Add1
logo
சச்சின் சாதனையை சமன் செய்த இளம் வீரர்! || என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன் || ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த சென்னைப் பெண்! || காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் விளையாடாமல் தங்கம் வென்ற வீரர்! || மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய நிர்மலா சீதாராமன்: மு.க.ஸ்டாலின் வேதனை || ‘தோட்டாக்கள் எங்கிருந்து வந்தது என்றே தெரியாது!’ - நிர்மலா சீத்தாராமன் சர்ச்சை கருத்து || என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குத்தான் புரியும்: விஜயகாந்த் || சீனாவின் லட்சிய திட்டத்தை எதிர்க்கும் ஒரே தலைவர் மோடி? || மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் || காங்கிரஸ் உடன் சேர்ந்து இடதுசாரிகள் பா.ஜ.க.வை எதிர்க்கவேண்டும்! - மன்மோகன் சிங் || மூன்றாவது நாளிலும் முடியாத முதல் இன்னிங்க்ஸ் - மழை ஆடும் ஆட்டம்! || ஜெ. பெயரைக் கெடுக்க சசிகலா குடும்பத்தின் சதித்திட்டமே ரெய்டு!- தீபா ஆதங்கம் || போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை ||
Logo
ஓம்
ஆத்ம ஞானம் தரும் பகவத் நாமம்!
 ................................................................
மகா புண்ணியம் தரும் மகாளய பட்சம்!
 ................................................................
செப்டம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
ஜீவாத்மாவின் பேராற்றல்!
 ................................................................
செப்டம்பர் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
144 ஆண்டுகளுக்குப்பின் வரும் மகா புஷ்கரம்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
வாழ்வளிக்கும் வக்ரகாளி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
01-09-17


ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்


1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடையலாம். மாணவர்கள் கல்வியில் எண்ணியபடி முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். கடன் தொந்தரவுகள் உபரி வருவாயால் அடைபடும். பணச் சுமையும் குறையும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும். புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவிவழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்த கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். வரவேண்டிய இனங்கள் அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல வரன் வந்துசேரும். அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். அரசியலில் உங்களை ஒதுக்கியவர்கள் உங்களைத் தேடிவருவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாணவர்கள் இந்த மாதம் எச்சரிக்கையாகப் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். உயர்கல்வி பயில்பவர்கள் கல்விக் கூடத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டிவரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் கிட்டும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள்மூலம் லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும். நீண்டநாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்குக் கட்டுப்பட்டுவிடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன்பணிபுரிகிறவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வீண் பழிகள் வந்துசேரலாம். மேலதிகாரிகள் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடன்பிறந்த சகோதரர்கள் மனம் திருந்தி ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். சிலர் திட்டமிட்டபடி வெளிநாடு செல்வார்கள். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய மாதம். அரசியல் வாதிகள் சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாணவர்கள் இந்த மாதம் நல்ல மதிப்பெண் பெற்று, கல்வி நிறுவனங்களின் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். தைரியமாகச் செயல்படும் மாதம். பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் ஒற்றுமையால் அதிக உற்பத்தியையும் லாபத்தையும் பெறுவார்கள். தொழிலதிபர்கள் அரசால் நன்மைபெற, உதவிபெற பொறுமையுடன் செயல்படவேண்டும். வியாபாரிகள் மறைமுகப் போட்டிகளை சந்திக்கநேரும். அதிக விற்பனையைவிட, குறைந்த விற்பனையில் கூடுதல் லாபத்தைப் பெறலாம். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அயல்நாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். தந்தை- மகன் உறவு சுமுகமாகும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை விற்பனையாளர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் நல்ல நிலையை அடைவார் கள்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாணவர்கள் கல்வி, விளையாட்டுப் போட்டிகளில்  சாதனை படைக்கும் மாதம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கள் வந்துசேரும். திருமணத்திற்கு வரன் தேடுவோர், வரன்களை நன்கு ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். ஏமாற்றமடைய வாய்ப்புகள் உள்ளன. தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். தொழிலாளர் ஒற்றுமையால் லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாகலாம். சிலருக்கு லஞ்ச ஊழல் வழக்கு வரவாய்ப்புள்ளது. கவனம் தேவை. குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அதிக வருவாய் உண்டு. பிரிந்துசென்ற தம்பதியர் வழக்கு இருந்தாலும் சமாதானமாக ஒன்றுசேர்வார்கள். மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் கிட்டும். இந்த மாதம் முழுவதும் அரசியல்வாதிகளுக்கு சோதனையாக இருக்கும். அதேசமயம் அந்த சோதனைகள் வெற்றியாக மாறும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நீங்கள் எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். மாணவர்கள் கல்வி நடுநிலையாக இருக்கும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம்பெற தியானம் செய்யுங்கள். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக்கொடுப்பார்கள். செலவுகளும் அலைச்சலும் கூடும் மாதம். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். காணாமல்போன- திருட்டுப்போன பொருள் கிடைக்கும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. தொழிலதிபர்கள் புதிதாகத் தொழில் துவங்கும் திட்டம் நிறைவேறும். நல்ல தொழிலாளர்கள் கிடைப்பார்கள். வியாபாரிகள் போட்டியை முறியடித்து நல்ல லாபம் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் சிலருக்கு பதவி உயர்வுடன் மாறுதல் வரும். தற்காலிகப் பணிநீக்கம், பணிநீக்கம் உள்ளவர்கள் மீண்டும் பதவியில் அமர்த்தப்படும் காலம். வழக்குகள் வெற்றியைத் தரும். இதுவரை உங்களுக்குத் தொல்லை கொடுத்த மேலதிகாரிகள் மாறுதலில் செல்வது ஆறுதலாகும்.  அரசியல்வாதிகள் தலைமையின் பாராட்டைப் பெற்று புதிய பதவியைப் பெறுவார்கள். இளைஞர்கள் எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தநிலை மாறும். தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் அனைவருமே எடுத்த காரியத்தில் வெற்றிபெறுவார்கள். இதுவரை இருந்தவந்த மறைமுக எதிரிகள் விலகிச்செல்வார்கள். புகழ் சேரும். செல்வாக்கும் கூடும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். பெற்றோர்கள் உடல்நிலையைப் பொருத்தவரை கவனமாக இருக்கவேண்டும். கூடுதல் மருத்துவச் செலவுகள் வரும். உடன்பிறந்த சகோதரர்கள் ஒற்றுமையுண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கையால் பெண்கள் மகிழ்ச்சி பெறுவார்கள். பெண்வழி சொத்துகள் பேச்சுவார்த்தைமூலம் கிடைக்கும். பிறந்த வீட்டுப் பெருமையால் மகிழ்ச்சி கொள்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வெளியூர் வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்களின் பாராட்டைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாணவர்களுக்கு படிப்பில் இருந்துவந்த மந்தநிலை மாறும். தொழிலதிபர்கள் புதிதாகத் தொழில் துவங்கும் காலம். தொழிலாளர்கள் ஒற்றுமைக்குக் குறைவிருக்காது. வெளிநாட்டு வர்த்தகம் நல்ல லாபத்தைத் தரும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஊழியர்கள் பக்கபலமாக உழைப்பார்கள். சில வியாபாரிகள் புதிய கிளையும் துவங்குவார்கள். கணவன்- மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அரசு ஊழியர்கள் விழிப்புடனும் நேர்மையுடனும் பணியாற்றும் காலம். புதிய பொறுப்புகளையும் பதவி உயர்வுகளையும் பெறுவார்கள். எல்லாராலும் பாராட்டப்படுவார்கள். காவல்துறையில் பணிபுரிவோர் பணிச்சுமை கூடும்; பொதுமக்களால் பாராட்டப்படுவார்கள். நினைத்தபடி திருமணம் நிறைவேறும். கலைத்துறையில் உள்ளவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். இந்த தேதிகளில் பிறந்து, கடவுளை நம்புபவர்கள் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஏழைகளை குபேரன் பணக்காரராக்கும் மாதம். சிந்திக்காமல் செயல்பட்ட காரியத்திலும் லாபத்தைப் பெறலாம். முன்னோர்கள் சமாதிக்குச் சென்றும், நினைத்தும் வழிபடுபவர்கள் முன்னேற்றம் காண்பர். ஆண் வாரிசு இல்லையென்று ஏங்குவோருக்கு ஆண் வாரிசு கிட்டும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16,

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற கூடுதலான நேரம் படிக்க வேண்டிய மாதம் இது. இதுவரை குடும்பத்தில் குழப்பம் செய்த உறவுகள் விலகிச்செல்லும். சுற்றித்திரிந்த பிள்ளைகள் பெற்றோர்களின் சொல்படி வேலைக்குச் செல்வார்கள். திருமணமாகி குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். சிவபெருமான் அருளால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்யும் திட்டம் நிறைவேறும். சுபகாரியப் பேச்சுகள் சுமுகமாக முடியும். வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் பெருகும். கால்நடை வளர்ப்போர் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உங்களை வாட்டிவதைத்த பிணி பீடைகள் விலகும். எதிரிகளும் நண்பர்களாகிவிடுவார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி மாறுதல் வரும். வழக்குகள் சாதகமாக முடியும். பிரிந்து சென்றவர்கள் வந்துசேர்வார்கள். வரவேண்டிய பாக்கிகள் சிறிய முயற்சியிலேயே வசூலாகிவிடும். திருட்டுப்போன பொருட்கள் கிடைக்கும். அரசியலில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் தலைமையால் மாற்றப் பட்டு, புதிதாக பதவி வந்துசேரும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசல பதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர்களுக்கு அடங்கிநடப்பார்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்களுள் சிலர் மகாலட்சுமியின் அருளைப் பெறுவார்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபடும் பெண்கள் பேரும்புகழும் அடைவார்கள். கலைத்துறையில் ஆர்வமுள்ள பெண்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். காலம் கடந்துவந்த திருமணம் தடையின்றி நடக்கும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்கள்மூலம் லாபம் பெறுவார்கள். வெளிநாட்டில் கிளை துவங்கும் திட்டம் நிறைவேறும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். வியாபாரிகள் போட்டி வியாபாரம் செய்யக்கூடாது. எப்போதும்போல் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் தங்களுடன் பணிபுரியும் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். காவல்துறையில் உள்ளவர்கள் கடுமையாக உழைக்க வேண்டிவரும். சிலர் வேலைப்பளு காரணமாக விருப்ப ஓய்வு பெறுவார்கள். வழக்குகள் சாதகமாகும். சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து, பாகங்கள் சுமுகமாகக் கிடைக்கும். கடன் தொல்லைகள் குறையும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்பு கிட்டும்.

அரசியல்வாதிகள் எச்சரிக்கையாகப் பயணம் செய்யவேண்டும். புதிய பதவி கிட்டும்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.

செல்: 94871 68174

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :