Add1
logo
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் || தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள் || நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி || ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட் || மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்! || பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி! || எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி || கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி || கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்! || கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்! || மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி || மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!! || சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்! ||
Logo
ஓம்
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
2018 புத்தாண்டுப் பலன்கள்-மேஷம்
 ................................................................
நவம்பர் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பக்தனுடன் சென்ற துவாரகை கண்ணன்!
 ................................................................
கட்டிக்குளம் மகாசித்தர் மாயாண்டி சுவாமிகள்!
 ................................................................
வியாசர் பிறப்பின் விந்தை!
 ................................................................
சனி ஜெயந்தி!சனி அமாவாசை
 ................................................................
நவம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
மறுவாழ்வு பெற்ற மாற்றுத் திறனாளி!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
வீடு தேடிவந்து வசூலிக்கும் அதிசய தெய்வங்கள்!
 ................................................................
தெய்வத்தை மகிழச்செய்யும் உற்சவங்கள்
 ................................................................
பயம் போக்கும் பைரவர்!
 ................................................................
01-11-17டுநாடு என்று சொல்லப்பட்ட தென்னாற்காடு மாவட்டப்பகுதிகளை சோழர்கள், பல்லவர்கள், பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்கள். பின்னர் நாயக்கர்கள், குறுநில மன்னர்கள் என ஆட்சிபுரிந்துள்ளனர். 17-ஆம் நூற்றாண்டுவாக்கில் (சுமார் 300 வருடங்களுக்குமுன்) இப்போது தீவனூர் என்று அழைக்கப்படும் பகுதியில், மன்னருக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னர் வம்சத்தைச் சேர்ந்த நாராயண நயினார், தங்கள் முன்னோர்கள் வழியில் அப் பகுதியின் காரியஸ்தராக இருந்து, குடிமக்களிடமிருந்து வரி வசூல்செய்து மன்னருக்கு கொடுத்து வந்தார். சுற்றுப்பட்டு கிராமங்கள் இவருக்குக் கட்டுப்பட்டு நடந்தன. மன்னரின் தளபதி ஒருவன் வரிவசூல் செய்த பணத்தை வாங்கிச்செல்ல படைகளோடு அவ்வப்போது வந்து செல்வான்.

அந்த ஊரில் நாராயண நயினார் பங்காளிகள் மற்றும் பல இன மக்களும் வாழ்ந்துள்ளனர். நாராயண நயினார் குடும்பத்தில் மிக அழகான இளம்பெண் வளர்ந்துவந்தாள். கிராம முக்கியஸ்தர் மகள் என்பதால், தன் தோழிகளோடு ஓடியாடி விளையாடி கிராமத்தைச் சுற்றி வளைய வந்தாள். ஊரிலுள்ள ஆண்கள் யாரும் அவளை நேருக்குநேர் நிமிர்ந்து பார்க்க அச்சப் படுவார்கள்.

ஒரு நாள் மன்னரின்  தளபதி வரிவசூல் செய்ய நாராயண நயினார் வீட்டுக்கு வரும்போது வழியில் நயினார் குடும்பத்துப் பெண்ணைக் கண்டான். வியப்பால் அவனது விழிகள் விரிந்தன. "இந்த ஊரில் இப்படிப்பட்ட பேரழகியா? யார் அந்தப் பெண்?' என்று விசாரிக்க, நாராயண நயினார் மகள் என்று தெரியவந்தது. நயினாரிடம் வரி வாங்கும்போதே, ""உங்கள் பெண் பேரழகி. அவள் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல. அரண்மனை. மன்னர் விரும்பினால் உமது மகள் மன்னரின் இளைய ராணிகளில் ஒருவராகப் போகிறார்'' என்று தளபதி சொல்ல, நயினார் விக்கித்துப்போய் நின்றார். தளபதி போய்விட்டான்.நயினார் தனது பங்காளிகள் 16 குடும்பங்களையும் அழைத்து தளபதி சொன்னதைச் சொன்னார். ""நாம் ஆசையாக வளர்த்த நம் குலவிளக்கை மன்னருக்கு மனைவி என்ற பெயரில் இரையாக்கினால், அரண்மனையின் அந்தப்புரத்தில் பத்தோடு பதினொன்றாக வாழ வேண்டியதுதான். நமது பெண் என்ற அடையாளமே இல்லாமல் போய்விடும். நாம் விரும்பும் போது போய் பார்க்கக்கூட முடியாது'' என்று நீண்ட ஆலோசனை செய்தனர்.

மூன்று நாட்கள் கடந்த நிலையில் தளபதியிடமிருந்து ஓலை வந்தது. "மன்னரின் உத்தரவுப்படி ஒரு வாரத்தில் மேளதாளங்களோடு தங்கள் பெண்ணை அழைத்துப்போக வரவுள்ளோம். பெண்ணை அனுப்பத் தயாராக இருக்கவும்.'

ஓலைத் தகவல் கண்டு பதறிப்போன நாராயண நயினார் சொந்தங்கள், ""எப்படியும் தளபதி படைகளோடு வருவான். பெண்ணை அனுப்ப மறுத்தால் சிறையெடுத்துச் செல்வான். அவனை எதிர்த்துப் போரிட முடியாது. எனவே தளபதி வருவதற்குள் நாம் ஊரை காலிசெய்துவிட்டு எங்காவது கிளம்புவோம்'' என்று முடிவு செய்தனர்.

அதன்படி தங்கள் ஊரில் வைத்து வழிபட்டு வந்த கூத்தப்பெருமாள், பூரணா, பொற்கலையுடன் ஐயனார், அக்னிவீரன்,  மதுரைவீரன் ஆகிய தெய்வங்களின் புடைப்புச் சிற்பங்களையும், கையில் கிடைத்த பொருட்களையும் பொதிமாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு கிழக்கு திசை நோக்கி நடந்தனர்.

மூன்று நாட்கள் தொடர் நடைப்பயணம். அப்படிப் போகும்போது ஒரு பகீர் தகவல் வந்தது. மன்னரின் தளபதி படைகளோடு பெண்ணை அழைத்துப்போக தீவனூர் வந்து, நயினார் வகையறாவினர் ஊரை காலி செய்துகொண்டு போய்விட்டது தெரிந்ததும் ஊரில் வாழ்ந்த மற்ற இன மக்களை அடித்து உதைத்து, ஊரையே சூறையாடிவிட்டான். மேலும் நயினார் குடும்பம் எந்த திசை சென்றாலும் தேடிப்பிடித்துப் பெண்ணை சிறையெடுத்து வரச்சொல்லி நான்கு திசைகளிலும் படைகளை அனுப்பியிருக்கிறான். மேற்படி செய்தி நயினார் வகையறாவை பீதிக்குள்ளாக்கியது. எப்படியும் தளபதி நம்மைத் தேடிப்பிடித்து தண்டனை கொடுப்பான். அதோடு மகளையும் சிறையெடுத்துப் போய்விடுவான். எனவே இனி என்ன செய்யலாம் என்று, ஆண்கள் மட்டும் தனியாகக்கூடி அந்த வனக்காட்டில் ஆலோசனை செய்தனர். மீண்டும் புறப்பட்டனர்.

அப்படிப்போகும்போது (இப்போதைய சேப்பளாநத்தம்- வெள்ளைக்காரன்மேடு பகுதியைக் கடந்தபோது) அடர்ந்த காட்டில் ஆழமான பாழும்கிணறு ஒன்று தென்பட்டது. எல்லாருக்கும் பசி தாகம் எடுத்தது. ""இந்த கிணற்றில் தண்ணீர் எடுத்து சமைத்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்பலாம்'' என்றார் நாராயண நயினார். அதன் படி ஆண்கள் பெண்கள் என எல்லாரும் அமர்ந்தனர். ஒரு கயிற்றில் மண்குடம் ஒன்றைக் கட்டி கிணற்றில் விட்டனர்.

தண்ணீர் அதில் சேந்திவரவில்லை. உடனே நயினார் தன் மகளை அழைத்து, ""அம்மா, கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இறங்கி குடத்தில் நீர் நிரப்பி மேலே அனுப்பு'' என்று மகளை கிணற்றில் இறக்கிவிட்டார். பிறகு மண்குடத்தைக் கயிற்றில் கட்டி கிணற்றின் உள்ளே விட்டனர். மகளும் குடத்தில் நீரை நிரப்பிவிட்டு கயிற்றை இழுக்கச்சொல்லி குரல் கொடுத்துவிட்டு அண்ணாந்து பார்த்தாள். குடம் நீருடன் மேலே சென்றது. கயிறும் குடமும் மீண்டும் கீழே வரும் என்று அந்த அழகு மகள் அண்ணாந்து பார்த்தபடியே இருந்தாள். கயிறும் வரவில்லை; குடமும் வரவில்லை. உள்ளிருந்தபடியே உறவினர்களுக்கு குரல் கொடுத்தாள். எந்த அசைவுகளும் தென்படவில்லை. பயந்துபோன அந்தப் பெண் தன்னைக் காப்பாற்றுமாறு கதறினாள்... கூவினாள்... அந்த சத்தம் அந்த கிணற்றுக்குள் மட்டுமே எதிரொலித்தது.

மகளை பாழும் கிணற்றில் தவிக்க விட்டுவிட்டு நயினார் குடும்பம் மீண்டும் கிழக்கு நோக்கி சில நாட்கள் பயணம் செய்தது. இப்போதைய வடலூருக்கு தெற்கே வாலாஜா ஏரிக்கரையோரம் அடர்ந்த வனப்பகுதியில் நயினார் குடும்பத்தினர் முகாமிட்டனர். அவர்களுக்கு நடந்து வந்த களைப்பு, பசி மேலிட, காட்டில் கிடைத்த காய்கனிகளைப் பறித்தனர்.

மிச்சம் மீதி இருந்த அரிசியை வைத்து பொங்கினார்கள். தங்கள் பசி ஒருபக்கம் இருந்தாலும் தங்களோடு வந்த தெய்வங்களும் பசியோடு உள்ளனர் என்பதை உணர்ந்து, அந்த பொங்கலை காட்டு இலையைப் பறித்து முதலில் அந்த தெய்வங்களுக்கு படையல் போட்டனர்.

உப்புபோடாத பதார்த்தங்கள் அந்த இலையில் பரிமாறிய நிலையில் ஒரு பெண்ணின் குரல், ""எனக்கும் ஒரு படையல் போடுங்கள்'' என்றது. எல்லாரும்  திடுக்கிட்டனர். "எங்கேயோ கேட்ட குரலாக உள்ளதே. ஆம், கிணற்றில் இறக்கிவிட்டுவிட்டு வந்த மகளின் குரல்தான் அது. மகள் உயிரோடு வந்துவிட்டாளோ' என அனைவரது கண்களும் பல திசை களிலும் ஆவலோடு சுழன்றன. ஆனால் அந்த உருவமற்ற குரல் மட்டும் ஓங்கி ஒலித்தது. ""என்னை பாழும் கிணற்றில் இறக்கிவிட்டுவிட்டு வந்துவிட்டீர்களே, அது நியாயமா? முறையா?'' என்று நீதிகேட்ட அந்தக் குரல், ""நீங்கள் செய்த தவறுக்குப் பரிகாரமாக என்னை உங்கள் தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடுங்கள். நானும் தெய்வமாகிவிட்டேன். தவறு யார் பக்கமோ இருக்கட்டும். உங்கள் வம்சத்தை மன்னித்து வாழவைப்பேன்'' என்றது அந்த அபலைப் பெண்ணின் தெய்வக்குரல். அதைக்கேட்ட அனைவரது கண்களும் கலங்கின. அனைவரும் கீழேவிழுந்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டனர். மேலும் ஒரு படையல் போட்டு வணங்கிவிட்டு அனைவரும் சாப்பிட்டுப் பசியாறினார்கள். தெய்வங்களை வைத்து வழிபட்ட அந்த காட்டுப்பகுதியையொட்டி ஒரு இடத்தைத் திருத்தி, அங்கேயே குடும்பங்களாக வாழ ஆரம்பித்தனர். அவர்கள் தங்கிய பகுதிக்கு நாராயண நயினார்குப்பம் என்று பெயரும் வைத்தனர்.

முதலில் தெய்வங்களை வைத்து பொங்கலிட்டு வழிபட்ட வாலாஜா ஏரியின் வடகரையோரம் பல ஏக்கர் பரப்பளவில் கூத்தப்பெருமான், ஐயனார், அக்னிவீரன், மதுரைவீரன் ஆகிய தெய்வங்களுக்கு வாகனங்களாக மண்குதிரை சிலைகளோடு மண்டபம் கட்டி வழிபட்டு வருகிறார்கள்.

ஆங்கிலேயர் காலம் அது. ஒரு நாள் அந்த வழியே ஆங்கிலேயர் ஒருவர் தன் குதிரையின்மீது வேட்டையாட இப்பகுதிக்கு வந்தார். அவர் வேட்டை முடித்துத் திரும்பும்போது, அவரது குதிரை இந்த கோவிலின் அருகே வந்ததும் படுத்துக்கொண்டது. அப்போது ஒரு குதிரை பலமாக கனைத்தது. தனது குதிரைதான் கனைக்கிறதோ என்று பார்த்தார் துரை. அவரது குதிரை மௌனமாகப் படுத்திருந்தது. மீண்டும் கனைப்புச் சத்தம் கேட்டது. சுற்றும்முற்றும் பார்த்தார். அய்யனார்சாமியின் மண்குதிரை பலமாக கனைத்து சிரித்தது. துரை அதைப் பார்த்ததும் மிரண்டு போனார். உடனே கோவில் பூசாரியை வரவழைத்து விவரம் கேட்டார். ""எங்கள் கோவில் தெய்வங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. எனவே எங்கள் அய்யனாருக்கு இரண்டு குதிரை வாகனங்கள் செய்துவைப்பதாக வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் குதிரை எழுந்து நடக்கும்'' என்று பூசாரி சொல்ல, அதேபோல் செய்துவைப்பதாக துரை வேண்டிக்கொண்டார். படுத்திருந்த துரையின் குதிரையும் உடனே பெரும் கனைப்பு சத்தத்தோடு எழுந்தது. துரை அதில் ஏறிப்போனார்.

அவர் சொன்னதுபோல் இரண்டு குதிரை வாகனங்களைச் செய்தும் வைத்துள்ளார். அவை இப்போது காற்றிலும் மழையிலும் கரைந்துகொண்டுள்ளன- தங்களை சரிசெய்யச் சொல்லி.

மன்னனின் தளபதியின் படைகளால் ஊரைவிட்டு துரத்தப்பட்ட அனைத்து இன மக்களும் பல்வேறு மாவட்டங்களில், மாநிலங்களில் சென்று வாழ்கின்றனர்.

அவர்கள் நயினார் குடும்பம் கொண்டு வந்து வழிபட்டு வரும் இந்த தெய்வங்களையே தங்கள் குலதெய்வங்களாக ஏற்று இங்குவந்து வழிபட்டுவருகிறார்கள்.

தங்கள் குடும்பத்தின் முதல் நிகழ்வுகள், திருமணம், காதணி விழா, குழந்தை பெயர் வைப்பு என அனைத்து விழாக்களையும் அய்யனாரை வந்து வழிபட்டபிறகே நடத்துகிறார்கள். மேலும் இங்குள்ள தெய்வங்களிடம் எந்தவிதமான வேண்டுதல் வைத்து வழிபட்டாலும் அவை நிச்சயம் நிறைவேறும். அப்படி நிறைவேறியவுடன் அவரிடம் கொடுத்த உறுதிமொழிப்படி பிரார்த்தனையை  இங்கு வந்து நிறைவேற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் வீடு தேடிவந்து வசூலிப்பார் என்பதற்கு இந்த செவிவழிச் சம்பவமே உதாரணம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

ஆம்; பக்கத்து ஊரில் காதுகேட்காத ஒரு விவசாயி இருந்தார். அவரது நண்பர் ஊராட்சிமன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். "அவர் தேர்தலில் வெற்றிபெற்றால் அய்யனாரே, உமக்கு ஓசைமணி வாங்கி காணிக்கையாக தலைவர் கையால் உமது கோவிலில் செலுத்துவேன்' என்று வேண்டிக்கொண்டார் விவசாயி. அவர் வேண்டுதலை அய்யனார் நிறைவேற்றினார்.

ஒருமுறை அல்ல; இரண்டுமுறை ஊராட்சித் தலைவராகி பத்து ஆண்டுகள் பதவி வகித்தார் விவசாயியின் நண்பர். ஆனால் அய்யனாரிடம் வேண்டிக்கொண்டபடி காணிக்கை செலுத்தவில்லை. விவசாயி பலமுறை சொல்லியும் அவர் கேட்கவில்லை.

ஒருநாள் நடுசாமம். அய்யனாரிடம் வேண்டிக்கொண்ட காது கேளாத விவசாயி வீட்டுமுன்பு தோளில் பெரிய அரிவாளோடு குதிரையின்மேல் அய்யனார் வந்து நின்றார். அவர் பெயரைச் சொல்லி, ""வீட்டைவிட்டு வெளியே வா'' என்று சத்தம் போட்டுக் கூப்பிட்டார். "நமக்கோ காது கேட்காது. இவ்வளவு சத்தமாக யார் நம்மை அழைப்பது' என்று மிரட்சியோடு வெளியே வந்து பார்த்த விவசாயி அரண்டுபோனார். மண்ணில் நெடுஞ்சாங்கிடையாக விழுந்து கும்பிட்டார். ""அய்யனாரே, நான் வேண்டிக்கொண்டது உண்மைதான். அந்த தலைவர் எவ்வளவு சொல்லியும் காணிக்கையை செலுத்தவில்லை. என்னை மன்னித்துவிடு. என்னால் முடிந்ததை காணிக்கையாகச் செலுத்துகிறேன்'' என்றபடி எழுந்து நின்று பார்த்தார். வீதியே அமைதியாக இருந்தது. விடிந்ததும் குளித்துமுடித்து ஓடோடிச் சென்று அய்யனாருக்கு புதுவேட்டி, மாலை என வாங்கிவந்து படையலிட்டு பூஜை செய்தார். அந்த விவசாயியை மன்னித்து அபயமளித்தார் அய்யனார் என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.

""எங்கள் முன்னோரான நயினார் குடும்பத்துப் பெண்ணை எங்கள் குலதெய்வமாக ஏற்று ஒவ்வொரு ஆண்டும் பொங்கலன்று மண்குடத்தை வைத்து (அதுதான் பெண் தெய்வம்) உப்பில்லாமல் பொங்கலிட்டு படையல் செய்து அதைப்பிரசாதமாக சாப்பிடுவோம். அந்தப் பெண் தெய்வத்தை பாவாடைக்காரி என்று பெயரிட்டு அழைக்கிறோம். அவளுக்கென்று தனி சிலையோ சந்நிதியோ இல்லை. அவள் மண்குடத்தோடு கிணற்றில் இறங்கி தெய்வமாக மாறியதால் அந்த மண்குடத்தையே தெய்வமாக வைத்து வழிபட்டுவருகிறோம். இது பல தலைமுறைகளாகத் தொடர்கிறது'' என்கிறார்கள் நயினார்குப்பத்தில் வசிக்கும் நயினார் வகையறாவைச் சேர்ந்த முக்கியஸ்தர்களான மோகன், அரிபுத்திரன், ஜோதி, ராமகிருஷ்ணன், குணசேகரன், சுந்தரமூர்த்தி, ராஜசேகர், கலையரசன், ராசேந்திரன், நமச்சிவாயம், எழிலரசன், நெடுஞ்செழியன், வாசு தேவன், செந்தில், அறிவழகன், வெங்கடேசன், கோவிந்தசாமி, முருகன், கிருஷ்ணமூர்த்தி, கணேசன், சகாதேவன், மேகநாதன், பரமசிவம் ஆகியோர்.

""இக்கோவில் தெய்வங்களை தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, சிதம்பரம், புதுச்சேரி, சென்னை, ஐதராபாத், பெங்களூரு உட்பட பல மாவட்டங்களிலும், பல மாநிலங்களிலிருந்தும் வந்து வழிபாடு செய்கிறார்கள்.

நயினார் என்று சொல்லப்படும் சமூகத்தினர் அனைவருக்கும் இவைதான் குலதெய்வங்கள். அய்யனாரின் உத்தரவுப்படி விரைவில் கோவில் திருப்பணி செய்யும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன'' என்கிறார் கோவிலில் பூஜை செய்துவரும் அரிபுத்திரன்.

சென்னை- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், வடலூரிலிருந்து தெற்கே ஐந்து கிலோமீட்டரில் சாலையை ஒட்டியுள்ளது மருவாய் பஸ்நிறுத்தம். அதனருகில் வாலஜா ஏரி. இதன் கரையில் அமர்ந்து அருளாட்சி செய்கிறார்கள் மேற்படி தெய்வங்கள்.

ஆலயத் தொடர்புக்கு: 98426 20568


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :