Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
Logo
இனிய உதயம்
இருளிலும் பிரகாசிக்கும் ஒளி!
 ................................................................
ஞாபக வெளிச்சத்தில் -முனைவர் ஜவாஹிருல்லா
 ................................................................
அவரது ஆறாவது விரல் - கவிஞர் புவியரசு
 ................................................................
சுகந்தம் மறைந்ததே...
 ................................................................
எங்கள் வாப்பா... -கவிக்கோ மகள் திருமதி வஹீதா
 ................................................................
மரணம் எனும் மர்ம அழகி!
 ................................................................
என் நினைவுகளின் சாளரத்திலிருந்து...
 ................................................................
மரண இமைகளில் கண்ணீர்த் துளி!
 ................................................................
கவிக்கோவின் கடைசி வரிகள்!
 ................................................................
காலம் பறித்துக் கொண்ட கவிதைப் போராளி!
 ................................................................
01-07-2017வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். ஆம் எங்கள் கல்லூரியில் கண்ணியத்திற்குரிய கவிக்கோ அப்துல் ரஹ்மான் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். என்றே அறியப்பட்டார்.

1985-ல் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் நான் உதவிப் பேராசிரியராக சேர்ந்தேன். அப்போது தான் முதன்முதலாக கவிக்கோவை அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின் தமிழ்த் துறை மிகப் பெரும்  ஆற்றல் மிக்க தமிழறிஞர்களைக் கொண்ட துறையாக இருந்தது. கவிக்கோ தலைமையில் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த முனைவர் முஹம்மது அலிலி ஜின்னா, தேனி மாவட்டத்தைச் நேர்ந்த நாடறிந்த சொற்பொழிவாளர் பேராசிரியர் தி.மு.அப்துல் காதர், முனைவர் கவிஞர் நை.மு. இக்பால் மற்றும் பேராசிரியர் கா.மு.சரிப் மற்றும் நாஞ்சில் ஆரிது என்று ஆளுமைகள் நிறைந்த துறையாக வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின் தமிழ்த் துறை விளங்கியது. இந்த ஆற்றல் மிக்கவர்களில் பேராசிரியர் இளம்பெருவழுதியை தவிர அனைவரும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ஒரு குருவி கூடு கட்டுவதுபோல் மிகக் கவனத்துடன் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின் தமிழ்த்துறையை வளப்படுத்தியவர் கவிக்கோ இதுகுறித்து என்னிடம், ஒரு முறை மிகுந்த சவாலுக்கு இடையில் இந்த துறையில் இத்தனை பேரை கொண்டு வந்து இணைப்பதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளை விவரித்தார். சாதாரணமாக முன்பு வடஆற்காடு மாவட்டம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பேசும் தமிழ் தூய்மையானதாக இருக்காது. ஒரு வித்தியாசமான தமிழாக அது இருக்கும். இந்த நிலையில் கவிக்கோ தலைமையில் இயங்கிய எங்கள் கல்லூரியின் தமிழ்த் துறை இந்த பகுதியில் தமிழ் தலைநிமிர்ந்து கோலோச்ச வழிவகுத்தது என்று சொன்னால் மிகையாகாது.

தமிழகமே திரும்பிப் பார்க்கும் துறையாக கவிக்கோ தலைமையிலான வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின் தமிழ்த் துறை செழித்தது. உருது மொழி கவியரங்குகள் முஷாயிரா என்ற பெயரில் எங்கள் கல்லூரியில் இரவு முழுவதும் நடைபெறும். இதே பாணியில் கவிராத்திரி என்ற பெயரில் தமிழ்த் துறையின் சார்பாக கவிக்கோவின் சீரிய வழிகாட்டல் மற்றும் உழைப்பின் காரணமாக கல்லூரியில் உள்ள அல்லமா இக்பால் கலையரங்கில் நடைபெற்ற கவியரங்குகள் தமிழுக்கு செய்த மாபெரும் சேவையாகும். இந்த கவிராத்திரிகள் எங்கள் கல்லூரியில் படித்த பல மாணவர்களை நாடறிந்த கவிஞர்களாக ஏற்றம்பெற வைத்தது.

நான் கல்லூரியில் சேர்ந்த வேளையில், கல்லூரியின் மூத்த பேராசிரியராக மட்டுமில்லை துறையின் தலைவராகவும் நாடறிந்த தமிழ் அறிஞராகவும் கவிக்கோ விளங்கினார். நான் அப்போது இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் தமிழக மண்டலத் தலைவர் என்றபோதிலும் எங்கள் துறையில் மிக இளைய நிலையில் இருந்த ஒரு ஆசிரியர். இருப்பினும் என்னிடம் மிகவும் கனிவாகப் பழகுவார். பல சந்தர்ப்பங்களில் தமிழ்த் துறையின் அறையில் பல்வேறு சமூக பிரச்சினைகளை அலசி ஆராய்வோம்.

கவிக்கோவின் தமிழாற்றல் நாடறிந்தது. ஆனால் பலரும் அறியாதது அவர்களின் நிர்வாக ஆற்றல். மிககுறைவாக இருந்த கல்லூரி ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி பல்கலைகழக மானியக் குழு புதிய ஊதிய விகிதத்தை அறிவித்தது. அப்போது அதனை நிர்ணயிப்பதற்காக கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. மிகக் குறைந்த காலகட்டத்தில் எவ்வித குளறுபடியும் இல்லாமல் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த சுமார் 90 பேராசிரியர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தை அந்தப் குழு நிர்ணயித்தது. அந்த பணியை அவர் முழு அர்ப்பணிப்புடன் செய்ததை இங்கே நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன்.

ஒரு கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றிய எஸ்.ஏ.ஆரின் இன்னொரு அபார திறமை அவரது நினைவாற்றலாகும். நானும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எங்கள் மாணவர் இயக்கத்தில் பல்வேறு தலைவர்களின் ஆங்கில உரைகளை உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். ஆனால் கையில் ஒரு குறிப்புடன்தான் நான் நிற்பேன். ஆனால் எங்கள் கல்லூரியில் ஒருமுறை வட இந்தியாவிலிருந்து வந்த இஸ்லாமிய அறிஞர் உருதுவில் சொற்பொழிவாற்ற கையில் ஒரு துண்டு காகிதக் குறிப்பும் இல்லாமல் கவிக்கோ எவ்வித சிதைவும் இல்லாமல் மொழிபெயர்த்தது என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

கல்லூரி ஆசிரியர்களின் உரிமைகளுக்காகப் போராடியதுடன் அதற்காக சிறைக்கும் சென்றவர் கவிக்கோ. எங்கள் கல்லூரியில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏ.யூ.டி) சீரிய முறையில் அவர் பணியாற்றிய காலத்தில் செயல்பட்டது. நானும் அதில் உறுப்பினராக இருந்து பயனடைந்திருக்கிறேன்.

அவருக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அவர் முழு நேர இலக்கியப் பணிக்காக கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு பல ஆண்டுகள் இருந்தபோதிலும் விருப்ப ஓய்வு பெற்றார். நானும் முழு நேர அரசியல் பணிக்காக இன்னும் ஒன்பது ஆண்டுகள் பணிக்காலம் இருந்தபோதிலும் விருப்ப ஓய்வு பெற்றேன்.

வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின் தமிழ்த் துறை தலைவராக அவர் ஆற்றிய சேவைகளும் நிகழ்த்திய சாதனைகளும் ஏராளம். ஆனால் ஒரு ஏக்கம் கவிக்கோவிற்கு மட்டும் அல்ல எனக்கும்தான். தமிழக கல்லூரிகளில் தலைசிறந்த பேராசிரியர்களைக் கொண்ட துறையாக எங்கள் தமிழ்த்துறை இருந்தாலும் இளங்கலை தமிழ் பட்டப்படிப்பு முதுகலை தமிழ் பட்டப்படிப்பு  இன்று வரை அங்கு தொடங்கப்படாமல் இருப்பதே அது.

அறம்சார்ந்த வாழ்வு வாழ்ந்தவர் கவிக்கோ.

அவருக்கிருந்த புலமைக்கு அறத்தை கைவிட்டு வேறு வகையில் தன் எழுத்தைப் பயன்படுத்தி பெரும் பொருள் ஈட்டியிருக்கலாம். ஆனால் சினிமாவிற்கு பாட்டெழுதுவது இல்லை என்பதில் இறுதி வரை உறுதியாக இருந்தார். ஆனால் அவர் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் தமிழகத்திற்கு சிறந்த ஆற்றல்மிகுந்த தலைமுறைகளை உருவாக்கியது. தமிழுக்கு அறிமுகமில்லாத மீமெய்மை இயல், ஹைகூ, கஸல், நஜ்ம்., இரு சீர் ஓரடி என்ற புதிய சிறிய வடிவத்திலும் கவிதைகளை தமிழுக்கு அளித்த சிறப்பு கவிக்கோவிற்கே உண்டு. இவ்வாறு தமிழுக்கு சமக்காலத்தில் வேறு எந்த தமிழறிஞரும் அளிக்காத பங்களிப்பை அளித்ததனின் காரணமாக தான் முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர்,

'வெற்றி பல கண்டு நான்
விருது பெற வரும்போது
வெகுமானம் என்ன
வேண்டும் எனக் கேட்டால்
அப்துல்
ரகுமானைத் தருக என்பேன்'

என்று பாடினார்.

தமிழ்நாடு முஸ்லிலிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மீது பெரும் அபிமானமும் பற்றும் கொண்டு அவ்வப்போது ஆலோசனைகளையும் வழங்கி வந்தார் கவிக்கோ.
அவர் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிக்கோவை நான் சந்தித்தபோது படிக்கவும் எழுதவும் இயலவில்லை என்று என்னிடம் மிகவும் வருந்தினார்.

தமிழகத்தில் சமூக நல்லிலிணக்கத்திற்காக அரும்பாடுபட்டவர் கவிக்கோ. தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவராக சீர்மிகு பணிபுரிந்தவர் கவிக்கோ. ஒரு கவிஞர் என்பதை தாண்டி பன்முக ஆற்றலுடன் நேர்த்திமிகு பணியாற்றிய கவிக்கோவின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கு மாபெரும் இழப்பு.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :