Add1
logo
குண்டர் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்:தெகலான் பாகவி || அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் : கமல் || மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்து அண்ணன் -தங்கை பலி || வில்லன் போல செயல்படுகிறார் கிரன்பேடி : சீமான் குற்றச்சாட்டு || நடிகர் சங்க ஊழலில் கமலுக்கு பங்கு உண்டு :வராகி || மக்களை தூண்டி விடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை: கமல் விவகாரத்தில் ஜே.கே.ரித்தீஷ் || நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை: கமல் ரசிகர்கள் கண்டன சுவரொட்டி || மனித சங்கிலி போராட்டத்தில் ம.நே.ம.க. பங்கேற்பு: ஜவாஹிருல்லா அறிவிப்பு || ஆசிரியர்களுக்கும் பயிற்சி –செங்கோட்டையன் || கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம்: வெள்ளையன் அறிவிப்பு || சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையைப் போக்க கிருஷ்ணா நதி நீரை பெற நடவடிக்கை வேண்டும்: ஸ்டாலின் || சேதுக்கரையில் முன்னோர்களுக்கு வழிபாடு || உலகின் அச்சானி உழவர்கள்: இயற்கை வேளாண் கருத்தரங்கில் விவசாயிகள் பெருமிதம் ||
Logo
ஓம்
சித்ரா பௌர்ணமி சிறப்பு!
 ................................................................
பூரண கும்பத்தில் பரமன்!
 ................................................................
மே மாத ராசிபலன்கள்
 ................................................................
ராகவேந்திர விஜயம்!
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
ராஜா ராமானுஜர்!
 ................................................................
அரசியலில் வெற்றி தரும் சாகம்பரி!
 ................................................................
மே மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
 ................................................................
ரங்கன் கொடுத்த ரத்தினமாலை!
 ................................................................
உய்ய ஒரு வழி- உடையவர் திருவடி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
வானுயர நிற்கும் காளி!
 ................................................................
பேரருளாளன்! -மும்பை ராமகிருஷ்ணன்
 ................................................................
01-05-17



தேவியின் சிறப்புவாய்ந்த ஆலயங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது சாகம்பரி மாதா ஆலயம். ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உதய்பூர் வடி அருகே இவ்வாலயம் அமைந்துள்ளது. "சாகம்' என்றால் சைவம். "பரி' என்றால் அணிதல். இவ்வன்னைக்கு காய்கறிகளாலான மாலைகள் அணிவிக்கப்படுவதால் சாகம்பரி என அழைக்கப்படுகிறாள். துர்க்கா தேவியின் 25-ஆவது வடிவமாகத் திகழ்கிறாள் சாகம்பரி. தேவி பாகவதம் 28-ஆவது அத்தியாயத்தில் இவ்வன்னையைப் பற்றிய தகவல் உள்ளது.

முன்னொரு காலத்தில், ஹிரண்யகசிபுவின் வம்சத்தில் வந்த துர்க்கன் என்ற அரக்கன் இருந்தான். அவன் பிரம்மதேவனிடம் வேதம் கற்கச் சென்று, அவர் அறியாத சமயம் வேதங்களை அபகரித்துச் சென்றுவிட்டான். இதனால் நாட்டில் மழையின்றி வறட்சி ஏற்பட்டது. அனைவரும் சென்று இந்த அன்னையை வணங்கி முறையிட, தேவியானவள் துர்க்கனை அழித்து வேதங்களை மீட்டாள். நாடு வறட்சி நீங்கி செழிப்புற்றது.

சக்தி பீடங்களுள் ஒன்றாகத் திகழும் இத்தலத்தில் பிரம்மானி, ருத்ரானி என இரு வடிவங்களில் அன்னை அருள்புரிகிறாள்.

வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அன்னைக்கு இருபுறம் இரண்டு பித்தளை விளக்குகள் உள்ளன. பலநூறு ஆண்டுகளாக இவை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றன.



கிழக்கு நோக்கிய இவ்வாலயம், நாற்புறங்களிலும் மலைகள் சூழ அழகாக அமைந்துள்ளது. 26 தூண்கள் கொண்ட ஆலயத்தில் கண்ணாடி வேலைப்பாடுகள் வியப்பூட்டும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. முகப்பில் இரண்டு சிங்க உருவங்கள் உள்ளன.

கணபதி, பைரவர், சரஸ்வதி ஆகியோருக்கும் சந்நிதிகள் உண்டு.

இவ்வாலயத்துக்கு அருகே சங்கு வடிவில் மிகப்பெரிய குளம் ஒன்று அமைந்துள்ளது. இதன் கரையில் மகாவிஷ்ணு தவமிருந்ததாக ஐதீகம். இதில் நீராடுபவர்களுக்கு அனைத்து வகை துன்பங்களும் நீங்கி, மகாவிஷ்ணுவின் அருளும் பரிபூரணமாகக் கிட்டும் என்கிறார்கள்.

வேதம் பயிலத் தொடங்குபவர்கள் இங்குவந்து வழிபடுகிறார்கள்.

இந்திரன், எமன் முதலானோர் வழிபட்ட தலமிது. இங்குள்ள மலைப்பரப்பில் ஏராளமான மூலிகைகள் உள்ளன.

உருளைக்கிழங்கு போன்று தோற்றமுள்ள, பால் வரும் ஹடலு என்ற கிழங்கு இங்கு கிடைக்கிறது. அதையே இவ்வாலயத்தில் பிரசாதமாகத் தருகிறார்கள்.

இங்குள்ள யாகசாலையில் தினசரி நவசண்டி, சப்தசண்டி யாகங்கள் நடக்கின்றன.

அஷ்டமி, நவமி, சதுர்த்தசி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். பௌர்ணமி நாட்கள் மேலும் சிறப்பானவை. வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி விழாக்கள் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகின்றன.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், ராகு தசை நடப்பவர்கள், பிள்ளைகளின் கல்வி பாதிப்படைந்தவர்கள் இங்குவந்து வழிபட்டால் நலம் பெறலாம் என்கின்றனர். அரசியலில் வெற்றிபெற, பல அரசியல் பிரமுகர்களும் இவ்வாலயத்தைத் தேடிவருகிறார்கள்.

சென்னையிலிருந்து ஜெய்ப்பூர் சென்று, அங்கிருந்து 120 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிகார் சென்று, அங்கிருந்து 45 கிலோமீட்டர் பயணித்தால் சாகம்பரி மாதா ஆலயத்தை அடையலாம்.


matrimony
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :