Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
Logo
பொது அறிவு உலகம்
இந்தியாவின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
 ................................................................
புதிய கிராம நலத்திட்டங்கள்
 ................................................................
பொருளாதார ஆய்வறிக்கை இரண்டாம் பகுதி
 ................................................................
சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வு - கோவி. லெனின்
 ................................................................
01-10-17
றுமை நிலையை மீறி அருமையாகப் படித்து 1176 மதிப்பெண்கள் பெற்ற மாணவி அனிதாவின் உயிரைப் பறித்ததுதான் நீட் தேர்வின் உடனடி கொடூர விளைவு. இதன் எதிர்கால விளைவுகள் இன்னும் என்னென்ன ஆபத்துகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் பெரும் பாலோரிடம் இருக்கிறது. அதற்கு எதிர்த்திசையில், நீட் தேர்வை எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், தமிழ்நாடு மட்டும் புறக்கணிக்க முடியாது என்றும், மாநில கல்வித் தரத்தை அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் ஏற்ற வகையில் உருவாக்க வேண்டும் என்றும் குரல்கள் ஒலிக்கின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2007-ஆம் ஆண்டிலிருந்து மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு +2 வகுப்பில் அறிவியல் பிரிவு எடுத்த மாணவர்கள், பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், மருத்துவக் கல்விக்கான கட் ஆஃப் மார்க் நிர்ணயிக்கப்பட்டு, அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்த அரியலூர் மாணவி அனிதா ஏறத்தாழ 196 என்கிற அளவுக்கு கட்ஆஃப் மார்க் எடுத்திருந்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அனிதாவுக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத் திருக்கும். ஆனால் நீட் தேர்வில் அவரால் உரிய மதிப்பெண் பெற முடியாததால், அரசு மருத்துவக் கல்லூரி எதிலுமே இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தாங்க முடியாமல்தான் தற்கொலை செய்து கொண்டார் அனிதா. நீட் தேர்வு அவரது உயிரைப் பறித்துவிட்டது.

நீட் (சஊஊப) என்பது தேசிய தகுதி-நுழைவுத் தேர்வு. சஹற்ண்ர்ய்ஹப் ஊப்ண்ஞ்ண்க்ஷண்ப்ண்ற்ஹ் ஊய்ற்ழ்ஹய்ஸ்ரீங் பங்ள்ற். மருத்துவத் துறையில் இது மூன்று பிரிவுகளுக்கு நடத்தப்படுகிறது. எம்.பி.பி.எஸ். படிக்க விரும்புவோருக்கான தேர்வு, மருத்துவ மேற்படிப்பான எம்.எஸ்., எம்.டி. போன்றவற்றிற்கான தேர்வு, இதன்பிறகு பயிலும் சிறப்பு மருத்துவமான டி.சி.ஹெச் போன்றவற்றிற்கான தேர்வு என நீட் தேர்வு மூன்று வகையாக உள்ளது. இதில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்குத்தான் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

அதுவும், தனியார் மருத்துவக் கல்லூரிகள்-நிகர் நிலைப்பல்கலைக்கழகங்களில் அதிக விலைக்கு விற்கப்படும் இடங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் நடைபெறும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இல்லை. தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான நீட் தேர்வுக்கு மட்டுமே எதிர்ப்பு வலுக்கிறது. நீட் தேர்விலிருந்து இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னணியில் உள்ள மாநிலம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி, உயர்சிறப்பு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாய்-சேய் நல விடுதிகள் எனத் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு கிராமப்புறங்கள் வரை விரிந்து ஏழை-நடுத்தர மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை அளிக்கிறது. இவற்றில் குறைபாடுகள் உண்டு என்றாலும், இந்தியாவில் உள்ள மற்ற எந்த மாநிலத்தைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அரசு மருத்துவ சிகிச்சை என்பது நல்ல முறையிலேயே இருக்கிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை, உயர் சிகிச்சைக்காக முதல்வரின் விரிவாக்கப்பட்ட இலவச காப்பீட்டுத் திட்டம் போன்றவை எளியோருக்கும் பேருதவியாக இருக்கிறது. இந்நிலையில், அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்களில் +2 மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் போது, மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற அனிதா போன்ற ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த கிராமப்புறத்தில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்கள் இடம் பிடிக்க முடியும்.

நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவக் கல்விக்கு அனுமதி என்றால், இந்தியாவில் அந்தந்த மாநிலத்தின் சூழலுக்கேற்ப பாடத்திட்டங்கள் உள்ள நிலையில், ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்பது எந்த விதத்திலும் சரியாக இருக்க முடியாது. அதிலும், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நகர்ப்புறங்களை சார்ந்தே இருக்கின்றன. அதில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வு எளிமையானதாகவும் மற்றவர்களுக்கு கடினமாகவும் அமைந்துவிடுகிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர் களே டாக்டருக்குப் படிக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை கிராமம்-நகரம் இரண்டிலிருந்தும் மருத்துவ மாணவர்கள் தேர்வாவதுடன், இரு இடங்களிலும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் அவர்கள் பணியாற்றுகிறார்கள். இதுதான் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மாநிலக் கல்வியின் சிறப்பு. மருத்துவம்-பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகம் பயின்று இந்தியா விலும் வெளிநாடுகளிலும் தங்கள் திறமைகளை வெளிப் படுத்தி வருகிறார்கள்.

+2 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்பு பயில அனுமதி கிடைத்து வந்தவரை அனைத்துத் தரப்புக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. நீட் தேர்வுக்கு நகர்ப்புறம் சார்ந்து தனியே பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். அதற்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டும். இது கிராமப்புற-ஏழை மாணவர்களுக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களுக்கும் சாத்தியமாவதில்லை. நீட் அடிப்படையில் மருத்துவப் படிப்பு என்றால் இந்த மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு தகர்க்கப்படும். அதுதான் மாணவி அனிதாவுக்கு நேர்ந்தது.

வேலூரில் உள்ள புகழ்பெற்ற சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் அரசாங்க கட்டணத்தைவிட மிகவும் குறைந்த கட்டணத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பு சொல்லித் தரப்படுகிறது. அங்கு பயின்ற மாணவர்கள் பலரும் மருத்துவர்களாகி, சி.எம்.சி. நிறுவனத்தின் சார்பில் மலைகிராமங்களில் நடத்தப்படும் மருத்துவமனைகளில் பணியாற்றுகிறார்கள். குறைந்த கட்டணத்தில் படித்து டாக்டராவதால்தான் அவர்களால் மலை கிராமங்களில் பணியாற்ற முடிகிறது. அதிக கட்டணம் செலவழித்தால், அவர்கள் அதனை வருமானமாக்க பெரிய நகரங்களைச் சார்ந்தே மருத்துவராகப் பயிற்சி மேற்கொள்ள முடியும். அதனால், லட்சக்கணக்கில் செலவு செய்து நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்று மருத்துவப்படிப்புக்கு வருபவர்களை நாங்கள் ஏற்க முடியாது என சி.எம்.சி. நிர்வாகம் உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்பதன் நோக்கமும் இத்தகையதுதான். ஏழை-பணக்காரர், உயர்ந்தோர்- தாழ்த்தப்பட்டோர், கிராமம்-நகரம் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் மருத்துவம் பயில தமிழகத்தின் கல்விச்சூழல் இடமளிக்கிறது இது நீட் தேர்வினால் கடுமையான பாதிப்புக்குள்ளாகிறது.

நீட் தேர்வு என்பது தேசிய அளவில் நடத்தப்படும் உலகளாவிய நுழைவுத் தேர்வு. இதில் இந்தியர்கள்,   வெளிநாட்டினர், சதஒ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் என யார் வேண்டுமானாலும் பங்கெடுக்கலாம். அதாவது, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி இடங்களை இவர்கள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பங்கிட்டுக் கொள்ள முடியும்.

இம்முறை நீட் தேர்வு எழுதி மருத்துவ இடம் பெற்றவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு புள்ளி விவரம்.

நீட் தேர்வு எழுத அப்ளிகேஷன் போட்ட இந்தியர்கள் 11,36,206,  எழுதியவர்கள் 1087840, பாஸ் செய்தவர்கள் 6,09,000. 6 லட்சம் இந்தியர்கள் பாஸ் செய்தாலும் அவர்களுக்கு மருத்துவ சீட் கிடைத்ததா என்றால் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசுப் பள்ளியில் படித்து +2 எழுதிய மாணவர்களில் 5 பேருக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்துள்ளது.

அதே நேரத்தில் நீட் தேர்வுக்கு அப்ளிகேஷன் போட்ட வெளிநாட்டினர் 612. தேர்வு எழுதியவர்கள் 391, அவர்களில் வெற்றி பெற்று சீட் வாங்கியவர்கள் 245. இதுபோல வெளிநாடு வாழ் இந்தியர்களில் தேர்வு எழுதியவர்கள் 1370. சீட் வாங்கியவர்கள் 1106.

ஒரு மாநிலத்தில் படித்தவர்கள், அந்த மாநில அரசாங்கத்தால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாதநிலையில், வெளிநாட்டவரும்-வெளிநாட்டு வாழ் இந்தியரும், இந்திய வம்சாவளியினரும் அதனை ஆக்கிரமித்துக்கொள்ள நீட் தேர்வு அனுமதிக்கிறது.

அதுமட்டுமின்றி, எம்.சி.ஐ. எனப்படும் மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் பரிந்துரைப்படி நடத்தப்படும் நீட் தேர்வினை ஏற்பாடு செய்வது சி.பி.எஸ்.இ. கல்வி நிர்வாகம். அதனை முழுமையாக நடத்துவது டழ்ர்ம்ங்ற்ழ்ண்ஸ்ரீ என்கிற அமெரிக்க நிறுவனம் சென்ற ஆண்டில் இந்த நிறுவனத்தின் இணையதளம் ஹேக் செய்ப்பட்டு நீட் தேர்வு வினாக்கள் திருடப்பட்டது என்று அந்த நிறுவனமே ஒத்துக்கொண்டுள்ளது .

அரசாங்க மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை அனைத்துத் தரப்பு மாணவர்களும் இடம்பெற்று வந்தநிலையில் அதனைப் பறித்து, இந்திய அளவிலும் உலக அளவிலுமான பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலையை நீட் தேர்வு செய்கிறது. அதனால்தான் நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு கோருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்கின்ற நிலையில், தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க சட்டம் இடமளிக்குமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் முதல் திருத்தமே, தமிழகத்தில் மருத்துவ- பொறியியல் படிப்புகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டினை பாதுகாப்பதற்காக செய்யப்பட்டதுதான். பிரதமர் நேரு ஆட்சிக்காலத்தில் 1951-ஆம் ஆண்டில், தமிழகத்தின் இடஒதுக்கீட்டு சட்டமான வகுப்பு வாரி உரிமைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தபோது, இந்த சட்டத்திருத்தம் செய்யப் பட்டது. அதுபோலவே 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், முன்பிருந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்யவும் தமிழகத்திற்கென தனி சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு குடியரசுத் தலைவர் அனுமதியுடன் சட்ட அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரியும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மத்தியஅரசு அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை.

மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதுபோல மாநில அரசின் சுகாதாரத்துறையின்கீழ் இருக்கும் அரசுமருத்துவக் கல்லூரிகளுக்கும் விலக்குத் தரப்படவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கல்வியை மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைவு பட்டியலில் வைத்திருப்பதால், மத்திய அரசு கூடுதல் அதிகாரம் செலுத்துகிறது. அதனை மாநில அரசின் பட்டியலுக்கு முழுமையாகக் கொண்டு வந்து, மத்திய அரசின் நிதி உதவியுடன் தரமான-இலவச-கட்டாயக்கல்வியை அனைத்துத் தரப்புக்கும் வழங்கும் நிலை உருவாக்கப்படவேண்டும். கல்வி நிறுவனங்கள் வணிகமயமாவது தடுக்கப்படவேண்டும். காலத்திற்கேற்ற பாடத்திட்டங்களும்- கட்டமைப்புகளும் மேற்கொள்ளப் படவேண்டும். அப்போதுதான் நீட் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து நிரந்தர விடுதலையைப் பெற முடியும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :