Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
Logo
ஓம்
சித்ரா பௌர்ணமி சிறப்பு!
 ................................................................
பூரண கும்பத்தில் பரமன்!
 ................................................................
மே மாத ராசிபலன்கள்
 ................................................................
ராகவேந்திர விஜயம்!
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
ராஜா ராமானுஜர்!
 ................................................................
அரசியலில் வெற்றி தரும் சாகம்பரி!
 ................................................................
மே மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
 ................................................................
ரங்கன் கொடுத்த ரத்தினமாலை!
 ................................................................
உய்ய ஒரு வழி- உடையவர் திருவடி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
வானுயர நிற்கும் காளி!
 ................................................................
பேரருளாளன்! -மும்பை ராமகிருஷ்ணன்
 ................................................................
01-05-17"உன் பரமாச்சாரியனிடமோ, ஸ்ரீவைஷ்ணவர்களிடமோ நீ இயற்றும் தொண்டில் எந்தவிதமான வேற்றுமையையும் காட்டாதே.'

"இனத்தால் உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்ற மனவேறுபாட்டினைக் களைந்திடு. வைணவன் என்றாலே அவன் உயர்ந்தவன்தான். அவன் பகவானின் அன்புக்கு உரியவனாகிறான்.'

"உன்னுடைய ஐம்புலன்கள் எழுப்பும் ஆசைகளுக்கு இடம் தராதே.'

"ஒருவருக்குத் தொண்டாற்றும்போது அவர் எக்குலம்- எத்தன்மையர் என்றெல்லாம் ஆராயப் புகாமல் சேவைமீதே கருத்தாக இரு.'

"பொன்னையும் பொருளையும் பெரியனவென எண்ணும்- சிற்றின்பத்திலேயே உழலும் ஏதுமிலிகளை நாடாதே. இறைவன்பால் சித்தம் வைத்து பெரியவர்களிடம் பழகு.'

"பகவானுடைய திருவடிகளுக்கே தன்னை அர்ப்பணம் செய்துகொண்டு, ஆச்சார்ய புருஷர்கள் வகுத்த ஒழுக்க முறைகளிலேயே நின்று நற்பயன் எய்த வேண்டும்.'

இவ்வாறெல்லாம் பல நற்கருத்துகளை மக்களுக்கு உபதேசித்தவர் ஸ்ரீராமானுஜர்.

கி.பி. 1017-ஆம் ஆண்டு வியாழக்கிழமை, சித்திரை 12-ஆம் தேதி, வளர்பிறை பஞ்சமி, திருவாதிரை நட்சத்திரத்தில், அசூரி கேசவாச்சாரியார்- காந்திமதி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் ஸ்ரீராமானுஜர்.இவரது தாய்மாமன் திருமலை நம்பி, குழந்தை லட்சுமணன் அம்சமாக இருப்பதால் இளையபெருமாள் என்று பெயர் சூட்டினார்.

பொதுவாக ஆலயங்களிலுள்ள ராமானுஜரின் திருமேனிக்கு காவியாடை அணிவிப்பதுதான் முறை. சில தலங்களில் மாறுபட்டும் நடக்கும்.

ஸ்ரீபெரும்புதூரில் சித்திரையில் நடைபெறும் விழாவின்போது இவரது நட்சத்திரநாளில் தொட்டில் குழந்தையாகக் கிடத்தி சங்கில் பாலூட்டும் வைபவம் நடைபெறும்.

சித்திரை விழாவின் ஆறாம் நாள் ஸ்ரீராமானுஜர் விக்கிரகத் திருமேனிக்கு வெண்ணிற ஆடை அணிவிப்பார்கள்.

ராமானுஜர் வாழ்ந்த காலத்தில் கிரிமிகண்ட சோழன் என்னும் மன்னன் ஸ்ரீரங்கம் பகுதியை ஆட்சிபுரிந்து வந்தான். ஸ்ரீராமானுஜர் வைணவத்தின் சிறப்பை மக்கள் மத்தியில் உபதேசித்து நல்மதிப்பினைப் பெற்றிருப்பதை அறிந்த மன்னன், "சிவனைவிட மேம்பட்டவர் இல்லை' என்று ராமானுஜரிடம் வாக்குமூலம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் அவரை அழைத்துவரும்படி சேவகர்களுக்குக் கட்டளை யிட்டான்.

சேவகர்கள் ராமானுஜரைத் தேடி அலைந்தார்கள். அவர் எப்படி இருப்பார் என்று தெரியாமல் அலைந்துகொண்டிருந்த சமயத்தில், ராமானுஜர் மடத்தில் நீராடிக்கொண்டி ருந்தார். தங்களது குருவைத் தேடி காவலர்கள் அலைவதை அறிந்த ராமானுஜரின் சீடர்களான கூரத்தாழ்வாரும், பெரிய நம்பியும் தங்கள் குருவைக் காப்பாற்ற திட்டமிட்டார்கள். உடனே ராமானுஜரின் காவி ஆடையை கூரத்தாழ்வான் அணிந்துகொண்டு புறப்படும்போது, அவருடன் பெரிய நம்பியும் புறப்பட்டார்.

காவி உடையுடன் ஸ்ரீரங்கம் வீதியில் சென்ற கூரத்தாழ்வானைக் கண்ட காவலர்கள், ""நீர்தான் ராமானுஜரா?'' என்று கேட்டார்கள்.

அவரும் "ஆம்' என்றார். உடனே, கூரத்தாழ்வாரையும் பெரிய நம்பியையும் இழுத்துச்சென்று சோழ மன்னன்முன் நிறுத்தினார்கள்.

சோழ மன்னனின் கட்டளைப்படி "சிவனைவிட மேம்பட்டவர் இல்லை' என்ற வாக்குமூலத்தில் கையெழுத்திட அவர்கள் மறுக்கவே, இருவர் கண்களையும் பறிக்கும்படி கட்டளையிட்டான் மன்னன். கூரத்தாழ்வாரின் கண்களை காவலர்கள் பறிக்க வந்தபோது, "இத்தகைய மன்னனைக் காண்பதே பெரும் பாவம்' என்று தன் கண்களைத் தானே பிடுங்கி எறிந்தார். பெரிய நம்பியின் கண்களும் பறிக்கப்பட்டன. கண்களை இழந்த இருவரும் வெளியே துரத்தியடிக்கப்பட்டார்கள். முதியவரான பெரியநம்பி அந்த வேதனை தாங்காமல் வைகுண்ட பதவியை அடைந்தார். (ஆனால், கூரத்தாழ்வான் காஞ்சி ஸ்ரீவரதராஜப் பெருமாள் அருளால் மீண்டும் கண்பார்வை பெற்றார் என்று வரலாறு கூறுகிறது.)

ஸ்ரீராமானுஜர் நீராடிவிட்டு வந்ததும் நடந்தவற்றை அறிந்தார். அங்குள்ள மற்ற சீடர்கள் "இங்கிருந்து சென்றுவிடலாம்' என்று வற்புறுத்தவே, கூரத்தாழ்வாரின் வெண்ணிற ஆடையை அணிந்துகொண்டு அங்கிருந்து கர்நாடக மாநிலத்திலுள்ள மேல்கோட்டை நோக்கிச் சென்றார்.

இந்த நிகழ்வினை நினைவுபடுத்தும் வகையில் ஸ்ரீபெரும்புதூரில், சித்திரை விழாவின் ஆறாம் நாள் ஸ்ரீராமானுஜரின் விக்கிரகத்திற்கு வெண்ணிற ஆடை அணிவிக்கிறார்கள். தனக்காக கண்களை அர்ப்பணித்த சீடனுக்கு மரியாதை செய்யும் வகையில் இவ்வாறு செய்வதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் மதுராந்தகம் திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் (ஏரி காத்த ராமர் கோவில்) கோவிலில் ஸ்ரீராமானுஜர் திருமேனிக்கு வெண்ணிற ஆடை அணிவித்திருப்பதைக் காணலாம்.

மதுராந்தகத்தில்தான் ராமானுஜருக்கு பஞ்ச சமஸ்காரம் அருளப்பட்டது.  அப்போது இளையாழ்வாருக்கு வயது 27. இதற்குப்பின், மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக துறவறம் மேற்கொண்டார். அந்தக் கணமே இளையாழ்வாருக்குச் சூட்டப்பட்ட திருநாமம் ராமானுஜமுனி.

ஆழ்வார் திருநகரி திருத்தலத்திலும் ஸ்ரீராமானுஜர் விக்கிரகத்திற்கு வெண்ணிற ஆடை அணிவிப்பது வழக்கம்.

ஸ்ரீராமானுஜர் கி.பி. 1017-ஆம் ஆண்டில் அவதரிப்பதற்கு 300 ஆண்டுகளுக்குமுன்பே, விக்கிரக வடிவில் காட்சிதந்தவர், ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர். "பின்னர் எழுந்தருளப்போகின்ற' என்ற பொருளில் "பவிஷ்ய' என்னும் அடைமொழி சேர்த்து "பவிஷ்ய ராமானுஜர்' என இவர் போற்றப்படுகிறார்.

இந்த விக்கிரகத்தை ஆளவந்தாரிடமிருந்து பெற்ற நாதமுனிகள், அதனை நம்மாழ்வார் அவதாரத்தலமான ஆழ்வார் திருநகரியில் பிரதிஷ்டை செய்தார். துறவறம் ஏற்கும்முன் உருவான விக்கிரகமாததால், ராமானுஜர் திருமேனிக்கு வெண்ணிற ஆடை மட்டுமே அணிவிக்கப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் சித்திரை திருவிழாவில் ஒருநாள் ஸ்ரீராமானுஜரின் திருமேனிக்கு பட்டுப் பீதாம்பரம் மற்றும் அணிகலன்களை அலங்கரிப்பார்கள். கையில் பெரிய வாளேந்தி, ராஜ அலங்காரக் கோலத்தில் கம்பீரமாக தரிசனம் தருவார். முனிவர்களுக்கெல்லாம் அரசராக இருப்பதால் ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது. கையில் வாளேந்தி இருப்பது யாருடனும் போரிடுவதற்கல்ல. மனதில் தோன்றும் அவலட்சணமான ஆசை, பொறாமை, உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்ற அறியாமையை அகற்ற வாளேந்திக் காட்சி தருவதாக ஐதீகம்.

மேலும், விழாவில் ஒருநாள் நாகத்தின் நிழலில் இருப்பது போன்று அவரது ஆசனம் அமைக்கப்பட்டு அதில் எழுந்தருளச் செய்திருப்பார்கள். ஸ்ரீராமானுஜர், ஆதிசேஷன் அவதாரமென்று போற்றப்படுவதால் இந்தத் திருக்கோலம் என்பர். அதைத் தொடர்ந்து பூப்பல்லக்கில் வீதியுலா நடைபெறும்.

ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜருக்கு தனியாகக் கோவில் உள்ளதுபோல், தமிழகத்தில் வேறெங்கும் இல்லையென்று சொல்லப் படுகிறது. அதனால்தான், அவர் அவதரித்த சித்திரை மாதத்தில் தொட்டிலில் பாலூட்டும் நிகழ்ச்சியிலிருந்து ராஜஅலங்காரம் வரை செய்து அவரைப் போற்றுகிறார்கள்.

கர்நாடக மாநிலம், தொண்டனூர் திருத்தலத்திலுள்ள ஸ்ரீநரசிம்மர் கோவில் ஸ்ரீராமானுஜரால் நிர்மாணிக்கப்பட்டது. இந்தத் தொண்டனூரை ஆட்சி புரிந்துவந்த ஜைன மன்னனின் மகள் சித்தப்பிரமையால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளின் துன்பத்தை தன் அருட்பார்வை யால் குணமாக்கினார் ஸ்ரீராமானுஜர். மேலும், அங்கு கூடியிருந்த சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அதனால், அந்நாட்டு மன்னனான ஹொய்சாள வல்லாளன் சமணத்தைவிட்டு விலகி வைணவத்திற்கு மாறினான். தன் பெயரையும் விஷ்ணுவர்த்தனன் என்று மாற்றிக் கொண்டான்.

ஸ்ரீராமானுஜர் தொண்டனூரில் நிர்மா ணித்த ஸ்ரீநரசிங்கப் பெருமாளின் திருமுகம் கோபக்கனல் வீசாமல் சாந்தமான நிலையில், அன்றலர்ந்த தாமரை போலவும், ரோஜா மலர் நிறம் கொண்டும் காட்சியளிப்பதை தரிசிக்கலாம். ஸ்ரீநரசிம்மரின் முகம் மலர் போல காட்சி தருவதால், இங்கு தனிச்சந்நிதியில் அருள்புரி யும் ராமானுஜருக்கு காவி உடையோ, வெண்ணிற ஆடையோ அணிவிக்காமல், ரோஜா வண்ண ஆடையை அணிவிக்கிறார்கள்.

இங்கு திரிதண்டம் இல்லாமல் வலது கரம் அபயம் அளிக்கும் நிலையில், இடதுகரத்தை மடிமீது வைத்துள்ளார்.

பெரும்பாலும், வைணவத் தலங்களில் கைகூப்பியபடி அமர்ந்த நிலையில் திரிதண்டத்துடன் காட்சிதரும் ஸ்ரீராமானுஜர், திருக்குறுங் குடி தலத்திலும் திருமலை- திருப்பதியிலும் உபதேசக் கோலத்தில் காட்சிதருவது தனிச்சிறப்பாகப் போற்றப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் கி.பி. 1137-ஆம் ஆண்டு ராமானுஜர் திருநாடு (பரமபதம்) சேர்ந்தார். அன்று சனிக்கிழமை, சக ஆண்டு 1059, மாக மாதம், வளர்பிறை தசமி என்று வரலாறு கூறுகிறது. அவரது உடலைப் பதப்படுத்தி வசந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் சிலர், அந்த இடத்தில் பள்ளிப்படுத்தியபோது மூன்றாவது நாள் அவரது திருமேனி மேலெழுந்தது என்றும், அதுவே இன்றளவும் காட்சி தருவதாகவும் சொல்கின்றனர். அவர் பள்ளிப்படுத்திய இடத்தில் புற்று ஒன்று தோன்றியதாகவும், அதுவே அவரது திருமேனியானதாகவும் சொல்லப்படு கிறது. அவர் வாழ்ந்த காலத்தில் அணிந்திருந்த ஆடைகளைக் கொண்டு உருவாக்கிய திருவுருவம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

எப்படியிருந்தாலும் "தானான திருமேனி' என்று போற்றப்படும் அத்திருமேனிக்கு பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ ஆகியவற்றுடன் தயாரிக்கப்பட்ட அரிய கலவையை சித்திரை மற்றும் ஐப்பசி மாதத்தில் காப்பிட்டுப் பாதுகாத்து வருகிறார்கள். ஆகையால், அவரை தரிசிக்கும்போது உயிருடன் அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தில் காட்சிதருகிறார்.

இத்திருமேனிக்கு திருமஞ்சனம் செய்யப் படுவதில்லை. எம்பெருமானாரின் ஸ்வயம் திருமேனி என்று போற்றி வழிபடுவார்கள்.

ஸ்ரீராமானுஜரை பக்தியுடன் தரிசித்தால் நினைத்த நல்ல வேண்டுதல்கள் நிறைவேறும்; ராகு- கேது தோஷங்கள் விலகும் என்பர். ஸ்ரீரங்கத்தில் இத்திருமேனிக்குதான் முதல் வழிபாடு நடைபெறுகிறது என்பது தனிச்சிறப்பாகும்.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :