Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
Logo
பொது அறிவு உலகம்
மகப்பேறு நன்மைத் திட்டம் - 2017
 ................................................................
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளம்
 ................................................................
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் நவீன புரட்சி
 ................................................................
தமிழக அரசின் புதிய திட்டங்கள்
 ................................................................
ஜிஎஸ்எல்வி : இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்
 ................................................................
01-07-17*  பொருள்கள் மற்றும் சேவை வரி (Goods and Services Tax - GST) என்பது உற்பத்தி, விற்பனை, நுகர்வு என அனைத்துச் சேவைகளுக்கும் தேசிய அளவில் விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரியாகும். இது தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

* பொதுச்சரக்கு மற்றும் சேவை வரி என்று இது அழைக்கப்படுகிறது. மாநில அரசுகள், மத்திய அரசு இதுவரை விதித்துவந்த பல மறைமுக வரிகளுக்கு ஒருமித்த வரியாக இது இருக்கும்.

*    மத்திய அரசால் விதிக்கப்படும் கலால் வரி, சேவை வரி, விற்பனை வரி மற்றும் மாநில அரசால் வசூலிக்கப்படும் விற்பனை வரி, நுழைவு வரி போன்ற 23 மறைமுக வரிகளை உள்ளடக்கிய ஒரே வரி இது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு வரி வதிப்பு என தற்போதைய நிலையை ஜி.எஸ்.டி. வரி மாற்றும்.

*    சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் பெரிய வரிச் சீர்திருத்தம் என்று சொல்லப்படும் பொது சரக்கு மற்றம் சேவை வரி (ஜி.எஸ். டி) கடந்த மாதம் அமுல்படுத்தப்பட்டது.

*    உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய அனைத்து அம்சங்களிலும் ஒரே முனைவரி விதிப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த வரி விதிப்பு முறை இது.

*    முந்தைய வரி விதிப்பு நடைமுறைகளில் வித்தகர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட, தற்போதைய ஜி.எஸ்.டி வரிச் சட்டத்தை ஆழமாக கற்றுவரும் சூழ்நிலையில் உள்ளனர்.

*    ஜி.எஸ்.டி வரிவிதிப்பிலிருந்து 83 சேவை களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 36 சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வரி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டியில் விலக்கு


*    ரிசர்வ் வங்கி சேவை, இபிஎப்ஓ சேவை, டோல் கட்டணங்கள் உட்பட சேவை களுக்கு ஜி.எஸ்.டி யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

*    இறைச்சிக்காக விலங்குகளை கொல்வது மற்றும் கால்நடை மருத்துவமனை சேவைகள்

*    டோல் ஆப்ரேட்டர்கள், மின்சார உற்பத்தி மற்றும் பகிர்வு மற்றும் வாடகைக்கு வீடு அளிப்பது

*    வங்கியில் கடன் வாங்குவதற்கு டெபாசிட் செய்வதற்கு

*    தொழில்நிறுவனங்களை சாராத தனிநபருக்கோ அல்லது தொழில் நிறுவனங்களுக்கோ ஒரு மூத்த வழக்கறிஞர் சட்ட ஆலோசனை அளிப்பதற்கு

*    பொதுநூலகங்கள் பதிப்பகங்களிடமிருந்து புத்தகங்கள் வாங்குவதற்கும், பழம் மற்றும் காய்கறிகளை பேக்கேஜ் செய்து லேபிள் ஒட்டி விற்பனை செய்வதற்கு

*    ஒரு நாளைக்கு வாடகையாக ரூ. 1000 கட்டணம் வசூலிக்கும் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள்

*    ரயிலில் ஏசி அல்லாத சாதாரண வகுப்புகளில் பயணம் செய்தல். இது நகர்ப்புற ரயில் சேவை, மெட்ரோ சேவை ஆகியவற்றிக்கும் பொருந்தும்

ஜி.எஸ்.டி வரி விதிப்பு


*    கேளிக்கை பூங்காக்கள் மற்றும் ஐ.பி.எல் போன்ற விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றை காண்பதற்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி வதிக்கப்பட்டுள்ளது.

*    வெளிப்புற கேட்டரிங் முறையில் உணவுகளை வழங்குவது, சர்க்கஸ் விளையாட்டு காட்சி, பாரம்பரிய நடனம், கிராமிய நடனம், தியேட்டர் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு 18 சதவீதம்

*    சுற்றுலா ஆப்ரேட்டர்கள் வழங்கும் சேவைகள், விமானத்தை குத்தகை எடுப்பதற்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு

*    எகானமி பிரிவில் விமானத்தில் பயணம் செய்தால் 5 சதவீதம்

*    அறிவுசார் சொத்துரிமை பொருட்களை உபயோகப்படுத்துவதற்கும் அல்லது தற்காலிகமாக பரிமாறி கொள்வதற்கும் 12% சதவீதம்

*    ஏசி அல்லாத உணவகங்களில் உணவு கட்டணம் 12 சதவீதம் மது விற்பனை உரிமத்துடன் உள்ள ஏசி உணவகங்கள் என்றால் 18 சதவீதமும் 5 நட்சத்திர உணவு விடுதிகளுக்கு 28 சதவீதம்

*    50 லட்சம் ரூபாய் ஆண்டு பரிவர்த்தனை அல்லது அதற்கு குறைவான உணவு விடுதிகளுக்கு Composition Scheme திட்டத்தின் கீழ் 5 சதவீதம்

*    1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை வாடகையாக வசூலிக்கும் ஹோட்டல் களுக்கு 12 சதவீதம் 2500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை வாடகையாக வசூலிக்கும் ஹோட்டல்களுக்கு 29 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

*    ஜி.எஸ்.டியின் கீழ் சேவை வரியுடன் பொழுதுபோக்கு வரியும் இணைக்கப் பட்டுள்ளது. சினிமா சேவை, சூதாட்டம்,  குதிரை பந்தயத்தில் பெட்டிங் செய்வது போன்றவற்றுக்கு 28 சதவீதம்

*    ரயிலில் ஏசி வகுப்புகளுக்கு 5% சேவை வரி வசூலிக்கப்பட உள்ளது. ஓலா, உபெர் போன்ற வாகன போக்குவரத்து சேவை களுக்கு சேவை வரி 6 சதவீதமாகும்.

*    தொலைத்தொடர்பு மற்றும் நிதிச்சேவை களுக்கு 18 சதவீதம்

முக்கிய அம்சங்கள்

*    மத்திய, மாநில அளவில் வேறுபாடுகள் இல்லாமல் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்கு வகை செய்வதுதான் ஜி.எஸ்.டியாகும்.

*    ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு பிறகு நாட்டின் ஜிடிபி மதிப்பு நிச்சயம் உயரும் என பல பொருளாதார அறிஞர்களும் குறிப்பிடு கின்றனர்.

*    ஜி.எஸ்.டி வரி விதிப்பின் காரணமாக பொருட்களின் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது.

*    இதனால் தன்னிச்சையாகவே பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கும். இதனால் உற்பத்தியும் உயரும்.

*    இப்படி பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் வழி வகுக்கும் நிலை ஜிஎஸ்.டியால் உருவாகியுள்ளது. இதனால்தான் ஜி.எஸ்.டி வரி விதிப்பு என்பது வரி விதிப்பில் செய்யப்படும் மிகப்பெரிய சீர்திருத்தம். தவிர வணிக ரீதியாகவும் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய சீர்திருத்தம்.

*    ஜி.எஸ்.டி வரி செலுத்துவோர் கொள்முதல் கணக்கை தனியாகவும், விற்பனை கணக்கை தனியாகவும், கொள்முதலுக்கும் விற்பனைக்குமான மாதக் கணக்கை தனியாகவும் தாக்கல் செய்ய வேண்டும்.

*    ஜி.எஸ்.டி. சட்டத்தின்படி மாத கணக்கு விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்தாலே போதும். வங்கிக் கணக்கு, வரி தாக்கல், உள்ளீடு வரி போன்ற விவரங்களை வருமான வரித் துறையினர் கண்காணிக்க முடியும்.

*    வரிக்கணக்கு ஏற்கெனவே தயார் நிலையில் இருப்பதால்  வரித்தாக்கல் செய்வதும் எளிது. கணினி, மின்னஞ்சல், செல்போன், பான் எண், ஆதார் எண் இல்லாமல் இனிமேல் தொழில் செய்ய முடியாது. எனவே மின்னணு வடிவங்களுக்கு மாற வேண்டியது அவசியம்.

*    பொருட்களுக்கு தகுந்தாற்போல் இந்தியாவில் பல்வேறு வரி விதிப்புகள் உள்ளன. மாநிலத்துக்கு மாநிலம் வரிகள் வேறுபட்டதால் பொருட்களை கிடங்குகளில் இருப்பு வைத்து விற்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

ஜி.எஸ்.டி. மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கப்படுவதால், ஒவ்வொரு மாநிலத்திலும் கிடங்குகள் அமைத்து பொருளை விற்க வேண்டும் என்ற தேவை இருக்காது. எனவே, கிடங்குகளின் எண்ணிக்கை குறையும்.

*    ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டால் ஆரம்ப காலத்தில் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மேலும், ஜி.எஸ்.டி வரி விதிப்பில் எந்த மாநிலத்தில் பொருள் விநியோகிக்கப்படுகிறதோ அந்த மாநிலத்துக்கு வரி சென்று சேரும்.

*    ஜி.எஸ்.டி பற்றிய சந்தேகங்களுக்கான  பதில்களை மத்திய கலால் வரித்துறையின் cbec.gov.in  இணையதளத்தில்  GST என்ற தலைப்பின் கீழ் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :