Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
பொது அறிவு உலகம்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்-2017
 ................................................................
பிரதமரின் உஜ்வாலா திட்டம்
 ................................................................
இந்தியா-இஸ்ரேல் உடன்பாடு
 ................................................................
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.)
 ................................................................
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் 2017
 ................................................................
01-08-17*    நாட்டின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் வரலாற்றில் தடம் பதிக்கும் வகையில் முதல் மூன்று ஆண்டு காலத்தில், மத்திய அரசு உஜ்வாலா யோஜ்னா, மானியத்தை விட்டுத் தருதல், உர்ஜா கங்கா மற்றும் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை ஏற்ற இறக்கங்களின் பாதிப்பு போன்ற தடம் பதிக்கும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

*    எரிசக்திப் பாதுகாப்பை எட்டும் உறுதி யான முயற்சியாக, சமையல் எரிவாயு இணைப்புகள் வலையத்தை பரவலாக்கிய அதே சமயத்தில் துறையின் வளங்களை மேம்படுத்தும் திட்டங்களை அரசு நிறைவேற்றியது. கீழ்நிலை, நடுத்தர நிலை மற்றும் உயர்நிலை அளவில் முயற்சிகள் தொடங்கப்பட்டன. எரிசக்தி பாதுகாப்புக்கு கச்சா எண்ணெய் துறையை அழைத்துச் செல்லக் கூடிய பல திட்டங்கள் இன்னும் வரவுள்ளன.

*    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள பெண்களுக்கு இரண்டு கோடிக்கும் மேல் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் டெபாசிட் இல்லாத 5 கோடி புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் தருவதற்கு பிரதமரின் உஜ்வாலா யோஜ்னா (PMUY)  திட்டத்தின் கீழ் ரூ. 8000 கோடிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

*    முன்னோடித் திட்டங்களில் ஒன்றான PMUY 2016-17-ஆம் நிதியாண்டுக்கு அளிக்கப்பட வேண்டிய புதிய இணைப்பு களுக்கான இலக்கைத் தாண்டிவிட்டது. திட்டம் தொடங்கப்பட்ட முதலாவது ஆண்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 2.20 கோடி இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

*    PMUY திட்டம் கடந்த ஆண்டு மே 1-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா வில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.

*    2016-17 நிதியாண்டில், எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் (OMC) 3.25 கோடி புதிய இணைப்புகளை வழங்கி யுள்ளது என்பது கூடுதல் தகவல். எந்தவொரு ஆண்டில் வழங்கப்பட்ட புதிய சமையல் எரிவாயு இணைப்புகளை விடவும் இதுதான் மிக அதிகம் ஆகும்.

*    இப்போது பயன்பாட்டில் உள்ள மொத்த சமையல் எரிவாயு நுகர்வோரின் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டி விட்டது.  2014-ஆம் ஆண்டில் 14 கோடியில் இருந்து இப்போது பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

*    சமையல் எரிவாயு தேவை 10%-க்கும் மேல் அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 4,600-க்கும் மேற்பட்ட புதிய விநியோகஸ் தர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவை பிரதானமாக கிராமப்புற பகுதிகளில் அமைந்துள்ளன.  புதிய வாடிக்கையாளர் களில் 85% பேர், மீண்டும் சிலிண்டர் கேட்டு வருவதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

*    உலகின் மிகப்பெரிய நேரடி ஆதாய பரிமாற்றத் திட்டம், பஹல் (PAHAL) (Pratyaksh Hasthantarit Labh)   நுகர்வோருக்கான மானியத்தை, எந்த இடைத்தரகரும் இல்லாமல்  நேரடியாக அவருடைய பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கிற்கு, மாற்றித் தரப்படுவதை உறுதி செய்துள்ளது.

*    இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 204 கோடி பரிவர்த்தனைகள் மூலம் சமையல் எரிவாயு நுகர்வோருக்கு ரூ.40,000 கோடிக்கும் மேலான மானியம் மாற்றப்பட்டுள்ளது.

*    உலகின் மிகப்பெரிய ஆதாய பரிமாற்றத் திட்டம் என்று, உலக சாதனைகளுக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதன் மூலம் பஹல் திட்டத்தின் வெற்றி வெளிப்படையாகத் தெரிகிறது. முதல் இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ. 21,000 கோடி அல்லது 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இதனால் சேமிக்கப்பட்டுள்ளது.

*    சமையல் எரிவாயு மானியத்தை விட்டுத் தருவது என்ற அழைப்புக்கும் நல்ல பலன் கிடைத்துள்ளது. 1.05 கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தாங்களாக முன்வந்து தங்களின் எரிவாயு சிலிண்டர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். திருப்பித்தருதல் இயக்கத்துடன் தொடர்புடையதாக 2015-16 நிதியாண்டில், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தினருக்கு சுமார் 63 லட்சம் புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

*    "உர்ஜா கங்கா' என்ற லட்சியத் திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளுக்குள் வாரணாசியில் குடியிருப்புவாசிகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கடுத்த ஓராண்டில் ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா மற்றும் மேற்குவங்க மக்களின் தேவைகளை அது பூர்த்தி செய்யும்.

*    அது ஐந்து மாநிலங்களில், 40 மாவட்டங்கள் மற்றும் 2,600 கிராமங்களின் எரிசக்தி தேவையை நிறைவேற்றும். மூன்று பெரிய உர தொழிற்சாலைகளுக்கு புத்துயிரூட் டவும், 20 நகரங்களை தொழில்மயமாக்கவும், 7 நகரங்களில் நகர எரிவாயு நெட்வொர்க் உருவாக்கவும், பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இது வழிவகுக்கும்.

*    கடந்த காலங்களில் நாட்டில் சுத்திகரிப்புத் திறன் கணிசமாக அதிகரித்து வந்துள்ளது. 2015 - 16-இல் ஆண்டுக்கு 15 மில்லியன் மெட்ரிக் டன் (MMTPA) அளவுக்கு இந்தத் திறன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பாரதீப் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப் பட்டதன் மூலம் இது சாத்தியமானது. இந்த உயர்வுடன் சேர்த்து, சுத்திகரிப்புத் திறன் 230.066 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவை எட்டியுள்ளது.

*    உள்நாட்டுத் தேவையை நிறைவேற்றுவதற் காக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசு பல கொள்கை முயற்சிகளையும், நிர்வாக நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

*    நடப்பாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து நாடு முழுக்க படிப்படியாக BS-IV  மோட்டார் வாகன எரிபொருள் திட்டம் அமல் செய்யப்படுவதை அமைச்சகம் அறிவிக்கை செய்துள்ளது. BS-IV நிலையில் இருந்து எரிபொருள் தரம் நேரடியாக BS-IV நிலைக்கு செல்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. BS-IV தரங்கள் ஏப்ரல் 1, 2020-இல் இருந்து அமல்படுத்தப் படும்.

*    இந்திய நெருக்கடிகால பெட்ரோலியப் பொருள் கையிருப்பு லிமிடெட் ((ISPRL)  நிறுவனம் 5.33 மில்லியன் மெட்ரிக் டன்கள் (MMT)  அளவுக்கு கச்சா எண்ணெய் கையிருப்பு சேமிப்பு வைக்கும் திறனை விசாகப்பட்டினம், மங்களூர் மற்றும் படூர் ஆகிய இடங்களில் உருவாக்கியுள்ளது.

*    ONGC மற்றும் OIL போன்ற தேசிய எண்ணெய் நிறுவனங்களால் கண்டறியப் பட்ட 69 ஹைட்ரோகார்பன் வள இடங் களை, வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்கு, கண்டறியப்பட்ட சிறிய எண்ணெய் வயல் கொள்கைக்கு அரசு ஒப்புதல் அளித் துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட அமைவிடங்கள், குறைந்த அளவிலான வளங்கள், அதிகமான மேம்பாட்டு செலவுகள், தொழில்நுட்ப பற்றாக்குறைகள், நிதி போன்ற பல்வேறு காரணங் களால் இவற்றை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவது பல ஆண்டுகளாக தள்ளிப் போய்க் கொண்டு இருந்தது.

*   குவஹாத்தி, பொங்கைகோவன் மற்றும் நுமலிகார் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவாக்கம் செய்வது, நுமலிகாரில் உயிரி-சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் மற்றும் இயற்கை எரிவாயு நெட்வொர்க் உருவாக்குதல், மாநிலத்தில் POL மற்றும் LPG குழாய்கள் அமைத்தல் ஆகிய வற்றுக்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

*    ஹைட்ரோகார்பன் தொலைநோக்கு ஆவணம் 2030, வடகிழக்குப் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் 2030-க்குள் 1.3 லட்சம் கோடி வரை முதலீடு செய்திட வகை செய்கிறது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :