Add1
logo
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் || தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள் || நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி || ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட் || மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்! || பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி! || எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி || கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி || கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்! || கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்! || மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி || மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!! || சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்! ||
Logo
பொது அறிவு உலகம்
உலகை வியக்க வைத்த உசேன் போல்ட்- கோவி. லெனின்
 ................................................................
சுகாதாரத் துறையில் புதிய மாற்றங்கள்
 ................................................................
பிரதமரின் சுதந்திர தின உரை
 ................................................................
வெள்ளையனே வெளியேறு இயக்கம் 75
 ................................................................
குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரை
 ................................................................
01-09-17*    சுகாதாரத் துறையில் இந்தியா குறிப்பிடத் தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது; இன்று மிகவும் ஆரோக்கியமான நாடாக மாறியிருக்கிறது. போலியோ, பெரியம்மை மற்றும் கினியா புழு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளன. தவிர, ஐ.எம்.ஆர். (குழந்தை இறப்பு விகிதம்), எம்.எம்.ஆர். (மகப்பேறு இறப்பு விகிதம்)அதிகளவு குறைக்கப்பட்டுள்ளது. காசநோய் மற்றும் மலேரியா காரணமாக இறப்பு விகிதம் குறைப்பு மற்றும் எச்.ஐ.வி நோய்த்தாக்கம் மற்றும் எய்ட்ஸ் தொடர் பான இறப்புகளில் கணிசமான குறைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

*    பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் பாதுகாப்பு, சேவைகள் மற்றும் அதிகரித்த செலவினங்களை வலுப்படுத்து வதன் காரணமாக, மிகப்பெரிய துறைகளில் ஒன்றான சுகாதாரத் துறை அதிவேகத்தில் வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில், சமூக போக்குகள் மற்றும் வளர்ந்து வரும் நகரமயமாக்கல் காரணமாக தொற்று இல்லாத நோய்களான இதய நோய்கள், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்றவை விரைவாக பரவ வழிவகுக் கின்றன.

*    முதியோர் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2025-ஆம் ஆண்டில் முதியோர்களின் எண்ணிக்கை சுமார் 11 சதவிகிதம் ஆகிவிடும். இதன் விளைவாக, தரமான பராமரிப்புக்கு கூடுதலான அணுகல் தேவைப்படுகிறது. ஆனால் விலை உயர்ந்த சிகிச்சை செலவுகள், காப்பீடு இல்லாத குடிமக்களைக் கவனித்துக் கொள்வது கடினமாக இருக்கிறது.

*        சுகாதார ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கும், சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு சமீபத்தில் தேசிய சுகாதாரக் கொள்கை 2017 ஐ அறிமுகப்படுத்தியது. இது உலகளாவிய ஆரோக்கிய பாதுகாப்பு மற்றும் தரமான ஆரோக்கிய பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தையும் மலிவு விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மருத்துவ வசதிகளை அணுகுவதை விரிவாக்குவதோடு, சிகிச்சை செலவினங்களைக் குறைப்பதன் மூலமும் தரத்தை மேம்படுத்துவதன் மூலமும் அதைச் செய்ய இயலும். கடந்த காலத்திலிருந்து மிகப்பெரிய மாற்றமாக, சுகாதாரத்தை விரிவாக்குவதில் தனியார் துறை பங்களிப்பு வலுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

*    இந்த கொள்கையானது, முக்கியத்துவம் வாய்ந்த நோய்கள், மன நலம், பலவீனமான மற்றும் புனர்வாழ்வளிக்கும் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பினை வழங்கும். ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு மூன்றில் இரண்டு பங்கு வளங்களைப் பெறும். வரும் 2025-ஆம் ஆண்டில், நாட்டின் குடிமக்களின் மருத்துவ செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவிகிதமாக உயர (தற்போது 1.15 சதவீதம் வரை) வாய்ப்புள்ளது. இது நோய்களின் சுமை மற்றும் மனித வளத்திற்கு எதிரான சவால்களை சுட்டிக்காட்டுகிறது.

*    இந்த கொள்கையானது, கடந்த பதினைந்து ஆண்டுகளில் நடந்துள்ள நோய்த்தாக்கம் மற்றும் தொற்றுநோய்களின் அடிப்படையில், முக்கிய மாற்றமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், முதல் முறையாக, இந்த கொள்கையானது, 2017-ஆம் ஆண்டுக்குள் கலா அசர் எனப்படும் கருங்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை நீக்குவது, 2018-ஆம் ஆண்டுக்குள் தொழுநோயை நீக்குவது என இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இதில் மிக முக்கியமாக 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதை ""மிகவும் லட்சியமான"" இலக்காக கொண்டுள்ளது.

*    இந்தியாவின் உலகளாவிய நோய்தடுப்பு திட்டம், (யு.ஐ.பி.), இந்திரதனுஷ் திட்டமானது, உலகில் அதிகளவில் எட்டப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை, பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி அளவு, நோய்த்தடுப்பு அமர்வுகளின் எண்ணிக்கை, புவியியல் பரவல் மற்றும் பரந்த பகுதிகளின் பரப்பளவு ஆகியவற்றை உள்ளடக்கி யுள்ளது. டிசம்பர் 2014-இல் தொடங்கப் பட்ட இத்திட்டங்களானது, எந்தவொரு குழந்தைக்கும், குறிப்பாக பின்தங்கிய மாவட்டங்களில், முழுமையானநோய் தடுப்பு பாதுகாப்பு இல்லாமல் செல்லக் கூடாது என்பதை உறுதி செய்கிறது.

*    ஆறு தடுப்பூசிகளுடன் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது 11 உயிர்கொல்லி நோய்களுக்கு எதிராக குழந்தைகளை பாதுகாக்கிறது. மேலும்,கடந்த சில ஆண்டுகளில் புதிய தடுப்பு மருந்துகள் மூலமாக ரோட்டா வைரஸ் வயிற்றுப் போக்கு, ஹெமிபோலஸ் இன்ஃப்ளூயன்சா வகை பி (பிவீதீ), நிமோனியா மற்றும் ரூபெல்லா ஆகியவையும் குணமாக்கும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல், நியூமேக்கோகல் கொனாஜேட் தடுப்பூசி (பி.சி.வி) ஆகியவற்றிற்கு எதிராக புதிய தடுப்பூசி மே மாதம் தொடங்கப்பட்டது.

*    இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 2.14 கோடி குழந்தைகளுக்கும், சுமார் 0.56 மில்லியன் கர்ப்பிணிப் பெண்களுக்கும் நோய்தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நோய்தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருவதன் மூலம், கடந்த 2 ஆண்டில் நோய்தடுப்பு மருந்து பெறுவோரின் எண்ணிக்கை 5-7 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டில், சராசரியாக 1 சதவிகிதம் மட்டுமே அதிகரித்திருந்தது.

*    தேசிய சுகாதார திட்டத்தின் (என்.எச்.எம்.) கீழ் பெண்கள், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பின் தரத்தை அடைய மற்றும் மேம்படுத்த அரசு பல தலையீடுகளை மேற்கொண்டதன் மூலம், கடந்த பத்து ஆண்டுகளில் மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பின் எண்ணிக்கை குறிப்பிடத்தகும் வகையில் 40.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

*    இதில் ஜனனி சுரக்ஷா யோஜனா (ஜெ.எஸ்.ஒய்.), ஒரு நேரடி பண பரிமாற்ற திட்டம், ஜனனி சிஷு சுரக்ஷா கார்யகரம் (ஜெ.எஸ்.எஸ்.கே.), பிரதான் மந்திரி சுரக்ஷித் மட்ரிட்வா அபியான் ஆகியவை முன்னுரிமையளிக்கும் சேவைகள் வழங்கும் திட்டங்களாகும். ஜெ.எஸ்.எஸ்.கே. திட்டமானது, ஒவ்வொரு பெண்ணும் கட்டணமின்றி பொது சுகாதார நிறுவனத்தில் குழந்தையை பிரசவித்து, இலவச சுகாதார சேவைகளை வழங்கு வதாகும். இதற்கு ஒவ்வொரு பெண்களுக்கும் உரிமையுள்ளது. என்.எச்.எம். திட்டமானது, பிரசவத்தை தொடர்ந்து புதிதாக பிறந்த குழந்தையின் பராமரிப்பிற்கு உதவும் வகையில் செயல்படுகிறது.

*    அரசு மருத்துவமனைகளில் மலிவான மருந்துகளுக்காக, பிரதான் மந்திரி பாரதீய ஜனவுஷாதி பரியோஜனா திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது. சுகாதார பாதுகாப்பு வழங்குவதற்காக, இது விரைவில் சட்டரீதியான கட்டமைப்பில் கொண்டு வரப்படும். இதன்படி, மருத்துவர்கள் பிராண்டட் மருந்துகளுக்கு இணையான தரமிக்க, அதே நேரத்தில் விலை குறைவாக உள்ள பொதுவான மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

*    இதன் முதற்கட்டமாக, மோசமான நோய் களுக்கான 700 வகையான மருந்துகளை ஏழை மக்களும் வாங்கும் வகையில் நியாயமான விலையில் பெற உதவுகிறது. சந்தையில் 1,200 ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய மருந்துகளின் விலை ரூ. 70 முதல் ரூ.80ஆக குறைப்பதற்கான விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதய நோய்களில் பயன்படுத்தப்படும் ஸ்டெண்டுகளின் விலைகளையும் மத்திய அரசு குறைத்துள்ளது.

*    எச்.ஐ.வி-&எய்ட்ஸ் நோய்க்கான "பரிசோதனை மற்றும் சிகிச்சை கொள்கை' ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, எச்.ஐ.வி & எய்ட்ஸ் நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு சிடி எண்ணிக்கை அல்லது மருத்துவக் கட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஏஆர்டி (ரெட்ரோவைரல் எதிர்ப்பு தெரபி) உடன் வழங்கப்படும்.

*    இது நோய் தொற்று பாதிக்கப்பட்டவரின் வாழ்வாதாரத்தையும், வாழ்வின் தரத் தையும் மேம்படுத்தும் மற்றும் பல நோய்த் தொற்றுகளிலிருந்து குறிப்பாக காசநோய் தொற்றாமல் காப்பாற்ற உதவும்.

*    அடுத்த 7 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயை முடிவுக்கு வருவதற்கு தேசிய மூலோபாய திட்டத்தை இந்தியா உருவாக்கும்.

*    எய்ட்ஸ் நோயாளிகளை களங்கத்தில் இருந்தும் பாகுபாட்டிலிருந்தும் மீட்க வசதிகளை செய்து தருவதோடு, எச்.ஐ.வி / எய்ட்ஸ் சட்டத்தை அரசாங்கம் சமீபத்தில் நிறைவேற்றியது.

*    எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்ப தற்கான வரலாற்று சிறப்புமிக்க இந்த நடவடிக்கை, மிகச் சில நாடுகளில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

*    தடுப்பு சுகாதார பாதுகாப்பு, முக்கியத்துவம் வாய்ந்தது; அதை ஏற்றுக்கொள்ளும் மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. தூய்மை பிரச்சாரம் (ஸ்வச்சா அபியான்) நோய்தடுப்பு சுகாதாரத்தை நோக்கமாகக் கொண்டது. ஏனெனில் அசுத்தமான சூழ்நிலையில் நாம் வாழ்வதால்தான் பல நோய்கள் நம்மை தாக்குகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

*    ஆரோக்கியம் என்பது உடல்நலத்தை பேணிப் பாதுகாக்கவும், நோய்கள் பரவுவதை தடுக்க உதவும். ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பற்ற நீர், சுகாதாரம், மற்றும் சுகாதாரம் ஆகியவற்றால் உலகம் முழுவதிலும் 1.7 மில்லியன் மக்கள் இறக்கின்றனர்.

*    அவர்களில் 600,000-க்கும் அதிகமானோர் இந்தியாவில் உள்ளனர். மோசமான சுகாதாரமே பல்வேறு உயிர்கொல்லி நோய்களுக்கு காரணம் என்பதால் அதனை எதிர்த்து போரிட "தூய்மை இந்தியா' திட்டத்தை இந்தியாவின் முன்னுரிமை திட்டமாக செயல்படுத்தப் படுகிறது.

*    துப்புரவு மற்றும் உலகளாவிய சுகாதாரத்தை அடையும் இலக்காக கொண்டு அக்டோபர் 2, 2014 அன்று தூய்மை இந்தியா திட்டத்தை அரசு தொடங்கியது. இதன் நோக்கம், 2019-ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புற இந்தியாவில் திறந்தவெளி மலம் கழிப்பதை முற்றிலும் இல்லாத நிலையாக்குவது மற்றும் 4,041 நகரங்களில், நகராட்சி திடக்கழிவுகளை அறிவியல் மேலாண்மை மூலம் கையாள்வதை 100 சதவீதம் ஆக்குவதே ஆகும். இந்த திட்டம், பொது சுகாதாரத் துடன் துப்புரவுக்கு உள்ள தொடர்பு குறித்த விழிப்புணர்வையும் உருவாக்குகிறது.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :