Add1
logo
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் || தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள் || நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி || ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட் || மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்! || பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி! || எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி || கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி || கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்! || கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்! || மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி || மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!! || சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்! ||
Logo
பொது அறிவு உலகம்
உலகை வியக்க வைத்த உசேன் போல்ட்- கோவி. லெனின்
 ................................................................
சுகாதாரத் துறையில் புதிய மாற்றங்கள்
 ................................................................
பிரதமரின் சுதந்திர தின உரை
 ................................................................
வெள்ளையனே வெளியேறு இயக்கம் 75
 ................................................................
குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரை
 ................................................................
01-09-17    இந்தியாவின் 71-வது சுதந்திர தினத்தை  முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை.

    நாட்டின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள எனது சக குடிமக்களே, 70-வது சுதந்திர தினத்தை நிறைவு செய்யும் இந்த நாளில் உங்களுக்கு எனது வாழ்த்துகள்! நாம் 71-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். இதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

     1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள் நமது நாடு சுதந்திரம் பெற்றது. பிரிட்டிஷ் குடியாட்சியிடம் இருந்து நமது நாட்டின் இறையாண்மையும் பொறுப்புகளும் இந்திய மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த மாற்றத்தை அதிகார மாற்றம் என்று சிலர் அழைத்தார்கள்.

    ஆனால், அதற்கும் மேற்பட்டது அந்த மாற்றம்.  நமது முன்னோர்களும், சுதந்திரப் போராட்ட தியாகிகளும் கண்ட கனவை நனவாக்கும் உச்ச நிலை அது.

    நமது நாட்டை புதிதாக நிர்மாணிக்கும்  திட்டத்தை உருவாக்கும் சுதந்திரத்தை நாம் பெற்றோம்.

    கிராமங்களிலும் ஏழைகள் மற்றும் நலிவுற்றோர் நலனிலும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் ஆழமாக வேரூன்றி இருந்தது சுதந்திர இந்தியா கனவு என்பதை புரிந்து கொள்வது அவசியம்.

    நம்மை இந்த நிலைக்கு உயர்த்தக் காரணமாக இருந்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்திற்கு நாம் பெரிதும் கடன்பட்டவர்கள்.

    சென்னம்மா, கிட்டூர் ராணி, ஜான்சி ராணி லட்சுமிபாய், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் வீரத்தியாகி மாத்தங்கினி ஹஸ்ரா இன்னும் பல உதாரண தியாகிகளை நாம் காட்ட முடியும்.

    மாத்தங்கினி ஹஸ்ரா 70 வயதான முதியவர்.  வங்காளத்தில் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்தபோது, தம்லுக் என்ற இடத்தில் காலனி ஆட்சியின் காவல்துறை அவரை சுட்டுக் கொன்றது. வந்தே மாதரம் கோஷத்தை உதடுகளில் உச்சரித்தபடியே இதயத்தில் சுதந்திர இந்தியா கனவுடன் அவர் மரணம் அடைந்தார்.

    சர்தார் பகத்சிங், சந்திரசேகர ஆசாத், ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பாகுல்லா கான், பிர்ஸா முண்டா போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களும் மற்றும் ஆயிரக்கணக் கானோரும் தங்கள் இன்னுயிரை இந்த போராட்டத்தில் ஈந்தார்கள். அவர்களை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.

    நமது சுதந்திரப் போராட்டத்தின் தொடக்க காலம் முதற்கொண்டே நமது நாட்டுக்கு வழிகாட்டும் புரட்சிகரமான தலைவர்களின் வரிசையை பெற்ற பாக்கியம் நமக்கு கிட்டியது.

    அவர்கள் அரசியல் சுதந்திரத்தை மட்டுமே பேசவில்லை.  இந்திய சமுதாயத்தின் ஒழுக்கநெறியை, மகாத்மாகாந்தி வலியுறுத்தினார். அன்று அவர் போதித்த கொள்கைகள் இன்றைக்கும் சாலப்பொருந்தக் கூடியது.

    சுதந்திரம் மற்றும் சீர்திருத்தத்திற்காக நடந்த போராட்டத்தில் காந்திஜி மட்டுமே தனித்து நிற்கவில்லை. நீங்கள் ரத்தம் சிந்துங்கள், நான் உங்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தருகிறேன் என்று நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் நமது மக்களை நோக்கி கூறினார். இந்த ஒரே வார்த்தையை ஏற்று, பின்னால் லட்சக்கணக்கான இந்தியர்கள் சுதந்திர போராட்ட இயக்கத்தில் குதித்து அவரது தலைமை‍யில் அனைத்தையும் துறக்கத் தயாராக இருந்தார்கள்.

    இந்தியாவின் தொன்மையான பாரம்பரியமும் கலாச்சாரமும் நமது சொத்துக்கள் என்றாலும், தொழில்நுட்பம் மற்றும் நவீன சமுதாய வேட்கையுடன் இணைந்து அவை  நடைபோட முடியும் என்று நேருஜி வலியுறுத்தினார்.

    தேசிய  ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தையும், தேசிய ஒழுக்கத்தையும் சர்தார் பட்டேல் மக்கள் மனதில் பதித்தார்.

    அரசியல் சாசன  ஆளுகையின் நலன்களையும், சட்டத்தின் ஆட்சியையும், கல்வியின் அவசியத்தையும் பாபா சாகிப் பீம்ராவ் அம்பேத்கர் வலியுறுத்தினார். 

    புகழ்பெற்ற சில தலைவர்களை எடுத்துக்காட்டாக நான் கூறியிருக்கிறேன். மேலும், பலரின் பெயர்களை சொல்ல முடியும்.  நமக்கு இந்த சுதந்திரத்தை பெற்றுத்தந்த தலைமுறை பன்முகத்தன்மை கொண்டது.  நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த, பல்வேறு அரசியல் கருத்துக்களை சார்ந்த, பலவித சமூக சிந்தனையைக் கொண்டிருந்த ஆண்களும்,  பெண்களும்தான் அவர்கள்.

    நாட்டுக்காக  தங்கள் உயிரை தியாகம் செய்தும், போராடியும் இந்த வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட துணிவுமிக்க சுதந்திர போராட்ட வீரர்களிட மிருந்து நாம் உத்வேகத்தை பெற வேண்டியது அவசியம். அதே உணர்வை நாட்டின் நிர்மாண பணியிலும் ஈடுபடுத்துவது அவசியமாகிறது.

    ஒற்றுமை மற்றும் கட்டுப்பாடு மீது  நம்பிக்கை,  பாரம்பரியம் மற்றும் அறிவியல் மீதான நம்பிக்கை, சட்டத்தின் ஆட்சி மற்றும் கல்வி மேம்பாடு ஆகியவற்றில் அரசும், குடிமக்களும் இணைந்து பங்களிப்பதே இந்த கொள்கையின் அடிப்படை அம்சமாகும்.

    எனது குழந்தைப் பருவத்தில் நடைமுறையில் இருந்த பழக்கம் எனது நினைவுக்கு வருகிறது.  

அப்போது குடும்பத்தில்  திருமணம் நடந்தால், அந்த கிராமமே அதில் ஈடுபாடு கொள்ளும். பங்களிப்பு செலுத்தும். சாதி, சமுதாய வேறுபாடின்றி மணமகள் ஒரு குடும்பத்தின் மகளாக மட்டுமின்றி, அந்த கிராமத்தின் மகளாகவே மாறிவிடுவார்.

    கிராமத்தில் உள்ள அண்டை அயலார்கள், விருந்தினர்களை உபசரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வர்.  தேவையான ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்வார்கள்.  இதற்கு பல குடும்பங்களிலிருந்து உதவி குவியும். ஒரு குடும்பம் திருமணத்திற்கு தானியம் அனுப்புகிறது என்றால், மற்றொரு குடும்பம் காய்கறி களையும், மூன்றாவது குடும்பம் இதர பொருட்களையும் வழங்கும்.

    பகிர்ந்து கொள்வதும், உபசரிப்பதும், அதே சமயம் சுதந்திரமாக செயல்படுவதும் அந்த காலத்தின் வழக்கமாக இருந்தது.  நீங்கள் உங்கள் அயலாருக்கு தேவையான சமயத்தில் உதவினால் அவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

    தற்காலத்தில், பெரிய நகரங்களில், அடுத்த வீட்டுக்காரரை பற்றிக் கூட நாம் அறியாமல் இருக்கிறோம்.  நகரமாக இருந்தாலும், கிராமமாக இருந்தாலும் முன்பு நாம் பின்பற்றிய பகிர்தல் மற்றும் உபசரிப்பு உணர்வை மீண்டும் புதுப்பித்துக் கொள்வது முக்கியம்.  இதன்மூலம் நாம் மகிழ்ச்சியும், மென்மை உணர்வும் பெறுவதுடன் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும், அன்பு செலுத்தவும் அது உதவும்.

    சமுதாய சேவை உணர்வும், அன்பு செலுத்தும் உணர்வும் தானாக முன்வந்து உதவிடும் உணர்வும் இன்னமும் இந்தியாவின் பண்பாகத் திகழ்கின்றன.  ஏழைகளுக்காகவும், நலிவுற்றோருக்காகவும், ஏராளமான மக்களும்-அமைப்புகளும் ஆரவாரமில்லாமல் பணியாற்றி வருகிறார்கள்.

    அவர்கள் குழந்தைகளுக்கு பள்ளிகள் நடத்துகிறார்கள். தெருவோர பிராணிகளுக்கும், பறவை களுக்கும் அடைக்கலம் தருகிறார்கள்.  எட்டமுடியாத தொலைவில் உள்ள பழங்குடி மக்களுக்கு குடிநீர் வழங்குகிறார்கள்.  ஆறுகளையும், பொது இடங்களையும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள்.  நாட்டின் நிர்மாணத்தில் ஈடுபட்டுள்ள அவர்களிடமிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

      அரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலன்கள் சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய நாம் உண்மையுடன் ஒருமித்து பணியாற்ற வேண்டும். இதற்கு அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான   பங்களிப்பு அவசியம்.

    அரசு "ஸ்வச் பாரத்' என்ற தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கியுள்ளது. ஆனால் அந்த இயக்கத்தை வெற்றி பெறச் செய்வது நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.

    அரசு கழிப்பறைகளை கட்டித் தருகிறது அல்லது கட்டுவதற்கு உதவுகிறது.  ஆனால் இந்த கழிப்பறைகளை ஒவ்வொருவரும் பயன்படுத்தச் செய்வதும், திறந்தவெளியை கழிப்பிடமாக மாற்றுவதை தவிர்க்கச் செய்வதும் நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.

    தகவல் தொடர்பு கட்டமைப்பை அரசு அமைத்து தருகிறது. இந்த இணைய தள வசதிகளை சரியான  நோக்கத்திற்கு பயன்படுத்துவதும், அறிவாற்றல் இடைவெளியை போக்குவதற்கும் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் கல்வியிலும் தகவல் தொடர்பிலும் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இதைப் பயன்படுத் துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

    பெண் குழந்தைகளைக் காப்போம் - கற்பிப்போம் என்ற பேட்டி பச்சாவோ-பேட்டி படாவோ திட்டங்களை அரசு முன்னெடுத்துச் செல்கிறது. நமது பெண் குழந்தைகளை பாகுபாடு காட்டாமல் பாதுகாத்து அவர்கள் சிறந்த கல்வி பெறச் செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

    அரசு சட்டங்களை வகுக்க முடியும், சட்டத்தை அமலாக்க முடியும், ஆனால் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. சட்டத்தை மதித்து நடக்கும் சமுதாயத்தை கட்டமைப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

    அரசுப் பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்வதிலும், கொள்முதலிலும் ஊழலை ஒழிக்க, ஒளிவுமறைவற்ற தன்மையை அரசு முன்னெடுத்துச் செல்கிறது.  இந்தக் கொள்கைகள் நிறைவேற நமது மனசாட்சிக்கு ஒவ்வொரு நாளும் பதிலளிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

    பல்வேறு வரிமுறைகளில் இருந்த சிக்கலைப் ‍போக்கி எளிய முறையில் பரிவர்த்தனை செய்வதற்காக அரசு ஜி எஸ் டி- யை அமல்படுத்திவருகிறது.  இதனை நமது ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் வர்த்தக கலாச்சாரத்திலும் பின்பற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

    நாம் செலுத்தும் வரி நாட்டின் நிர்மாணத்திற்கும்- ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் உதவிடவும், கிராமப்புற நகர்ப்புற கட்டமைப்புக்கும் நமது எல்லைப் பாதுகாப்புக்கும் பயன்படுகிறது என்பதில் நாம் பெருமிதம் கொள்ளவேண்டும்.

    2022-ஆம் ஆண்டு நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. புதிய இந்தியாவைப் படைப்பதற்கு சில மைல் கற்களை நாம் அதற்குள் சாதிக்க வேண்டும் என்பது தேசிய உறுதிப்பாடாக இருக்க வேண்டும்.

    புதிய இந்தியா என்று கூறும்போது, அதன் பொருள் என்ன? அதற்கு சில அளவுகோல்கள் உள்ளன - ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீடு, தேவைக்கு ஏற்ற எரிசக்தி, மேம்பட்ட சாலை மற்றும் தொலைத்தொடர்பு வசதி, நவீன ரயில்வே இணைப்பு, துரிதமான நீடித்த வளர்ச்சி என்பதே அதன்பொருள்.

    இதுமட்டுமல்ல, இன்னும் உள்ளது. நமது நாட்டின் சமுதாய அமைப்பிலும் நாகரீகத்திலும் உள்ளார்ந்து அமைந்துள்ள -  நமது மரபணுவில் ஒன்றிப்போயிருக்கும் மனிதம் என்ற உணர்வும், புதிய இந்தியாவின் நோக்கமாகும்.  எதிர்காலத்தை நோக்கி பீடுநடைபோடும் சமுதாயமாக அமைவதுடன் கருணையுள்ள   சமுதாயத்தை உருவாக்குவதும் புதிய இந்தியாவின் லட்சியம்.

    ஷெட்யூல்டு,   பழங்குடி வகுப்பினரானாலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரானாலும் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டுள்ள பிரிவினரானாலும் அவர்களின் மேம்பாடும் நமது தேசிய வளர்ச்சி நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொள்வதே கருணை மிக்க சமுதாய அமைப்பாகும்.

    எல்லையோரத்தில் உள்ள பகுதிகளிலும், மாநிலங்களிலும் வாழும் மக்களை அந்நியப்பட்ட உணர்வு இல்லாமல் நமது சகோதர சகோதரிகளாக அணைத்துக் கொள்வதே கருணைமிக்க சமுதாய அமைப்பாகும்.

    கைவிடப்பட்ட குழந்தை, முதியோர், பிணியுற்ற மூத்த குடிமக்கள், ஏழைகள் மற்றும் நலிவுற்றோர் நலன் நமது சிந்தையில் நிறைந்திருப்பதும் மாற்றுத் திறனாளிகளான நமது சகோதர சகோதரிகள் வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் சம வாய்ப்பு பெறச் செய்வதும் கருணைமிக்க சமுதாய
அமைப்பாகும்.

    சாதி, மத அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படாத சமுதாய அமைப்பே கருணைமிக்க சமுதாயம் மற்றும் சமத்துவ சமுதாயமாகும்.

    நமது இளம் தலைமுறை உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் நியாயமான கட்டணத்தில் உயர்ந்த கல்வி பெற மனித ஆற்றல் முதலீட்டை செழுமைப் படுத்துவது கருணைமிக்க சமுதாய அமைப்பாகும்.  தரமிக்க சுகாதாரமும், சத்துணவும் கேள்விக்குறியாக இல்லாமல் இருப்பதும் அதன் இலக்கணமாகும்.

    நாம் ஒவ்வொருவரும் திருப்தியும், மகிழ்ச்சியும் பெறும் வகையில், ஒவ்வொரு இந்தியனுக்கும் உள்ளே மறைந்திருக்கும் சக்தியை செயல்படுத்த வாய்ப்பு அளித்து சமுதாயத்திற்கு பங்களிக்க உதவுவதன் மூலம்தான் நாம் புதிய இந்தியாவை படைக்க முடியும்.

    விரும்பும் குடிமக்களுக்கும் - அரசுக்கும் இடையே ஏற்படும் பலமான பிணைப்பின் மூலம்தான் புதிய இந்தியாவைப் படைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

    பணமதிப்பிழப்பு அறிவிப்பின் பொருளை புரிந்து கொண்டு ஊழல், கறுப்புப் பணத்திற்கு எதிராக நீங்கள் காட்டிய இதயபூர்வமான ஒத்துழைப்பு பொறுப்பான தெளிவான சமுதாய சிந்தனையை பிரதிபலிப்பதாக அமைந்தது.

    நாணயமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு  பண மதிப்பிழப்பு ஊக்குவிக்கும் சக்தியாக விளங்கியது.

அந்த உணர்வை தொடர்ந்து தக்கவைத்து மேலும் வளர்க்க வேண்டும்.

    நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதும், இன்றைய தேவையாகும்.  இந்த தலைமுறையிலேயே வறுமையை ஒழித்து, நமது மக்களை சக்திமிக்கவர்களாக உயர்த்துவதற்கு தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.  புதிய இந்தியாவில் வறுமைக்கு இடமே இல்லை.
    இன்று உலகமே இந்தியாவை அதிசயித்து உற்றுநோக்குகிறது.  வளரும் பொருளாதாரத்தை கொண்டதாக, பருவநிலை மாற்றம், பேரழிவு, மோதல்கள், மனித குல நெருக்கடி, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்ற  பல்வேறு சர்வதேச சவால்களுக்கு தீர்வு காண்பதில்  பொறுப்பான உலக உறுப்பினராக நம்மை உலகம் பார்க்கிறது.

    உலகின் கண்களில் நமது நிலை உயர்வதற்கு 2020-இல் நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் மற்றுமொரு நல்வாய்ப்பாகும். இதற்கான முயற்சியில் அடுத்த மூன்றாண்டுகள் நம்மை நாம் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

திறமைமிக்க விளையாட்டு வீரர்களையும் வீராங்கனைகளையும் அடையாளம் கண்டு அவர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை நமது அரசும், விளையாட்டு அமைப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் ஒன்றுபட்டு செயல்படுத்த வேண்டும்.

    நாம் உள்நாட்டில் இருந்தாலும், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் இந்திய தாயின் குழந்தைகள், குடிமக்கள் என்ற வகையில் நமது நாட்டின் பெருமையை உயர்த்தி பிடிப்பதற்கு என்ன செய்யமுடியும் என்ற கேள்வியை நமக்கு நாமே எழுப்பிக் கொள்ள வேண்டும்.

    நமது குடும்பங்களை பற்றி நாம் சிந்திப்பது இயற்கை.  அதே சமயம், சமுதாயத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.  நமது அன்றாட கடமைகளுக்கும் அப்பால் சுயநலத்தை மறந்து கடமையாற்ற வேண்டும்.  ஒரு தாய் தனது குழந்தையை வளர்க்கும் போது அவரது கடமை மட்டுமின்றி  தன்னலமற்ற தன்மையும் வெளிப்படுகிறது.

    எல்லைகளிலும், சுட்டெரிக்கும் வெயில் காயும் பாலைவனத்திலும், கடுங்குளிர் உள்ள மலைகளிலும் நமது வீரர்கள் ஆற்றும் பணியில் அவர்களின் கடமையுடன்   தன்னலமற்ற தன்மையும் வெளிப்படுகிறது.

    பயங்கரவாதம் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராகப் போரிட்டு உயிர்த்தியாகம் செய்யும் நமது காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் ஆற்றும் கடமை அவர்களின் தன்னலமற்ற சேவையும் வெளிப் படுத்துகிறது.

    நமது விவசாயிகளும், தொழிலாளர்களும் கடுமையான சூழ்நிலையிலும் தாங்கள் இதுவரை சந்தித்திராத- நாட்டின் எங்கோ ஒரு மூலையில் வாழும் இதர இந்திய மக்களுக்கு உணவு அளிப்பதற்காகப் பயிரிடுகிறார்கள். அது அவர்களின் கடமை மட்டுமல்ல, தன்னலமற்ற சேவையும், அதன்மூலம் வெளிப்படுகிறது.

    இயற்கை சீற்றத்தின்போது, ஏராளமானோர் சேவையாற்றுகிறார்கள். சமூக அமைப்புகள், பொது நிறுவனங்கள், இரவு பகலாக மீட்புப் பணியிலும், நிவாரணப் பணியிலும் ஈடுபடுகிறார்கள். அவர்கள் கடமையை மட்டுமே செய்வதில்லை.  தன்னலமற்ற சேவையையும் வெளிப்படுத்துகிறார்கள்.

    இந்த தன்னலமற்ற உணர்வை நாம் ஒவ்வொருவரும் நமது மனதில் இருத்திக் கொள்ள முடியாதா?

நம்மால் முடியும்.  நாம் செய்திருக்கிறோம்.

    நமது பிரதமர் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஒருகோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தாமாக முன்வந்து, சமையல் எரிவாயு உதவித் தொகையை தியாகம் செய்ததன் காரணமாக, சக இந்திய ஏழை குடும்பங்களின் சமையல் அறைக்கு அந்த எரிவாயு சிலிண்டர் செல்ல முடிந்தது. அந்த குடும்பத்தின்  பெண்கள் கரும்புகையால் தங்கள் கண்களும், நுரையீரலும் பாதிக்கப்படுவதில் இருந்து விடுபட்டார்கள்.

    உதவித்தொகையை தியாகம் செய்த அந்த குடும்பங்களுக்கு நான் தலைவணங்குகிறேன். எந்தச் சட்டமும் அரசின் எந்த உத்தரவும் அவர்களை அப்படி செய்யும்படி பணிக்கவில்லை.  தாமாகவே முன்வந்து செய்தார்கள்.

    இந்த குடும்பங்களிடம் இருந்து நாம் உந்துசக்தியைப் பெற வேண்டும். சமுதாயத்திற்கு திருப்பிச் செலுத்து வதற்கான வழிமுறைகளை நாம் ஒவ்வொருவரும் கண்டறிய வேண்டும். ஏதாவது ஒரு வழியில் நாம் சமுதாயத்திற்கு ஆற்றும் சேவை இந்த வாய்ப்பை பெற்றிராத இந்தியர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

    எதிர்கால தலைமுறையை தகுதிமிக்கதாக மாற்றுவது தான் நமது நாட்டின் நிர்மாணப் பணியின் முக்கிய அம்சமாகும்.  எந்த ஒரு குழந்தையும் விடுபடக்கூடாது.  நாட்டின் நிர்மாணத்தில் ஈடுபட்டுள்ள சக குடிமக்கள், வாய்ப்பற்ற குழந்தைகள் கல்வி பயில்வதற்கு உதவிட வேண்டியது அவசியமாகும். உங்கள் குழந்தைக்கு கற்பிப்பதோடு, மற்ற குழந்தைக்கும் அந்தப் பணியை மேற்கொள்ளுங்கள். அந்தக் குழந்தைக்கான கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் அல்லது புத்தகம் வாங்குவதில் உதவுங்கள். ஏதேனும் ஒன்றை செய்யுங்கள்.

    நமது இந்திய நாடு மகத்தான சாதனை வாயிலில் நின்று கொண்டிருக்கிறது.  இன்னும் சில ஆண்டுகளில் நம் நாட்டு மக்கள் அனைவருமே எழுத்தறிவு பெற்றவர்களாக திகழ்வார்கள். அதற்கு மேலும் உயர்ந்து முழுமையான கல்வி பெற்ற சமுதாயமாக மாற்றுவது நமது நோக்கமாக இருக்கவேண்டும்.

    இந்த மகத்தானப் பணியில் நாம் அனைவரும் பங்களிப்பாளர்கள்.  நாம் இதை சாதிப்பதன் மூலம் நம் கண் முன்னாலேயே நமது நாட்டின் மாற்றத்தைக் காணமுடியும்.  அந்த அற்புதமான மாற்றத்தின் தூதுவர்களாக நாம் விளங்குவோம்.

    இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னர், கவுதம புத்தர் இவ்வாறு சொன்னார்.

    நீ உனக்குள்ளேயே ஒளிரும் விளக்காக மாறு

   அவரது இந்த போதனையைப் பின்பற்றி, நமது சுதந்திரத்தின்பால் அன்பு செலுத்திட ஒன்றுபட்டு செயல்பட்டால், புதிய இந்தியாவின் 125 கோடி ஒளிரும் விளக்குகளாக நாம் ஜொலிப்போம்.

ஜெய் ஹிந்த்.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :