Add1
logo
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் || தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள் || நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி || ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட் || மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்! || பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி! || எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி || கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி || கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்! || கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்! || மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி || மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!! || சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்! ||
Logo
ஓம்
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
2018 புத்தாண்டுப் பலன்கள்-மேஷம்
 ................................................................
நவம்பர் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பக்தனுடன் சென்ற துவாரகை கண்ணன்!
 ................................................................
கட்டிக்குளம் மகாசித்தர் மாயாண்டி சுவாமிகள்!
 ................................................................
வியாசர் பிறப்பின் விந்தை!
 ................................................................
சனி ஜெயந்தி!சனி அமாவாசை
 ................................................................
நவம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
மறுவாழ்வு பெற்ற மாற்றுத் திறனாளி!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
வீடு தேடிவந்து வசூலிக்கும் அதிசய தெய்வங்கள்!
 ................................................................
தெய்வத்தை மகிழச்செய்யும் உற்சவங்கள்
 ................................................................
பயம் போக்கும் பைரவர்!
 ................................................................
01-11-17சனி அமாவாசை 18-11-2017

தை, ஆடி, புரட்டாசி  மாதங்களில் வரும் அமாவாசை போற்றப்படுவதுபோல், சனிக்கிழமையில் வரும் அமாவாசையும் சிறப்பிக்கப்படுகிறது.

பொதுவாக, கோவிலுக்குச் செல்பவர்கள் சனிக்கிழமையன்று நவகிரக சந்நிதியை வலம் வரும்போது, "அனைத்து தோஷங்களும் நீங்கி சுகமுடன் வாழவேண்டும்' என்று சனி பகவானிடம் வேண்டிக்கொள்வது வழக்கம். இந்த சனி பகவான் சூரிய பகவானின் இரண்டாவது மனைவியான சாயாதேவிக்கு ஒரு சனிக்கிழமை அமாவாசை திதியில் பிறந்தார் என்கிறது புராணம். எனவே அவர் பிறந்த தினமான சனிக்கிழமை போற்றப்படுவதுபோல், சனிக்கிழமையில் வரும் அமாவாசையும் விசேஷமாகத் திகழ்கிறது. மேலும் அமாவாசையானது வழிபாடுகள் மேற்கொள்வதற்கும் பரிகாரங்கள் செய்வதற்கும் உகந்த நாள்.

அந்த வகையில் இதனை "சனி ஜெயந்தி' என்று ஆகமம் அறிந்தவர்கள் கூறுவர். அன்று, சிவாலயத்திற்குச் சென்று நவகிரகத் தொகுப்பிலுள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்தால் சனி பகவான் மகிழ்வார். அவரால் எந்தவித இன்னல்களும் ஏற்படாது என்று சாஸ்திரம் கூறுகிறது.

சனிக்கிழமை அமாவாசை மிகமிக அபூர்வமாக வருடத்திற்கு ஓரிருமுறை மட்டுமே வரும். அன்றைய தினம் சனி பகவானை வேதமறிந்த விற்பன்னர் மூலமாக முறைப்படி வழிபட்டால் வாழ்க்கையில் இதுவரை இருந்துவரும் தடைகள், இன்னல்கள் விலகும்.

அன்றைய தினம் புனித நீர்நிலையில் பித்ருக்களுக்கான தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, மங்களகரமான வாழ்வு அமையும் என்பது ஆன்றோர் வாக்கு.

கிரகப்பெயர்ச்சியின் விளைவால் சனி தோஷம், காலசர்ப்ப தோஷம், ஏழரைச்சனி தோஷங்கள் இருந்தால், அவர்கள் சனி அமாவாசையன்று சனி பகவானுக்கு நல்லெண்ணெயால் அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். சனி பகவானுக்குரிய மந்திரங்கள் மற்றும் 108 போற்றிகளைப் பாடினால் சனி பகவான் மகிழ்ந்து வளமான வாழ்வினை அளிப்பார்.

சனி ஜெயந்தியன்று எந்த அளவுக்கு உளப்பூர்வமாக வழிபடுகிறோமோ, அந்த அளவுக்கு நம்மைக் காத்தருள்வார். திடீர் விபத்துகளிலிருந்து காக்கும் சனி பகவான், செல்வச் செழிப்பையும் தந்து மகிழ்விப்பார் என்கின்றன ஞானநூல்கள்.

பொதுவாக, எந்த கிரகப்பெயர்ச்சிக்கும் பயப்படாதவர்கள்கூட சனிப்பெயர்ச்சிக்கு பயப்படுவது வழக்கமாக உள்ளது. அலைபாயும் மனதை ஒரு நிலையில் நிறுத்தாமல், மேன்மேலும் அலையவைத்து அல்லல்படுத்தும் சனி பகவான், அவரது ஜெயந்தி நாளில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டால் நம் சஞ்சலத்தைப் போக்குவார். தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்தவர்கள், சனி பகவான் முன்னிலையில் சற்று பக்கவாட்டில் நின்றுகொண்டு (நேரிடையாக சனி பகவானைப் பார்த்தல் கூடாது என்பது விதியாகும்) "இனி முறைகேடான வழிகளைப் பின்பற்றமாட்டேன்' என்று அவர்முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டால் நம்மீது கருணைகொண்டு அருளாசி வழங்குவார் என்கின்றன தர்மசாஸ்திர நூல்கள்.

பொதுவாக, தை, ஆடி, புரட்டாசி அமாவாசை நாட்களில் புனித நீர் நிலையில் வேத விற்பன்னர் மேற்பார்வையில் பிதுர் பூஜை செய்வது வழக்கம். ஒருசிலர், ஒவ்வொரு அமாவாசையன்றும் முன்னோர்களுக்கான வழி பாட்டினை மேற்கொள்வர். இருந்தாலும் சனிக்கிழமையில் வரும் அமாவாசை திதி "சனி ஜெயந்தி' என்று சாஸ்திரம் சொல்வதால், சனி பகவானுக்குப் பிடித்தமான கறுப்பு எள்ளினை கறுப்புத்துணியில் சிறிய முடிச்சாகக் கட்டி, அதனை ஓர் அகல்விளக்கில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் சனி பகவான் மகிழ்வதுடன், தோஷங்களை நீக்கி நலமுடன் வாழ அருள்புரிவார்.

இந்த வருடம் கார்த்திகை மாதம் (18-11-2017)

சனிக்கிழமையில் வரும் சர்வ அமாவாசையன்று சிவாலயத்தில் நவகிரகத் தொகுப்பிலிருக்கும் சனி பகவானுக்கு "சம் சனைச்சராய நம' என்ற மூலமந்திரத்தை ஜெபித்து, அபிஷேக ஆராதனை களை முறைப்படி செய்து, உடல் ஊனமுற்றவர்களுக்கு ஆடை தானம் அளிப்பதுடன் அன்னதானமும் வழங்கினால் சனி பகவான் மகிழ்ந்து நம்மை மகிழ்வுடன் வாழவைப்பார் என்பது ஐதீகம்.                 

 ரவி நந்தன்

சனி பகவான் சூரியனின் மகன் என்று புராணம் கூறுகிறது. "ரவி நந்தநாயகா' என்று அவரை மக்கள் பயபக்தியுடன் வழிபடுகிறார்கள். சனிக்கு மற்ற கோள்களின்மீது தனி ஆதிக்கம் உண்டு என்று நமது ஜோதிட நூல்கள் சொல்கின்றன. சனி பகவான், ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கியிருந்து அடுத்த ராசிக்குச் செல்கிறார். இதற்கு தனி மகத்துவம் உண்டு.

நம்முடைய சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்த மிகப் பிரமாண்டமானது சனிக்கோள். நவகிரகங்களில் எல்லாம் ஈடில்லா அழகு வாய்ந்தது என்று இந்தக் கோளினை விஞ்ஞானிகள் புகழ்கிறார்கள். சக்தி வாய்ந்த தொலைநோக்கி வழியே காண்பவரின் கண்களையும் கருத்தையும் கவரும் வண்ணம் இந்த சனிக்கோள் காட்சி தருகிறது என்று அறிவியல் கூறுகிறது.

நமது புராணங்களிலோ "சனி பகவான் இதற்கு மாறான தோற்றமுடையவர். குள்ளமான உருவம் கொண்டவர்; கரிய நிறத்தவர்; ஒரு கால் முடமானவர்; தன் நிறத்திற்கு ஏற்ப காக்கையை வாகனமாகக் கொண்டவர்; ஒரு கண் பார்வையற்றவர்' என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் சனிகிரகத்தை (பகவானை) எப்படி வர்ணித்தாலும் இறை நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் நடந்தால் நாம் வழிபடும் சனீஸ்வர பகவான் நமக்கு சந்தோஷத்தை வழங்குவார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :