Add1
logo
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்) || தினகரன் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு || நாளை ஆளுநரை சந்தித்து முறையிடுகிறோம்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் || தியானத்தில் ஈடுபட்டுள்ள 18 எம்.எல்.ஏக்கள்! || தினகரனுக்கு காய்ச்சல்! || ஜெ. நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தியானம்! || ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ்!(படங்கள்) || ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் தினகரன் || பதவியேற்ற அன்றே கோட்டையில் ஓபிஎஸ் வாரிசுகள்! || கீரமங்கலம் பகுதியில் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி || பொது இடத்தில் தனது காலை பிடித்துவிட கூறிய விருத்தாசலம் எம்.எல்.ஏ. || அதிமுக அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கு ஆபத்தானது: பிரகாஷ் காரத் பேட்டி || கமல் கருத்து : திருமா ஆதரவு ||
Logo
ஓம்
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
குருப்பெயர்ச்சிப் பலன்கள்
 ................................................................
ஆகஸ்ட் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பலவகை உற்சவங்கள்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
தாலி காணிக்கை தந்தால் மாங்கல்யம் காக்கும் அம்மன்!
 ................................................................
ஆகஸ்ட் மாத ராசிபலன்கள்
 ................................................................
ஆடாது அசங்காது வா கண்ணா!
 ................................................................
இராவணன் சிறைவைத்த அர்ஜுனன்!
 ................................................................
எமபயம் போக்கி அபயமளிக்கும் நாதன்!
 ................................................................
மனித உடலில் பிரபஞ்ச ரகசியம்
 ................................................................
சொர்க்க வாழ்வு தரும் சாயாவனேஸ்வரர்!
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
எங்கிருந்தாலும் அருளும் எளியோன்!
 ................................................................
அனைத்து நோய்களிலிருந்தும் காக்கும் அப்பன்!
 ................................................................
01-08-17காவிஷ்ணுவின் அவதாரங்கள் பத்து என்போம்.

ஸ்ரீமத் பாகவதம் 22 அவதாரங்கள் என்று கூறும். அதனில் 17-ஆவது அவதாரம் வியாசர்.

வியாசர்தான் வேதங்களை நான்காகப் பிரித்தார். வியாச என்னும் சொல்லுக்கு பிரித்தல், வகுத்தல் என்று பொருள்.

அவர் 18 புராணங்கள் எழுதினாலும் மனம் நிம்மதி அடையவில்லை. அப்போது நாரதர், ""நீவிர் கிருஷ்ண அவதார லீலைகளை விரிவாகக் கூறவில்லையே. கூறினால் மனசாந்தி ஏற்படும்'' என்றார்.

அதனால் வந்ததே ஸ்ரீமத் பாகவதம். 18,000 துதிகளைக் கொண்டது. பத்தாவது சர்க்கம் முழுவதும் கிருஷ்ண லீலைகளைக் கூறுவது. கிருஷ்ண பக்தர் களுக்கு இன்றியமையாத துதிநூல். சப்த வாரம் என்று ஏழு நாட்களில் பாராயணம் செய்வார்கள்.

வசுதேவர்- தேவகி தம்பதிக்கு எட்டாவது மகனாக, ச்ராவண மாதம் (ஆனி, ஆடி) தேய்பிறை அஷ்டமியில், ரோகிணி நட்சத்திரத்தில், நள்ளிரவில் மதுராவில் அவதரித்தார் கண்ணன். கோகுலத்தில் நந்த- யசோதை தம்பதியர் வீட்டில் வளர்ந்தார். மீண்டும் மதுரா வந்து பிரதான அவதார காரணமான கம்சாதியரை அழித்து, பின்பு த்வாரகை வந்து துவாரகாதீசனாகி, வேடன் எய்த அம்பால் அவதாரம் முடித்தார்.

ஸ்ரீமத் பாகவத கடைசி துதி என்ன?
"நாம ஸங்கீர்த்தனம் யஸ்ய/
ஸர்வ பாப ப்ரணாசனம்//
ப்ரணாமோ துக்க சமனம்/
நமாமி ஹரிம் பரம்//

பகவான் நாமம் கூற, நமது பாவங்கள் நசிகின்றன; துக்கங்கள் யாவும் அழிகின்றன. அதாவது நல்லதே நடக்கும்!

தமிழ்நாட்டு மன்னார்குடி ராஜகோபாலன், ருக்மிணி, சத்யபாமா சமேதனாய் மாட்டின்மேல் கை வைத்த தோரணையில் இருக்கிறான். மகரிஷிகள் வேண்ட, துவாரகாதீசன் கூற வந்த தலம். ஆக, தட்சிண துவாரகை.

அதேபோன்று கேரளத்தில் குருவாயூரில் இருக்கும் ஓரடிக் கண்ணனை குருவாயூரப்பன் என்று கூறுவார்கள். குருவும் வாயுவும் சிவன் எதிரே பிரதிஷ்டை செய்ததால் குருவாயூரப்பன். அங்கும் ஸ்ரீமத் பாகவத படனம் உண்டு.

18,000 துதிகள் கொண்ட பாகவதத்தை ஒரே நாளில் வாசிக்க முடியாது. எனவே, அந்த குருவாயூரப்பனே நினைத்தான் போலும். நாராயண பட்டத்ரி மூலமாக பாகவதச் சுருக்கத்தை 1,036 துதிகளிலேயே (நாராயணீயம்) இயற்றச் செய்தான்.

பழனி ஆண்டவன் விக்ரகம் கல் விக்ரகம் அல்ல. சித்தர் போகரால் நவபாஷாணம் கொண்டு வடிக்கப்பெற்றது. அவரது அபிஷேக நீர் சர்வரோக நிவாரணி! அதேபோன்று குருவாயூரப்பனும் கல் விக்ரகம் அல்ல. காலை வாக அபிஷேக நீரும், தைலாபிஷேக நீரும் சர்வரோக நிவாரணி!

மகாவிஷ்ணுவே அமைத்து யுகம்யுகமாக பூஜிக்கப்பட்ட விக்ரகம் நாம்  இன்று காணும் குருவாயூரப்பன்! நாம் கிருஷ்ணன் என்று கூறினாலும், அவன் சங்கு, சக்ர, பத்ம, கதாபாணியான நாராயணனே! விஷ்ணுவே பூஜித்ததால் ஸ்ரீதேவி, பூதேவி இல்லை.

மகாவிஷ்ணு, கிருஷ்ண அவதாரத்தில் தான் பூஜித்த விக்ரகத்தை தேவகி- வசுதேவருக்கு அளித்தாராம். கண்ணன் துவாரகாதீசனாக அவரே வழிபட்டார். அவர் தேகம் இழக்கும் சமயம், கண்ணன்போலவே இருக்கும் தோழன் உத்தவருக்கு அளித்து, "இதனை சிவபெருமான் கூறும் தென்தேசத்தில் ஸ்தாபிக்கவும்' என்றாராம். ஆக, அந்த விக்ரகம் 5,000 வருடத்திற்கு முந்தையது.

அந்த விக்ரகம் உத்தவர் கையிலிருந்து கடலில் நழுவ, அவர் வாயுவை வேண்ட, அவர் காற்றால் கரையில் சேர்ப்பித்தாராம். அதை கையில் எடுக்க பிரகஸ்பதி குரு வந்தாராம். உத்தவர், "நான் பதரிகாஸ்ரமம் போகிறேன். இந்த விக்ரகத்தை தென்பகுதியில் எங்கு பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அவரே உணர்த்துவார். அதன்படி செய்யுங்கள்' என்றார். குரு பகவான் வாயுவை நினைக்க, வாயு அவரை விக்ரகத்துடன் தட்சிணப் பிரதேசத்தில் சேர்த்தார். (கேரள தேசம்).

கடல் அருகே தாமரை மலர்கள் நிறைந்த பெரிய ஏரி இருந்தது. அச்சமயம் பரசுராமர் வந்து சிவபார்வதி அருகே, ஏரியின் வடப்புரம் ருத்ரதீர்த்தத்தில் சேர்ப்பித்தார். அங்கு பரமசிவன் விஷ்ணுவை ருத்ர கீதத்தால் ஜெபித்தாராம். சிவபெருமான் விஸ்வகர்மாவை அழைத்து கோவில் கட்டச்செய்து விக்ரகத்தை ஸ்தாபித்தாராம். குருவும் வாயுவும் விஷ்ணுவை ஏந்தி வந்ததால் ஊர் குருவாயூர்; விக்ரகம்  குருவாயூரப்பன் எனப்பட்டது. "குருவை' என்றால் கடல். ஆக, தலப்பெயர் குருவாயூர் என்றும் சொல்கிறார்கள்.

நாம் கோவிலருகே காணும் குளமே ருத்ரதீர்த்தம். இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தாமரையூரில் சிவன் கோவில் உள்ளது.

ஆதிசங்கரர் நியமித்தபடியே இன்றும் தாந்த்ரீகமுறையில் பூஜைகள் நடக்கின்றன. 1427-லிருந்து நாராயண நம்பூதிரி குடும்பமே இன்றும் பிரதம தந்த்ரியாக வழிபாடு நடத்துகிறது.

நாம் இன்று காணும் கோவில் 1638-ல் கட்டப்பட்டதாம்.

30-12-1970 ஏகாதசியின்போது அகண்ட விளக்கேற்றுதலால் கோவில் குலைந்தது. ஆனால் கர்ப்பக்கிரக விக்ரகங்கள் பாதிக்கப் படவில்லை. நாம் இன்று காணும் கோவில் 14-4-1973-ல் புதுப்பிக்கப்பட்டது.

இப்போது நாராயணீயம் வந்த விவரம் சிந்திப்போம்.

பகவானது லீலைகள் வினோதம். அருண கிரியார் விலைமாதுகள் ஈர்ப்பில் உடல், மனம், தனம் குலைந்து, கோபுரத்தினின்று கீழ்விழுந்து உயிர்விடத் துணிந்தபோது, அவரை முருகப்பெருமான் தடுத்தாட் கொண்டு, "முத்தைத்தருபத்தி' என்று அடியெடுத்துக் கொடுத்து, தலம்தலமாக சந்தத்தமிழால் திருப்புகழ் (14-ஆம் நூற்றாண்டில்) பாட வைத்தார்.

ஆந்திர கோவிந்த சாஸ்திரியை கிருஷ்ணா நதிக்கரையில் சன்யாசி நாராயண தீர்த்தராக்கி, வயிற்றுவலி கொடுத்து, அது தீர தமிழ்நாடு வரச்செய்து, குணசீல வேங்கடேசன் கூறியபடி பன்றியைத் தொடர்ந்து பூபதிராஜபுரம் வரச்செய்து, பன்றி பாழடைந்த கோவிலில் மறைய, அங்கு லட்சுமி நாராயணன் அருளால் வயிற்றுவலி நீக்கி, ஸ்ரீமத் பாகவத 10-ஆவது ஸ்கந்த கிருஷ்ண  லீலைகளை நடனநாடகம்போல பாடச்செய்து, அவரும் ஆட, கண்ணனும் ஆடினான். அந்த பாக்களுக்கு "கிருஷ்ணலீலா தரங்கம்' என்று பெயர். ஊர் வரகூர் (வராகம் என்றால் பன்றி) ஆயிற்று. வரகூரில் உரியடித் திருவிழா என்னும் மகா உற்சவம் சிறப்பாக நடக்கும். (இவ்வாண்டு 15-8-2017).

கேரள வில்வமங்களர் (13-ஆம் நூற்றாண்டு) வேத, சாஸ்திர, உபநிடத, புராண, இதிகாசம் கற்றுணர்ந்தவர்; தனவான். சிந்தாமணி என்கிற வேசியிடம் சரணடைந்தார். அவள் ஒருநாள், "என்னிடம் உள்ள ஆசையை கண்ணனிடம் வைத்தால் கடைத்தேறலாமே' என்றாள். அது அவர் மனதைத் திறந்தது. பிருந்தாவனம் அடைந்த அவர் "ஸ்ரீகிருஷ்ண கானாம்ருதம்' என்று, 326 துதிகளில் கண்ணன் லீலாகுணங்களை அற்புதமாக வர்ணித்துள்ளார்.

அதுபோல, நாராயண பட்டத்ரிக்கு வாதநோய் தீர உதித்ததே நாராயணீயம் எனும் 1,036 துதிகள்.

அவர் பிறந்த மேப்பத்தூர் என்ற இடம் கேரளாவில் திருநாவாய் பொன்னி தாலுக்காவில் உள்ளது. நம்பூதிரி பிராம்மணரான நாராயண பட்டத்ரி 1560-ல் பிறந்துள்ளார். வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் என யாவும் பயின்று 16 வயதிலேயே பண்டிதரானார். வயதுக்கோளாறினால் புத்தி தடுமாறினார். குரு அச்சுதர் ஆணையால் அவர் உறவுப்பெண்ணை மணந்தார். அவர் வெகு மதிப்பு வைத்திருந்த குரு அச்சுதருக்கு வாதநோய் கண்டது. மனம்நொந்து, குருவாயூரப்பனைத் துதித்து, குருபக்தியில் குரு கைங்கர்யமாய் குருவின் வாதநோயைத் தன் உடலில் ஏற்றார்.

தன் உபாதை தீர வழிதேடினார்.

தெரியவில்லை. எழுத்தச்சன் என்ற மலையாள பக்தனுக்கு வடமொழி தெரியாது. அவன் கோவிலில் விஷ்ணு ஸஹஸ்ரநாம "பத்மநாப: அமரப்ரபு' என்பதை "பத்மநாபோ மாப்ரபு' என்று துதித்தான். அதைக்கண்ட நாராயண பட்டத்ரி, "மூடனே, சமஸ்கிருதம் தெரியாமல் ஏன் தப்பாக உச்சரிக்கிறாய்' என்று திட்டினார்.

அவன் மன்னிப்புக் கோரினான்.

அன்றிரவு அவர் கனவில் மகாவிஷ்ணு தோன்றி, "நான் தேவர்களுக்கும் பிரபு, மனிதர்களுக்கும் பிரபு. எனவே அவனிடம் மன்னிப்புக் கேட்டு, உன் வாத நோய்தீர வழியும் கேள்' என்றார். பட்டத்ரி அதிசயித் தார். அவ்வாறே எழுத்தச்சனைக்கண்டு வணங்கி மன்னிப்பும் வாதநோய்க்கு நிவாரணமும் கேட்க, அவன் "மீன் தொட்டு கூட்டுக்கா' என்றானாம்.

அவர் பிராம்மணர் ஆனதால் மீன் உண்பதில்லை. ஆழ்ந்து யோசிக்க, "மகாவிஷ்ணுவின் மீன் (மத்ஸ்ய) அவதாரத்திலிருந்து ஆரம்பித்து தொழு' என்று உதித்தது. அவ்வாறு வந்ததே நாராயணீயம் எனும் கிரந்தம். குருவாயூர் கோவில் எதிரே உட்கார்ந்து ஒரு நாளைக்கு ஒரு தசகம் (பத்து துதி) செய்வார். குருவாயூரப்பன் "சரி' என்று தலையாட்ட அடுத்த தசகமாம். ஆக, அவர் துதிகள் அப்பனால் ஆமோதிக்கப்பட்டவை. அவர்கூற தம்பிதான் எழுதினாராம். பல பாடல்களில் "என் வாதநோய் நீக்கு' என்று வருகிறது.

25-ஆவது தசகத்தில் நரசிம்ம அவதாரம். அதனை அவரால் விவரிக்க முடியவில்லை. குருவாயூரப்பனைப் பார்த்து வேண்ட, கர்ஜனையுடன் நரசிம்ம அவதாரம் காண்பித்தாராம். அதனை இவ்வாறு துதித்தார்- "ப்ரஹ்லாதப்ரிய ஹே மருத்புரபதே ஸர்வாமயாத் பாஹி மாம்.'

பிரகலாதப்பிரியனே, குருவாயூரப்பனே, எனது எல்லா ரோகங்களிலிருந்தும் காப்பாற்று.

தனது நூறாவது கடைசி தசகத்தை 27-11-1587 அன்று (விருச்சிக மாதம்) குருவாயூர் ஏகாதசி என்ற பிரபல வழிபாட்டு தினம் முடித்தாராம். அதில் இறைவனை தலையிலிருந்து கால்வரை துதித்தார்.

அவரது நோயும் தீர்ந்து நலமானார்.

முருகனது கந்தசஷ்டி கவசம்போன்று, இந்த பத்து துதிகளை மட்டும் துதித்து நலன் பெற்றோர் அநேகம். ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் இருந்தால் பிரார்த்தனைகளுக்கு நிச்சயம் பலன் கிட்டும். "என் பக்தன் அவதிப்பட மாட்டான்' என்று கீதையில் கண்ணன் சொல்கிறான்.

கிருஷ்ணாஷ்டமி தினத்தில் நாராயணீயத்தை அன்புடன், ஆர்வத்துடன் வாசித்து, சகல செல்வயோகமிக்க பெரு வாழ்வு பெற்று உய்வோம்.


matrimony
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :