Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
Logo
பொது அறிவு உலகம்
மகப்பேறு நன்மைத் திட்டம் - 2017
 ................................................................
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளம்
 ................................................................
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் நவீன புரட்சி
 ................................................................
தமிழக அரசின் புதிய திட்டங்கள்
 ................................................................
ஜிஎஸ்எல்வி : இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்
 ................................................................
01-07-17
*    தமிழக அரசு கடந்த காலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் தற்போது புதிய திட்டங்களும் முந்தைய திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளன.

*    டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி 12,000 லிருந்து 18,000 ரூபாயாக உயர்வு.

*    ரூ.200 கோடி செலவில் "அம்மா இருசக்கர வாகனத் திட்டம்'

*    தென்னையிலிருந்து "நீரா பானம்' உற்பத்தி செய்ய அரசு அனுமதி.

*    தென்னை விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயர்வு.

*    ரூ.802.9 கோடியில் மானாவாரி விவசாயிகளுக்கு "நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம்' என்ற சிறப்பு திட்டம் அறிமுகம்.

*    2016-17-ஆம் ஆண்டில் புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.428 கோடி விடுவிப்பு.

*    பொது விநியோகத் திட்டத்தை செம்மைப்படுத்த ரூ.330 கோடியில் 1.89 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் (Smart Cards)

*    ரூ.239.37 கோடி மதிப்பில் "முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில்' 1,19,310 நபர்களுக்கு சிகிச்சை.*    102 தாய் சேய் திட்ட சேவைக்காக தலா ரூ.6.89 லட்சம் மதிப்பில் 10 புதிய வாகன சேவை துவக்கம்.

*    100 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாம் அலகில் மின் உற்பத்தி துவக்கம்.

*    மின் தொடரமைப்பு மூலம் 20 துணை மின் நிலையங்கள் நிறுவப்பட்டு, 447.705 சுற்று கி.மீ. மிக உயர் மின் அழுத்தப்பாதை இயக்கம்.

*    மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு வறட்சி நிவாரணத்திற்கு ரூ.1,748 கோடி மற்றும் வர்தா புயல் நிவாரணத்திற்கு ரூ. 264 கோடி விடுவிப்பு

*    குடிநீர் பற்றாக்குறையை போக்க பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.100 கோடி விடுவிப்பு.

*    கணினியில் தமிழில் பிழை திருத்த அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் எனும் மென்பொருள் உருவாக்கம்.

*    திருக்குறள் கொரிய மொழியில் மொழிபெயர்ப்பு மற்றும் ரூ.15 கோடியில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் "த' மற்றும் "நா' வடிவ கட்டடங்கள்.

*    மாணவர்களின் மன அழுத்தங்களை போக்க, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை ரத்து.

*    11-ஆம் வகுப்புக்கு நடப்பாண்டு முதல் அரசு பொதுத் தேர்வு.

*    தருமபுரி, கடலூர், நாமக்கல் மற்றும் அரியலூரில் ரூ.67.34 லட்சத்தில் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களுக்கு அனுமதி. மேலும் 4.30 கோடியில் திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் பெரம்பலூரில் மகளிருக்கான புதிய தங்கும் விடுதிகள்.

*    சென்னை மாநகராட்சியில் ரூ.153 கோடியில் 60 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள்.

*    ரூ.121.18 கோடி மதிப்பில் கோடைக்காலக் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க போர்க்கால அடிப்படையில் 2,282 பணிகள் மூலம் 93 மில்லியன லிட்டர் கூடுதல் குடிநீர் ஆதாரம்.

*    ரூ. 15 கோடியில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 30,000 மீனவ குடும்பங்களுக்குத் தலா ரூ.5,000 நிவாரணம்.

*    ரூ.114 கோடி மதிப்பில் இராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் மீன்பிடித் துறைமுகம் அடிக்கல்.

*    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 5,594 நபர்கள் தேர்வு.

*    ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடனுதவியுடன் ரூ.1,524.65 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலீடு ஊக்குவிப்புத் திட்டம்.

*    மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்காக "அலுவலர் குழு' நியமனம்.

*    அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகள் வரன்முறைப்படுத்த விதிகள் வெளியீடு.

*
    ரூ.1.16 கோடியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செவித்திறன் குறைபாடுடையோருக்காக அரசு சிறப்புப் பள்ளி.


*    ஏரி, கால்வாய் மற்றும் அணைகளிலுள்ள வண்டல் மண்ணை விவசாயிகள், மண்பானை செய்பவர்கள் எடுத்து செல்ல இலவச அனுமதி.

*
    ரூ.100 கோடியில் 30 மாவட்டங்களில் குடிமராமத்துப் பணிகள். கூடுதல் நிதியாக  ரூ.300 கோடி ஒதுக்கீடு.

*    பொன்னோரி புழுதிவாக்கம் மற்றும் வாயலூர் கிராமங்களில் காமராஜர் துறைமுகத்திற்கு அருகில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்.

*    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் திற்கு டிஜிட்டல் உரிமம்.

*    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக 303 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள். 6.16 லட்சம் பேர் பயன்.

*    கேபிள் டி.வி. சந்தார் தொகை நேரடியாகச் செலுத்த "செல்பேசி செயலி' வெளியிடப் பட்டது.

*    ரூ.1.10 கோடியில் திரூவாரில் மனுநீதி சோழன் நினைவு மண்டபம் திறப்பு.

*    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

*    ரூ.24.58 கோடியில் வைகை மற்றும் நொய்யல் ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம்.

*    புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த 100 நாட்களில் ரூபாய் 190.69 கோடி மானியம்.

*    இராமநாதபுரம், விழுப்புரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் 3 புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்க அனுமதி.

*    செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி முதுகலை சட்டப் படிப்பில் Criminal Law with Cyber Crime  என்ற பாடப்பிரிவு துவக்கிட அனுமதி.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :