Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
Logo
ஓம்
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
ராகு- கேது பெயர்ச்சிப் பலன்கள்
 ................................................................
முன்னோரை வணங்குவோம்!
 ................................................................
ஜூலை மாத ராசிபலன்கள்
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
சுவாமி ஊர்வல நெறிமுறைகள்!
 ................................................................
வேண்டுவன தருபவள் காமதேனு!
 ................................................................
ஜூலை மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிவபெருமானின் அன்னை!
 ................................................................
கங்கை பொங்கிவந்த ஆடித் திருநாள்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
குற்றம் பொறுத்த கொற்றவன்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
ராகு- கேது தோஷம் நீக்கும் திருத்தலங்கள்!
 ................................................................
01-07-1727-7-2017 ராகு- கேது பெயர்ச்சி
டி.ஆர். பரிமளரங்கன்


"நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று போற்றப்படும் ராகு- கேதுக்கள், மானிடர்களின் கர்மவினைகளுக்கேற்ப நற்பலன்களையும் தோஷங்களையும் தந்து பாவச்சுமைகளை அகற்றும் புண்ணியமூர்த்திகள்' என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சிவபெருமானின் கட்டுக்குள் அடங்கியிருக்கும் நாகங்களின் பிரதி பிம்பங்களே ராகு- கேது என்று வேதநூல்கள் கூறுகின்றன.

கேதுவுக்கு அதிதேவதையாக விநாயகப்பெருமான் விளங்குகிறார்.

அதேபோல் காளிதேவிக்கும் துர்க்கைக்கும் அடிபணிபவர் ராகு. எனவே, ராகு காலத்தில்- குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் அபிஷேக ஆராதனைகளுடன், நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் ராகு- கேது தோஷ நிவர்த்தி ஏற்படும்.

நாக தோஷங்கள் உள்ளவர்களும், ராகு- கேது பெயர்ச்சியால் ஏற்படும் விளைவுகளிலிருந்து விடுபடவும் தெய்வப் பரிகாரங்கள் செய்து ராகு- கேது தலங்களுக்குச் சென்று வழிபட்டால் நற்பலன்களைப் பெறலாம் என்று மற்றவர்கள் சொல்வர்.

ராகு- கேது தோஷங்கள் அகற்றும் பல கோவில்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் ராகு தோஷ நிவர்த்தித் தலம் என்று போற்றப்படுகிறது. இங்கு ராகு பகவான் தனிச்சந்நிதி கொண்டு அருள்புரிகிறார்.

பொதுவாக ராகு மனிதத்தலை, நாக உடலுடன் காட்சிதருவார். ஆனால் இங்கு முழுமையாக மனித வடிவில் அருள்புரிகிறார். மேலும், தன் பத்தினிகள் நாகவல்லி, நாகக்கன்னி தேவியருடன் உள்ளார். இவருக்கு பாலாபிஷேகம் நடைபெறும்போது, பால் நீலநிறமாக வழிந்தோடும் அதிசயத்தை இன்றும் காணலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணிக்கரையிலுள்ள திருத்தலம் கோடகநல்லூர். இத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீமன் நாராயணப் பெருமாளை வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கும்.

மயிலாடுதுறை- காரைக்கால் சாலையில் செம்மங்குடி அருகில் உள்ளது திருச்சிறுபுலியூர் திருத்தலம். இங்கு எழுந்தருளியிருக்கும் மாகடலமுது எனும் ஸ்ரீகிருபா சமுத்திரப் பெருமாளையும், ஸ்ரீதயாநாயகித் தாயாரையும் வழிபட ராகு தோஷம் நீங்கும். இது ஆதிசேஷன், பெருமாளை வழிபட்டு பல வரங்கள் பெற்ற திருத்தலம்.

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் குத்தாலம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து வடமேற்கில் ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கதிராமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியிருக் கும் வனதுர்க்கா தேவிக்கு அர்ச்சனை செய்யும்போது, வலது உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படும் அதிசயத்தை தரிசிக்கலாம். இந்த வனதுர்க்கையை வழிபட ராகுவினால் ஏற்படும் துன்பங்கள் விலகும். ராகு காலத்தில் எலுமிச்சம்பழ மாலை சாற்றி, எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து, எலுமிச்சம்பழ மூடியில் விளக்கேற்றி வழிபட நல்ல பலன் கிட்டும்.

சீர்காழியிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கீழ்ப் பெரும்பள்ளம் கேது பகவான் கோவில் என்று போற்றப்படுகிறது. இங்கு இவரை ஏழு தீபங்கள் ஏற்றி வழிபட கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

எமதர்மனின் கணக்கரான சித்திரகுப்தனையும் கேதுவின் உபதேவதையாகச் சொல்வர். காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தனுக்கு தனி ஆலயம் உள்ளது. இதேபோல், தேனி மாவட்டம் கோடங்கிப்பட்டி அருகில் சித்திரகுப்தனுக்கு கோவில் உள்ளது. மேலும், திருவண்ணாமலை ஸ்ரீஅரு
ணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரகுப்தனுக்கு தனிச்சந்நிதி உள்ளது. இங்கு இவரை சாளரத்தின் வழியாகத்தான் வழிபடுவர். இவர் பக்கத்தி லேயே உதவியாளர் விசித்திர குப்தனும் உள்ளார். இத்தலங்களுக்குச் சென்று சித்திரகுப்தரை வழிபட்டாலும் கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

கேதுவுக்கு அதிபதி விநாயகப் பெருமான் ஆவார். எனவே, திருச்சி உச்சிப் பிள்ளையார் மற்றும் மலை அடிவாரத்தில் அருள்புரியும் மாணிக்க விநாயகர், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருசெங்காட் டாங்குடி வாதாபி கணபதி மற்றும் விநாயகர் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டாலும் கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நல்ல பலன்கள் கிட்டும். மேற்கண்ட தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் தங்கள் ஊரிலுள்ள விநாயகரை வழிபட்டு நலம் பெறலாம்.

ராகு- கேது தனித்தனியாக அருள்புரியும் திருத்தலங்கள் உள்ளதுபோல் ராகுவும் கேதுவும் ஒன்றுசேர்ந்து அருள்புரியும் தலங்களும் உள்ளன. அவற்றில் சில...

கும்பகோணம்- காரைக்கால் சாலையில் கொல்லுமாங்குடிக்கு மேற்கே உள்ள கற்கதி என்னும் கிராமத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது திருப்பாம்புரம் என்னும் தலம். இங்கு கோவில் கொண்டிருக்கும் இறைவன் சேஷபுரீஸ்வரர்; இறைவி பிரம்மராம்பிகை. இங்கு ராகு- கேதுவுக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது. ராகுவும் கேதுவும் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து சாபவிமோசனம் பெற்றனர் என்று தலவரலாறு கூறுகிறது. எனவே, இங்கு பரிகாரங்கள் செய்து வழிபட ராகு- கேது தோஷங்கள் நீங்கும் என்பர்.

நன்னிலத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஸ்ரீவாஞ்சியம், மூவர் தேவாரப்பாடல்கள் பெற்ற தலம். இங்கு அருள்புரியும் இறைவன் ஸ்ரீவாஞ்சிநாதர்; இறைவி மங்களாம்பிகை. இத்தலத்தில் எமதர்மன் சந்நிதி முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு அருள்பாலிக்கும் ராகு- கேதுவை ஒரே சமயத்தில் வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள திருத்தலம் காளஹஸ்தி. பஞ்சபூதத்தலங்களில் இது வாயுத்தலம். தட்சிண கயிலாயம் என்று இத்தலத்தைப் போற்றுவர். இங்கு அருள்புரியும் ஸ்ரீகாளத்திநாதரை வழிபட்டு, ராகு- கேதுவையும் வழிபட்டு பரிகாரங்கள் செய்துகொண்டால் சகலவிதமான தோஷங்களும் விலகும்.

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியை அடுத்த பாமணி திருத்தலத்தில்  உள்ள ஸ்ரீதனஞ்செயர், ராகு- கேது தோஷப் பரிகாரமூர்த்தியாக அருள்பாலித்து வருவதால், இத்தலத்தில் பரிகார பூஜைகள் செய்தால் ராகு- கேது தோஷங்கள் நீங்கும் எனப்படுகிறது.

ராகு- கேது தோஷங்கள் நீங்க மேலும் பல தலங்கள் உள்ளன. அவை:

ராமேஸ்வரம் திருக்கோவிலிலும், திருச்சி பெரம்பலூர் சாலையிலுள்ள திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலிலும் பதஞ்சலி முனிவருக்கு சமாதிகள் உள்ளன. பதஞ்சலி சமாதியில் வழிபட ராகு-கேது தோஷங்கள் நீங்கும். இதேபோல் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ராமானுஜருக்கு தனிச்சந்நிதி உள்ளதைக் காணலாம். ராமானுஜர் ஆதிசேஷன் அவதாரம் என்று போற்றப்படுவதால், ராமானுஜரை வழிபடுவதால் ராகு- கேது தோஷங்கள் நீங்கும் என்று கூறுவர். ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் உடையவர் என்று போற்றப்படும் ராமானுஜருக்கு தனிச்சந்நிதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புன்னைநல்லூர் மாரியம்மன், சமயபுரம் மாரியம்மனை வழிபட்டாலும் ராகு- கேது தோஷங்கள் நீங்கும்.

திருநெல்வேலியிலிருந்து மதுரை செல்லும் வழியில் சங்கரன்கோவில் நகரிலுள்ள சங்கரனார் திருக்கோவிலில் அருள்புரியும் அம்பாள் ஆனந்தத் திருக்கோலத்தில் அருள்புரிகிறாள். இங்கு புற்றுமண் தான் பிரசாதமாக வழங்குவர். இந்த அம்பாளை வழிபட ராகு- கேது தோஷங்கள் நீங்கும் என்பர்.

நாமக்கல்லில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது திருச்செங்கோடு திருத்தலம். இங்கு ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தில் 60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோவில் படிக்கட்டு அருகிலுள்ளது. இத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வழிபட ராகு- கேது தோஷம் மற்றும் பல சர்ப்பதோஷங்கள் நீங்கும்.

திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் "திருவாசி' என்னும் தலம் அமைந்துள்ளது. பொதுவாக, ஸ்ரீநடராஜர் முயலகன்மீது நடனமாடுவதை தரிசிக்கலாம். இங்கு நாகத்தின் தலைமீது நடனமாடுகிறார். விரிந்த ஜடாமுடியை முடித்துவைத்து நடனமாடும் திருக்கோலத்தையும் தரிசிக்கலாம். ராகு- கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள், சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இவரை வழிபட நல்ல தீர்வு கிட்டும்.

பொதுவாக நாகராஜாக்கள் தடம்பதித்தத் திருத்தலங்கள் பல உள்ளன. அதில் நாகலாந்து, நாகபுரி, நாக்பூர், தமிழகத்தில் நாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் ஆகிய திருத்தலங்கள் மிகவும் போற்றப்படுகின்றன. இத்தலங் களில் ஆதிசேஷன், தக்கன், கார்க்கோடன் முதலிய நாகர்கள் வந்து வழிபட்டிருப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது. மேலும், திருவனந்தபுரம், திருவகீந்திரபுரம் என்னும் திருமால் தலங்கள் எல்லாம் அனந்தனாகிய பாம்பின் பெயரால் அமைந்துள்ளன. மேலும் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க விநாயகப் பெருமான் வீற்றிருக்கும் தலங்களுள் நாகப்பட்டினம், தஞ்சை பாபநாசம் ஆகிய தலங்களும் சிறப்புக்குரிய ராகு- கேது தோஷங்கள் நீக்கும் தலங் களாகும்.
பொதுவாக, ராகு- கேது தோஷங்களால் பாதிக்கப் பட்டவர்கள் மாற்றுத் திறனாளி களுக்கு தங்களால் இயன்றளவு தர்மம் செய்தால் தோஷத்திலிருந்து விடுபடுவதுடன் புண்ணியம் சேரும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : T Jai Sankar Date & Time : 7/10/2017 12:26:50 PM
-----------------------------------------------------------------------------------------------------
Arputham
-----------------------------------------------------------------------------------------------------