Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
Logo
பொது அறிவு உலகம்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்-2017
 ................................................................
பிரதமரின் உஜ்வாலா திட்டம்
 ................................................................
இந்தியா-இஸ்ரேல் உடன்பாடு
 ................................................................
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.)
 ................................................................
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் 2017
 ................................................................
01-08-17
*     இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் 24-06-2017 தேதியுடன் முடிவடைந்தது. இதற்கடுத்து அரசியலமைப்பு 62-ஆம் சட்டப்பிரிவின் படி தேர்தலை நடத்தி புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி 15-வது குடியரசுத் தலைவர் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் 17-07-2017 அன்று நடத்தியது. தேர்வு முடிவுகள் 20-07-2017 அன்று வெளியிடப்பட்டது.

*    இத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 2930 வாக்குகள் (மதிப்பு 702044)  பெற்று வெற்றிப் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மீரா குமார் 1844 (மதிப்பு 367314) பெற்றார். தேர்வு முடிவின்படி இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். இந்திய குடியரசு தலைவராக இரண்டாவது தலித் குடியரசுத் தலைவர் (முதல் தலித் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன்) என்பது குறிப்பிடத் தக்கது.

*     இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர் இந்தியக் குடியரசு எனப்படும் இந்திய அரசின் தலைவர் ஆவார். இந்தியாவின் முதல் குடிமகன் என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார். மத்திய நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். பிரதமரும் அமைச்சரவையுமே செயல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர்.இராஜேந்திர பிரசாத் ஆவார்,குடியரசுத் தலைவர் தேர்தல்


*   இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாகம்-V, அத்தியாயம்1-- நிர்வாகம், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் பற்றி குறிப்பிடுகிறது.

சரத்து.52 இந்திய குடியரசுத் தலைவர்


*    இந்தியாவுக்கு ஒரு குடியரசுத் தலைவர் இருப்பார்.

சரத்து.54 குடியரசுத் தலைவர் தேர்தல்


*    குடியரசுத் தலைவர் வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார், வாக்காளர் குழுமம் என்பது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும், மாநிலங் களின் சட்டமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டிருக்கும்.

*    விளக்கம்: இந்த சரத்திலும், சரத்து 55இலும் மாநிலம் என்பதில் தேசத்தின் தலைநகர் புதுடில்லிலியும், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமும் அடங்கும்.

சரத்து.55 குடியரசுத் தலைவரின் தேர்தல் நடைமுறை

*    குடியரசுத் தலைவர் தேர்தலிலில், கூடுமான வரையில் மாநிலங்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவத்தில் ஒரே மாதிரியான விகிதாச்சாரமிருத்தல் வேண்டும்.

*   மாநிலங்களுக்கிடையில் ஒரே மாதிரியான தன்மை நிலவுவதற்காகவும், மாநிலங்கள் மற்றும் ஒன்றியத்தில் சரிசம நிலை நிலவுவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினரும் அளிக்கக்கூடிய வாக்குகள் பின்வரும் பாங்கில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

*    மாநில மக்கள்தொகையை, அந்த மாநிலச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதன் ஈவை, ஆயிரத்தால் பெருக்கிக் கிடைக்கும் வாக்குகளே, அந்த சட்டமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்குகளின் மதிப்புகளாக இருக்கும்.

*    அவ்வாறு ஆயிரத்தால் பெருக்கிய பின்னர்மீதமுள்ள ஐந்நூறுக்கு குறையாமல் இருந்தால் உட்கூறு(a) இல் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரின் வாக்குடன் மேலும் ஒருவாக்கு அதிகரிக்கும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒவ்வொரு உறுப்பினரும் அளிக்கும் வாக்கின் மதிப்பாவது :

    அவர்கள் சார்ந்துள்ள மாநிலச்சட்டமன்ற உறுப்பினர்களுக்கு,

*    உட்கூறுகள் (a) மற்றும் (b) இல் ஒதுக்கப்பட்டுள்ள வாக்குகளை நாடாளுமன்றத்தின் ஈரவைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்துக் கிடைக்கும் எண்ணிக்கையே, அவர்கள் அளிக்கும் வாக்கின் மதிப்பாகும். பாதிக்கு மேல் வரும் பின்னத்தை நன்றாக எடுத்துக்கொண்டு மற்றவை ஒதுக்கி விடுதல் வேண்டும்.

*    குடியரசுத் தலைவரின் தேர்தல், சராசரி பிரதிநிதித்துவ முறைப்படி, அதாவது ஒற்றை மாற்று ஓட்டு முறையில் நடைபெறுதல் வேண்டும். மற்றும் அத்தகைய தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறுதல் வேண்டும்.

விளக்கம்


*    இந்த சரத்தில் "மக்கள்தொகை' என்பது, அத்தகைய தேர்தலுக்கு முன் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் உறுதிசெய்து வெளியிடப்பட்ட மக்கள்தொகையைக் குறிக்கும்.

*    வரம்புரையாக இந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடைசி முந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பைக் குறிப்பது என்பது, 2026-ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதலாவதாக எடுக்கப்பட்டு வெளியிடப்படும் சரியான எண்ணிக்கைகள் வரையில், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பையே குறிப்பதாகக் கொள்ளவேண்டும்.

சரத்து.56 குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்


*    குடியரசுத் தலைவர் தான் பதவியேற்ற தேதியிலிலிருந்து ஐந்தாண்டுகள் தொடர்ந்து பதவியிலிலிருப்பார்.

*    குடியரசுத் துணைத்தலைவர் முகவரிக்கு, தமது கைப்பட எழுதிக் கொடுத்துவிட்டு குடியரசுத் தலைவர் பதவி விலகலாம்.

*    குடியரசுத் தலைவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டால், அவர் சரத்து 61-இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு பதவியிலிலிருந்து
நீக்கப்படுவார்.

*   குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் முடிந்தபிறகும், அவரை அடுத்து வருகின்ற குடியரசுத் தலைவர் பதவி ஏற்கும் வரையில் அவர் தொடர்ந்து பதவியில் இருப்பார்.

*    கூறு (a) உட்கூறு (b) இன் கீழ் குடியரசுத் தலைவர் தமது விலகல் தொடர்பாக, குடியரசுத் தலைவருக்கு முகவரியிட்டு அனுப்பிய மடலை அவர் உடனடியாக மக்களவைத் தலைவருக்கு தெரிவித்தல் வேண்டும்.

சரத்து.57 மறு தேர்தலுக்கு தகுதியாதல்


*    குடியரசுத் தலைவராகப் பதவி வகிக்கும் நபர் அல்லது பதவி வகித்த நபர், இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மற்றைய வகையங்களுக்கு உட்பட்டு, மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட தகுதியுடையவராக இருப்பார்.

சரத்து.58 குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகள்


*    இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்க படவிருக்கிற நபர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

*    அந்நபர்- இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

*    35 வயது நிறைவுற்றவராக இருத்தல் வேண்டும்.

*    அவர் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுப் பதற்குரிய தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.

*    இந்திய அரசாங்கத்தின் கீழ் அல்லது ஏதேனும் மாநில அரசாங்கத்தின் கீழ் அல்லது அத்தகைய
அரசாங்கங்களின் கட்டுபாட்டிலுள்ள வேறு ஏதேனும் அதிகார நிலையில் கீழ் இலாபம் பெறக்கூடிய ஏதேனும் அலுவலிலில் ஈடுபட்டுள்ள நபர்கள் எவரும், குடியரசுத் தலைவர் தேர்தலிலில் போட்டியிடத் தகுதியற்றவராவார்.

விளக்கம்


இந்த சரத்தின் நோக்கத்தின் பொருட்டு குடியரசுத் தலைவர் அல்லது குடியரசுத் துணைத்தலைவராக பதவி வகிக்கும் ஒருவரை அல்லது மாநிலம் எதனின் ஆளுநர் அல்லது மத்திய, மாநில அரசின்
அமைச்சர் ஒருவர், அந்தப் பதவி காரணமாக அரசின் கீழ் இலாபம் பெறக்கூடிய ஓர் அலுவலில் இருப்பதாகக் கொள்ளக்கூடாது.

சரத்து.59 குடியரசுத் தலைவர் பதவிக் குரிய நிபந்தனைகள்


*    குடியரசுத் தலைவர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலோ, மாநிலச் சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருத்தல் கூடாது. அவர் நாடாளுமன்றத்தின் இரு அவையிலோ, மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராக இருக்கும்போது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால்
அவர் அந்தப் பதவியை ஏற்கும் தேதியிலிலிருந்து அந்த அவையின் உறுப்பினர் பதவியிலிலிருந்து விலகிக் கொண்டதாகக் கருதப்படுவார்.

*    குடியரசுத் தலைவர் இலாபம் தரும் எத்தகைய அலுவலையும் கொண்டிருக்கக் கூடாது.

*    குடியரசுத் தலைவர், தமது அலுவலக உறைவிடத்தை வாடகைச் செலுத்தும் எதுவுமின்றிப் பயன்படுத்திக் கொள்ள உரிமையுடையவராவார். நாடாளுமன்றம், சட்டமன்றத்தின் மூலம் நிர்ணயிக்கும் ஊதியங்கள், படிகள் மற்றும் சலுகைகளைப் பெறவும் உரிமை யுடையவராவார். அதற்காக வகையங்கள் எதுவும் இயற்றப்படுகின்ற வரையில், அவர் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஊதியங்கள், படிகள் மற்றும் சலுகைகள் பெறுவார்.

*    குடியரசுத் தலைவரின் பதவிக்காலத்தில், அவரது ஊதியங்கள், படிகள் மற்றும் சலுகைகளைக்
குறைக்கக் கூடாது.

சரத்து.60 குடியரசுத் தலைவரால் எடுத்துக் கொள்ளப்படும் ஆணை உறுதிமொழி அல்லது மெய்யுறுதி மொழி

*    ஒவ்வொரு குடியரசுத் தலைவரும், குடியரசுத் தலைவர் பொறுப்பு வகிக்கும் ஒவ்வொரு நபரும் அல்லது குடியரசுத் தலைவரின் பணியை ஆற்றுபவரும், தமது அலுவலகப் பணியை மேற்கொள்வதற்கு முன்னர் உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசர் அல்லது அவர் இல்லாதபோது, அப்போது கிடைக்கப் பெறும் பணிமூத்த உச்சநீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் பின்வரும் முறையில் ஆணையுறுதி மொழி அல்லது மெய்யுறுதி மொழி எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

தேர்தல் ஆணையம்


  குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம், 1952 மற்றும் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் விதிகள், 1974-க்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும்.

*    இந்திய வாக்காளர் குழு  (Indian electoral college)

   இந்தியாவின் வாக்காளர் குழு என்பது இந்தியாவின் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 55(2) பிரிவு வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்றாகும்.

*    குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்

*    மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை)

*    மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை)

*    அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும்

*    சட்டப்பேரவை கொண்டுள்ள ஒவ்வொரு ஒன்றிய ஆட்சிப்பகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

*    குறிப்பு- நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இல்லை.

*    இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநிலங்களைப் பொறுத்தவரை ஓர் சார்பாற்றம் வீதத் தெரிவாண்மை ஆகும். ஒரு குறிப்பிட்ட மாநில  சட்டமன்ற உறுப்பினரின் வாக்குக்கு வாக்காளர் குழுவில் அளிக்கப்படும் மதிப்பு = மாநிலத்தின் மக்கள்தொகை /(தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை ஷ் 1000)

*   அதாவது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் உள்ள வாக்கு மதிப்பு அவர் எத்தனை ஆயிரம் வாக்காளர்களின் சார்பாக உள்ளார் என்பதாகும். இவ்வகையாக அனைத்து மக்களும் மறைமுகமாக குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : Muthu Date & Time : 8/23/2017 10:06:45 AM
-----------------------------------------------------------------------------------------------------
இரப்பர் இசுடாம்ம்பு தேர்ந்தெடுக்கும் முறை விளக்கம் நன்று.
-----------------------------------------------------------------------------------------------------