Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
Logo
பொது அறிவு உலகம்
இந்தியாவின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
 ................................................................
புதிய கிராம நலத்திட்டங்கள்
 ................................................................
பொருளாதார ஆய்வறிக்கை இரண்டாம் பகுதி
 ................................................................
சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வு - கோவி. லெனின்
 ................................................................
01-10-17ரகங்களின் பெரும்பான்மையான வளர்ச்சி மற்றும் நல்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஊரக வளர்ச்சி நலவாழ்வு அமைச்சகம், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. வளர்ச்சியை நோக்கி உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், சமூகபாதுகாப்பு வழங்குதல், வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை பெருக்குதல் ஆகியவற்றின் மூலம், வறுமை ஒழிப்புக்கான பலமுனை மூலோபாயம் மூலம் ஊரக இந்தியாவின் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியே அமைச்சகத்தின் பார்வையும், நோக்கமும் ஆகும். ஊரக இந்தியாவில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது, சமமற்ற மேம்பாட்டினை சரிசெய்வது, சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியினரை சென்றடைவது உள்ளிட்டவை ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் எதிர்பார்ப்புகள் ஆகும்.

 ஊரக வளர்ச்சி என்பது மக்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் பெரிய சமூக மாற்றம் ஆகிய இரண்டையும் குறிக்கிறது. ஊரக வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, திட்டமிடல் விரிவுபடுத்துதல், நில சீர்திருத்தங்களை சிறப்பாக அமல்படுத்துதல் மற்றும் கடனுக்கான அதிக வாய்ப்புகள் ஆகியநல்ல வாய்ப்புகள் ஊரகப் பகுதி மக்களுக்கு சிறந்த முறையில் வழங்கப்படுகின்றன.

 ஆரம்பத்தில், வளர்ச்சிக்கு பிரதான உந்துதலானது விவசாயம், தொழில், தகவல் தொடர்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் அமைக்கப்பட்டது. பின்னர், அடிமட்டத்தில் இருந்து மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடுவதன் மூலம் அரசாங்க முயற்சிகள் போதுமானதாக வழங்கப் பட்டால் விரைவான வளர்ச்சி ஏற்படலாம் என்பதை உணர்ந்து, உந்துதல் மாறிவிட்டது.

இது, இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்ட அறிவிப்பின் மூலம் தெளிவாக தெரிகிறது. 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ஊரக, விவசாயம் மற்றும் துணை துறைகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ரூ.1,87,223 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். கடந்த ஆண்டுஒதுக்கீடு தொகையை விட 24 சதவீதம் அதிகமாகும். மறுபுறம், மீண்டும் மீண்டும் வறட்சி காரணமாக ஊரகத் துயரங்கள் அதிகரித்து வருவதால் இது அவசியமாகிறது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, மக்களுடைய அனைத்துவித அபிவிருத்திகளுக்கும் அதன் திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் புதிய மைல்கற்கள் தொடர்பாக கணிசமான முக்கியத்துவம் கொடுத்து, ஊரக வளர்ச்சி, சமூகத்தின் மாற்றத்திற்கான முக்கிய மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.

 இது போன்ற திட்டங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (MGNREGA)  ஒன்றாகும். இத்திட்டத்தின் நோக்கமானது, நாட்டின் ஊரகங்களில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதார பாதுகாப்பை விரிவுபடுத்துவதாகும். இத்திட்டத்தின்படி, ஒரு நிதியாண்டில், 100 நாட்களுக்கு குறையாமல், அனைத்து குடும்பங்களிலும் இளம் உறுப்பினர்களுக்கு ஊதிய வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 2016-17 நிதியாண்டில் MGNREGA இல் முன்னெப்போதும் இல்லாத அளவிலான நீர்ப்பாசனம் தொடர்பான  நீடித்த உந்துதலைக் கண்டன.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஏழை பிராந்தியங்களில் வாழ்வாதார பாதுகாப்புக்காக நீடித்த சொத்துக்களை உருவாக்கி, தேவைக்கேற்ப வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமாக தன்னை நிறுவியது. ஆதார்எண் இணைக்கப்பட்ட 82 சதவீதத்துக்கும் மேற்பட்ட செயல் பணியாளர்கள் (9.1கோடி), ஆதார் தொடர்புடைய பரிவர்த்தனை அமைப்புடன் இணைக்கப்பட்ட 4.6 கோடிபணியாளர்கள் இத்திட்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு 96 சதவீதம் வங்கி, தபால் கணக்குகள் மூலம் மின்னணு பரிவர்த்தனையில் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. 89 லட்சம் சொத்துக்கள் பூகோள குறிச்சொல், 93 லட்சம் வேலைவாய்ப்புகள் முறையான சரிபார்ப்பு மூலம் இதுவரை நீக்கப்பட்டது. மழையளவு குறைவான பகுதிகளில் வறட்சி நீர்ப்பாசன நீர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 முதல் முறையாக, தொழிலாளர் வரவு-செலவுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டபோது மாநிலங்களின் இழப்பு நிலைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. 2016-17 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் தொடர்ந்து வறட்சியின் காரணமாக, வேலைக்கான முன்னோடியில்லாத கோரிக்கைகள் வரப்பெற்றன. அதன் பின்னர், 75% மாவட்டங்களில் நல்ல பருவமழை பெய்த போதிலும், கர்நாடகா போன்ற வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் தேவை அதிகரித்தது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வேலை தேவை மீண்டும் உயர்ந்தது. ஙஏசதஊஏஆ திட்டம் எட்டிய 230 கோடி தனிநபர் வேலை நாட்களானது திருத்தியமைக்கப்பட்ட தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தை விட அதிகமாக உள்ளது. இதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.58,056 கோடி (மத்திய, மாநில அரசுகள் இணைந்து). இது கடந்த எந்த ஆண்டை காட்டிலும் அதிகமானதாகும். அதே போல 56% பெண்களுக்கு ஊதிய வேலைவாய்ப்பு வழங்கப் பட்டிருப்பதும் முன்னெப்போதைக் காட்டிலும் அதிகமாகும்.

 ஊரகங்களுடன் வேலைவாய்ப்புகளை இணைப்ப தற்காக, பிரதான மந்திரி கிராம் சடக் யோஜனா
(பி.எம்.ஜி.எஸ்.எஸ்) என்ற கிராம சாலை திட்டம் மூலம் 2016-17-ஆம் ஆண்டில் 47,350 கி.மீ. தொலைவுக்கு ஊரக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் கடந்த 7 ஆண்டுகளில், ஒரே வருடத்தில் அமைக்கப்பட்ட அதிகபட்சமான சாலை கட்டுமானப் பணிகள் இதுவாகும். 2011-14 காலப்பகுதியில், டஙஏநவ சாலைகளின் சராசரி வீதம் 73 கி.மீ ஆகும்.2014-15 மற்றும் 2015-16 ஆண்டுகளில்இது, நாள் ஒன்றுக்கு, 100 கி.மீ. அதிகரிக்கப்பட்டுள்ளது, 2016-17 ஆண்டில், ஒருநாளைக்கு 130 கி.மீ. என்ற அளவில் கட்டுமான பணி அதிகரித்துள்ளது. இதுவே கடந்த 7 ஆண்டுகளில் அதிகப்படியான சராசரி வருடாந்த கட்டுமான விகிதமாகும்.

 ஊரக சாலைகளில் ""கார்பன் கால்தடம்'' குறைக்கும் நோக்கில், சுற்றுச்சூழல் மாசுபாடு குறைக்க, வேலை பருவத்தை அதிகரிக்கவும் மற்றும் செலவு செயல்திறனை கொண்டு செயல்படுத்தப்படுகிறது. டஙஏநவ சாலைகளில் ""பசுமை தொழில்நுட்பங்கள்'' மற்றும் கழிவு பிளாஸ்டிக், குளிர் கலவை, ஜியோ போன்ற வழக்கமாக அல்லாத பொருட்கள் பயன்பாடு மிக தீவிரமாக ஊக்குவிக்கப் பட்டுள்ளது. 2016-17-ஆம் ஆண்டுகளில் பசுமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 4,113.13 கி.மீ அமைக்கப்பட்டுள்ளது. இது 2014-2016-ஆம் ஆண்டில் 2,634.02 கி.மீ. விடவும், 2000-2014-ஆம் ஆண்டில் 806.93 கி.மீ தூரத்தை காட்டிலும் மிக அதிகமாகும்.

 இதேபோல் ஊரக ஏழைகளின் தங்குமிட தேவைகளை நிறைவேற்ற 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (பிஎம்ஏ-ஜி) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். புதிய ஊரக வீட்டு வேலைத்திட்டம் குடும்பங்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வடிவமைக்கப் பட்டுள்ளது. அது, அதிக அலகு செலவில், உள்ளூர் பொருட்கள் மற்றும் உள்ளூர் வீட்டு வடிவமைப்புகளை பயன்படுத்தி கட்டுமானங்களை அனுமதிக்கிறது. வீடுகள், சமையல் அறை, கழிப்பறை, எல்.பி.ஜி. இணைப்பு, மின் இணைப்பு மற்றும் நீர் வழங்கல் ஆகியவை அதிகரித்து, பயனாளிகள் தங்கள் தேவைக்கேற்ப தங்கள் வீடுகளை திட்டமிடலாம். தரமான கட்டுமானத்திற்கான திறன்வாய்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய ஊரக கொத்தனார்களுக்கு பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஓட்டு கூரையுடன் கூடிய 0, 1, 2 கூரை அறைகள் கொண்டவர்கள் சமூக பொருளாதார மக்கள்தொகை (எஸ்.இ.சி.சி.) கணக்கெடுப்பின் மூலம் அடையாளம் காணப்பட்டு, கடுமையான செயல்முறை மூலமே பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும், சமூக பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள் கிராம சபையின் மூலம் சரிபார்க்கப்பட்டு, எந்தவொரு பிழையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தபடுகிறது. 2014 மத்திய கணக்கு தணிக்கை வாரிய (சி.ஏ.ஜி.) அறிக்கையில், இந்திரா ஆவாஸ் யோஜனா (ஐ.ஏ.ஒய்.)  திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளிகளின் பிரச்சினையை மேற்கோள்காட்டியிருக்கிறது. எனவே, பி.எம்.ஏ.ஏ.ஜி. திட்டத்தின் கீழ் 3 வடிகட்டி தேர்வு செயல்முறையின் மூலம் பயனாளிகள் பட்டியல் முற்றிலும் கவனிக்கப்பட்டு வருகிறது. 2016-17-இல் அங்கீகரிக்கப்பட்ட மொத்தம் 44 லட்சம் வீடுகள், 2017 டிசம்பரில் கட்டி முடிக்கப்படும் என்று அரசு நம்புகிறது. பிஎம்ஏஏஜி திட்டத்தில், 6 முதல் 12 மாதங்கள் வரையிலான காலப்பகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 மற்றொரு முக்கிய நடவடிக்கையானது, இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தன் கீழ், 1 முதல் 4 ஆண்டு இடைவெளியில் நிலுவையில் இருக்கும் 36 லட்சம் வீடுகளின் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என்பதாகும். மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி, 2016-17 ஆம் ஆண்டில் மொத்தம் 32.14 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, அசாம் போன்ற மாநிலங்கள்
பி.எம்.ஏ.ஏ.ஜி. திட்டத்தின் செயல்பாட்டில் முன்னணியில் உள்ளன. பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், அசாம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள், முடிவடையாமல் இருந்த ஏராளமான இந்திரா ஆவாஸ் யோஜனா வீடுகளை நிறைவு செய்துள்ளன.

 2017-18-ஆம் ஆண்டில் 51 லட்சம் வீடுகளை நிறைவு செய்ய ஊரக வளர்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது. கூடுதலாக 33 லட்சம் வீடுகள் விரைவில் 2017-18-இல் அனுமதிக்கப்படும். இதேபோன்ற எண்ணிக்கையிலான வீடுகளை 2018-19-ஆம் ஆண்டில் முடிக்கவும், 2016-19 காலகட்டத்தில் 1.35 கோடி வீடுகளை கட்டி முடிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2022-க்குள் வீட்டுவசதிக்கான வழிவகுக்கும்.

சான்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜனா (எஸ்.ஏ.ஜி.ஒய்.) என்று அழைக்கப்படும் மற்றொரு முக்கிய திட்டம், தேசப் பிதாவான மகாத்மா காந்தியின் பரந்த மற்றும் இயற்கை உணவு தொலைநோக்கு பார்வையை ஊரக வளர்ச்சியில் யதார்த்தத்தில் கொண்டு வரும் முயற்சியாகும். இந்த திட்டத்தின் குறிக்கோள், புதுமை மூலம் மாடல் கிராமங்களை உருவாக்குவதோடு அண்டை கிராம பஞ்சாயத்துகளை ஊக்குவிப்பதும் ஆகும். 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 ஆதர்ஷ் கிராம பஞ்சாயத்துகளையும், 2016-இல், ஒரு ஆதர்ஷ் கிராம பஞ்சாயத்தையும், 2019-ஆம் ஆண்டுக்குள் மேலும் 2 ஆதர்ஷ் கிராம பஞ்சாயத்துக்களையும் உருவாக்க வேண்டும். அதன் பிறகு, 2024-ஆம் ஆண்டுக்குள், 5 ஆதர்ஷ் கிராமங்கள் (வருடத்திற்கு ஒன்று என்ற ரீதியில்) உருவாக்கப்பட வேண்டும்.

 ஒரு கிராம பஞ்சாயத்தின் அடிப்படை அலகானது, வெற்று பகுதிகளில் மக்கள்தொகை 3000 முதல் 5000 என்ற அளவிலும், பழங்குடி, கடினமான மற்றும் மலைப்பகுதிகளில் 1000 முதல் 3000 என்ற அளவிலும் இருக்க வேண்டும். எம்பிக்கள், ஆதர்ஷ் கிராமங்களாக மேம்படுத்த உள்ள கிராமங்களை சுதந்திரமாக தேர்வு செய்து கொள்ளலாம்.

அது அவர்களின் சொந்த கிராமமாகவும், மனைவி அல்லது கணவரின் சொந்த கிராமமாக கூட இருக்கலாம். இத்திட்டத்தின் கீழ், கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் ஏற்றுக் கொள்ளப்படும்.

இதுவரை 897 கிராம பஞ்சாயத்துகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர். மாநிலங்களில் 21,926 திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு 40,962 திட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல எஸ்.ஏ.ஜி.ஒய். கிராம பஞ்சாயத்துகளில் முழுமையான வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது. எஸ்.ஏ.ஜி.ஒய். திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் மேம்பாடானது, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாமல், தற்போதுள்ள அரசு திட்டங்கள் மற்றும் வேறு பல திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் வளர்ச்சி காண்பதாகும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :