Add1
logo
சச்சின் சாதனையை சமன் செய்த இளம் வீரர்! || என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன் || ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த சென்னைப் பெண்! || காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் விளையாடாமல் தங்கம் வென்ற வீரர்! || மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய நிர்மலா சீதாராமன்: மு.க.ஸ்டாலின் வேதனை || ‘தோட்டாக்கள் எங்கிருந்து வந்தது என்றே தெரியாது!’ - நிர்மலா சீத்தாராமன் சர்ச்சை கருத்து || என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குத்தான் புரியும்: விஜயகாந்த் || சீனாவின் லட்சிய திட்டத்தை எதிர்க்கும் ஒரே தலைவர் மோடி? || மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் || காங்கிரஸ் உடன் சேர்ந்து இடதுசாரிகள் பா.ஜ.க.வை எதிர்க்கவேண்டும்! - மன்மோகன் சிங் || மூன்றாவது நாளிலும் முடியாத முதல் இன்னிங்க்ஸ் - மழை ஆடும் ஆட்டம்! || ஜெ. பெயரைக் கெடுக்க சசிகலா குடும்பத்தின் சதித்திட்டமே ரெய்டு!- தீபா ஆதங்கம் || போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை ||
Logo
இனிய உதயம்
காலை நிலாவும் மாலைச் சூரியனும்...
 ................................................................
காதல் அடைவது உயிரியற்கை!
 ................................................................
போட்டியில் வென்ற மாணவர் வைரமுத்து!
 ................................................................
பெரியாரும் பெண் விடுதலையும்
 ................................................................
சொல்ல மறக்காத கதை
 ................................................................
கவிக்கோ வீட்டில் புதையல்!
 ................................................................
கிராமத்துக் கவிதைக்காரர்...
 ................................................................
கவிதைகள்
 ................................................................
வேடிக்கை பார்க்கிறோம்!
 ................................................................
01-09-2017
ந்த நூற்றாண்டின் மகாகவிகளில் பிரதானமானவர் கவிக்கோ அப்துல் ரகுமான். அவர் மறைந்து ஏறத்தாழ மூன்று மாதங்கள் ஆகின்றன. எனினும், அவரது நினைவுகள் கொஞ்சமும் வெளிரவில்லை.

கவிக்கோவின் இழப்பை ஜீரணிக்க முடியாத அவரது கவிதை ரசிகர்கள், இன்னும் கலக்கத்தில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவரது கவிதை நூல்களை ஏக்கமாய்ப் புரட்டுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் அவரது கவிதைகளையும் நினைவுகளையும் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் அவருக்கான அஞ்சலிக் கூட்டங்கள் முடியவில்லை. தமிழகம் தாண்டியும் அவரது நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன.கவிக்கோ நம்மை விட்டு விடைபெற்றா லும், அவர் நமக்காக நிறைய கவிதைகளை விட்டுவிட்டுத்தான் போயிருக்கிறார்.

மரணம் முற்றுப்புள்ளியல்ல என்று சொன்னவர், அதை நிரூபிப்பதற்காக... தன் மரணத்தின் பின்னும் தனது கவிதைகள் மலர்ந்து மணம் வீசவேண்டும்  என்ற எண்ணத்தில், நிறைய கவிதைகளை படைத்து வைத்துவிட்டுதான் சென்றிருக்கிறார்.

காலம் தமக்கு அவகாசம் தராது என்பதை எப்படி உணர்ந்தாரோ தெரியவில்லை. உடல் தளர்ந்திருந்த நிலையிலும் கவிக்கோ, இடைவிடாது  நிறைய கவிதைகளை எழுதி வைத்துவிட்டுதான்... மரண தேவனின் வாகனத்தில் ஏறிச்சென்றிருக்கிறார். தனது மரணம் பொசுக்கென ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்று, புதிது புதிதாய்க் கவிதைகளை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.கவிக்கோவின் பனையூர் இல்லத்துக்கு நண்பரும் கவிஞருமான ஜலாலுதீனுடன் சென்றோம். 

அங்கே அவரது பேரனும் மருத்துவருமான அசீம், தமது தாத்தாவின்  கனிவோடு வரவேற்றார். 

வீடு முழுக்க வெறுமையாய் நிறைந்திருந்தார்  கவிக்கோ. அவர் எப்போதும் அமர்ந்திருக்கும் வரவேற்பறையில், அவரது இருக்கை  காலியாக இருந்தது. வீடு முழுக்க அவரது நினைவுகள் படிந்திருக்க, அவரது தனி அறைக்குள் சென்றோம். அவர் சுவாசம் கலந்த காற்று புழுக்கத்தில் இருக்க அவரது நாற்காலி தனிமைத் துயரத்தில் இருந்தது.  அடுக்கி வைக்கப்பட்டிருந்த அவரது நூல்கள் நிசப்தத்தில் உறைந்திருந்தன.

மேஜை முழுக்க கவிதைக் காகிதங்கள்.... கவிதை ஏடுகள், புத்தகங்கள் என எல்லாமும் அப்படியே இருந்தன.நூல்வடிவம் பெறுவதற்காக அவர் நிறைய கவிதைகளை எழுதி வைத்திருந்தார்.  அவை விரைவில் உன்னதமான காவியப் படையல்களாய் வெளிவர இருக்கின்றன. அதற்கிடையே நம் "இனிய உதயம்' வாசகர்களுக்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகளும் விலைமதிப்பற்ற புதையலாய்க்  கிடைத்தன. முத்து முத்தான கையெழுத்தில் நம் வாசகர்களுக்காக விட்டுச்சென்றிருக்கும் வெகுமதிகள் அவை. அவற்றை இயன்றவரைத் தொடர்ந்து "இனிய உதயம்' வாசகர்களுக்கு  வழங்க இருக்கிறோம். இதற்குப் பெருந்தன்மை யோடு இசைவளித்த கவிக்கோவின் மகள் வஹிதா, மருமகன் அஸ்லம்பாஷா பேரனும்    டாக்டருமான அசீம் உள்ளிட்டோருக்கு இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்து,

கவிக்கோவின் "அழகை ஆராதிப்போம்' கவிதைத் தொடரை மேலும் சில இதழ்களுக்குத் தொடர்கிறோம். கவிக்கோவின் சிந்தனைகளும் கவிதைகளும் அவரில்லாத வெறுமையைச் சுமந்தபடி, உங்கள் முன் எழுந்துவருகின்றன. கவிக்கோவின் எழுத்துக்களில், நின்றுபோய்விட்ட அவரின் இதயத்துடிப்பு, மெல்ல உயிர்த்துத் துடிப்பதை உற்றுக்கேளுங்கள்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :