்த நாடுகளும் அடங்கும். உலக அளவில் சுமார் 55 கோடி மக்கள் ஆண்டுதோறும் டெங்கு பாதிப்புக்குள்ளாகின்றனர். குறிப்பாக இந்தோனேஷியா, மெக்சிகோ, பிரேசில், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

உலக நாடுகளில் எங்குமே, இந்த மருந்தைக் கொடுத்தால் டெங்கு சரியாகிவிடும் என்று கூறும் அளவுக்கு மருந்துகள் இல்லை.

சில நாடுகளில் டெங்குவுக்கு தடுப்பூசி மருந்து போடுகின்றனர். ஆனால் அந்த ஊசிகள் முழுமையான பாதுகாப்பை வழங்கும் என்று நிரூபிக்கப்படவில்லை. டெங்கு தடுப்பூசி மருந்து இந்தியாவிலும் இல்லை. டெங்குவுக்கு தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிப்பதற்கான ஆய்வு பல ஆயிரம் கோடி ரூபாயில் உலகெங்கும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அந்த ஆராய்ச்சியில் முன்னேற்றம் எதுவும் இல்லை.

டெங்குவைக் குணப்படுத்தத் தேவையான மருந்துப் பொருள் நிலவேம்புக் குடிநீரில் உள்ளதா என்று அலோபதி மருத்துவர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆனால் அதில் சாதகமான முடிவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

அதேநேரம் சித்த மருத்துவம், இந்திய முறை மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் ஆராய்ச்சிகள் செய்து, டெங்குவுக்கு நிலவேம்புக் குடிநீர் சரியான மருந்துதான் என்று கூறியுள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டுதான் அரசு தற்போது நிலவேம்புக் குடிநீரை வழங்கி வருகிறது.

நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சம் வேர், சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்படாகம் ஆகிய 9 மூலிகைகளை சரியான விகிதாசாரத்தில் தண்ணீரில் கலந்து, கொதிக்க வைத்து கசாயமாக காய்ச்சி வழங்கப்பட்டு வருகிறது.

*  ஒரு வயது குழந்தைக்கு 5 மி.லி,

*  2 முதல் 6 வயது குழந்தைக்கு 10 மி.லி,

*  7 முதல் 12 வயது குழந்தைக்கு 20 மி.லி,

*  13 முதல் 20 வயதுக்குட்பட்டோருக்கு 30 மி.லி,ய்  21 வயதுக்கு மேற்பட்டோருக்கு 60 மி.லி, முதல் 100 மி.,லி வரை அளவு வைத்து காலை, மாலை நேரங்களில் நிலவேம்புக் குடிநீரை பருகலாம். அனைத்து வகையான காய்ச்சலுக்கும் ஏற்றது.

குழந்தைகள் கவனிப்பு

விட்டு விட்டு காய்ச்சல் வருவது, திடீரென்று காய்ச்சல் வருவது, வாந்தி, வயிற்றுப்போக்கு,உடல்வலிலி, சோர்வு, சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது வித்தியாசம் ஆகிய அறிகுறிகள் குழந்தைகளிடம் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் அழைத்துச் செல்வதுதான் சிறந்தது. தேவையற்ற பயமோ, அதே நேரத்தில் அலட்சியமாகவும் பெற்றோர் இருக்கக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி வீடுகளிலேயே முதல் கட்டமாக குழந்தைகளைக் கவனித்தாலே போதுமானது.

நீர்ச்சத்து ஆகாரம் - காய்ச்சல் நேரத்தில் குழந்தைகள் தண்ணீர் அதிகம் குடிக்கமாட்டார்கள். இதன் காரணமாகவே நீர்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது. எனவே, நீர்ச்சத்து நிறைந்த ஆதாரங்களை பெற்றோர் கொடுக்க வேண்டும். அரிசிக் கஞ்சி, இளநீர், பழச்சாறு, பால் ஆகியவற்றைக் கொடுக்கலாம். கடைகளில் விற்கும் பழச்சாறுகளையோ, பாட்டில் களில் வரும் பழச்சாறுகளையோ கொடுக்கக்கூடாது. ஏனென்றால் அதில் இனிப்பு அதிகமாகக் காணப்படும். இது குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுத்தி வாந்தி, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். அதிக சூடான, காரமான, பொறித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல் குணமடைந்தாலும் கவனம்தேவை - குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாகினாலும் அடுத்த 2,3 நாள்களுக்கு மிகவும் கவனம்தேவை. சிலருக்கு காய்ச்சல் குணமான மூன்று நாள்களுக்குப் பிறகு மீண்டும் பிரச்சினைகள்ஏற்படும். எனவே, காய்ச்சல் குணமடைந்தாலும்மருத்துவரின் கண்காணிப்பு அவசியம்.

கொசு ஒழிப்பு

டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்களில் இரண்டு வகைகள் உள்ளன. அவை ஏடிஸ் எஜிப்டை மற்றும் அல்போபிக்டஸ். இதில் எஜிப்டை வகைக் கொசுக்கள் வீடுகளில், கட்டடங்களுக்கு உள்ளே வசிக்கக் கூடியவை. அல்போபிக்டஸ் எனும் வகைதான் வெளிப்புறங்களில் வசிக்கக் கூடியவை.

தற்போது தமிழகத்தில் டெங்கு பாதிப்பை ஏற்படுத்தி வருபவை ஏடிஸ் எஜிப்டை வகை கொசுக்கள்தான். எனவே, அவற்றுக்கு கொசு மருந்துகளையும், புகை மருந்துகளையும் எல்லா நேரத்திலும் அடிக்கக்கூடாது.

வீடுகளில் உள்ளே தங்கியிருக்கும் ஏடிஸ் கொசுக்களை அழிப்பதற்கு தெருவில் மருந்தடித்து விட்டுப் போவதால் பயன் எதுவும் இல்லை. மேலும் ஏடிஸ் கொசுக்களை அழிப்பதற்கு சூரிய உதயத்துக்கு மூன்று மணி நேரத்துக்கு பிறகும், சூரிய அஸ்தமனத்துக்கு மூன்று மணிநேரத்துக்கு முன்பும் மருந்து அடித்தால்தான் அது விளைவுகளை ஏற்படுத்தும். பகல் நேரங்களில் அடித்தால் அதனால் பயன் ஒன்றும் ஏற்படாது என்றார்.

இயற்கை கொசுவிரட்டி - கொசுக்களைத் தவிர்க்க நொச்சி இலை சிறந்தது என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் லெமன்கிராஸ் என்று அழைக்கப்படும் இலையை சிறிய சிறிய கட்டுகளாகக் கட்டி வீட்டில் ஆங்காங்கே தொங்க விடலாம். மேலும் வேப்பம் இலை, தழைகளைக் கொண்டு புகை போடலாம்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :