Add1
logo
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் || தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள் || நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி || ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட் || மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்! || பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி! || எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி || கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி || கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்! || கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்! || மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி || மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!! || சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்! ||
Logo
ஓம்
ஆத்ம ஞானம் தரும் பகவத் நாமம்!
 ................................................................
மகா புண்ணியம் தரும் மகாளய பட்சம்!
 ................................................................
செப்டம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
ஜீவாத்மாவின் பேராற்றல்!
 ................................................................
செப்டம்பர் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
144 ஆண்டுகளுக்குப்பின் வரும் மகா புஷ்கரம்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
வாழ்வளிக்கும் வக்ரகாளி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
01-09-17
பிரம்மாவின் பதில் இந்திரனை ஆச்சரியப்படுத்தியது. தேவர்களோ பிரம்மாவின் பதிலைப் புரிந்துகொள்ள இயலாமல் சற்று விழித்தார்கள். நாரதர் கேட்கவே தொடங்கிவிட்டார்.

""தந்தையே... மகிஷனின் எதிர்காலம் ஸ்ரீமன் நாராயணமூர்த்தியின் கைகளில் இருக்கிறது என்று தாங்கள் கூறுவது ஆச்சரியம் தருகிறது. அவன் வரசித்தி எப்படிப்பட்டது என்று தங்களுக்குத் தெரியாதா? ஒரு பெண்ணாலேயே அவனுக்கு மரணம் என்பதுதானே அவன் வரசித்தி! அப்படியிருக்க ஸ்ரீவிஷ்ணுமூர்த்தி அவனை அழிப்பது எப்படி சாத்தியம்?'' என்று கேட்டார்.

""நல்ல கேள்வியைத்தான் நாரதா நீ கேட்டிருக்கிறாய். மகிஷனை அழிப்பதென்பது எனக்கும்கூட ஒரு பொருட்டல்ல... வரம் கொடுத்தவனே நான்தானே..? கொடுத்த வரத்தை நான் திரும்பப் பெற்றுக்கொண்டால் தீர்ந்தது பிரச்சினை. அதேபோல் நான் தந்த வரத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், தன் சக்ராயுதத்தை ஸ்ரீவிஷ்ணு ஏவினால் தீர்ந்தது பிரச்சினை.

ஆனால் கொடுத்ததைத் திரும்பப் பெறுவதும், ஒரு அசுரனை அழிக்க குறுக்குவழிகளை நாடுவதும் என்றும் அசுரர் செயலேயன்றி- அது தேவர் செயலாகாது...

தேவம் எனில் அது தர்மம்; தேவம் எனில் அது சத்தியம். தேவம் எனில் அது உண்மை; தேவம் எனில் அது மாறாத கொள்கை; தேவம் எனில் அது கருணை. எனவே தேவம் ஒருபோதும் அசுரம்போல் நடந்துகொள்ளாது. நடந்துகொண்டாலோ தேவம் செழிக்காது... அது அசுரமாக மாறிவிடும்... இப்போது இந்திரன் ஆனதுபோல்...''

பிரம்மா ஒரு நெடிய பதிலைத் தந்த நிலையில், இந்திரனை அசுர சம்பந்தப்படுத்தவும் இந்திரன் திகைத்தான். தேவர்களின் தலைவனான தன்னை பிரம்மா அசுர சம்பந்தப்படுத்திவிட்டாரே என்று வருந்தவும் செய்தான்.

""தந்தையே... எது தேவம் என்று பதில் சொன்ன அதேவேளையில் இந்திரனைத் தாங்கள் அசுரனோடு சேர்த்துவிட்டீர்களே... பாவம் இந்திரன். ஏற்கெனவே பதவி இழந்து, இந்திராணியையும் இழந்து படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறான். இப்படி ஒரு நிலையில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல இப்படியா பேசுவீர்கள்?'' என்று நாரதரும் விடாமல் இந்திரனுக்கு வக்காலத்து வாங்கினார்.

""நாரதா.. எல்லாம் தெரிந்தும் தெரியாதவன்போல் கேள்விகளைக் கேட்காதே! எப்போது தவம் செய்த ரம்பன், கரம்பனுக்கு இந்திரன் துன்பமளித்தானோ அப்போதே இந்திரனை அசுரகுணம் பற்றிக்கொண்டுவிட்டது. அதன் விளைவுதான் இப்போது மகிஷாசுரன் வடிவில் வந்து நின்றுகொண்டிருக்கிறது. அவனை அழிக்கும் வழிதெரியாமல் நாமும் தவித்துக்கொண்டிருக்கிறோம்.''

""தந்தையே... இடையீடு செய்வதற்காக என்னை மன்னிக்க வேண்டும். ஒரு அசுரன் இந்திரப் பதவியைக் குறிவைத்து தவம் செய்யும்போது அதை வேடிக்கை பார்க்க முடியுமா? ஒரு கொடிய அசுரன் இந்திரப் பதவியை அடைந்தால் தேவருலகமே அசுரர்களின்கீழ் சென்றுவிடுமே... அதைத் தடுக்கவும் தவிர்க்கவும்தானே இந்திரன் தவம் செய்யும் ரம்பனை முதலை வடிவில் சென்று அழித்தான். இது ஒருவகையில் தேவருலகைக் காத்திடச் செய்த செயல்தானே... அது எப்படி இந்திரனையும் அசுரர்களோடு சேர்க்கும்?  அப்படியே ஆனாலும் தவறென்ன இருக்கிறது. ஒரு வைரத்தை இன்னொரு வைரத்தால்தானே அறுக்கமுடியும்? அதுபோல இந்திரன் விவேகமாக நடந்து கொண்டதாக ஏன் கருதக்கூடாது?''

நாரதர் அழகாகவே சமாளித்தார். பிரம்மா அதைக்கேட்டு அர்த்தமுள்ள ஒரு சிரிப்பு சிரித்தார்.

""என்ன தந்தையே பதில் கூறாமல் சிரிக்கிறீர்கள்?''

""சிரிக்காமல் என்ன செய்வது? ஒரு சராசரி மானிடனைப்போல நீ பேசியதை எண்ணியே சிரித்தேன்...''

""என் பேச்சு ஒரு சராசரி மானிடன் பேச்சு போலுள்ளதா? எனில் நான் கேட்ட கேள்விகள் வலுவில்லாதவையா..?''

""ஆம்... நீ ஒரு பிரம்ம ரிஷி! ஞானிகளின் பட்டியலில் சிந்திக்கப்படுபவன்.. எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக கவனித்துப் பின் பேசவேண்டும்.

ஒரு அசுரன் இந்திரப் பதவிக்குப் போட்டியிடும் சமயம், அவனை நமக்கேற்ற காருண்யமும் கருணையும் குறையாமல் எதிர்கொள்ள வேண்டும். வைரத்தை வைரத்தால் அழிக்கிறேன் என்று அவன் போலவே தாழ்தல் கூடாது.''

""என்றால் எப்படி நடந்துகொண்டிருக்க வேண்டும்? அதைச் சொல்லுங்களேன்...''

""அப்படிக்கேள்... இம்மட்டில் நமக் கெல்லாம் பெரும் வழிகாட்டி ஸ்ரீமன் நாராயணமூர்த்தியே! அவர் என் தந்தை மட்டுமல்ல... நமக்கெல்லாமும் அவரே தந்தை..! அவரே தாயுமானவர்...''

""நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவர் நமக்கு வழிகாட்டிய ஒரு சம்பவம் நடந்திருப்பதுபோல் தெரிகிறதே?''

""ஆம்... இதேபோல் ஒரு அசுரச் சண்டைதான்! சாதாரண சண்டையல்ல... பெரும்யுத்தம்!''

""எப்போது நடந்தது... யார் அந்த அசுரன்.''

""சொல்கிறேன்... நான் கூறப்போகும் இந்த சம்பவம் தேவருலகம் மட்டுமல்ல; சகலரும் அறிய வேண்டியது.''

""முதலில் கூறுங்கள். நமக்கு இப்போது தேவை ஒரு நல்ல வழி... அது எந்த வழி என்று தெரிந்து அதில் செல்ல வேண்டியவர்களாக உள்ளோம்.''

""அது ஸ்ரீமன் நாராயணன் வழிதான்! அந்த மூர்த்தியைச் சரணடைந்தாலே போதும்; நம் துன்பங்கள் தீர்ந்துவிடும்.''

""மன்னிக்க வேண்டும். மகிஷனின் அழிவு ஒரு பெண்ணால் மட்டுமே  எனும்போது அது எப்படி சாத்தியம்?''

""அவசரப்படாதே நாரதா... நான் கூறப் போகும் சம்பவத்தை முதலில் கேள். இந்திரா... நீயும் கேள்...''

என்ற பிரம்மா ஸ்ரீவிஷ்ணுவின் சாகசம் நிரம்பிய அந்த சம்பவத்தைக் கூறத் தொடங்கினார்.

""இந்திரா...

ஒருசமயம் பெரும் ஊழி ஏற்பட்டு சர்வ லோகங்களும் நீருக்குள் மறைந்து போயின... எங்கும் ஜலம்! ஈ எறும்பு முதல் தாவர விருட்சம் தொட்டு கிரிகளாகிய மலையகங்களும் ஜலப் பிரளயத்தில் மூழ்கிப்போயின. உயிரினம் என்று சொல்ல ஒரு உயிர் இல்லை.

பூமிப்பந்து நீர்ப்பந்து என்றானது! சூரிய சந்திரர்களும், தேவாதி தேவர்களும், ரிஷி களும், முனிகளும், ருத்ரன் உள்ளிட்ட சகலரும் ஸ்ரீவிஷ்ணுவிடம் ஒடுங்கினார்கள். ஸ்ரீவிஷ்ணுவுக்கு நாராயணன் என்கிற பெயரும் உண்டு. நாரமாகிய நீரை அணைந்துகிடப்பவன் என்னும் பொருளில்தான் இந்தப் பெயரே வந்தது. ஊழி என்பது நெருப்பால் அழி வதல்ல... ஜலப்பிரளயமே ஊழியாகும்! அதன் கர்த்தா நாரணரே... எனவே அந்த ஜலப்ரளயத்தில் சர்வமும் ஒடுங்கிய நிலையில், நாரணரின் நாபிக்கமலத்தில் அவதரித்த நானும், நாரணர் திருமார்பில் குடிகொண்டிருக்கும் லக்ஷ்மிதேவியும் மட்டும் அப்பிரளயத்தின்போது மிச்சமாக இருந்தோம்.

நாங்கள் நாராயண அம்சமாக இருந்த தாலேயே மிச்சமானோம். மற்ற எல்லாம் அவர் திருமேனியில் ஐக்கியமாகிவிட்டன. அதாவது ஏதுமற்ற நிலையில் ஜலமும், ஜலம்மேல் பள்ளிகொண்ட நிலையில் நாரணனும், நாரணனோடு தொடர்புகொண்டவர்களாய் நானும் லக்ஷ்மி தேவியும் மட்டுமே இருந்தோம். இந்த நிலையை கற்பனை செய்து பார்ப்பதுகூட கடினம்...''

என்று பிரம்மா ஒரு பிரளய காலத்தை விவரித்திட, நாரதர் வாயைப் பிளந்துவிட்ட நிலையில், ""தந்தையே... அப்போது நான் ஜனித் திருக்கவில்லையா?'' என்று கேட்டார்.

""இது என்ன கேள்வி நாரதா? நீ தோன்றி யிருந்தால் இச்சம்பவத்தை நான் இப்போது உனக்குக் கூறத் தேவையில்லை. இப்போதுள்ள நீங்கள் யாவரும் புதிதாய்த் தோன்றிய துவாபர யுகத்தில் தோன்றியவர்கள். முந்தைய யுகத்தின் தொடர்ச்சியாக வருபவர்கள் மும்மூர்த்திகளாகிய நாங்கள் மட்டுமே... மற்ற யாவும் அழிந்து புதிதாய்த் தோன்றியவையே...''

""தங்களின் இந்தச் செய்தி பெரிதும் வியப்பைத் தருகிறது. எதனால் ஊழி ஏற்பட்டு உயிர்கள் அனைத்தும் அழிந்துபோயின?''

""அது இயற்கை நியதி! மாற்றம் ஒன்றே மாறாதது... எனவே அந்த மாற்ற நியதிப்படி ஏற்பட்டது என்று பொதுவாகச் சொன்னாலும், தர்மம் நலிந்து அதர்மம் வலிமையடையும்போது அந்த அதர்மத்தாலேயே பேரழிவுகள் ஏற்படும்... அப்போதும் அப்படியே ஆனது.''

""அப்படியானால் அப்போதும் அசுர சக்திகள் இருந்து தர்மம் கஷ்டப்பட்டதா?''

""அப்படித்தான் கூறவேண்டும்...''

""இந்த அசுரசக்திகளைப் படைக்கப் போய்தானே அழிவை நோக்கி யுகமானது செல்கிறது? இவர்களைப் படைக்கும்போதே நல்லவர்களாகப் படைத்துவிட்டால் சிக்கலே இல்லை அல்லவா?''
நாரதரின் கேள்விமுன் திரும்பவும் சிரித்த பிரம்மா, ""நாரதா... ஏன் எல்லாம் தெரிந்திருந்தும் எப்போதும் ஒரு பாமரனைப்போலவே பேசுகிறாய்...'' என்று திரும்பக் கேட்டார்.

""நான் கேட்டிருக்கலாம்... ஆனால் இது தேவர்களுக்குள்ளும் இருக்கும் கேள்வி. நீங்கள் பதில் கூறுங்கள். படைப்புக்கு தாங்கள்தானே பொறுப்பு. எதற்காக இப்படி தவறானவர்களைப் படைக்கிறீர்கள்?''

""நாரதா... நான் சரிசமமாகவே என் கடமையைச் செய்கிறேன். பிறக்கும்போது எல்லாரும் நல்லவர்களாகத்தான் பிறக்கின்றனர். வளர வளரத்தான் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உலகில் நிலவும் மாயை எல்லாரையும் ஆட்டிவைக்கத் தொடங்கவும், நல்லவன்கூட சிலசமயம் தவறு செய்யும் ஒரு சூழ்நிலை தோன்றிவிடுகிறது.''

""என்றால் எல்லாவற்றுக்கும் மாயைதான் காரணமா?''

""ஆம்... லோகமாயாவே அனைத்துக்கும் காரணம். லோகமாயையை வெல்வதே ஒரு பிறப்பின் நோக்கம். வெல்லமுடியாதவரை அடுத்தடுத்து பிறப்பது நடந்தபடியே இருக்கும்...''

""உயிர்களை இப்படி ஒரு சோதனைக்கு ஆளாக்கலாமா?''

""இதை சோதனை என்று கூறாதே... விளையாட்டு என்று சொல்! விளையாட்டில் வெற்றிபெற வேண்டுமானால் சக்தியையும், திறமையையும் காட்டித்தான் தீரவேண்டும்.''

""எனக்கு வெற்றியும் வேண்டாம் தோல்வி யும் வேண்டாம் என்றால்?''

""நீ வாழ்வை வெறுத்து, ஆடாது அசையாது தவம் செய்யும் இயக்கமற்ற சந்நியாசி ஆகி விட்டாய் என்று பொருள்.''

""அப்படியானால் மாயையை தவத்தாலும் வென்றுவிடமுடியும் என்று சொல்லுங்கள்...''

""ஆம்... அதனாலேயே அழியாதவர்களாக ரிஷிகள், முனிகள், சித்தர் பெருமக்கள் உள்ளனர்.''

""சரி... பிரளயம் ஏற்பட்ட அப்போது மேற்கொண்டு என்ன நடந்தது? விவரமாய்க் கூறுங்கள்...''

""அந்த பிரளய சமயத்தில் யாவும் நாரணனி டம் ஒடுங்கிவிட்ட நிலையில், நானும் லக்ஷ்மி தேவியும் மட்டும் மீதமிருந்த அத்தருணத்தில் பெரும் அதிர்ச்சிக்குரிய ஒரு சம்பவமும் நடந்தது..!''

""யாருமே இல்லாத பிரளய வேளையில் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவமா? அது எப்படி?''

""அதுதான் மாயையின் சக்தி...''

""அந்த அழிவிலும் மாயை மட்டும் அழியாதிருந்ததா?''

""படைக்கும் தொழில்கொண்ட நானிருக்கும் வரை அதுவும் இருக்கும் நாரதா?''

""பகலென்றால் இரவும் இருக்கும் என்பதுபோலா?''

""சரியாகச் சொன்னாய்... எந்த ஒரு விஷயத்தின் மறுபக்கமே மாயை. ஒன்று இரண்டாகத் திகழக் காரணமும் மாயை.''

""சரி... அப்போது என்ன நடந்தது? அதைச் சொல்லுங்கள்...''

""சொல்கிறேன். அந்த பிரளய வேளையில் ஸ்ரீமன் நாராயணமூர்த்தி தாமச உறக்கத்தில் இருந்தார். இப்படி ஒரு நிலையில் அவராக விழித்தால்தான் ஆயிற்று. அவரை எழுப்ப யாராலும் எதனாலும் முடியாது...''

""இது என்ன விந்தை?''

""விந்தையல்ல... இது ஒருவித யோகநிலை. மனிதர்களின் உறக்கமும் ஒரு வகையில் யோகம்தான். இப்படி ஒரு தாமச உறக்கத்தில் அவர் இருந்த சமயம் நானும் அவரது நாபிக்கமலத்தில் ஒடுங்குவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி நான் ஒடுங்க முற்பட்டபோதுதான் என் எதிரில் ஸ்ரீமன் நாராயணரின் திருச்செவிகளுக்குள்ளிருந்து- அதாவது இருபுறத்தில் இருந்தும் இரு அசுரர்கள் வெளியே வந்தனர்.''

பிரம்மா இப்படிக் கூறவும் இந்திரன் தன் முகத்தில் பேரதிர்ச்சியைக் காட்டி பிரம்மாவைப் பார்த்தான். ""என்ன இந்திரா பார்க்கிறாய்! அந்த அசுரர்கள் எப்படி வந்தார்கள்- அதிலும் ஸ்ரீமன் நாராயணனிடமிருந்தே என்றுதானே யோசிக்கிறாய்?''

""ஆம் பிரம்மதேவரே...''

""அவர்களே மது கைடபர்கள்! சர்வமும் ஸ்ரீமன் நாராயணனிடம் ஒடுங்கியதில் நல்லதெல்லாம் அவர் உடலோடு கலந்துவிட்டது. தீயவை மது கைடபமாகி வெளியே வந்துவிட்டது.''

""இதை எப்படிப் புரிந்துகொள்வது... இரண்டுக்கும் ஸ்ரீமன் நாராயணனே  பொறுப்பு என்றா?''

""ஆம்... உண்மையும் அதுவே! மணக்க மணக்க உண்ணும் உணவே துர்நாற்றமிகு மலமாகிறது. வண்ணமலரே வாடிச் சருகாகிறது. ஒளியே நிழலாகிறது. குணம் எனும் ஒன்றே நல்ல குணம், கெட்ட குணம் என்றாகிறது.''

""பிரம்மதேவரே... நீங்கள் கூறுவதைப் புரிந்துகொள்ள சற்று அவகாசம் தேவை.''

""போகட்டும்... அந்த அரக்கர்கள் பிறகு என்ன செய்தனர்?''

""அவர்கள் பிரம்மனாகிய என்னையே ஆட்டிப்படைக்க முயன்றனர். "நாரணர் தூங்கட்டும்- நீ நாங்கள் கூறுவதுபோல புது உலகைப் படைக்க வா... இனி நாங்களே உண்மையான விஷ்ணு... உண்மையான பிரம்மா' என்றனர்!''

""என்ன விந்தை இது! எல்லாம் முடிந்துவிட்டது. இனி ஒரு புது உலகம் தோன்றவேண்டும் என்னும் நிலையில், மது கைடபன் எனும் இருவர் தோன்றி புது உலகை அவர்கள் படைக்க விரும்பினார்களா? சபாஷ்... சரியான போட்டி...''

""போட்டியல்ல இது... விபரீதம்!''

""சரி, அதன்பிறகு என்ன செய்தீர்கள்?''

""தாமச உறக்கம் கலைந்து ஸ்ரீமன் நாராயணர் விழிக்கவேண்டுமே... எனவே அவரை நான் எழுப்ப முயன்றேன். ஆனால் நாரணரை ஆட்கொண்ட தாமசீ என்னும் உறக்கத்திற்குக் காரணமான தாமசீதேவி என்பவள்கூட அவர் உடலோடு ஐக்கியமாகிவிட்ட நிலையில், நான் அவரை எழுப்ப வழிதெரியாமல் திகைத்து நின்றேன்!''தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :