Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
Logo
இனிய உதயம்
சொல்ல மறக்காத கதை -7
 ................................................................
தஞ்சை பிரகாஷ் விருதுவிழா
 ................................................................
கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் மதவாதம்!
 ................................................................
ஆற்றுப் படையும் பழந்தமிழர் வாழ்வும்
 ................................................................
தரிசனம்! -சந்திரிகா
 ................................................................
கவிக்கோ
 ................................................................
பழநிபாரதி கவிதைகள்
 ................................................................
வெட்கக்கேடு!
 ................................................................
01-10-2017"பேசும் புதிய சக்தி' இலக்கிய மாத இதழும், ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கிய விருது வழங்கும் விழா, 21.09.17 மாலை சென்னை  கவிக்கோ மன்றத்தில் சிறப்பாக நிகழ்ந்தது.

விழாவில் வரவேற்புரை ஆற்றிய  எழுத்தாளர் தஞ்சைக் கவிராயர், தனக்கு எழுத்தாளர் தஞ்சை பிரகாஷுடன் வாய்த்த நட்பையும், நினைவுகளையும் இனிதாக பகிர்ந்துகொண்டார். ""பிரகாஷ் பிறப்பால் ஒரு கிறிஸ்தவர், சிந்தனையில் ஒரு இந்து, பழக்கவழக்கங்களில் ஒரு இசுலாமியர், சம்பாஷணையில் அவர் பௌத்தர். எழுத்தில் எல்லா மதங்களையும் கடந்த மகாபுருஷர். மத நூல்களையும்கூட இலக்கியமாக்கும் ரசவாதத்தை பிரகாஷ் மட்டுமே நிகழ்த்த முடியும்'', என்று தஞ்சை பிரகாஷின் தனித்தன்மைகளை அவர் வியந்தார்.   சிறப்புரையாற்றிய எழுத்தாளர் 'திருப்பூர்' கிருஷ்ணன், ""வெளியிடப்பட்ட புனைவு வெளி புத்தகத்தைப் பற்றி எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும், தன்னைத் தானே வெளிச்சப்படுத்திக் கொள்கிறவர்கள், குழு சார்ந்து இயங்குபவர்கள், ஒரே ஒரு மலர்க் கிரீடம் வைத்தாலும் கூச்சப்படுபவர்களுக்கு மத்தியில் தானே எப்பொழுதும் பல கிரீடங்களை அணிந்துகொண்டே வலம் வருபவர்கள், அதிகமாகிவிட்ட இந்த எழுத்துலகில், மறைந்துவிட்ட, மறக்கப்பட்ட பல அரிய எழுத்தாளர்களை நினைவில் கொண்டு, அவர்களைப் பற்றி எழுதியுள்ள நா.விச்வநாதன் கொண்டாடப்பட வேண்டியவர். அவர் இன்னும் பல எழுத்தாளர்களைப் பற்றியும் எழுத வேண்டும்"", என்று "புனைவுவெளி' நூலைப் பற்றிய தன் கருத்தை வெளியிட்டு அந்நூலை எழுதிய நா.விச்வநாதனைப் பாராட்டினார்.

""தஞ்சாவூர்ல இருந்து எழுதினாலே ராயர் கஃபே, "கம கம'னு  ஃபில்டர் காபினு ஆரம்பிக்க வேண்டியதில்லை. தி.ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ்னு அந்தத் தலைமுறையத் தாண்டி அடுத்து நாம என்ன செய்திருக்கோம். காலம் மாறியிருக்கு, ஆனால் அதற்கேற்ப நம் மதிப்பீடுகள் மாறியிருக்கா? "கீழவெண்மணி'னு ஊர்ல அவ்வளவு பெரிய படுகொலை நடந்தது, இன்று வரை அதை சரியாக ஆவணப்படுத்திய ஒரு நாவல்கூட இல்லை. ஏனென்றால், நம் வாழ்க்கையில் அது உறைக்கவில்லை. நமக்கு அது ஒரு சம்பவமாக மட்டும்தான் தெரியும். தலித் இலக்கியத்தை தலித்துகள் தான் எழுதவேண்டுமா? தஞ்சை வட்டாரத்தில் இருந்து வந்த மிகப்பெரிய எழுத்தாளர், ஆளுமை கலைஞர் கருணாநிதி. அவரைப் பற்றி நாம் என்ன பதிவுகளை உருவாக்கியிருக்கிறோம்?''

என்று தன் ஆதங்கத்தை அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு கடத்திச்சென்றார் பத்திரிகையாளர் சமஸ்.                

""பாட்டிகள் கதை சொல்வதாய்த்தான் நாம் பெரும்பாலும் கேட்டிருக்கிறோம். அப்படியென்றால் தாத்தாக்கள் என்னதான் செய்தார்கள்? அவர்கள் ஏன் கதை சொல்லவில்லை. அவர்கள் சொல்லியிருக்கிறார்கள், பாட்டிகளிடம். அந்தக்  கதைகளைத்தான் பாட்டிகள் குழந்தைகளுக்கு சொல்கிறார்கள். "வடை சுடும் பாட்டி ஏன் நிலாவுக்கே சென்று சுடுகிறாள்?' என்று என் பேரன் என்னைக் கேட்டான். நான் திகைத்தேன். அதற்கு காரணமா இருக்கிறது?  நரி வடையைத் திருடியது என்கிறோம். நரிக்கு வடை பிடிக்குமா? எங்காவது நரி வடை சாப்பிட்டு நாம் பார்த்திருக்கிறோமா? கேட்க ஆளிருந்தால் கதையில் என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம். அதுதான் கதைகள் நமக்குக் கொடுக்கும் சுதந்திரம்.

அதனால் தான் இன்று முதல்வர் வரை கதை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்"", என்று கதைகளின் கதையைச்  சொன்னார் முனைவர் ராஜேந்திரன்.         
          
 இந்த விழாவில் இயக்குனர் பிருந்தாசாரதி, ஜெய பாஸ்கரன், மானா பாஸ்கரன், சுந்தரபுத்தன் எழுத்தாளர் ஆரூர் புதியவன் உள்ளிட்ட பல இலக்கியவாதிகள், கல்வியாளர்கள், படைப்பாளிகள் கலந்துகொண்டனர். நிகழ்வின் அங்கமாக எழுத்தாளர் நா.விச்வநாதன் எழுதிய 'புனைவு வெளி' நூல் வெளியிடப்பட்டது. நூலை எழுதிய நா. விச்வநாதனுக்கு தஞ்சை பிரகாஷ் இலக்கிய விருது வழங்கப்பட்டது.

அதேபோல் இனிய உதயம் இணையாசிரியர் ஆரூர் தமிழ்நாடனுக்கு தஞ்சை பிரகாஷ் கவிதை விருது வழங்கப்பட்டது. அவர், தஞ்சை பிரகாஷுடன் தனக்கிருந்த நட்பு பற்றி விவரித்ததோடு, விழாவை நடத்திய பேசும் புதிய சக்தி ஆசிரியர் ஜெ. ஜெயகாந்தனின் தந்தையாரான எழுத்தாளர் ராஜகுரு பற்றிய நினைவு களையும் பகிர்ந்துகொண்டார். பேசும் புதிய சக்தி ஆசிரியர் ஜெ. ஜெயகாந்தன் நன்றியுரையுடன் விழா இனிது நிறைந்தது.

-வசந்த் பாலகிருஷ்ணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :