Add1
logo
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் || தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள் || நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி || ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட் || மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்! || பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி! || எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி || கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி || கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்! || கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்! || மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி || மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!! || சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்! ||
Logo
ஓம்
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
2018 புத்தாண்டுப் பலன்கள்-மேஷம்
 ................................................................
நவம்பர் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பக்தனுடன் சென்ற துவாரகை கண்ணன்!
 ................................................................
கட்டிக்குளம் மகாசித்தர் மாயாண்டி சுவாமிகள்!
 ................................................................
வியாசர் பிறப்பின் விந்தை!
 ................................................................
சனி ஜெயந்தி!சனி அமாவாசை
 ................................................................
நவம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
மறுவாழ்வு பெற்ற மாற்றுத் திறனாளி!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
வீடு தேடிவந்து வசூலிக்கும் அதிசய தெய்வங்கள்!
 ................................................................
தெய்வத்தை மகிழச்செய்யும் உற்சவங்கள்
 ................................................................
பயம் போக்கும் பைரவர்!
 ................................................................
01-11-17மேஷம்

இந்த மாதம் உங்கள் முயற்சிகளில் இதுவரை நிலவிய தளர்ச்சிகளும் தடைகளும் விலகி வளர்ச்சியும் முன்னேற்றமும் அடையும். வி.ஐ.பிக்களின் அறிமுகமும் நட்பும் ஆதரவும் உங்களுடைய வெற்றிக்கு உறுதுணையாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அவர்களின் அன்பும் அணுசரணையும் எதிர்பார்க்கலாம். உறவினர்களின் விருந்து விசேஷ நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்திப் பெருமை தேடிக் கொள்வீர்கள். பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவுகள் எல்லாம் திட்டமிட்டபடி செயல்படும். நாணயத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம். சிலருக்கு தேக ஆரோக்கியத்தில் சௌகர்யக்குறைவும் சிறுசிறு எதிர்பாராத வைத்தியச்செலவுகளும் வர இடமுண்டு.

பரிகாரம்: தன்வந்திரி சந்நிதியில் அர்ச்சனை, அபிசேஷக பூஜை செய்யலாம். அல்லது தன்வந்திரி மகாமந்திரத்தை தினசரி பாராயணம் செய்யலாம்.

ரிஷபம்

குரு பகவான் லாப ஜெயஸ்தானாதிபதி 6-ல் மறைவதோடு, லாபஸ்தானத்துக்கும் எட்டில் மறைவதால் உங்கள் காரியங்களிலும் முயற்சிகளிலும் தடைகளும் குறுக்கீடுகளும் காணப்படலாம். 7-ல் ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி அமர்ந்து ராசியைப் பார்ப்பதால், காரியங்கள் தாமதப்பட்டாலும் முடிவில் எண்ணியவை எண்ணியபடி ஈடேறும். வாழ்க்கைத்துணையின் ஆதரவோடு முன்னேற்றப்பாதையில் பயணம் போகலாம். தொழில்துறையில் நம்பிக்கை மோசடிக்கும் ஏமாற்றத்துக்கும் ஆளானவர்கள் நிர்வாகத்தில் கொஞ்சம் ஓரமாக ஒதுங்கிக்கொண்டு, வாழ்க்கைத்துணைவியின் மேற்பார்வையில் பொறுப்புகளை ஒப்படைத்தால் போட்டி, பொறாமை, எதிரி, கடன் சூழ்நிலைகளை சமாளித்து நிற்கலாம். நெருங்கிய உறவினர்களும் உடன்பிறப்புகளும் தலைமறைவாகும்படி யோசனை சொன்னால் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவேண்டாம்.

பரிகாரம்: ரிண விமோசன அங்காரக ஹோமமும், சொர்ணாகர்ஷண பைரவ ஹோமமும் செய்தால் பிரச்சினைகளை சமாளிக்கலாம்.

மிதுனம்

ராசிக்கு 5-ல் உள்ள குரு பார்வை கிடைப்பது யோகம். குரு பார்க்கக் கோடி நன்மை. அதேபோல் 8-க்குடைய சனி 6-ல் மறைவதும் நன்மை. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்! போட்டி, பொறாமை, கடன், வைத்தியச்செலவு, நோய் நொடி, வில்லங்கம், விவகாரம் எல்லாம் மறைந்துவிடும். மனக் கவலையும் எதிர்காலம் பற்றிய பய உணர்வும் மாறிவிடும். ஒளிமயமான எதிர்காலம் கண்ணுக்குத் தெரியும். விரோதிகளாக விலகியிருந்தவர்களும் நெருங்கிவந்து நேசக் கரம் நீட்டி நட்பு கொண்டாடலாம். கடந்தகாலப் பகையை மறந்து, நடந்தவை கடந்தவையாக இருக்கட்டும்- நடக்கப் போவது நல்லதாக இருக்கட்டும் என்று கூட்டணி சேரலாம். அதேபோல பிரிந்திருந்த கணவனும் மனைவியும் இணைந்து வாழலாம். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை- நீரடித்து நீர் விலகாது என்ற பொருந்தன்மையோடு தாம்பத்திய ஒற்றுமையில் தனி மகிழ்ச்சியும் மனநிறைவும் பெறலாம்.

பரிகாரம்: திருச்செங்கோடு அல்லது வாசுதேவநல்லூரில் அர்த்த நாரீஸ்வரராக அருள்பாலிக்கும் அம்மையப்பரை வழிபட எல்லாம் இன்பமயமாகும்.

கடகம்

ஜென்ம ராகுவும் சப்தம கேதுவும் அலைச்சலையும் ஓய்வில்லாத உழைப்பையும் தந்தாலும், 10-ஆம் இடத்தை 9-க்குடைய குரு பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்டு குருவருளும் திருவருளும் உங்களை வழி நடத்தும். அதனால் எங்கும் வெற்றி- எதிலும் வெற்றி என்று வெற்றிமாலை அணியலாம். உத்தியோகத்தில் போராடிப் போராடித்தான் முன்னேறவேண்டும். அதுதான் உழைப் பின் உயர்வாகும். கஷ்டப்படாமல் அதிர்ஷ்ட வசமாகத் தேடிவரும் செல்வத்தின் மதிப்பு தெரியாது. கஷ்டப்பட்டுத் தேடிய செல்வத்தின் அருமையும் பெருமையும் நெஞ்சில் நிலைபெற்றதாக அமையும். இறைவன் எப்போதும் உண்மையானவர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும் விசுவாசமுள்ளவர்களுக்கும் உறுதுணையாக இருந்து அருள்பாலிப்பான். துரோகிகளுக்கும் சோம்பேறிகளுக்கும் துணை நிற்பதில்லை. அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலிதரும்' என்றார்.

பரிகாரம்: உங்கள் மனதைக் கவர்ந்த சித்தர்களின் ஜீவசமாதி திருத்தலம் ஒன்றை விடாப்பிடியாகப் பிடித்து வழிபடவும்.

சிம்மம்

மாத முற்பகுதிவரை ராசிநாதன் சூரியன் நீச ராசியிலும், பிறகு நட்பு ராசியிலும் சஞ்சாரம். முற்பகுதிவரை உங்கள் முயற்சிகளில் தளர்ச்சியும் ஏமாற்றங்களும் வரவுக்குமேல் செலவாகவும் காணப்படலாம். மாதப் பிற்பகுதியில் (நவம்பர் 17 முதல்) எல்லாவகையிலும் இனிய பலன்களாகவும் ஏற்றமானதாகவும் அமையும். தேடிப்போன தெய்வம் எதிரில் வந்ததுபோல உங்களுக்கு எல்லாவகையிலும் அனுகூலமாக அமையும். பொருளாதாரத்தில் மாத முற்பகுதியில் நிலவிய நெருக்கடிநிலை பிற்பகுதியில் விலகிவிடும். தாராளமான பணப்புழக்கமும் வரவு- செலவுகளில் திருப்தியான சூழ்நிலையும் உருவாகும். எதிர்பார்த்த வேலைகள் எல்லாம் எதிர்பார்த்தபடி ஈடேறும். எதிர்பாராத புதியவர்களின் அறிமுகமும் ஆதரவும் உங்கள் வெற்றிக்குப் பாதையாக அமையும்; உறுதுணையாக செயல்படும். ஆரோக்கியம், ஆயுள் விருத்தி, குடும்ப ஒற்றுமை எல்லாம் திருப்திகரமாக செயல்படும்.

பரிகாரம்: வடக்குப் பார்த்த அம்மனுக்கு நெய்விளக்கேற்றி வழிபடவும்.

கன்னி

கன்னி ராசிக்கு 4, 7-க்குடைய குரு 2-ல் நின்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் திருமணத்தடை விலகும். பருவ வயதுடையவர்களுக்குத் திருமணயோகமும், படித்துமுடித்து வேலைதேடி அலைவோருக்கு வேலை யோகமும், திருமணம் முடித்து வாரிசுக்காக ஏங்குவோருக்கு புத்திரயோகமும் அல்லது புத்திரி யோகமும் அமையும். குடும்பத்தில் ஒற்றுமையும் நல்லுறவும் மலரும். சுபமங்கள நிகழ்ச்சிகள் இடம்பெறும். அதற்காக சிலர் பற்றாக்குறை செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்கலாம். அது சுபக்கடன் எனப்படும். கணவன் அல்லது மனைவிபேரில் புதிய தொழில் அல்லது வியாபாரம் ஆரம்பிக்கலாம். தனித்தொழில் அல்லது கூட்டுத்தொழில் செய்யலாம். அதற்காகவும் கடன் கிடைக்கும். கடன் வாங்குவதிலும் ஒரு பாலிஸி உண்டு. அநியாய வட்டிக்கோ தரம் கெட்டவர்களிடமோ கடன் வாங்கக்கூடாது. திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் அப்படிக் கடன் வாங்கியதால்தான் கௌரவத்துக்கு அஞ்சி தற்கொலை செய்துகொண்டார்.

பரிகாரம்: கடன் அடைபட திருச்சேறை சென்று சார பரமேஸ்வரரை வழிபடலாம். திருவாரூர் சிவாலயத்திலும் கடன் நிவர்த்தீஸ்வரர் சந்நிதி உண்டு.

துலாம்

துலா ராசிக்கு அடுத்தமாதம் (டிசம்பரில்) ஏழரைச்சனி முழுமையாக விலகிவிடும். ஏழரைச்சனி என்பது இம்முறை துலா ராசிக்காரர்களுக்கு எட்டு வருடத்துக்குமேல் நடந்து பாடாய்ப்படுத்திவிட்டது. இன்னும் ஒன்றரை மாதத்தில் ஏழரைச்சனி விலகிவிட்டால் அதன்பிறகு உங்களுக்கு ராஜயோகம் தான். ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுக்கவேண்டும் என்பதுபோல டிசம்பர்-17 வரை பொறுமையாக இருப்பது அவசியம். ஒரு சிலர் யோகத்துக்கு ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் போகும் போக்கில் சனி பகவான் பொங்கு சனியாகப் பொலிவைத் தரலாம். ஏலச்சீட்டில் முதலிலே ஏலம் எடுத்தால் வாங்கும் தொகைக்குமேல் திரும்பச் செலுத்தவேண்டும். கடைசியில் சீட்டு முடிந்து வாங்கினால் கட்டிய தொகைக்குமேல் வட்டியும் முதலுமாகக் கிடைக்கும். அது போலத்தான் சனி பகவான் தொடக்கத்தில் கஷ்டங்களைத் தந்தாலும் கடைப்பகுதியில் கருணை காட்டி கனிவுடன் யோகம் செய்வார்.

பரிகாரம்: காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் மிளகு தீபம் ஏற்றவும். அவரவரர் வயதுடன் ஒரு எண்ணிக்கை சேர்த்து, அத்தனை மிளகை ஒரு சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி நெய்யில் நனைத்து தீபமேற்றவேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு 2, 5-க்குடைய குரு பகவான் 12-ல் மறைவு. ஜென்மச் சனி இன்னும் ஒன்றரை மாதம். மகரத்தில் கேது; கடகத்தில் ராகு. வருமானத்துக்குமீறிய செலவுகளைச் சமாளிக்கவேண்டும். எதிர்பார்த்த வேலைகளில் தாமதம் தடை காணப்பட்டாலும், எதிர்பாராத சில காரியங்கள் நிறைவேறும். அதாவது எதிர்பார்த்த நபர்கள் உதவாவிட்டாலும் எதிர்பாராத நபர்கள் முன்வந்து உதவி, காரியம் கைகூடும் வாய்ப்பு உருவாகும். குடும்பத்தில் இடியும் மழையும் ஓய்ந்து அமைதி நிலவும். தூறல்  நின்று போச்சு எனலாம். ஆனாலும் ஈரம் காயவில்லை. வியாபாரத்தில் பங்குதாரர்களின் அல்லது கூட்டாளிகளின் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு உருவாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்களும் உடனிருப்பவர்களின் தொல்லைகளும் படிப்படியாக நீங்கி தெளிவான சூழ்நிலை உருவாகும். ஒருசில காரியத்தை சிறிய செலவில் நிறைவேற்றலாம். ஒருசில காரியத்தை அதிக செலவில் முடிக்கலாம். எப்படியோ, காரியம் நிறைவேறும்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடலாம்.

தனுசு

2014 முதல் ஆரம்பித்த விரயச்சனி அடுத்த மாதம் 2017 டிசம்பரில் முடிந்துவிடும். அதன்பிறகும் ஏழரைச்சனி ஐந்து வருடம் இருக்கும். இதுவரை விரயச்சனியில் சம்பாதித்தோம், செலவழித்தோம் என்று சராசரி வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கும், வரவுக்கும்மேல் செலவு செய்தவர்களுக்கும் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு பொங்கு சனியாகவும் பொலிவுதரும் சனியாகவும் திகழும். ஜென்மச்சனி ராசிக்கு 7-ஆம் இடம், 10-ஆம் இடங்களைப் பார்க்கப் போவதால், மனைவிபேரில் தொழில் ஆரம்பிக்கலாம் அல்லது சொத்து வாங்கலாம். பெண் ஜாதகமாக இருந்தால் அவர்கள்பேரிலேயே சொந்தவீடு அமையும் யோகம் உண்டாகும். அதற்குரிய திட்டங்களும் முயற்சிகளும் இந்த நவம்பரில் உருவாகும். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது மாதிரி இப்போது அதற்கு பிள்ளையார் சுழி போடலாம். திட்டங்கள் தீட்டலாம். அதற்கான முதலீடு பற்றாக்குறைகளை சமாளிக்க கடன்கள் வாங்கலாம். அதற்கான முயற்சிகளில் இறங்கலாம்.

பரிகாரம்: சொர்ணாகர்ஷண பைரவ ஹோமமும், தனா கர்ஷண ஹோமமும் செய்யலாம். மேற்கண்ட சந்நிதிகளில் மேற்படி மூலமந்திரம் சொல்லி ஜெபப் பாராயணம் செய்யலாம்.

மகரம்

மகர ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அடுத்த மாதம் (டிசம்பர்- 17-ல்) சனிப்பெயர்ச்சி. அப்போது மகர ராசிக்கு ஏழரைச்சனி ஆரம்பிக்கும். அது மங்கு சனியா- பொங்கு சனியா- மரணச்சனியா என்பது அவரவர் ஜாதக கிரக அமைப்பைப் பொருத்துத்தான் முடிவு செய்யவேண்டும். அதுமட்டுமல்ல; ஏழரைச்சனி ஆரம்பிக்கும் ஜாதகர்களுக்கு சந்திர தசையோ சந்திர புக்தியோ சந்திக்குமானால்- அது எந்தச் சனியாக இருந்தாலும் (மங்கு சனி, பொங்கு சனி, மரணச்சனி) பாதிப்புதான். கண்டம், பொருள் சேதங்களைச் சந்திக்கக்கூடும். "கேடு வரும் பின்னே- மதிகெட்டு வரும்முன்னே' என்பதுபோல, சிலரது முடிவுகளும் செயல் களும் நடவடிக்கைகளும் எதிர்மறையாக அல்லது ஏடாகூடமாகத்தான் இருக்கும். அதனால்தான் துரியோதனன்- தாய்மாமன் சகுனி பேச்சைக்கேட்டு வீழ்ந்தான்! பாண்டவர்களின் மாமன் கிருஷ்ணனின் ஆலோசனைப்படி நடந்து வாழ்ந்தார்கள்! எனவே இந்த நெருக்கடியான நேரத்தில் நீங்கள் சகுனியைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா அல்லது கிருஷ்ணனை சரணடையப் போகிறீர்களா?

பரிகாரம்: பஞ்சமுக கணபதியை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்கு 10-ல் சனி இருப்பதால், "சனி பதிமாறச் செய்யும்' என்பது பழமொழி. ஆனால் 9-ஆம் இடத்து குரு ராசியைப் பார்ப்பதால், குரு பார்க்கக் கோடி நன்மை என்பதால் அந்த மாற்றம் நல்ல மாற்றமாக அமையும் என்பது தீர்க்கம்! உங்களிடம் புதைந்து கிடக்கும் ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் உருவாகும்! அதைப் பயன்படுத்திக்கொள்வது உங்கள் வாய்ப்பாகும்! குடும்பத்தில் வாதங்களும் தர்க்கங்களும் எழுந்தாலும், உங்கள் புத்திசாலித்தனத்தால் அதைச் சமாளிக்கலாம். சமர்த்தன் சந்தைக்குப் போனால் வாங்கவும் மாட்டான்- விற்கவும் மாட்டான் என்று ஒரு பழமொழி உண்டு. அதை முறியடித்து நீங்கள் வெற்றிபெற- "கத்தியைத் தீட்டாதே- உன் புத்தியைத் தீட்டு' என்று பாடியமாதிரி, புத்திசாலித்தனமாக யோசிக்கவேண்டும். எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கலாம். போட்டி பொறாமைகள் குறுக்கிடலாம். எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டும். ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கவேண்டும்.

பரிகாரம்: சரபேஸ்வரருக்கு ராகு காலத்தில் பூஜை செய்யவேண்டும். அல்லது சரபர் மந்திரத்தை ஜபிக்கலாம்.

மீனம்

மீன ராசிக்கு குரு 8-ல் மறைந்தாலும், குரு பார்வை 12-ஆம் இடம், 2-ஆம் இடம், 4-ஆம் இடங்களுக்குக் கிடைக்கிறது. குரு நிற்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்துக்கே பலம் (பவர்) அதிகம். எனவே தடையில்லாத வருமானமும் அதற்கேற்ற சுப விரயமும் ஏற்படலாம். பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான சுபச்செலவுகளும் ஏற்படலாம். சிலர் ஊர்மாற்றம் அல்லது வீடு மாற்றம் போன்ற திட்டங்கள் வகுக்கலாம். குரு பகவான் தொடர்ந்து 8-ல் இருந்தாலும், சனி 10-ல் வரும்போது உங்கள் கனவுகளும் நனவுகளும் ஈடேறும். செய்துவரும் பழைய தொழிலைவிட புதுவிதமான தொழில்துறையிலும் சிலர் ஈடுபடலாம். அனுபவமில்லாத தொழிலாயிற்றே- வெற்றி பெறமுடியுமா என்று தயங்க வேண்டாம்; மயங்க வேண்டாம். குளத்தில் வாழும் மீன் குஞ்சு பொரித்தால் அந்தக் குஞ்சுக்கு யார் நீச்சல் கற்றுக்கொடுக்கிறார்கள்? தூக்கணாங் குருவி கூடுகட்டுகிறதே- எந்த இஞ்சினியரிங் கல்லூரியில் படித்துப் பட்டம் வாங்கி யிருக்கிறது? கர்ப்பத்தில் இருந்து வெளியில் வந்த குழந்தை பசிக்கு தாய் மார்பைத் தேடுவது எப்படி? இதெல்லாம் பூர்வ வாசனை! பூர்வ புண்ணியப் பலன்! அமைப்பு இருப்பதால்தான் எண்ணமும் முயற்சியும் அவ்வழி பாய்கிறது.

பரிகாரம்: சித்தர்களின் ஜீவசமாதியைத் தொடர்ந்து வழிபடவும். வினைப்பயனை, விதிப்பயனை சாதகமாக மாற்றும் வல்லமை சித்தர்களுக்கே உண்டு.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :