Add1
logo
அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் || பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி || ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி || இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு || பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! || ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம் || நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல் || வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்! || ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..! || அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை! || ஆதார் இணைப்பின் மூலம் அப்பாவிகளின் பணம் பறிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? ராமதாஸ் கேள்வி || 2 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்றவர் கைது! || ஜெ.,வை பார்த்ததாக, இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன் ||
Logo
இனிய உதயம்
இருளிலும் பிரகாசிக்கும் ஒளி!
 ................................................................
ஞாபக வெளிச்சத்தில் -முனைவர் ஜவாஹிருல்லா
 ................................................................
அவரது ஆறாவது விரல் - கவிஞர் புவியரசு
 ................................................................
சுகந்தம் மறைந்ததே...
 ................................................................
எங்கள் வாப்பா... -கவிக்கோ மகள் திருமதி வஹீதா
 ................................................................
மரணம் எனும் மர்ம அழகி!
 ................................................................
என் நினைவுகளின் சாளரத்திலிருந்து...
 ................................................................
மரண இமைகளில் கண்ணீர்த் துளி!
 ................................................................
கவிக்கோவின் கடைசி வரிகள்!
 ................................................................
காலம் பறித்துக் கொண்ட கவிதைப் போராளி!
 ................................................................
01-07-2017



வர் எப்போதுமே கவிக்கோ தான்.

அந்தப் பீடம் அவருக்கு மட்டுமே உரியது.

நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

அவர் வணங்காமுடி என்பதை.

கவிதைக்கன்றி, அன்புக்கன்றித் தலைபணியாக் கோமான் அவர்.

ஒருநாள் எமக்கு அழைப்பு வந்தது. வாணியம்பாடி என்ற வளமான பிரதேசத்திலிருந்து.

போனோம் புகைவண்டி நிலையத்தில் இறங்கியபோது திகைத்துப் போனோம்.

"வாணியம்பாடியில்
வானம்பாடிகள்'

என்ற பெரிய பேனர் எங்கள் மீது பூச்சொரிந்தது.

கல்லூரிக்குள் போனோம், கவிமழை பொழிய..

"நம் கவிதைகள் எல்லாம்

இருக்கட்டும். உட்கார்ந்து கேளுங்கள், எம் பிள்ளைகளின் கவிதை வீச்சை'

என்று சொல்லி எம்மைப் பார்வை யாளராய் இருக்க வைத்து, வாணியம் பாடிக் கல்லூரி இளம் கவிகளை மேடையேற்றினார்.

கட்டுப்பட்டோம் கவிக்கோவுக்கு.

சட்டென மழை. கவிமழை.

அப்புறம் கண்ணீர் மழை.

ஒரு சேலைக்காய் மதுரை மகளிர் பட்ட பாட்டை, பாட்டாய்ப் பொழிந்தனர் கவிமணிகள் அவரின் கண்மணிகள்.

அங்கேதான்.. அன்றுதான் கண்டெடுத்தோம். ஏ. அரங்கநாதனை இரவிலே வாங்கினோம் இன்னும் விடியவேயில்லைஎன்ற மணிவாசகம் சொன்ன கவிப்பிள்ளையை.

    மாபெரும் நகர அலங்கார மேடைகளைப் பற்றிக் கவலைப்படாமல், அமைதியாய் அங்கே கவிதைப் பயிர் வளர்த்த கவி ஏர் உழவர் அவர். எத்தனை நன்மணிகள் இன்று தமிழ்மண்ணில் அறிவுமதிபோல.

மற்றும் ஒருமுறை திகைத்த நாள்.

திருச்சி வானொலியில் பொங்கல் கவியரங்கம். ஒலிப்பதிவு.

கலைஞர் அருகில் கவிக்கோ. நான் அவரது தோள்மறைவில்.

கலைஞர் ஏதோ சொல்கிறார் கவிக்கோவிடம்.

கொஞ்சம் தலைசாய்த்து என்னவென்று கேட்கக்கூடாதா?

திகைத்தேன், அந்த வணங்காமுடியைக் கண்டு.

ஒருநாள் தொலைபேசியில் புவி, "உங்க தங்கச்சி போயிட்டாங்க' என்று சொன்ன குரல் என்றும் என் செவியுள்ளவரை.

இணையற்ற இசைக்கலைஞன் எம்.எஸ்.விசுவநாதன் மெட்டமைக்க, நான் அவருக்கு எடுத்துக் கொடுத்த பாடல் காடெல்லாம் பிச்சிப்பூகரையெல்லாம் செண்பகப்பூநாட்டார் பாடல். அறிஞர் நா.வானமாமலை கண்டெடுத்தது. இதன் தொகையறாவில் வருமே.
    ஏடு எடுத்தவரெ
    எழுத்தாணி தொட்டவரை
    காடே மணக்குதல்ல
    நல்ல மகன் போறபாதை
இது இப்படி ஒலிக்கிறது. இன்று

எனக்கு

நாமே மணக்குதல்ல நல்ல மகன் போன பாதை..

அவர் நமக்குக் கிடைத்த கலீல் ஜிப்ரான். அவரது ஆறாவது விரல் வழியாகவே வந்தன அவர் கவிதைகள்.

    என் ஆறாவது விரல் வழியாக
    வழிகிறது ரத்தம்.
    அந்த ரத்தம் மாமிசம் ஆகிறது.
    அந்த மாமிசமே கவிதையாகிறது.

அவர் தன்னை மிச்சம் மீதியில்லாமல் நமக்குக் கொடுத்துவிட்டார், எல்லா வற்றையும் தன் ஆறாவது விரல் வழியே.

அதைத்தான் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் மிச்சம் மீதி வைக்காமல்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :