Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
Logo
பொது அறிவு உலகம்
64-வது தேசிய திரைப்பட விருதுகள்
 ................................................................
சம்பாரன் சத்தியாகிரகம் நூற்றாண்டு
 ................................................................
வங்கி சேவையும் வரி விதிப்பும்
 ................................................................
அனைத்தும் ஆதார் மயம்
 ................................................................
01-05-17
    இந்தியா சுதந்திரம் அடைந்து இவ்வளவு காலம் ஆன பிறகும், கிராமப்புற, பழங்குடி இன மக்கள், ஏழைகள் போன்றவர்களுக்கு வங்கிச் சேவைகள் முழுமையாக சென்றடையவில்லை. ஒரு நாட்டின் குடிமக்கள் அனைவரும் வங்கிச் சேவையை பயன்படுத்தினால்தான் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதோடு அனைத்து மக்களுக்கும் கடன் வசதி, ஊழல் இல்லா நிர்வாகம் போன்றவற்றையும் உருவாக்க முடியும். இதுபோன்ற சூழலை இந்தியாவில் ஏற்படுத்தும் பொருட்டு அனைவருக்கும் வங்கிச் சேவை என்ற இலக்கை நோக்கி இந்தியா தற்போது நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. 2005-ஆம் ஆண்டே இதற்கான விதையை போட்டாலும் பிரதமர் நரேந்திர மோடி "இந்தியாவில் நிதித் தீண்டாமை நிலவுகிறது. இதை ஒழிக்க வேண்டும்' என்று கூறி ஜன் தன் யோஜனாவை கொண்டுவந்தார்.

    உலகளவிலும் அனைவரையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவருவதற்கு உலக வங்கி, வங்கி சேவைக்கான கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த அமைப்புகள் கொள்கை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்தத் திட்டத்திற்கு உதவி செய்து வருகின்றன.

    உள்ளடக்கிய குறியீடு :

    அனைவரையும் உள்ளடக்கிய வங்கிச் சேவை இந்தியாவில் எந்த அளவில் உள்ளது என்பதை பட்டியலிட உள்ளடக்கிய குறியீடு அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த குறியீட்டை வெளியிடும் அமைப்பு கிரைசில். 2013-ஆம் ஆண்டு விவரத்தின் படி இந்தியாவின் உள்ளடக்கிய நிதிக் குறியீடு 50.1 ஆகும். உள்ளடக்கிய நிதிக்குறியீட்டில் முன்னணியில் உள்ள மாநிலங்கள் புதுச்சேரி, சண்டிகர், கேரளா.    நசிகேத் மோர் கமிட்டி :

    இந்தியாவில் ஒருங்கிணைந்த வங்கி சேவைகளை அளிக்கும் நோக்கத்துடன் 2013-ஆம் ஆண்டு நசிகேத் மோர் கமிட்டி அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் தலைவர் நசிகேத் மோர். இந்த கமிட்டி 2014-ஆம் ஆண்டு அறிக்கையை சமர்பித்தது.

    இதன் பரிந்துரைகள்
    1. உலகளாவிய மின்னணு வங்கிக் கணக்கு
    2. அனைவருக்கும் கடன் வசதி
    3. அனைவருக்கும் காப்பீடு வசதி
    4. நுகர்வோர் பாதுகாப்பு

    அனைவருக்கும் வங்கிச் சேவை என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தி யவர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய்.வி. ரெட்டி.

    ஜன் தன் யோஜனா

    இந்தியாவில் அனைவருக்கும் வங்கிச்சேவை அளிக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப் பட்ட திட்டம் ஜன் தன் யோஜனா. 2014-ஆம் ஆண்டு  கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இதுவரை தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 28.02 கோடி. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள ரூபே   கார்டுகளின் எண்ணிக்கை 21.90 கோடி. ஜன் தன் வங்கி கணக்குகளில் மொத்த இருப்புத் தொகை ரூ. 63,836 கோடி.

    வங்கிச் சேவை அல்லாதவர்களை

    2020-ஆம் ஆண்டுக்குள் வங்கி

அமைப்புக்குள் கொண்டு வரவேண்டும் என்று உலக வங்கி இலக்கு நிர்ணயித் துள்ளது. இதற்காக 2007-ஆம் ஆண்டு முதல் கட்டமாக உலக வங்கி ஒதுக்கிய தொகை 1.8 கோடி டாலர் ஆகும்.

    2020-ஆம் ஆண்டுக்குள் 60 கோடி வங்கிக் கணக்குகளை தொடங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.    வங்கிச் சேவைக்கான கூட்டமைப்பு

    வளரும் நாடுகளில் அனைவரும் உள்ளடக்கிய வங்கிச் சேவையை அளிக்கும் நோக்கில் கொள்கையை உருவாக்குவதற்காக 2008 -இல் இந்த அமைப்பு கொண்டுவரப் பட்டது. பில் அண்ட் மெலிண்டா என்ற தன்னார்வ தொண்டு அமைப்பில் (மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலின்டா நடத்தும் அமைப்பு) வங்கிச் சேவைக்கான கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டு இந்த அமைப்பு மாயா பிரகடனத்தை அறிவித்தது. இதை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக் கொண்டன. இந்த பிரகடனத்தின் படி அனைவரையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவருவதன் மூலம் ஏழ்மையை ஒழிக்கவும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    அனைவரையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவர இந்திய அரசின் திட்டம்:

  * பாரதிய மகிளா வங்கி    
     (தற்போது எஸ்.பி.ஐ. வங்கியுடன்   இணைந்தது)
  *  முத்ரா யோஜனா
  *  பேமென்ட் வங்கிகள்
  *  மைக்ரோ ஃபைனான்ஸ்
  
 ஒரே நாடு ஒரே வரி

    சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) சுதந்திர இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் மிகப்பெரிய வரிச்சீர்திருத்த மாகும். மத்திய அரசால் வசூலிக்கப்படும் கலால் வரி, சேவை வரி, விற்பனை வரி மற்றும் மாநில அரசால் வசூலிக்கப்படும் விற்பனை வரி, நுழைவு வரி, ஆடம்பர வரி போன்ற 23 மறைமுக வரிகளை உள்ளடக்கி ஜி.எஸ்.டி என்று ஒரே வரியாக அமல் படுத்தப்பட்டுள்ளது.

    மத்திய சரக்கு மற்றும் சேவை வரி(CGST) ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி(IGST)  , யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி (UTGST) , மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடுசெய்யும் மசோதா ஆகிய 4 துணை மசோதாக்கள் மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) அனைத்து மாநில சட்டசபைகளில் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்திலும் அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    மத்திய நிதியமைச்சர், மாநில நிதியமைச் சர்கள் போன்ற 32 பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி அமைப்பு (GST Council)  வரி விதிப்பு சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும். இந்த அமைப்பு இதுவரை 12 முறை கூடி விவாதித்துள்ளது.

    தற்போதைய நிலையில் வரி விகிதங்கள், ஜி.எஸ்.டியின் கீழ் 5%, 12%, 18%, 28% என்ற 4 பிரிவுகளில் வரி விதிப்பு இருக்கும். கார், காற்றோட்டப்பட்ட குளிர்பானங்கள், புகையிலை மற்றும் ஆடம்பர பொருட் களுக்கு மாநில வரி வருவாய் இழப்புகளை ஈடு செய்யும் வகையில் கூடுதல் வரி விதிப்புகளை முதல் 5 வருடங்களுக்கு விதிக்கப்பட உள்ளது.

    ஒரே நாடு ஒரே வரி என கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும் ஏராளமான மாதப்படிவங்களையும், காலப்படிவங் களையும் தாக்கல் செய்யப்பட வேண்டிய கட்டாயத்திற்கு வரிதாரர்கள் உள்ளாவார்கள். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் சீர்திருத்த வரி அறிமுகப்படுத்தப் படும் போது ஆரம்ப காலத்தில் இது போன்ற சில நடைமுறைச் சவால்களும் சிரமங்களும் இருக்கத்தான் செய்யும்.

ஆனால் தொலைநோக்கிப் பார்க்கும்போது இதன் பலன்களே அதிகம் இருக்கும்.

    மாநிலங்களுக்கு தக்கபடி மாறும் பல்வேறு வரிவிதிப்புகளை அகற்றி, நாடு முழுக்க ஒரே மாதிரியான வரி விதிப்பு பின்பற்றப்படும்.

    வரிவிதிப்பு என்பது வெளிப்படையானதாக மாறிவிடும், எளிமையானதாக இருக்கும். எனவே எந்த பொருளுக்கு வரி விலக்கு உள்ளது, எதற்கு வரி விலக்கு இல்லை என்பது போன்ற தகவல்கள் எளிதாக அனைவருக்கும் புரியும். முக்கியமாக வரி மேல் வரி வசூல் செய்யப்படும் சூழ்நிலை இருக்காது.

    ஜி.எஸ்.டி அமல் காரணமாக குறுகிய காலத்திற்கு பணவீக்கம் அதிகரிக்கும். இதனால் விலைவாசி உயர்ந்தாலும் கூட இது தற்காலிகமானதாகவே இருக்கும். பொது நிதி நிறுவனம், நாட்டின் வளர்ச்சி போன்றவற்றுக்கு ஆரோக்கியம் தரும்.

    நிறுவனங்கள் வரி விலக்கு லாபங்களுக்கு ஏற்ப, தங்கள் தொழிலுக்கு ஏற்ற இடங்களில் நிறுவனங்களை தொடங்க முடியும். நிறுவனங்கள் இடையே ஆரோக்கிய போட்டி அதிகரிக்கும்.

    நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி (ஜி.டி.பி) சுமார் 2% அதிகரிக்கும். பெட்ரோலிய பொருட்கள், மதுபானங்கள் ஜி.எஸ்.டி (வரி விகிதம்) அமைப்புக்குள் வருவதில்லை. மாநில அரசுகளே இந்த பொருட்களுக்கான வரியை தொடர்ந்து விதிக்கும். ரூ. 50 இலட்சத்திற்கு மிகாமல் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டுவரி யாக (Compounding Rate) 1% வரி செலுத்தினால் போதுமானது. இது சிறு வியாபாரி களுக்கு உதவியாக இருக்கும் என்றாலும் இதிலிருந்து எடுக்க முடியாது என்பது வரிச் சங்கிலியை பாதிக்கும்.

    கடந்த அரசாங்கத்தால் செய்ய முடியாத ஜி.எஸ்.டி. சட்டத்தை மாநில அரசுகளின் ஒப்புதலோடு நிறைவேற்றியதன் மூலம் இந்த அரசு பெரும் சாதனையை ஏற்படுத்தியுள்ளது.            


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :