Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
Logo
பொது அறிவு உலகம்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்-2017
 ................................................................
பிரதமரின் உஜ்வாலா திட்டம்
 ................................................................
இந்தியா-இஸ்ரேல் உடன்பாடு
 ................................................................
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.)
 ................................................................
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் 2017
 ................................................................
01-08-17*    இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவு ஏற்பட்டதன் 25-ஆம் ஆண்டையொட்டி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவின் அழைப்பை ஏற்று,இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 4-6, 2017-இல் பயணம் மேற்கொண்டார்.

*    இஸ்ரேலுக்கு முதல்முறையாக இந்தியப் பிரதமர் மேற்கொண்டுள்ள இந்த வரலாற்றுப்பூர்வமான பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்தியுள்ளது. மேலும், இருதரப்பு நல்லுறவை பாதுகாப்பு ஒத்துழைப்பாக உயர்த்தியுள்ளது.

*    தூதரக உறவு ஏற்பட்டு கால் நூற்றாண்டுக்குப் பிறகு, நல்லுறவின் வளர்ச்சியை ஆய்வுசெய்தனர். இரு நாடுகளின் இலக்குகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை வெளிப் படுத்தும் வகையில், புதிய நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளை வகுக்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். மேலும், தங்களது ஒருங்கிணைந்த முயற்சி களை பல்வேறு துறைகளுக்கும் விரிவு படுத்த ஒப்புக்கொண்டனர்.

*    வளர்ச்சி, தொழில்நுட்பம், புத்தாக்கம், தொழில் முனைவோர் திறன், பாதுகாப்பு, ராணுவம் ஆகியவற்றில் இரண்டு நாடுகளும் மிகவும் நெருக்கமான கூட்டாளி களாக மாறும் என்று அவர்கள் எதிர் நோக்கியுள்ளனர்.

*    வளர்ச்சியின் மையநிலையாக கருதி, நீர் மற்றும் வேளாண்மைத் துறையில் தீவிர ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியாவும், இஸ்ரேலும் ஒப்புக் கொண்டன. இதில், நீர் சேமிப்பு, கழிவுநீர் மேலாண்மை மற்றும் அதனை வேளாண்மைக்கு மீண்டும் பயன்படுத்துவது, உப்புநீர் சுத்திகரிப்பு, நீர் பயன்பாட்டு சீர்திருத்தங்கள் மற்றும் அதிநவீன நீர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கங்கை மற்றும் பிற நதிகளை தூய்மைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.*    மேலும், ஏற்கனவே உள்ள உயர்சிறப்பு மையங்களை (Centres of Excellence), இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண்மை அமைச்சகத்தின் கீழ், மறுசெயல்பாட்டுக்கு கொண்டுவருவதுடன் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை ஈடுபடுத்தி வர்த்தக ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய, வர்த்தக வழிமுறைகள் ஊக்குவிக்கப்படும்; தரமான விதைப்பு வழிமுறைகள் ஏற்படுத்தப்படும்;

அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங் களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்ற தகவல்களை பரிமாறிக் கொள்வ துடன், அரசு-தனியார் கூட்டமைப்பு, வர்த்தகர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் பிற வழிமுறைகள் மூலம், தனியார் துறையை ஈடுபடுத்தி, சந்தை இணைப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படும். இந்த ஒத்துழைப்பை வழிநடத்திச் செல்வதற்காக கூட்டுப் பணிக் குழுவை உருவாக்கவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

*    இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டில் முழு திறனையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இரண்டு பிரதமர்களும் குறிப்பிட்டனர். இந்த விவகாரத்தில், ஆய்வுசெய்து விரைந்து பரிந்துரைகளை அளிக்குமாறு இந்தியா- இஸ்ரேல் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பை கேட்டுக் கொண்டனர்.

*    புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் திறனில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். புதிதாக தொழில் தொடங்குதல் துறையில் தீவிர ஒத்துழைப்பு வேண்டும் என்றும்
வலியுறுத்தினர்.

*    இந்த புரிந்துணர்வு உடன்பாடு, இந்தியா மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள முக்கியப் பங்கு வகிக்கும். இதன்மூலம், வர்த்தக நடவடிக்கைகளுக்கு தேவையான புத்தாக்க தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்கள் உருவாக்கப்படும்.

*    இரு நாடுகளையும் சேர்ந்த தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், அரசு அமைப்புகள் ஆகியவற்றுக்கு இடையே பல்வேறு வழியிலும் தொழில் புலமை ஒத்துழைப்பு அவசியம் என்பதை அங்கீகரித்துள்ள இஸ்ரேல், இந்தியாவில் 2018-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஆண்டு தொழில்நுட்ப மாநாட்டை நடத்தும் கூட்டு நாடாக இருக்குமாறு இந்தியா விடுத்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளது.

*    இஸ்ரேல் விண்வெளி முகமைக்கும் (ISA), இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கும் (ISRO) இடையே தற்போது இருந்துவரும் ஒத்துழைப்புக்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். அணு கடிகார ஒத்துழைப்பு; ஜியோ லியோ ஆப்டிகல் கல்வி ஒத்துழைப்பு மற்றும் சிறிய செயற்கைக்கோள்களுக்கான மின்சார உந்துவிசை ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப் பட்ட மூன்று புரிந்துணர்வு உடன்பாடுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான செயல் திட்டங்களுக்கு இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இது இரு நாடு களுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்தனர். பரஸ்பர நலனுக்காக இரண்டு விண்வெளி அமைப்புகளும்ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவேண்டும் என்று அவர்கள் ஊக்குவித்தனர்.

*    சுகாதாரத் துறையில் மிகப்பெரும் தரவு ஆராய்ச்சி (Big Data Analytics in Health Care) உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆதரவு அளித்து தங்களது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பிலும் ஒப்புக் கொண்டுள்ளதை இரண்டு தலைவர்களும் மகிழ்ச்சியுடன் குறிப் பிட்டனர். மேலும், பரஸ்பர பலம் மற்றும் நலன் அடிப்படையில், அதிநவீன தொழில்நுட்பப் பிரிவுகளில் இணைக்கப் பட்ட உயர்மதிப்பு ஆய்வு மையங்களை அமைப்பது உள்ளிட்ட அறிவியல்பூர்வ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்து வதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான இந்தியா-இஸ்ரேல் கூட்டுக் குழுவுக்கு இரு பிரதமர்களும் உத்தரவிட்டனர்.

*    கடந்த பல ஆண்டுகளாகவே இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பானது முக்கியத் துவம் பெற்றுள்ளதை அவர்கள் உறுதிப் படுத்தினர். இந்தத் துறையில் எதிர்கால உற்பத்தியில், பாதுகாப்பு உபகரணங்களை கூட்டாக இணைந்து உற்பத்தி செய்ய முடிவுசெய்யப்பட்டது. இதில், இஸ்ரேலின் தொழில்நுட்பம் பரிமாறிக் கொள்ளப்பட்டு, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

*    அரசு மற்றும் தனியார் என இருதரப்பிலும் இணையதள பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மையை ஊக்குவிக்க இந்தியாவும், இஸ்ரேலும் உறுதிபூண்டுள்ளன. தங்களது நாடுகளின் இணைய ஆணையங்களுக்கு இடையே பேச்சுவார்த்தையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர்கள் வலியுறுத்தினர். மேலும், இந்தத் துறையில், ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவதுடன், அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்குவது என்ற தங்களது உறுதியை அவர்கள் வெளிப்படுத்தினர். இணையதள பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான வழிகாட்டி முறையை உருவாக்குவதன் மூலம், இணையதள விவகாரங்களில் தங்களது அகண்ட ஒத்துழைப்பை வலுப் படுத்துவது மற்றும் மேலும் ஒழுங்குபடுத்துவது என்பதை இரு தரப்பும் அங்கீகரித்தன.

*    உலக அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் தீவிரவாதம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதை, இரு பிரதமர்களும் ஒப்புக் கொண்டனர். மேலும், தீவிரவாதத்தை அனைத்து வடிவிலும், கொள்கைகளிலும் முறியடிப்பது என்ற தங்களது வலிமை யான வாக்குறுதியை வலியுறுத்தினர். எந்தவொரு நிலையிலும், தீவிரவாத செயல்பாடுகளை நியாயப்படுத்த முடியாது என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகள், அதன் இணைப்புகள் மற்றும் அதனை ஊக்குவிப்போர், ஆதரிப்போர், தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்வோர் அல்லது தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதக் குழுக்களுக்கு புகலிடம் அளிப்போர் ஆகிய அனைவர் மீதும் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் அல்லது தொழில்நுட்பங்களை தீவிரவாத இயக்கங்களுக்கு கிடைத்துவிடாமல் தடுக்க வேண்டியது அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தினர். சர்வதேச தீவிரவாதம் குறித்த ஒருங்கிணைந்த உடன்பாட்டை (ஈர்ம்ல்ழ்ங்ட்ங்ய்ள்ண்ஸ்ங் ஈர்ய்ஸ்ங்ய்ற்ண்ர்ய் ர்ய் ஒய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் பங்ழ்ழ்ர்ழ்ண்ள்ம் - ஈஈஒப)  விரைந்து ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பது என்று இரு தலைவர்களும் உறுதியளித்தனர்.

*    உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்புக்கான ஒத்துழைப்பு குறித்த உடன்பாட்டில் குறிப்பிட்டுள்ளதை செயல்படுத்துவதில் இரு தலைவர்களும் தங்களது உறுதியை வெளிப்படுத்தினர். மேலும், இந்த உடன்பாட்டை திறமை யாகவும், சிறப்பான முறையிலும் செயல் படுத்த பல்வேறு பணிக் குழுக்களை ஊக்குவித்தனர்.

*    உயர்கல்வி மற்றும் ஆய்வுத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரண்டு பிரதமர்களும் குறிப்பிட்டனர். மேலும், இதனை உரிய உடன்பாடுகள் மற்றும் கூட்டு ஆய்வு மானியத் திட்டங்கள் மூலம் ஊக்குவிக்க ஒப்புக் கொண்டனர்.

*    இந்தியா மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு இடையேயான தொடர்புகள் வளர வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். இதற்கு, இந்தியா, இஸ்ரேல் இடையே விமானப் போக்குவரத்தை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் பயணம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப் பதற்கான வழிவகைகளை செய்ய இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

*    இரண்டு சமூகத்தினரையும் இணைப்ப தற்காக இந்தியாவில் யூத இன மக்கள் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்திய வம்சாவளி யூதர்கள் செய்த பங்களிப்பை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலில் இந்திய கலாச்சார மையம் திறக்கப்படும் என்று அறிவித்தார்.

*    இஸ்ரேலில் மற்றவர்களை கவனித்துக் கொள்ளும் (ஸ்ரீஹழ்ங்-ஞ்ண்ஸ்ங்ழ்ள்) பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்களின் பங்களிப்பை இரண்டு பிரதமர்களும் அங்கீகரித்தனர். மேலும், அவர்கள் ஒழுங்குமுறையின் கீழ், தொடர்ந்து, இஸ்ரேலுக்கு வருவதை உறுதிப்படுத்துவதற்கான பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று இருவரும் விருப்பம் தெரிவித்தனர்.

*    இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதி நடவடிக்கை களின் முன்னேற்றம் குறித்து இரண்டு பிரதமர்களும் ஆலோசனை நடத்தினர். பிராந்தியத்தில் சரியான மற்றும் நிலைத்து இருக்கக்கூடிய அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இருதரப்புக்கும் இடையே பரஸ்பரம் அங்கீகரிப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அடிப்படையில், விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண ஆதரவு அளிப்பது என்று இருவரும் மறுஉறுதி அளித்தனர்.

கையெழுத்தான ஒப்பந்தங்கள்


1) இந்தியா-இஸ்ரேல் தொழில் துறை ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் தொழில் நுட்ப புத்தாக்க நிதியத்தை அமைப்பதற்காக இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும், இஸ்ரேலின் தேசிய தொழில்நுட்பவியல் புத்தாக்க ஆணையத்துக்கும் இடையே புரிந்துணர்வு உடன்பாடு


2) இந்தியாவில் நீர்ப் பாதுகாப்புக்கான தேசிய அளவிலான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக இந்திய குடியரசின் குடிநீர் மற்றும் துப்புறவு அமைச்சகத் துக்கும், இஸ்ரேல் அரசின் தேசிய கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் நீர் ஆதாரங்கள் அமைச்சகத்துக்கும் இடையே புரிந்துணர்வு உடன்பாடு


3) இந்தியாவில் மாநில நீர் பயன்பாட்டு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக இந்திய குடியரசில் உள்ள உத்தரப்பிரதேச அரசின் உ.பி. நீர் கழகத்துக்கும், இஸ்ரேல் அரசின் தேசிய கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் நீர் ஆதாரங்கள் அமைச்சகத்துக்கும் இடையே புரிந்துணர்வு உடன்பாடு


4) இந்தியா-இஸ்ரேல் மேம்பாட்டு ஒத்துழைப்பு - வேளாண்மைத் துறையில் 2018 முதல் 2020 வரையான மூன்று ஆண்டுகால பணித் திட்டம்


5) அணு கடிகார விவகாரத்தில் ஒத்துழைப்புக்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) மற்றும் இஸ்ரேல் விண்வெளி முகமை (ஐ.எஸ்.ஏ.) இடையே யான ஒத்துழைப்புத் திட்டம்


6) ஜியோ-லியோ ஆப்டிகல் லிங்க் விவகாரத்தில் ஒத்துழைப்புக்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) மற்றும் இஸ்ரேல் விண்வெளி முகமை (ஐ.எஸ்.ஏ.) இடையே புரிந்துணர்வு உடன்பாடு


7) சிறிய செயற்கைக்கோள்களுக்கான மின்சார உந்துவிசை விவகாரத்தில் ஒத்துழைப்புக்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) மற்றும் இஸ்ரேல் விண்வெளி முகமை (ஐஎஸ்ஏ) இடையே புரிந்துணர்வு உடன்பாடு


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :