Add1
logo
நீதிபதி கிருபாகரனை விமர்சித்த விவகாரம் - மன்னிப்பு கோரிய ஆசிரியர்கள்! || ஓபிஎஸ் அணி என எங்களை ஒதுக்க வேண்டாம்: மைத்ரேயன் || விமானங்களை விற்பனைக்கு வைத்து டோர் டெலிவரி செய்த அலிபாபா! || பிற மாநிலத்தவரை தமிழக அரசுப் பணிகளில் அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன் || மிரட்டும் தொணியில் பேசக்கூடாது: அமைச்சர்களுக்கு பிரகாஷ்ராஜ் எச்சரிக்கை || புதிதாக 70 மணல் குவாரிகள் திறப்பதை அதிமுக அரசு கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் || கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக ஆர்.கே.நகர் தேர்தல்? || ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி; சாய்னா 2வது சுற்றுக்கு முன்னேற்றம் || தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: கடலோர காவல்படை மறுப்பு || சர்க்கரை விலையேற்றத்தை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் || துணை முதல்வர் தொகுதியில் கந்துவட்டி அராஜகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி! || “அடித்தே கொன்று விட்டது போலீஸ்..” -இருவரின் சாவுக்கு நியாயம் கேட்கும் கிராமம்! || என் கேள்விக்கு ஸ்டாலினை பதிலளிக்க சொல்லுங்கள் பார்ப்போம்: சைதை துரைசாமி ஆவேசம் ||
Logo
பொது அறிவு உலகம்
மகப்பேறு நன்மைத் திட்டம் - 2017
 ................................................................
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளம்
 ................................................................
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் நவீன புரட்சி
 ................................................................
தமிழக அரசின் புதிய திட்டங்கள்
 ................................................................
ஜிஎஸ்எல்வி : இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்
 ................................................................
01-07-17*    மின்சாரம் இல்லாமல் நம் வாழ்க்கை இயங்காது என்ற சூழலுக்கு வந்துவிட்டோம். அதிகரிக்கும் மின்சார தேவையை பூர்த்தி செய்வது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் பயன்பாட்டை எவ்வாறு அதிகரிப்பது என்பது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

*    2040-ஆம் ஆண்டு எந்த ஆற்றல் மூலங்கள் உலகின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் என்ற ஆய்வை மெக்கன்ஸி நிறுவனம் நடத்தியுள்ளது.

*    தற்போது நிலக்கரி 41 சதவீதம் மின்சார தேவையை பூர்த்தி செய்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்த ஆய்வின்படி 2040-ஆம் நிலக்கரி மூலம் 31 சதவீத மின்சாரத்தை மட்டுமே பூர்த்தி செய்து கொள்ள முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.

*    மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள்தான் மிகப்பெரிய அளவில் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

*    ஆக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் தேவை அதிகரித்து வருகிறது.  இவற்றை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

*    மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளோடு ஒப்பிடும்போது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது அதிகரித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் பற்றிய சில தகவல்கள்...காற்றாலை மின்சாரம் (நிறுவப்பட்ட திறன் மெகாவாட்டில்)

*    ராஜஸ்தான் - 4,216.72

*   மத்திய பிரதேசம் - 2,288.59

*    குஜராத் - 4,441.57

*    மகாராஷ்டிரா - 4,666.03

*    கர்நாடகா - 3,154.20

*    தமிழ்நாடு - 7,694.33

 ஆண்டு வாரியாக இந்தியாவின் காற்றாலை மின்சார திறன் (நிறுவப்பட்ட திறன் மெகாவாட்டில்)

*    2012-13 - 19,052

*    2013-14 - 21,132

*    2014-15 - 23,444

*    2015-16 - 26,777

*   2016-17 - 28,700

 முக்கிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

*    சூரிய ஆற்றல்

*    காற்றாலை ஆற்றல்

*    நீர் மின்சார ஆற்றல்

 2016-17-ஆம் ஆண்டில் இலக்கு மற்றும் சாதனைகள் (உற்பத்தி மெகாவாட்டில்)

*    சிறிய ஹைட்ரோபவர்

  இலக்கு - 250

  எட்டியது - 105

*    சூரிய ஆற்றல்

  இலக்கு - 12,000

  எட்டியது - 5,525

*    காற்றாலை ஆற்றல்

  இலக்கு - 4,000

  எட்டியது - 5,502

*   பயோ பவர்

  இலக்கு - 400

  எட்டியது - 161

*    வேஸ்ட் டூ பவர்

  இலக்கு - 10

  எட்டியது - 23

*    மொத்தம்

  இலக்கு - 16,660

  எட்டியது - 11,316

 துறைவாரியாக மின்சார நுகர்வு

*    குடியிருப்புகள் - 23%

*   தொழில்துறை - 44%

*    விவசாயம் - 18%

*    வர்த்தகத்துறை - 8%

*    மற்றவை - 5%

*    ட்ராக்ஷன் & ரயில்வே - 2%

 ஆண்டு வாரியாக இந்தியாவின் சூரிய ஆற்றல் திறன் (நிறுவப்பட்ட திறன் மெகாவாட்டில்)

*    2012-13 - 1,446

*    2013-14 - 2,647

*    2014-15 - 3,744

*    2015-16 - 6,763

*    2016-17 - 9,013

 சூரிய ஆற்றல் திறனில் முன்னணியில் உள்ள மாநிலங்கள் (நிறுவப்பட்ட திறன் மெகாவாட்டில்)

*    தமிழ்நாடு - 1,591

*    ராஜஸ்தான் - 1,318

*    குஜராத் - 1,159

*    ஆந்திர பிரதேசம் - 980

*    நாட்டின் மொத்த வெப்ப ஆற்றல் மூலம் பெறப்படும் மின்சாரம் (மெகாவாட்) - 2,24,674

*    இந்தியாவில் நீர் மின் உற்பத்தி மூலம் பெறப்படும் மின்சாரம் (மெகாவாட்) - 41,268

*    இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை பண்ணை தமிழ்நாட்டில் முப்பந்தல் என்னும் இடத்தில் உள்ளது.

*    2015-ஆம் ஆண்டின்படி இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்திக்கான நிறுவப்பட்ட திறனின் மதிப்பு - 3,16,379 மெகாவாட்

*   இந்தியாவில் 750 ஜிகாவாட் மின்சாரம் சூரிய ஆற்றல் மூலம் தயாரிக்க சாத்தியமுள்ளது.

*    உலகிலேயே முழுவதும் சூரிய ஆற்றல் மின்சாரத்தின் மூலம் இயங்கும் விமான நிலையம் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையம்.

*    இந்தியாவில் மிகப்பெரிய சூரிய ஆற்றல் மின்சாரம் தயாரிக்கும் இடம் கமுதியில் உள்ளது. இங்கு 646 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறனுள்ள சோலார் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

*    2013-ஆம் ஆண்டிலிருந்து 2015-ஆம் ஆண்டு வரை அதிகரித்துள்ள வெப்ப ஆற்றலின் மதிப்பு - 12.37%

*    2013-ஆம் ஆண்டிலிருந்து 2015-ஆம் ஆண்டு வரை அதிகரித்துள்ள அணுஆற்றலின் மதிப்பு - 20.92%

*    மின்திருட்டாலும் பழுதடைந்த மின் அமைப்புகளாலும் இந்தியாவில் ஏற்படும் மின் இழப்பு - 23%

*   2014-15-ஆம் ஆண்டில் மின்சார நுகர்வின் அளவு (ஜிகாவாட்) - 9,48,328

*    175 ஜிகாவாட் மின்சாரத்தை (2022-ஆம் ஆண்டுக்குள்) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் மூலம் உற்பத்தி செய்ய மத்திய  அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :