Add1
logo
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் || தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள் || நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி || ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட் || மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்! || பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி! || எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி || கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி || கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்! || கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்! || மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி || மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!! || சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்! ||
Logo
ஓம்
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
2018 புத்தாண்டுப் பலன்கள்-மேஷம்
 ................................................................
நவம்பர் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பக்தனுடன் சென்ற துவாரகை கண்ணன்!
 ................................................................
கட்டிக்குளம் மகாசித்தர் மாயாண்டி சுவாமிகள்!
 ................................................................
வியாசர் பிறப்பின் விந்தை!
 ................................................................
சனி ஜெயந்தி!சனி அமாவாசை
 ................................................................
நவம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
மறுவாழ்வு பெற்ற மாற்றுத் திறனாளி!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
வீடு தேடிவந்து வசூலிக்கும் அதிசய தெய்வங்கள்!
 ................................................................
தெய்வத்தை மகிழச்செய்யும் உற்சவங்கள்
 ................................................................
பயம் போக்கும் பைரவர்!
 ................................................................
01-11-17"செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன்னாக்குவோம்
செங்கதிரை தண்கதிராய்ச் செய்துவிடுவோம்
இப்பெரிய உலகத்தைஇல் லாமற்செய்வோம்
எங்கள் வல்லபங்கண்டு நீயாடுபாம்பே.' (சித்தர் வல்லபம்)

முன்தொடர்களில் அகத்தியர் முதலான சித்தர்கள் தோன்றி வாழ்ந்த காலத்தையும், அந்நாட்களில் அவர்கள் செய்த சித்த வல்லபங்களையும், தற்போது எங்கே வாழ்கின்றார்கள் என்பதையும் அறிந்துகொண்டோம். இப்போது தலைமைச் சித்தர் அகத்தியரைப் பற்றி அறிந்துகொள்வோம்.

தமிழ் ஓதிய அகத்தியர்

சைவத் தமிழ்ச் சித்தர்கள் பதினெட்டு பேர்களின் தலைமை குருவாகக் கூறப்படுபவர் அகத்திய முனிவர். இவரைப் பற்றி ஏராளமான கதைகள் கூறப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் உண்மையா? அகத்தியர் மனிதனாக ஒரு தாய்- தந்தைக்குப் பிறந்தவரா அல்லது கடவுளால் பூமியில் படைக்கப்பட்டவரா?

அகத்தியர் ஒருவர்தானா அல்லது சில கதைகளில் கூறப்படுவதுபோன்று ஏழுபேரா அல்லது பதின்மூன்று அகத்தியர்களா? இவர் சிவனின் மைந்தர் என்றும், முருகனின் சீடர் என்றும் கூறப்படுவது உண்மையா என இதுபோன்று மக்களின் சந்தேகக் கேள்விகளுக்கு ஏனைய சித்தர்களும் முனிவர்களும் அகத்தியரைப் பற்றி தங்கள் பாடல்களில் கூறியுள்ள உண்மை விவரங்களை அறிவோம்.

"திருக்குறள்' என்ற அரிய நூலை எழுதிய திருவள்ளுவர் அகத்தியரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டதை அவரின் ஒரு பாடல்மூலம் அறிந்துகொள்வோம்.

"மதுர தமிழோதும் அகத்தியனே போற்றி
    எண்டிசையும் புகழுமெந்தன் குருவே போற்றி
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி
    குண்டலினிக்குள் அமர்ந்துநின்றே குருவே போற்றி
குருமுனியின் தாளிணை யெப்போதும் போற்றி.'

"தேன்போன்ற சுவையும், இனிமையும், தனித்துவமான சக்தியும் கொண்ட தமிழ்மொழியை உருவாக்கி மக்களுக்குப் போதித்து, தமிழ்மொழியை உலகமெங்கும் அறியச்செய்த என் குரு அகத்தியரை வணங்குகிறேன்.

இந்த பூமியில் எட்டுத் திசைகளிலும் உள்ள தேசங்களில் எல்லாம் வசிக்கும் ஞானிகளும், மகான்களும், ரிஷிகளும், பாமர மக்களும் குருவாக ஏற்றுக்கொண்டு, போற்றிப் புகழ்ந்து வணங்கும் பெருமை பெற்ற என் குரு அகத்தியரை வணங்குகிறேன்.இந்த அண்டவெளியில், ஆகாயக் காற்று மண்டலத்திலிருந்து, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும், ஜீவ ராசிகளும், உயிரினமும் தன் உயிர், உடலுக்கு, தான் வாழ்வதற்குத் தேவையான சக்திகளை அவரவர் இடப்பக்க மூக்குத் துவாரத்தின் வழியாகக் கொண்டுவந்து சேர்க்கும் "சக்தி' என்ற சுவாசக் காற்றின் சூட்சுமத்தை அறிந்து, வலப்பக்கம், இடப்பக்கம், சுழுமுனை என்ற மூன்று மூச்சுக்காற்றில் "திரிவேணி சங்கமம்' என்ற வாசலைத் திறந்து, மனிதனுக்குள்ளே உள்ள ஆயிரத்தெட்டு இதழ் கொண்ட தாமரையில் ஒளி சக்தியாகத் திகழும் குண்டலினி சக்தியை அறிந்து, சித்த சக்தி அடையும் குண்டலினி யோக முறையைக் கூறியவரே எனக்கு குருவாக இருந்து, என்னை சீடனாக ஏற்று எனக்கு ஞானத்தையும், நல்லறிவினையும், வாசியோகம், குண்டலினி யோகத்தையும் போதித்து, நான் அட்டமாசித்திகளை அடையச் செய்த என் குரு அகத்தியரின் தாளினை எப்போதும் போற்றி வணங்குகிறேன்' என்கிறார் திருவள்ளுவப் பெருந்தகை.

பதஞ்சலி முனிவர் தன் பாடலில் குரு
அகத்தியரைப் பற்றிக் கூறும்போது...
"மேருலாவி வடவீதி தோறுமுயர்
    வேத ஞான சனகாதியர்
பன்னு தென்றிசையிலே யிருந்து தமிழ்ப்
    பாசை யோதின அகத்தியர்'

என்கிறார்.

வேதங்களிலும், புராணங்களிலும் பிரம்மாவின் புத்திரர்கள் எனக் கூறப்படும் சனகாதி முனிவர்கள் நான்குபேரும், இந்த பாரத தேசத்தின் வடக்குப் பகுதியான மேருமலையில் இருந்து வடதேசத்தில் வசித்த ஆரிய இன மக்களுக்கு நான்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள ஞானத்தை போதித்து, மக்கள் வேதமுறைக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழும் வழிமுறையைக் கூறினார்கள். ஆரிய வேதாந்தத்தை உருவாக்கினார்கள்.

இந்தப் பாடலில் உள்ள "பன்னு' என்ற வார்த்தைக்கு மிகப்பழமையானது, தொன்மையானது என்று பொருளாகும். மேலும் இந்த "பன்னு' என்ற வார்த்தை மூலம் பிரம்மாவின் புத்திரர்களான சனகாதி முனிவர்கள் இந்த பூமியில் தோன்றுவதற்கு முன்பே தமிழ் மக்கள் சைவத்தமிழ் நாகரிக வாழ்க்கையைக் கடைப்பிடித்து வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது.

இன்று தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களிடையே அகத்தியர் உருவாக்கித் தந்த வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை முற்றிலும் அழிந்துவிட்டது. "சைவம்' என்றால் அறிவு, ஞானம் என்று பொருளாகும். இன்று தமிழர்கள் மத்தியில் சைவநெறியும் இல்லை; சைவ தர்மவாழ்வும் இல்லை; சைவஞானமும் இல்லை. இவற்றைத் தமிழர்களே அழித்துவிட்டார்கள். மாமிசம் சாப்பிடாதவன் "சைவன்' என்றும், மாமிசம் சாப்பிடுபவன் "அசைவன்' என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். அகத்தியரின் கருத்துகளை வரும் இதழ்களில் காண்போம்.

வாசியோகம்
"வீறிடுஞ்செங் கதிர்பிழைக்கி னோய்க்கு
    மிடுத்திடு மண்டலஞ் செய்யும் வெம் போர்சாலாய்
பாறிடும் பொன் பிழைக்கின் மன்னர் கேடாம்புந்தி
    பதிக்கதிபன் கெடுமிந்துகிளை ஓர் போக்கே.'

சென்ற இதழில் திதிகளில், காலையில் எழுந்தவுடன் மூச்சுக்காற்று எந்த துவாரத்தின் வழியாக நடைபெற வேண்டுமென்று அறிந்தோம். இனி வாரத்தின் ஏழு நாட்களி லும் சுவாசம் நடைபெறவேண்டிய நிலை யைக் காண்போம்.

வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக் கிழமை காலையில் மூக்கின் வலப் பக்கத் துவாரத்தில் மூச்சுக்காற்று ஓடாமல் இடப்பக்கம் ஓடினால், அன்று ஏதாவது ஒரு நோய்த் தாக்கம் உண்டாகி சரீர சிரமத்தைத் தந்துவிடும். சோம்பல் நிலை இருக்கும். மனம் தெளிவில்லாமல் ஒரு குழப்பநிலையில் இருக்கும். அன்று செய்ய வேண்டிய காரியங்களை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் தடை, தாமதமாகும்.

செவ்வாய்க்கிழமை காலையில் மூக்கின் வலப்பக்கம் முறையாக ஓட வேண்டிய சுவாசக்காற்று நிலைமாறி, இடப்பக்கத் துவாரத்தில் நடந்தால் அன்று தேவையில்லாத பிரச்சினைகள், வாக்குவாதம், அலுவலகத்தில் உடன்பணிபுரிபவர்கள், நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள், கணவன்- மனைவி, குடும்பத்தினரிடையே சண்டை உண்டாகும். இதனால் மனக்கசப்பு, துயர் உண்டாகும்.

வியாழக்கிழமை காலையில் மூக்கின் வலப்பக்கத் துவாரத்தில் வரவேண்டிய சுவாசக் காற்று இடப்பக்கம் மாறி நடந்தால் குடும்பத் தலைவருக்கு கெடுதி, மூத்த குழந்தைக்கு சிரமம், தந்தைக்குப் பிரச்சினை, அவர்கள் சம்பந்தமான அலைச்சல், சுயகாரியங்களில் தடை, தாமதம் உண்டாகும்.

சனிக்கிழமை காலையில் வலப்பக்கம் மாறி, இடப்பக்கம் ஓடினால் தொழில் தடை, வருமானத் தடை, பணக்கஷ்டம், கையிருப்புப் பணம் கரைதல், கடன் தொல்லை, பொருள் இழப்பு, நஷ்டம், பிறர் உதவியின்மை, பணத்தால் பிரச்சினை, வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படும்.

திங்கட்கிழமை காலையில் மூக்கின் இடப்பக்கம் முறையாக ஓடவேண்டிய மூச்சுக்காற்று நிலைமாறி வலப்பக்கம் ஓடினால் உறவுகளுக்குள் பிரச்சினைகள், உறவினர்களுக்காக விரயச்செலவு, பெண்களால் பிரச்சினைகள், தாய், மூத்த மகள் ஆகியோருக்கு சிரமம் உண்டாகும்.
புதன்கிழமை காலை இடப்பக்கம் முறையாக வரவேண்டிய சுவாசம் மூக்கின் வலப்பக்கம் நிலைமாறி வந்தால், அன்று கல்வி சம்பந்தமான செயல்களில் தடை, ஞாபக மறதி, வியாபார சுணக்கம், கொடுக்கல்- வாங்கல் சிரமம், தொழில் கூட்டாளிகளிடையே பிரச்சினை, பங்கு வர்த்தக நஷ்டம், ஆண்- பெண் நண்பர்களிடையே பிரச்சினை, தாய்மாமனுடன் பிரச்சினை  அல்லது அவர்களுக்கு சிரமம், வீடு, மனை, தோட்டம் போன்றவற்றில் பிரச்சினை, பிறர் உதவியில்லாமற் போவது போன்றவை பலனாக நடக்கும்.

வெள்ளிக்கிழமை காலை இடப்பக்கம் சுவாசம் ஓடாமல் வலப்பக்கம் மாறி ஓடினால் அன்று அலைச்சல், பயணங்கள், ஆபரண நஷ்டம், மனைவிக்கு சுகவீனம், கணவன்- மனைவியிடையே தேவையில்லாத வாக்குவாதம், நிம்மதிக்குறைவு போன்றவை உண்டாகும்.

இதில் இன்னுமொரு சூட்சுமமான ரகசியத்தை அறிவோம். வளர்பிறை பதினைந்து நாட்களில் வரும் வியாழக் கிழமைகளில், காலையில் எழுந்தவுடன் மூக்கின் இடப்பக்கத் துவாரத்தில் மூச்சுக்காற்று தப்பாமல் நடந்தும்;

தேய்பிறை பதினைந்து நாட்களில் வரும் வியாழக்கிழமைகளில் மூக்கின் வலப்பக்கத் துவாரத்தில் மூச்சுக்காற்று சரியான முறையில் தவறாமல் ஓடினாலும் சிறப்பான பேரும் புகழும் உண்டாகும். செல்வம், செல்வாக்கு உயர்ந்துகொண்டே வரும். முழுமையான வாழ்வை அடைந்து வாழ்வார்.

சனிக்கிழமை வரும் நாட்களில் இரவும் பகலும், மூக்கின் இடது, வலப் பக்கத் துவாரங்களில் மாறுபாடில்லாமல் முறையாக மூச்சுக்காற்று ஓடினால், உலகோர் மெச்சும்படியான வாழ்க்கையை அடைவார். எத்தொழில் செய்தாலும் அத்தொழிலில் மேன்மேலும் வளர்ச்சி அடைந்துகொண்டே வரும். தான் ஈடுபட்டுச் செய்யும் அனைத்து காரியங்களிலும், எவ்வளவு பெரிய எதிரியாக இருந்தாலும் வென்று வாகை மாலை சூடுவார்.

"வகையான வாசியது மனமும் கண்ணும்
    மயங்காதே சிவாயமென்று புலம்பிடாதே
பகையாதே அட்சரங்கள் ஐம்பத்தொன்றும்
    பரிபாடையாய் உரைத்த நாம பேதம்
திகையாதே நாமமென்றும் அட்சரங்களென்றும்
    செபியாதே அறிவுகெட்ட மனிதரைப் போல்
நகையாதே மானிடர் பலசாதியென்று
    நம்பாதே நல்வழியில் காற்றைப் பாரே!'
சித்தரைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்.

(மேலும் சித்தம் தெளிவோம்)தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :