Add1
logo
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் || தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள் || நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி || ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட் || மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்! || பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி! || எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி || கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி || கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்! || கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்! || மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி || மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!! || சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்! ||
Logo
ஓம்
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
2018 புத்தாண்டுப் பலன்கள்-மேஷம்
 ................................................................
நவம்பர் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பக்தனுடன் சென்ற துவாரகை கண்ணன்!
 ................................................................
கட்டிக்குளம் மகாசித்தர் மாயாண்டி சுவாமிகள்!
 ................................................................
வியாசர் பிறப்பின் விந்தை!
 ................................................................
சனி ஜெயந்தி!சனி அமாவாசை
 ................................................................
நவம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
மறுவாழ்வு பெற்ற மாற்றுத் திறனாளி!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
வீடு தேடிவந்து வசூலிக்கும் அதிசய தெய்வங்கள்!
 ................................................................
தெய்வத்தை மகிழச்செய்யும் உற்சவங்கள்
 ................................................................
பயம் போக்கும் பைரவர்!
 ................................................................
01-11-17இந்திரா சௌந்தர்ராஜன்
28

திக்குமுக்காடலுடன் நின்ற மது கைடபர்களை ஸ்ரீவிஷ்ணு மிக கேலியான சிரிப்புடன் நோக்கத் தொடங்கினார். ""எனக்குத் தெரியும்... உங்களால் முடியாதென்று எனக்குத் தெரியும். அசுரபுத்திக்கு எப்போதும் எதையும் பெற்றே பழக்கம். அளிப்பதென்பதை ஒரு அசுரசக்தியாலும் கற்பனையாகக்கூட நினைத்துப் பார்க்க முடியாது. இதை நான் அறிந்தவனே... நான் அறிந்து என்ன பயன்..? அறிய வேண்டியது நீங்களே..! நீங்களே இப்போது உங்களைப் புரிந்துகொள்ளுங்கள்'' என்று விஷ்ணு அவர்களைக் கிள்ளிவிடுவதுபோல் பேசவும் மது, கைடபன் இருவரும் மேலும் சினந்தனர்.

""விஷ்ணு... உன் புத்திசாலித்தனத்தை எங்களிடமேகாட்டிவிட்டாயல்லவா? நீ பெரிய தந்திரக்காரன்...'' என்று மது ஒருபுறம் வெடிக்க-""இவன் தந்திரக்காரன் மட்டுமல்ல; விட்டால் நமக்குள்ளேயே பகையை உருவாக்கி நம்மை நாமே அழித்துக்கொள்ளும்படிகூட செய்துவிடுவான்'' என்று கைடபன் ஒருபுறம் துடிக்க-

""போதும் நிறுத்துங்கள்... நான் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகிறேன். உங்கள் பதிலைச் சொல்லுங்கள். நான் கேட்ட வரத்தைத் தரமுடியுமா முடியாதா?'' என்று விஷ்ணுவும் அவர்களை நறுக்கிப்பிடிக்க முனைந்தார்.

இருவரிடமும் திரும்பவும் மௌனம்!

""சரி... அப்படியே இருங்கள்! எனக்கொன்றுமில்லை. நான் ஒரு பெரிய தூங்கு மூஞ்சி. உங்களுக்கே தெரியும். போய்ப் படுத்துக்கொண்டுவிடுவேன்.

பல யுகங்களுக்கு தூங்கியபடியே இருக்க என்னால் முடியும்.

நல்லவேளையாக ஈரேழு பதினான்கு லோகங்கள், சூரிய சந்திரர், நட்சத்திரங்கள், பஞ்சபூதங்கள், சதுர்வேதங்கள், ரிஷிகள், தேவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் என்று யாருமே இல்லை. எல்லாரும் என்னுள் ஒடுங்கிவிட்டபடியால் நான் தூங்கும்போது அவர்களும் தூங்கியாக வேண்டும். இவ்வளவு பேர் தூங்கும்போது பிரம்மாவுக்கு மட்டும் என்ன வேலை? அவரும் தூங்கிவிடுவார்.

எச்சமிருப்பது நீங்கள் இருவரே! இனி நீங்களே உலகு- உலகமே நீங்கள் இருவர்தான்... நீங்கள் உங்களுக்குத் தோன்றுவதைச் செய்யுங்கள். காலார நடக்கலாம் என்றால் அதற்கும் இடமில்லை. பூமி முழுக்கவே நீரால் சூழப்பட்டுவிட்டது. எனவே நீர்மேல் நீந்தியபடியோ அல்லது எதுவுமில்லாத விண்ணில் பறந்தபடியோ எதையாவது செய்துகொள்ளுங்கள். பசி எடுத்தால் உண்ண ஆழிசூழ் இவ்வுலகில் ஒரு மீன்கூட இல்லை. எனவே பசித்தால் உண்ணவும் எதுவும் கிடையாது. பாவம்- என்ன செய்வீர்களோ தெரியாது. நான் தூங்கப்போகிறேன்...'' என்று விஷ்ணு ஒரு முடிவுக்கு வந்தவராகப் பேசவும், மது கைடபர்கள் ஆடிப்போயினர்.

அப்போதுதான் அவர்களுக்கு வாழ்ந்தும் பயனில்லை என்பதே புரியத் தொடங்கியது. நன்றாக வாழவேண்டுமானால் ஒரு ஜனசமூகம் கட்டாயம் வேண்டும். ஜனசமூகம் வேண்டுமென்றால் அதைப் படைக்க பிரம்மா வேண்டும். பிரம்மாவுக்கான படைப்புசக்தியே விஷ்ணு தானென்பதால் விஷ்ணுவும் வேண்டும்.

விஷ்ணு வேண்டுமென்றால் விஷ்ணு கேட்ட வரத்தைத் தரவேண்டும்.

தராவிட்டாலும் வாழ முடியாது- தந்தாலும் வாழமுடியாது. இப்படி ஒரு இழிநிலைக்கு, வரத்தைத் தந்து கௌரவமாக அழிவதுமேல் என்று தோன்றியது.

இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தனர்.

அதைச் சொல்லவும் தொடங்கினர்.

""ஏ விஷ்ணு! உன் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுகிறோம். நீ கேட்ட வரத்தை அளிக்கவும் சித்தமாகிவிட்டோம். எங்கள் இருவரை வெல்லும் வரத்தை உனக்குத் தருகிறோம். ஆனால் இரு நிபந்தனைகள்'' என்றனர்.

""என்ன அது?''

""நாங்கள் வரம் தந்தும் நீ எங்களை வெல்ல முடியாதுபோனால் எங்களுக்கு அடிமையாகி நாங்கள் விரும்புகிறபடியே நடக்க வேண்டும். நடப்பாயா?''

""சரி, இன்னொரு நிபந்தனை?''

""எங்களை நீ நிலத்தில்தான் வெல்லமுடியும். வேறெங்கும் எங்களை அழிக்கவோ வெல்லவோ உன்னால் முடியாது. முடியவும் கூடாது. இதுவே எங்களின் இரு நிபந்தனைகள். சரியா?''

மது கைடபர்கள் தங்களை மிக மேலான புத்திசாலியாகக் கருதிக்கொண்டு இவ்வாறு நிபந்தனை விதிக்கவும் விஷ்ணுவிடம் லேசான அதிர்ச்சி. அதை இருவரும் ரசித்தனர்.

""என்ன.. அதிர்ச்சியாக உள்ளதா? எங்களை முட்டாள்கள் என்று கருதிவிட்ட உன்னை எப்படி அதிரச்செய்தோம் பார்த்தாயா?'' என்று கேட்டு உற்சாகமாய் சிரிக்கவும் செய்தனர்.

அப்போது விஷ்ணுவும் அவர்கள் எதிர்பார்க்காத விதத்தில் ""சரி... உங்கள் நிபந்தனைகளை ஏற்கிறேன்...'' என்றார்.

அந்த பதிலைக் கேட்ட நொடி அவர்களிடம் அதிர்ச்சி.

""என்ன... எங்கள் நிபந்தனைகளை ஏற்கிறாயா?''

""ஆம்... ஏற்கிறேன்...''

""அது சரி... நிலப்பரப்பே இல்லாத இந்த தண்ணீர்க் காட்டில் எந்த நிலத்தின்மேல் நின்று எங்களோடு சண்டை போடுவாய்?''

""இதோ இப்படித்தான்...'' என்ற விஷ்ணு சட்டென்று விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கினார். அவர் உருவம் விண்ணில் வளர்ந்து கொண்டே போனது. போய்க்கொண்டே இருந்தது. அதற்கேற்ப உடம்பின் பாகங்களும் பெரிதாக ஆரம்பித்தன. குறிப்பாக கால் பாகமும், அந்த கால் பாகத்தில் தொடைப்பரப்பும் பெரும் நிலப்பரப்பாகக் காட்சி தரத்தொடங்கின. அப்படியே விஷ்ணுவானவர் கால்மடக்கி அமரவும் நீரானது எட்டுத்திக்கும் தெறித்ததுபோல் மழை பொழிந்தது- தொடைப்பரப்பின்மேல் தோன்றிய நிலைப்பகுதியைக் கண்டு அசுரர்கள் இருவரும் அலறிப்புடைத்தபடி ஓட, அவர்கள் இருவரையும் தன் தொடைமேல் இழுத்துப் பிடித்து நிறுத்திய விஷ்ணு, நிறுத்திய வேகத்தில் வாள்கொண்டு இருவரையும் வெட்டவும், இருவரது சிரங்களும் வெட்டுண்டு விழுந்து, உடலானது ஸ்ரீவிஷ்ணுவின் தொடைமேல் துடிக்கத் தொடங்கியது.

ஒரு வழியாக அசுர சம்ஹாரமும் முடிந்தது. ஸ்ரீவிஷ்ணு மீண்டும் சமனானார்!

பிரம்மாவான நான் எதிர் சென்றேன். நடந்தவற்றைப் பார்த்த ஒரே சாட்சியாக ஸ்ரீவிஷ்ணுவைப் பலவாறு போற்றித் துதி செய்தேன் நான்!

விஷ்ணுவும் புன்னகைத்தவாறே என்மூலம் புதிய உலகைத் தோற்றுவிக்கச் சொல்ல, அதன்பின் மீண்டும் சகல ஜீவராசிகளும் தோன்றத் தொடங்கி மானுடமும் இம்மண்மேல் இன்று வாழ்ந்து வருகிறது.

மேற்கண்ட இந்த சம்பவங்களைக் கோர்வையாகச் சொல்லி முடித்த பிரம்மா, இந்திரன் உள்ளிட்ட சகல தேவர்களையும் பார்த்து, ""இப்போது சொல் இந்திரா... அசுரர்கள் வரையில் என் தந்தையான ஸ்ரீவிஷ்ணுவே அவர்கள் போக்கில் போய்தான் வெற்றி பெற்றார். அதுதான் புத்திசாலித்தனம். நான் எனும் அகந்தை இருந்திருந்தால் அவர் அவ்வாறு நடந்துகொண்டிருப்பாரா? ஆனால் நீ எவ்வாறு நடந்துகொண்டாய் என்பதை எண்ணிப் பார்'' என்று  கூறவும், அவர்கள் அவ்வளவுபேரிடமும் ஒரு ஆழ்ந்த அமைதி.

பிரம்மா தொடர்ந்தார்.

""இந்திரா... அசுரர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் என்றால், அதனினும் மேலான நுட்பமாய் இச்சம்பவம்மூலம் உணர்ந்திட இன்னொரு விஷயமும் உள்ளது'' என்றிட, எல்லாரிடமும் அது என்ன என்கிற ஆவல் மூளத்தொடங்கியது.

""ஸ்ரீவிஷ்ணு தன் தாமச நித்திரையைத் தொடர்ந்திருந்தால் இந்த மது கைடப வதம் நிகழ்ந்திருக்காது. அந்த நித்திரை நீங்க மூலகாரணம் தாமசி தேவி...

அவள் கருணைதான் முதல் காரணம்!

அவளே பராசக்தி. அவளே விஷ்ணுவைக் காக்கும் சக்தியாக வடித்தவள். எனவே இங்கே ஜனார்த்தனனாகிய ஸ்ரீவிஷ்ணுவை  எண்ணித் துதித்திடும் இந்த வேளையில் அந்த பராசக்தியையும் எண்ணிட வேண்டும்.

இந்த வதத்தில் அசுரர்களான மது மற்றும் கைடபர்களின் உடம்பிலிருந்து வெளியான மேதஸ் எனப்படும் அவர்களது கொழுப்பில் இருந்துதான் பின் இவ்வுலகம் திரும்பப் படைக்கப்பட்டது.''

பிரம்மா சொன்ன செய்தியைக் கேட்டு தேவர்களே ஒரு புதிய செய்தியை அறிந்துகொண்டதுபோல் ஆச்சரியப்பட்டனர்.

பிரம்மாவும் இந்திரனுக்குச் சொல்லவேண்டிய எல்லாவற்றையும் சொன்ன நிறைவோடு, அவர்களுடன் கயிலை சென்றார்.

சிவபெருமானும் காத்திருந்ததுபோல் வரவேற்றார். இந்திரன் அங்கேயும் காலில் விழுந்து கதறினான்.

""இப்போது கதறி என்ன பயன் இந்திரா? உன் ஒருவன் தவறால் அடுக்கடுக்காய் எவ்வளவு துன்பங்கள் பார்த்தாயா?'' என்று கேட்ட நொடி, ""மகாதேவா... இந்திரன் தன் தவறை உணர்ந்துவிட்டான். இப்போது நமக்குத் தேவை மகிஷனின் முடிவு.

அதற்குத் தாங்கள்தான் என்ன வழி என்று கூறவேண்டும்.'' என்று பிரம்மா இடையிட, ""இதை நாம் மட்டும் முடிவு செய்ய இயலாது... விஷ்ணுவிடமும் கலந்த பிறகே இதற்கொரு வழி பிறக்கும்...'' என்று சிவபெருமான் கூறிட, அவ்வளவுபேரும் அடுத்து சென்று நின்ற இடம் வைகுண்டம்தான்.

பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பதுபோலவே அப்போதும் ஸ்ரீவிஷ்ணு பள்ளிகொண்டிருக்க, அனைவரும் ஒருசேர துதிக்கவும் விஷ்ணுவின் நீல நயனங்கள் மலர்ந்தன. துயில் நீங்கி எழுந்து நின்று ஏதும் அறியாதவர்போல வியப்பை ஸ்ரீவிஷ்ணு காட்டிட, நாரதர் இங்கே மிகச்சரியாக, ""எம்பெருமானே... தேவருலகமே அல்லல்
பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இப்படியா தாமச உறக்கத்தில் இருப்பது?'' என்று கேட்டார்.

""விழித்திருந்துதான் என்ன பயன்? மகிஷனை சம்ஹாரம் செய்ய வழி இல்லாதபடி பிரம்மன் வரம் தந்துவிட்ட நிலையில்...'' என்று விஷ்ணுவும் கேட்க, பிரம்மாவின் முகத்தில் சலனம்.

""எம்பெருமானே... நடந்ததைப் பற்றிப் பேசுவதைவிட நடக்க இருப்பதைப் பேசுவதே இப்போதைக்கு சிறப்பென்பதை தாங்கள் அறியாதவரா?'' என்று நாரதர் திரும்பக் கேட்டார்.

""இனி நடக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான்... மகிஷனை சம்ஹரிக்க நம்மால் இயலாத நிலையில், அவன் வரசித்திப்படியே ஒரு பெண்ணாலேயே அது சாத்தியம் எனும்போது, அப்படி ஒரு பெண்ணும் யோனிவழி பிறவாதவளாக இருத்தல் வேண்டும் என்கிற நிலையில் அது அந்த மகாதேவியை அல்லவா குறிக்கிறது?'' என்று ஸ்ரீவிஷ்ணு கேட்க, அனைவரும் அதை ஆமோதித்தனர்.

""அந்த மகாதேவியை, ஆதிசக்தியை நாம் எவ்வாறு அழைப்பது... அவள் தேவருலகின் நிலை அறியாதவளா?'' என்று பிரம்மனும் திரும்பக்கேட்டார்.

""நாமெல்லாரும் அவள் படைப்பே... நாம் ஒன்றுசேர்ந்தால் அவள் சேர்ந்ததுபோல... ஜலமானது தேங்கும்போது குளமாய், ஓடும்போது நதியாய், விழும்போது அருவியாய் வடிவங்கள் எடுப்பது போன்றே நம் வடிவங்கள். ஜலத்தின் மூலம் மேகம் என்பதுபோல் நம் மூலம் அவளே... எனவே நாம் சமுத்திரம்போல ஒன்று கலப்போம். ஒருமைப்பட்டு  தியானிப்போம். தனித்து அழைக்கும்போதுதான் நம் பலவீனங்கள் தடை செய்யும். கூட்டுறவில் பலவீனங்களே பலமாகிவிடும்... நம் தாய் வருவாள்...'' என்று கூறிய விஷ்ணு, பிரார்த்திப்பதே ஒரே வழி என்றிட, ஒட்டுமொத்த தேவருலகமே பிரார்த்தனை புரியத் தயாரானது.

பிரார்த்தனை என்பது தேவர்களுக்கும் உரியது. அது அனைவருக்கும் பொதுவானது என்பதும் இதன்மூலம் புலனாகியது.

ஒரு வித்தியாசம் என்னவென்றால், இங்கே பிரார்த்தனை அமைதியை அடிப்படையாகக் கொண்டு நிகழவில்லை. மகிஷன் மேலான கோபமே இதன் அடிப்படை! ஒரு தீமை அழியவேண்டும்- ஒரு ஆணவம் அழியவேண்டும்- ஒரு அராஜகம் அழிய வேண்டும்- கொடுமை, கொலைவெறி அழிய வேண்டும்- என்று தேவர்கள் சகலரும் முதன்முதலாக ஒன்றுகூடி நின்று தியானிக்கத் தொடங்கினர்.

இந்த தியானத்தின் உச்சநிலையில் அதிசயங்கள் நிகழத் தொடங்கின. ஸ்ரீவிஷ்ணுவின் உக்ரதியானத்தில் அவரது கோபாக்னி நீலச்சுடரொளியாக அவர் உடம்பிலிருந்தும் பிரிந்து விண்ணேகியது.

பரமனின் கோபாக்கினியோ வெண்ணிறச் சுடரொளியாக பரமன் உடம்பிலிருந்து பிரிந்து விண்ணேகியது. பிரம்மனிடமிருந்து செந்நிற ஒளி தோன்றி விண்ணேகியது.

இந்த மூன்று சுடர்களும் விண்ணிலே ஒன்றோடொன்று கலந்து ஒரு பேரொளியை உருவாக்கிற்று. அதை நேருக்குநேர் பார்க்கும் வல்லமை அங்குள்ள சூரியனிடம்கூட இல்லை. அவன் கண்களேகூட கூசின.

அப்படியொரு ஒளிப்பிழம்பை யாரும் எப்போதும் பார்த்ததில்லை. அடுத்தகட்டமாக அந்த ஒளிப்பிழம்பிலிருந்து ஒரு பெண்ணின் உருவம் தெரிய ஆரம்பித்தது. அந்த உருவமும் முழு வடிவம் கொள்ளத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து எமனிடமிருந்து பிரிந்த தியான ஒளி அந்த விண்ணொளி உருவத்துடன் கலந்து கூந்தலாய் மாறியது. வருணனின் ஒளி தொடைப்பாகம் சென்று சேர்ந்தது. இந்திர ஒளி இடையாக, சந்திர ஒளி மார்பங்கங்களாக, அஷ்ட வசுக்களின் ஒளி கை விரல்களாக, குபேரனின் ஒளி காதுகளாக- இப்படி ஒவ்வொரு தேவருடைய ஒளியும் அந்த விண்ணுடம்பின் ஒரு அங்கமாகிற்று. இறுதியாக விண்ணில் ஒட்டுமொத்த அந்த ஒளி உருவம் ஆதிபராசக்தியின் ஆனந்தத் தோற்றமாக மாறி, அவர்கள் முன் விஸ்வரூபக் காட்சியை அளித்தது. அந்தக் காட்சியைக் கண்ட தேவர்கள் சிலிர்த்துப்போயினர்.

""தாயே! வந்துவிட்டாயா... நீயே இனி கதி...'' என்று உணர்ச்சி மேலீட்டோடு பிரார்த்தனை புரிந்தனர். பராசக்தியும் வெறித்து நோக்கினாள்.

அவளது வெறிப்பு தேவருலகை சற்று கலங்கவும் செய்தது. பதினெட்டு கரங்கள் தோன்றி, தோளின் பின்புறம் ஒரு கரவட்டமே உருவானது. அக்கரங்களில் ஆயுதங்கள் ஏதும் இல்லை.

அதைக்கண்ட மறுநொடி ஸ்ரீவிஷ்ணு தன் சக்ராயுதத்தை அன்னையின் காலடியில் கிடத்த, அதைக்கண்ட பரமன் தன் சூலத்தைக் கிடத்தினார். பிரம்மா தன் எழுத்தாணியை ஆயுதமாகக் கருதியதால் அதை சமர்ப்பித்தார்.

இமயத்தின் காவலனான இமன்ôன் அம்பிகை அமரும் வாகனமாக கம்பீரமான சிம்மத்தை சமர்ப்பணம் செய்தான். அதைக்கண்ட ஆதிசேஷன் தன் நீலமணிகளை சமர்ப்பணம் செய்ய, அது ஒரு ஆரமாக மாறி அம்பிகை கழுத்தில் மாலையாகியது.

மொத்தத்தில் தேவருலகமே தங்கள் தியானத்தால் அம்பிகையை உருவாக்கி, அவள் தங்களுக்களித்த ஆயுதங்களை அவள் வசமே திரும்ப ஒப்படைத்து அவள்முன் பக்தியோடு கரம் குவித்து நிற்கத் தொடங்கியது.

அம்பிகையின் இக்கோலமே "அஷ்டதசபுஜ மகாலக்ஷ்மி' எனப்படுகிறது. இவளைத்தான் "சண்டி' என்று "துர்க்கா சப்த சதி' கூறுகிறது. அந்த பதினெட்டுக் கரங்களிலும் கருவிகள் தோன்ற ஆரம்பித்தன. அக்ஷமாலை, தாமரை, அம்பு, கத்தி, வஜ்ராயுதம், கதை, சக்கரம், குறுதிரிசூலம், கோடரி, மழு, கேடயம் என்று ஒருபுறமும், சங்கு, மணி, பாசம், காலதண்டம், வில், மதுப்பாத்திரம், கமண்டலம், சக்தியாயுதம் ஆகியவை மறுபுறமும் தோன்றின.

(தொடரும்)


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :