Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
Logo
இனிய உதயம்
இருளிலும் பிரகாசிக்கும் ஒளி!
 ................................................................
ஞாபக வெளிச்சத்தில் -முனைவர் ஜவாஹிருல்லா
 ................................................................
அவரது ஆறாவது விரல் - கவிஞர் புவியரசு
 ................................................................
சுகந்தம் மறைந்ததே...
 ................................................................
எங்கள் வாப்பா... -கவிக்கோ மகள் திருமதி வஹீதா
 ................................................................
மரணம் எனும் மர்ம அழகி!
 ................................................................
என் நினைவுகளின் சாளரத்திலிருந்து...
 ................................................................
மரண இமைகளில் கண்ணீர்த் துளி!
 ................................................................
கவிக்கோவின் கடைசி வரிகள்!
 ................................................................
காலம் பறித்துக் கொண்ட கவிதைப் போராளி!
 ................................................................
01-07-2017வ்வொரு படைப்பாளனையும் வாசகர் இரு வழிகளில் அறிகிறார். படைப்பின் வாயிலாக அறிதல்; நேரில் அறிமுகமாதல். படைப்பில் கரைந்த பலருக்கு படைப்பாளனின் மிக நெருங்கிய உறவுகளுக்கும் அவனது படைப்புலகம் அறிமுகமாகவே இருந்துவிடுவதுண்டு.

கவிக்கோ அப்துல் ரகுமான் என்ற மாபெரும் ஆளுமை, அண்ணன் ஆரூர் தமிழ்நாடனுக்கு வந்திருந்த திருமணப் பரிசு புத்தகங்களுக்குள் ஒளிந்திருந்தார். "இன்றிரவு பகலில்' என்ற தலைப்பு என்னை ஈர்த்தது. பள்ளிப் பருவமது. படித்தேன். அது ஆறு மாத குழந்தைக்குத் தரப்பட்ட ஆற்காடு பிரியாணியாக இருந்தது.

காலமும், களமும் தந்த கவிப்பரிமாணங்கள் பின்னாளில் கவிக்கோவில் என்னைக் கரைய வைத்தது.

நக்கீரன் குடும்பத்திலிருந்து "இனிய உதயம்' என்ற இலக்கிய இதழ் புதிய வடிவில், புத்திலக்கிய விடியலாக வெளிவரப்போவதையும் ஆரூர் தமிழ்நாடன் அதில் இணையாசிரியர் பொறுப்பேற்கவிருப்பதையும் அறிந்தபோது, மிகுந்த மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்குக் காரணம் என் நெஞ்சிற்கினியவரின் பொறுப்பில் ஓர் இலக்கிய இதழ் வருவது மட்டுமல்ல, தமிழின் ஆழமான மரபுகளை அறியாமல் நவீனப் படைப்பாளர்கள் என்ற போர்வையில் சிற்றிதழ்களில் சிலர் செய்துவந்த அழிச்சாட்டியங்களும், அற்புதப் படைப்பாளர்களை அற்பமாய்க் கருதி செய்யப்பட்ட அவமானங்களும் தந்த மனக்காயங்களுக்கும், "இனிய உதயம்' மருந்தாகவும், மாற்றாகவும் இருக்கும் என நம்பினேன்.

இந்த இதழுக்குத் துணையாக, உலக இலக்கியங்களின் புதிய போக்குகளையும், தமிழிலக்கிய உலகின் ஆழங்களையும், உயிரங்களையும் அறிந்திருக்கிற, தனது படைப்புகளால், யாராலும் புறக்கணிக்க முடியாத அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிற, அதே நேரம் இளம் படைப்பாளிகளுக்கு, எழுத்தின் நுணுக்கங்களைக் கற்றுத்தந்து வளர்க்கின்ற பேருள்ளம் படைத்த ஒரு மாபெரும் ஆளுமை இருக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அதே எண்ணம் அண்ணனிடமும் இருந்தது. கவிக்கோ அப்துல் ரகுமான் இதற்குப் பொருத்தமானவர். ஆனால் இதற்கு நேரம் ஒதுக்குவாரா என்ற அய்யம் கவிக்கோ ஆரூர் தமிழ்நாடனிடம் இருந்தது. ஒரு பேட்டி எடுக்கிற சாக்கில் அவரை கவிக்கோவின் திருவான்மியூர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றேன்.முதலில் ஒரு வாசகர். படைப்பாளர் என்ற அளவில் சந்திப்பு தொடங்கி, இதழாளர், எழுத்தாளர் என வளர்ந்து, ஓரிரு சந்திப்புகளுக்குப் பிறகு இணைபிரியாக் காதலர்களாக இருவரும் ஆகிவிட்டனர். அவர்களைச் சேர்த்து வைத்த சிறு பெருமை மட்டும் எனக்கானது.

மிகப்பெரிய இதழ்களுக்கும்கூட மிக மிக யோசித்தும் தயங்கியும் படைப்புகள் கொடுத்த கவிக்கோ, எழுத்தின் சூடு காய்வதற்குள், அதை ஆரூர் தமிழ்நாடனிடம் வாசித்துக் காட்டுவதும், அந்த எழுத்தை அண்ணன் யாரும் கொண்டாட முடியாத வகையில் கொண்டாடுவதும், அவை அனைத்தையும் சொல்லிவிட முடியாத அதிசுவாரசியங்கள். இனிய உதயத்திற்கு நேரம் ஒதுக்க முடியுமா? என்ற அய்யத்தில் வந்த ஆருர் தமிழ்நாடனுக்காக, எதையும் ஒதுக்கி வைக்கிற நிலைக்கு கவிக்கோ வந்ததைப் பார்த்தபோது மிகுந்த மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்தேன். ஒரு கட்டத்தில் ஆரூர்தமிழ்நாடனை வைத்து நாம் கவிக்கோவின் சொத்துகளை எழுதி வாங்கிவிடலாம் என வேடிக்கையாகச் சொல்லும் அளவுக்கு அவர்களின் நெருக்கம் இருந்தது. உண்மையில் ஆரூர்தமிழ்நாடனுக்கு அவர் தனது உண்மையான சொத்துகளைத் தானே எழுதித் தந்துகொண்டே இருந்தார் இனிய உதயத்திற்காக. அந்த அன்புதான் மரணத்தின் விளிம்புக்குப் போன ஆரூர்தமிழ்நாடனை மறுபடி களவீரனாக்கி எழுத்துக்களத்துக்கு இழுத்து வந்தது. தன் மகள் ஓவியாவைக் கல்லூரியில் சேர்த்துவிட்ட செய்தியை கவிக்கோவின் மண்ணறைக் குப் போய் சொல்ல வைக்கின்ற பித்துமிகுந்த அன்பினைத் தமிழ்நாடனுக்குத் தந்திருக்கிறது. ஷம்ஸ் தப்ரேஸ் என்ற ஆருயிர் நண்பரைப் பிரிந்த ஜலாலுத்தின் ரூமியின் மனநிலையைத் தனது அன்பர்களுக்கெல்லாம் தந்துவிட்டுப் போயிருக்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

கல்லூரியில் படித்த காலத்தில் அவருக்கு நான் எழுதிய ஒரு கடிதத்தை ஒரு நாள் காலையில் தொலைபேசியில் அழைத்து வாசித்துக் காட்டினார். 20 ஆண்டுகளாக ஒரு சிறுவனின் கடிதத்தைப் பாதுகாத்திருக்கிறார். வைரவிழாவை ஒட்டி வெளிவர உள்ள கவிக்கோ கருவூலம் என்ற புத்தகத்தில் அந்த மடல் இடம்பெறும் என்றார். அந்தக் கருவூலத்திற்காக, அவரது படைப்புலகம் குறித்து நான் எழுதித் தந்த கட்டுரைகூட இடம்பெறவில்லை என்பதை அறிந்து என்னிடம் பலமுறை வருந்தினார்.

அவரைப் பற்றிய எனது ஆய்வைத் தனி நூலாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஒருநாள் அவரிடமிருந்து அழைப்பு, "நலமா இருக்கீங்களா?' என்றேன். "நலமாக இல்லை, வெங்கடேஸ்வரா மருத்துவமனைக்கு போய்க்கொண்டிருக்கிறேன்' என்றார்.

மீண்டும் மருத்துவமனைக்கா என அதிர்ந்தேன். அழைத்ததன் நோக்கம், "சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதுக்கவிதைகள் குறித்த அறக்கட்டளைச் சொற்பொழிவை நிகழ்த்த உங்கள் பெயரைப் பரிந்துரைத்துள்ளேன். சிறப்பாகச் செய்யுங்கள்' என்றார். கால் நகத்தில் அடிப்பட்டாலே கவிதையை மறந்துவிடுகிற உலகில் தீவிர சிகிச்சை அறைக்குள் நுழையும் முன்பும் எனக்கு ஓர் இலக்கியக் கட்டளையை இட்டுவிட்டுப் போகிற, அந்த எழுத்தரசனை எண்ணி எண்ணி நெகிழ்ந்தேன். செய்யதுசலாஹிசதீன் அறக்கட்டளை சார்பில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் வாய்ப்பு அவரால் கிடைத்தது.

1996 என நினைவு. சன் டி.வி.யில் அவர் நடத்திய கவிராத்திரியில், என் கவிதைக்குப் பரிசளித்ததோடு, ஒரு பெரும் புத்தகப் பெட்டியையும் பரிசாக அனுப்பிவைத்தார். அந்த, நூல்கள் என்னைப் பட்டமாக்கி உயரத்தில் பறக்க வைத்து உலகைப் பார்க்க வைத்தன. "வானத்து நட்சத்திரமும், சினிமா நட்சத்திரமும் சந்தித்துப் பேசினால் என்ற புதுமைத் தலைப்பில் என்னை சன் டி.வி.யில் கவிபாட வைத்தார். லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்த கவிக்கோ தனது புகழின் நிழலில் புதிய தலைமுறையையும் வளர்த்தார். நக்கீரன் ஆசிரியர் கோபாலை அவர் ஒரு நாயகனாக ரசித்தார். கவிஞர்கள் சிலரை தனது நிறுவன நேரடிப் பொறுப்பிலும், நா. முத்துக்குமார், யுகபாரதி உள்ளிட்டவர்களைத் தனது அன்பினாலும் பாதுகாத்து வளர்க்கின்ற பான்மையே அதற்குக் காரணம்.

அதிகமதிகமாக அறிவையும், மகிழ்வையும் அனுபவங்களையும், அக்கறையையும் எனக்குத் தந்த கவிக்கோ, அதை எண்ணி எண்ணி, மனசுக்குள் அழுகின்ற வலியைத் தந்துவிட்டுப் போனார். வலியைத் தமது வலிமையாக்கி இளைய எழுதுகோல்கள் எழுச்சி பெறவேண்டும் என்பது அவர் கனவு. கடவுளின் விருப்பமிருந்தால் கவிக்கோவின் கனவு பலிக்கும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :