Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
Logo
இனிய உதயம்
இருளிலும் பிரகாசிக்கும் ஒளி!
 ................................................................
ஞாபக வெளிச்சத்தில் -முனைவர் ஜவாஹிருல்லா
 ................................................................
அவரது ஆறாவது விரல் - கவிஞர் புவியரசு
 ................................................................
சுகந்தம் மறைந்ததே...
 ................................................................
எங்கள் வாப்பா... -கவிக்கோ மகள் திருமதி வஹீதா
 ................................................................
மரணம் எனும் மர்ம அழகி!
 ................................................................
என் நினைவுகளின் சாளரத்திலிருந்து...
 ................................................................
மரண இமைகளில் கண்ணீர்த் துளி!
 ................................................................
கவிக்கோவின் கடைசி வரிகள்!
 ................................................................
காலம் பறித்துக் கொண்ட கவிதைப் போராளி!
 ................................................................
01-07-2017விக்கோ அப்துல்ரகுமான் விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் உலகு’

என நிலையாமை குறித்து நமக்கு வள்ளுவன் ஆறுதல் சொல்ல முயன்றாலும், கவிக்கோவின் இழப்பு, தமிழுக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.

குறிப்பாக, நமது நக்கீரன் குழுமம் அவரை இழந்து மிகுந்த துயர் அடைகிறது.

நம் "இனிய உதய'த்தின் நெறியாளராக இருந்து,

இலக்கிய உலகில் புதுப்பாய்ச்சல் நிகழ்த்திக்கொண்டிருந் தவர் கவிக்கோ. ஆழ்மன எண்ணங்களை அழகிய ஆலாபனைக் கவிதைகளாய் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிவந்தார். மானுட ஈரத்தோடு அவரது எழுத்துக்கள் மகத்துவமாய் மலர்ந்துகொண்டிருந்தன. அவரால் இப்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடம், நிரப்பமுடியாத பெருவெளியாய் விரிந்துகொண்டிருக்கிறது.

கவிக்கோ இன்று ஒட்டுமொத்த இலக்கிய உலகாலும் கொண்டாடப்படுகிறார். அதற்குக் காரணம், அவர் காகிதப் புலிலியாக இல்லாமல் ஆயுதப் புலிலியாகத் திகழ்ந்தார்.அவர் வெறும் கற்பனா வானில் மட்டுமே சஞ்சரித்த வர் இல்லை.  சமூகத்தின் குரலாக தனது எழுத்துக்களை பேசவைத்தவர் அவர். கண்ணெதிரே அநீதிகள் அரங் கேறுகிறபோது, பெரும்பாலான படைப்பாளர்கள் கண்டுகொள்வதில்லை. இது ஒருவகை சாபக்கேடு.  இப்படிப்பட்டவர்களின் வரிசையில் தன்னை நிறுத்திக்கொள்ளாமல், "சிறுமை கண்டு பொங்குவாய்' என்ற பாரதியின் கோட்பாட்டின்படி கோபத்தோடு பொங்கியவர் அவர்.

தனது கவிதைகளைப் போர் வாளாய்க் கையிலெடுத்த கவிக்கோ, அதைச் சுழற்றுவதற்கான களமாக "இனிய உதய'த்தையும்  நக்கீரனையும் பயன்படுத்திக்கொண்டார்.

அரசியல் கோமாளித்தனமா? லஞ்ச லாவண்யமா?  விவசாயிகள் பிரச்சினையா? மதவெறிக் கொடுமையா? காதலிலின் பொருட்டுப் படுகொலையா? மாணவர்களின் ஜல்லிலிக்கட்டுப் போராட்டமா? எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தனது எழுதுகோல் என்னும் கவிதை வாளோடு களத்தில் நின்றவர் கவிக்கோ.

2015-ல் மழை வெள்ளத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகள் மிதந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்காக பலதரப்பினரும் திரட்டிய நிவாரணப் பொருட்களை ஆளுங்கட்சியினர் வழிப்பறி பாணியில்  பறித்து, ஜெயலலிலிதாவின் படம் போட்ட ஸ்டிக்கர்களை ஒட்டி, அடாவடி அராஜகம் செய்ததை, முதன் முதலிலில் பாட்டுச் சாட்டையால் விளாசியவர் கவிக்கோதான். நம் நக்கீரனில்தான் அந்தக் கோபத்தைப் பாட்டாக எதிரொலிலித்தார்.  .

’ஸ்டிக்கர் ஒட்டுங்கடா - நல்லா
ஸ்டிக்கர் ஒட்டுங்கடா
செம்பரம்பாக்கம் ஏரி மேலே
ஸ்டிக்கர் ஒட்டுங்கடா
சீறி வந்த வெள்ளத்து மேலே
ஸ்டிக்கர் ஒட்டுங்கடா
வீட்டுக்குள் வந்த பாம்பு மேலே
ஸ்டிக்கர் ஒட்டுங்கடா
மிதந்து வந்த பிணத்து மேலே
ஸ்டிக்கர் ஒட்டுங்கடா

-என்றெல்லாம் அவர்  எழுதிய  நெருப்புப் பாடல் தமிழகம் முழுக்கப் பாடப்பட்டது. அது அரசுக்கு எதிரான, மக்களின் போர்முழக்கப் பாடலானது.

இதேபோல், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதியரசர் குன்ஹா அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை, குமாரசாமியின் மோசமான தீர்ப்பு, திருப்பிப் போட்டபோதும், அதைச் சகிக்க முடியாமல்...
"தர்மம் வென்றது' என்கிறார்களே; அதர்மம் அல்லவா வென்றிருக்கிறது என்று குழம்புகிறீர்களா? உங்களுக்கு விஷயம் தெரியவில்லை; அதர்மம் "நியூமராலஜி'ப்படி தன் பெயரைத் தர்மம் என்று மாற்றிக் கொண்டது! உங்களுக்குக் கூட்டல் சரியாக வராதா? அப்படியென்றால் நீதிபதியாகி விடுங்கள்!

-எனக் கவிதையால் கண்டித்தார். அந்தக் கவிதையை கலைஞர் போன்றவர்கள் ஆராதித்தார்கள்.

அதேபோல் அண்மையில் கூவத்தூர் கூத்தையும் கண்டித்தார். விவசாயிகள் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத மோடியையும் தனது விமர்சனக் கவிதையால் தாக்கினார். இப்படி சமூக அநீதிக்கும் அரசியல் அநீதிக்கும் எதிரான தனது  கோபத்தை, துணிச்சலாக வெளிப்படுத்தியவர் கவிக்கோ.

அப்படிப்பட்ட கவிதைப் போராளி இன்று நம்மிடையே இல்லை.

காலம் அவரை நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டுவிட்டது.

கவிக்கோ, கவிஞர்களின் கவிஞராகத் திகழ்ந்தவர்.

உலகில் கோலோச்சும் புகழ்பெற்ற கவிதை வடிவங்கள் பலவற்றையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். கஜலிலில் ஒரு திருவிழாவையே நடத்தி இளங்கவிஞர்களைக் கிறங்கவைத்தவர்.  தமிழைத் தனது தோளில் தாங்கி  கம்பீர நடைபோட்டவர் கவிக்கோ.

இப்படிப்பட்ட இலக்கிய மேதையின் நினைவுகளை  நாம் போற்றிக் கொண்டாட வேண்டும். அவரது கவிதைகளும் அதன் மூலம் அவர் விதைத்த சிந்தனைகளும் நம் தமிழ்ச் சமூகத்திற்கு அழகிய அரண்.

எனவே கவிக்கோ அவர்களுக்கு உரியவகையில் தமிழ்ச்சமூகம் நினைவுச் சின்னம் எழுப்பவேண்டும் என்ற விழைவைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது கவிதைகளையும் இலக்கியத்தையும் உலகெங்கும் எடுத்துசெல்ல, உரிய முயற்சிகளைக் கையில் எடுக்கவேண்டும். தஞ்சைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை பல்கலைக் கழகத்திலும் கவிக்கோ பெயரிலான ஆய்வு இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். அதன் மூலம் அவரது எழுத்துக்கள் உலகெங்கும் மிளிர்வதோடு, நம் எதிர்காலத் தலைமுறைக்கு சென்று சேரவேண்டும். இதற்கான முயற்சிகளை இலக்கியவாதிகளும் கல்வியாளர்களும் ஆர்வத்தோடு கையில் எடுக்கவேண்டும்.

கவிக்கோ மறையவில்லை.

அவரைப் பொறுத்தவரை, மரணம் முற்றுப் புள்ளியல்ல.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :