Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
Logo
பொது அறிவு உலகம்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்-2017
 ................................................................
பிரதமரின் உஜ்வாலா திட்டம்
 ................................................................
இந்தியா-இஸ்ரேல் உடன்பாடு
 ................................................................
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.)
 ................................................................
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் 2017
 ................................................................
01-08-17
*    வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) 2017 ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு
வந்தது.

*    ஜி.எஸ்.டி. என்பது  நாட்டில் மத்திய மற்றும் மாநில வரிவிதிப்புகளைக் கொண்டுள்ள மறைமுக வரி பரப்பை முற்றிலும் மாற்றியமைக்க கூடியதாகும். ஜி.எஸ்.டி.யை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நிர்வகிக்கும்.ஜி.எஸ்.டி. முக்கியத்துவம்


*    நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வரி சீர்திருத்தம் - ஜி.எஸ்.டி. - ஒரு தேசம் - ஒரு வரி - ஒரு சந்தை என்ற இலக்கை நிஜமாக்குவதற்கு இது வழிவகை செய்கிறது.

*    ஜி.எஸ்.டி. என்பது, தொழில்துறை, அரசு மற்றும் நுகர்வோர் என்று அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கக் கூடியதாகும். இது சரக்கு மற்றும் சேவைகளின் விலையை குறைக்கிறது. பொருளாதாரத்துக்கு வலுஊட்டுகிறது.

*    உற்பத்தி மற்றும் சேவைகளை உலக அளவில் போட்டியிடுவதற்கு ஏற்ப மேம்படுத்துகிறது.

*    "இந்தியாவில் தயாரிப்போம்' என்ற திட்டத்துக்கு பெரிய அளவில் ஊக்கம் தருவதாய் அமைகிறது.

*    மத்திய, மாநில அளவில் இப்போதுள்ள பிளவடைந்த மறைமுக வரி அமைப்பினால் சில வரியினங்களை திரும்ப பெற முடியாத நிலை உள்ளது. ஆனால், ஜி.எஸ்.டி. அமைப்பு முறையில் ஏற்றுமதிகள் முற்றிலும் பூஜ்ய அளவில் மதிப்பிடப் படுகிறது.

*    ஜி.எஸ்.டி. இந்தியாவை பொதுவான வரியுடன் கூடிய பொது சந்தை மற்றும் நடைமுறையை கொண்ட தாக மாற்றுகிறது. மேலும், பொருளாதார தடைகளை அகற்றுகிறது.

*    ஜி.எஸ்.டி. பெரும்பாலும் தொழில்நுட்ப ரீதியில் செயல்படக்கூடியது. இதனால் மனித தலையீடுகளை பெரிய அளவில் குறைக்கிறது.  ஜி.எஸ்.டி. இந்தியாவில் வர்த்தகத்தை எளிமையாக செய்வதை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அரசியல்சட்ட திருத்த சட்டம்


*    குடியரசுத் தலைவர் 8 செப்டம்பர் 2016-இல் ஒப்புதல் அளித்த பின்னர் 101-வது அரசியல்சட்ட திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.

*    ஜி.எஸ்.டி. கவுன்சில் 15.9.2016-இல் ஏற்படுத்தப்பட்டது. 2016 செப்டம்பரில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டதில் இருந்து, இதுவரை 18 முறை கூடியுள்ளது.

*    அனைத்து மாநில நிதியமைச்சர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய, மாநில  அரசு அதிகாரிகள் கூட்டத் தில் கலந்து கொண்டனர். அவர்கள் இந்த முக்கியமான வரி சீர்த்திருத்தம் தொடர் பான சட்டங்களையும், நடைமுறைகளையும் உருவாக்கினார்கள்.

*    இந்த முக்கியமான மாபெரும் பணிக்கு 27000 மனித மணி நேரங்கள் செலவிடப் பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. அமலாக்கத்தை விரைவுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசு அதிகாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 200 முறை கூடி விவாதித் துள்ளனர்.

*    ஜி.எஸ்.டி.க்கான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை வடிவமைக்கும்போது, வரி கட்டுபவர்களுக்காக வர்த்தகத்தை எளிமை யாக்குவதை கவனத்தில் கொள்ளப்பட்டது. இதில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புகள், பொறுப்புகள் ஆகியவை நிர்ணயிக்கப்பட்டன.

*    மிகக் குறுகிய காலத்தில், ஜி.எஸ்.டி. கவுன்சில், ஜி.எஸ்.டி. சட்டங்கள், ஜி.எஸ்.டி. விதிமுறைகள், இழப்பீடு இனம் உட்பட வரி விகித கட்டமைப்புகள், பல்வேறு வரியினங்களில் சரக்கு மற்றும் சேவைகளை இனம் பிரிப்பு, விலக்குகள், நிலைகள், வரி நிர்வாக கட்டமைப்புகள் உள்ளிட்ட வற்றுக்கு அனுமதி வழங்கியது. கவுன்சிலின் அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டன.

*    சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை உருவாக்கும்போது, தொழில் மற்றும் வர்த்தக துறையினர் மற்றும் முக்கியமான இதர துறையினர் ஆகியோரிடம் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டன.

*    வரைவு சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இணையதளங்களில் பதிவிடப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் ஆலோசனைகள் வரவேற்கப்பட்டு பெறப் பட்டன.

*    29 மார்ச் 2017-இல், மத்திய நிதியமைச்சர், மக்களவையில் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக, மத்திய சரக்கு மற்றும் சேவைகள் வரி (சி.ஜி.எஸ்.டி.) மசோதா-2017, ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஐ.ஜி.எஸ்.டி.) மசோதா-2017, மத்திய யூனியன் பிரதேசங்கள் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (யூ.டி.ஜி.எஸ்.டி.) மசோதா-2017 மற்றும் ஜி.எஸ்.டி. (மாநிலங்களுக்கான இழப்பீடு) மசோதா-2017 ஆகிய பெயர்களில் நான்கு மசோதாக்களை தாக்கல் செய்தார். இவை மக்களவையில் 29 மார்ச் 2017-இல் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் 6 ஏப்ரல் 2017-இல் நிறைவேற்றப்பட்டன.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு


*    மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 20 லட்சமாக நிர்ணயிக்கப் பட்டது. சில சிறப்பு இனங்களுக்கு மட்டும் ரூ.10 லட்சம்.

*    5%, 12%, 18%, மற்றும் 28% என்ற நான்கு பிரிவுகள் வரி விகிதங்கள் ஜி.எஸ்.டி.யில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

*    மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவற்காக, சொகுசு கார்கள், வாயு நிரப்பப்பட்ட குளிர்பானங்கள், பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு, 28% என்ற ஜி.எஸ்.டி. வரிக்கு மேலாக ஒரு கூடுதல் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.

*    கூட்டுத் திட்டத்தை பெறுவதற்கான உச்சவரம்பு ரூ. 75 லட்சமாகவும், சிறப்பு மாநிலங்களில் இது ரூ. 50 லட்சமாகவும் இருக்கும். இதற்கு காலாண்டு அடிப் படையில் மட்டுமே கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட உற்பத்தியாளர்கள், சேவை அளிப்பவர்கள் (உணவகங்களை தவிர) ஆகியோர் கூட்டு திட்டத்தில் சேர முடியாது.

*    ஜி.எஸ்.டி.யில் அனைத்து பரிமாற்றங்களும், நடவடிக்கைகளும் மின்னணு முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும். தலையீடு இல்லாத நிர்வாக முறையை எட்ட இது உதவும். மேலும், இது வரி கட்டுபவர்கள் வரி அலுவலர்களை நாட வேண்டிய
அவசியத்தை குறைக்கும்.

*    ஜி.எஸ்.டி., தானியங்கி முறையிலான மாதாந்திர மற்றும் வருடாந்திர அடிப்படை யிலான கணக்கு தாக்கலுக்கு வழிவகை செய்துள்ளது.

*    மேலும், இது வரி கட்டுபவர்கள் 60 நாட்களுக்குள் பணத்தை திரும்ப பெற வழிவகை செய்கிறது. ஏற்றுமதியாளர்கள் 7நாட்களுக்குள் 90% அளவிலான முதன்மை முதன்மை பணத்தை திரும்ப பெற முடியும். இதுதவிர, குறித்த காலத்தில் பணம் திரும்ப பெறவில்லை என்றால், அதற்கு வட்டி அளிப்பது, ரீபண்ட்டை நேரடியாக வங்கியில் செலுத்துவது உள்ளிட்ட வேறு சில வசதிகளும் இதில் கிடைக்கும்.

*    வரி கட்டுபவர்கள், இப்போதுள்ள முறையில் இருந்து எளிதாக ஜி.எஸ்.டி.க்கு மாறவும், கிடைக்கக்கூடிய பங்குகள் மீதான கடன் ஆகியவற்றுக்காக சிறப்பான பரிமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

*    ஜி.எஸ்.டி. செயல்பாட்டு மதிப்பீடு முறை உள்ளிட்ட பிற விதிமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

*    நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் கூடுதல் லாபத்துக்கு எதிரான விதிமுறைகளும் உள்ளன.

ஜி.எஸ்.டி. நெட்வொர்க்


*    ஜி.எஸ்.டி.என், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 25 தனியார் நிறுவனங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.  இது பொதுவான வரி கட்டுபவர்களின் இணையதளமாக செயல்படும். இந்த பொது இணையதளத்தில், வரியாளர்கள் தங்களுடைய பதிவு விண்ணப்பங்களை அனுப்புதல், கணக்கு தாக்கல் செய்தல், வரியை கட்டுதல், பணம் திரும்ப பெறல் கேட்டல் உள்ளிட்டவற்றை  செய்ய முடியும்.

*    ஜி.எஸ்.டி.என் மிக விரைவான தகவல் தொழில்நுட்பத் தளமாகவும், 80 லட்சம் வரி கட்டுபவர்கள் மற்றும் ஆயிரக் கணக்கான வரி அதிகாரிகளை இணைப்ப தாகவும் அமையும்.

*   ஜி.எஸ்.டி.யின் கீழ் அனைத்து தாக்கல்களும் மின்னணு முறையில் மட்டுமே செய்ய முடியும். அதேசமயம், ஜி.எஸ்.டி.என் முன்பு, பின்பும், சி.பி.இ.சி.யின் தகவல் தொழில்நுட்ப முறை பின்னணியாக அமைந்துள்ளது.

*    ஜி.எஸ்.டி.என் ஐடி நெட்வொர்க்கில், பல்வேறு மாநிலங்கள் இணைந்து வரி கட்டுபவர்களுக்கு தடையில்லாத வரி கணக்குகள் தாக்கல் செய்ய உதவ முடியும்.

*    மாநில வரி நிர்வாகத்தின் கீழ் மற்றும் மத்திய கலால் மற்றும் சுங்க வரி குழுமம் ஆகியவற்றின் கீழ் உள்ள இப்போதைய வரி கட்டுபவர்கள், ஜி.எஸ்.டி. முறையில் தங்களை இணைத்து கொள்ளும் பணி 8 நவம்பர் 2016-இல் இருந்து தொடங்கப் பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. போர்ட்டலில் 66 லட்சம் வரி கட்டுபவர்கள் தங்களை பதிவு செய்துள்ளனர்.

*    ஜி.எஸ்.டி. பேமென்ட்டுக்கான அப்ளிகேஷன் நடைமுறையில் உள்ளது. 25 வங்கிகள் ஜி.எஸ்.டி. பொது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த வங்கிகள் இ&பேமென்ட் மற்றும் நேரடியாக வந்து பணம் செலுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். இதனுடன் என்இஎப்டி/ஐஆர்டிஜிஎஸ் மற்றும் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் பணத்தை செலுத்த முடியும்.

சி.பி.இ.சி.யின் மறு ஒருங்கிணைப்பு


*    ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்காக மத்திய கலால் மற்றும் சுங்க வரி போர்டை ஜி.எஸ்.டி. நிர்வாகத்துக்காக மறுஒருங்கிணைப்பு செய்யப்பட வேண்டியது அவசியமாக இருந்தது. இந்த மறுஒருங் கிணைப்பானது, கட்டமைப்பு மாற்றம் மற்றும் மனித ஆற்றலை மாற்றி பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது.

*    தொலைதூர பகுதிக்கும் மனித ஆற்றலை மாற்றி பயன்படுத்துதலை உறுதி செய்யப் பட்டது. ஜி.எஸ்.டி.யின் கீழ் முக்கியமான பங்குகளை கொண்டுள்ள இயக்குநகரங்கள் போதுமான அளவுக்கு விரிவாக்கம் மற்றும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

*    கள அமைப்புகள் 21 சிஜி.எஸ்.டி. மற்றும் சி.எக்ஸ் மண்டலங்கள், 107 சிஜி.எஸ்.டி. மற்றும் சி.எக்ஸ் ஆணையகரங்கள், 12 துணை ஆணையகரங்கள், 768 சி.ஜி.எஸ்.டி. மற்றும் சிஎக்ஸ் டிவிஷன்கள், 3969 சி.ஜி.எஸ்.டி. மற்றும் சி.எக்ஸ் ரேஞ்சஸ், 48 தணிக்கை ஆணையகரங்கள் மற்றும் 49 மேல்முறையீட்டு ஆணையகரங்கள் என்று மறுகட்டமைக்கப்பட்டுள்ளன.

பயிற்சி


*    ஜி.எஸ்.டி.யை சுமூகமாக அறிமுகப்படுத்து வதற்காக போதுமான அளவுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு கட்டாயமாக இருந்தது. இதற்காக, தேசிய சுங்கம் மறைமுக வரிகள் மற்றும் நார்கோடிக்ஸ் (என்.ஏ.சி.ஐ.என்.), விரிவான பயிற்சி திட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :