Add1
logo
கலைஞரை தமிழ் ஆசான் என கூறியதற்கு எம்.ஜி.ஆர். எனக்கு வாழ்த்து தெரிவித்தார்: கமல் புகழாரம் || சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: இன்று வெளியாகிறது || சச்சின் படத்திற்கு மத்திய பிரதேச அரசு வரிவிலக்கு || தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்களில் ஒருவர் கலைஞர்: கமல் புகழாரம் || தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு || பி.எஃப். பங்களிப்பு குறைக்கும் யோசனையை நிராகரிக்க முடிவு || காப்பகத்திலிருந்து தப்பிய 5 சிறுவர்களை - சிறார் குழுமத்தில் ஒப்படைப்பு || டாஸ்மாக் கடைக்கு தீவைத்த பொதுமக்கள் || துாத்துக்குடியில் 4 வாரம் மின் உற்பத்தி நிறுத்தம் || ரமலான் நோன்பு தொடங்கிய முதல் நாள் கார் குண்டு வெடிப்பில் 18 பேர் பலி || நின்று கொண்டிருந்த கார் மர்மமான முறையில் தீ பற்றி எரிந்ததில் காருக்குள் சிக்கி கொண்ட 3 பேர் பலி || கைதான 18 இந்திய தேசிய லீக் கட்சியினரும் புழல் சிறையில் அடைப்பு || பிரபாகரன் மரணத்திற்கு தமிழக தலைவர்கள் தான் காரணம் பா.ஜ.க மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் குற்றச்சாட்டு ||
Logo
ஓம்
சித்ரா பௌர்ணமி சிறப்பு!
......................................
பூரண கும்பத்தில் பரமன்!
......................................
மே மாத ராசிபலன்கள்
......................................
ராகவேந்திர விஜயம்!
......................................
கடவுளைத் தேடி...
......................................
ராஜா ராமானுஜர்!
......................................
அரசியலில் வெற்றி தரும் சாகம்பரி!
......................................
மே மாத எண்ணியல் பலன்கள்
......................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
......................................
ரங்கன் கொடுத்த ரத்தினமாலை!
......................................
உய்ய ஒரு வழி- உடையவர் திருவடி!
......................................
யாதுமாகி நின்றாள்!
......................................
வானுயர நிற்கும் காளி!
......................................
பேரருளாளன்! -மும்பை ராமகிருஷ்ணன்
......................................
01-05-17




1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களது செயல்பாடுகள் அனைத்தும் பாராட்டுமளவுக்கு சிறப்பாக அமையும். புதிய முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ளலாம். வருமானம் அதிகரிக்கும். பெற்றோர்களுக்குரிய பணிவிடைகளைச் செய்வீர்கள். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும் சிலருக்கு அடிவயிறு, பாதத்தில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. எனவே, ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். விட்டுக்கொடுக்கும் குணமும், மன்னிக்கும் குணமும் இந்த மாதம் அதிகம் தேவை. அதனால் குடும்பத்தில் குதுகூலம் நிலவும். சிலருக்கு வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு, வேலையாட்களின்மீது கண்காணிப்பு தேவை. அரசு ஊழியர், அரசியல்வாதிகள் நல்ல பலனைப் பெறும் மாதம். எண்ணம்போல பதவி உயர்வும், புதிய பதவியும் தேடிவரும். ஆனால், மேலிடத்துக்கு எதிராக நீங்கள் சொல்லும் வார்த்தைகூட உங்களை சரிவுக்கு ஆளாக்கிவிடும். எனவே, வாய்ப்பதனம், கைப்பதனம், மெய்ப்பதனம் என்ற சொற்களைக் கடைப்பிடித்து உயர்வடைய வேண்டும். பெண்கள் குணமுடன் வாழும் மாதம். எப்போதும் மகிழ்ச்சி பொங்கும். நினைத்தபடி திருமணம் நடக்கும். மாணவர்கள் சுற்றுலா சென்று வருவார்கள். இளைஞர்கள் நீர்நிலைகளில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.

வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள், யார் தவறு செய்தாலும் உடனடியாகத் தட்டிக்கேட்கும் குணம் கொண்டவர்கள். இந்த மாதம் உறவினர்கள், மகான்களின் சந்திப்பு கிட்டும். அதனால் மகிழ்ச்சியும் லாபமும் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பிரச்சினைகளைக் கொண்டுவர வாய்ப்புள்ளது. எனவே, அவர்களிடம் பொறுமையாக செயல்பட வேண்டும். தொழிலதிபர்கள் அதிக லாபம் பெறுவார்கள். ஓய்வில்லாமல் உழைக்கவேண்டிய காலம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிட்டும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். வரவேண்டிய நிலுவைத் தொகைகள் வந்துசேரும். அருகில் உள்ளவர்களால் தொல்லைகள் வரலாம். எனவே, எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். கனவுத் தொல்லைகள் உண்டு. பிள்ளைகளின் உயர்வால் பெற்றோர் மகிழ்ச்சி பெறுவார்கள். இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிட்டும். அயல்நாடு செல்லும் திட்டம் நிறைவேறும். வரவேண்டிய பணம் திடீரென வசூலாகும். அரசியல்வாதிகள் நினைத்தபடி பொறுப்புகளையும், பொதுமக்கள் பாராட்டையும் பெறுவார்கள். காவல்துறை, நீதித்துறையில் உள்ளவர்களுக்கு இதுவரை வராமலிருந்த பதவி உயர்வு வந்துசேரும். மாணவர்களுக்கு கோடைகாலப் படிப்பில் மனம் ஈடுபடும். அது வெற்றிக்கு வழிகாட்டும். சிலருக்கு முதுகுத் தண்டுவடப் பகுதியில் சிறு, சிறு உபாதைகள் வந்து விலகும்.

அதிர்ஷ்ட தேதி: 2, 11, 20, 29; 7, 16, 25.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 26; 9, 18.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

குரு ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர்களால் செய்யமுடியாத காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். அதேசமயம் இந்த மாதம் சில காரியங்களை தடை தாமதத் தோடு செய்யவேண்டி இருக்கும். பொறுமையாக செயல்படுபவர்கள் வெற்றியடைவர். திடீர் பணவரவுகள் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு இந்த மாதம் நல்ல வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். நன்கு ஆலோசித்து திருமணம் செய்ய வேண்டும். தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் லாபம் பெறுவார்கள். இதுவரை நிர்வாகத்துக்கு எதிராகச் செயல்பட்டுவந்த தொழிலாளர்கள் இனி ஆதரவாகச் செயல்படுவார்கள். அரசு ஊழியர்கள் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். நண்பர்களே எதிரியாகலாம். எனவே, எந்த காரியம் செய்தாலும் உங்கள் முடிவுப்படி செய்யவேண்டும். சிலருக்கு கட்டாய மாறுதல் வரலாம். அது உங்களுக்குப் பிடித்தமானதாக இல்லாவிட்டாலும் நன்மையாக இருக்கும். பிள்ளைகளின் தொல்லைகள் மாறும். இதுவரை வரமாட்டார்களா என்று நினைத்த பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து திடீரென வந்துசேர்வர். வியாபாரிகள் கொள்முதல் செய்யும் பொருட்களால் லாபம் இரட்டிப்பாகும். கனவுத் தொல்லைகள் உண்டு. சில பெண்கள் பிரச்சினை தீர்ந்து கணவன் வீட்டுக்குச் செல்வார்கள். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். இதுவரை உங்களை எதிர்த்து வந்தவர்கள் விலகி நிற்பார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 8, 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

ராகுவின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் மற்றவர்கள் செய்யாத செயலை எளிதாக செய்து முடிப்பவர்கள். புதிய முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். அரசு ஊழியர்கள் வேலை பார்க்கும் இடத்தில் "எடுத்தேன் கவிழ்தேன்' என்று செயல்படாமல், பொறுப்பாக செயல்பட்டால் நல்ல பெயர் எடுக்கலாம். மற்றவர்கள் தவறை நீங்கள் பெரிதுபடுத்தினால் உங்கள் தவறு விசுவரூபம் எடுக்கும். மேலதிகாரிகளின் தண்டனைக்கு ஆளாகாமல் செயல்பட வேண்டும். பணவரவுகள் சீராக இருக்கும். மற்றவர்கள் தன்னை உயர்வாக நினைக்க வேண்டுமென்பதற்காக கடன் வாங்கி செலவு செய்வதைத் தவிர்க்கவும். உடல்நிலையில் பாதிப்பு வராது. தொழிலதிபர்களுக்கு உற்பத்திச் செலவு கூடினாலும், லாபம் இரட்டிப்பாகக் கிடைக்கும். வியாபாரிகள் சிலருக்கு அரசாங்கத்தால் இருந்துவந்த தொல்லை நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி நினைத்தபடி நடக்கும். சடங்கு வைபவங்களில் கலந்துகொள்வதால் மனம் உற்சாகமாகும். வெளிநாட்டிலிருந்தும், தொலைத் தொடர்பாலும் நல்ல செய்திகள் வந்துசேரும். பெண்கள் கணவரை பொறுமையுடன் அனுசரித்துச் செல்லவேண்டும். சிலருக்கு கருத்து வேறுபாடு பிரிவினைக்குக் கொண்டு சென்றுவிடும். மாணவர்களுக்கு நினைத்தபடி உயர்கல்வி வாய்ப்பு கிட்டும். வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பும் சிலருக்கு கைகூடும். தாய்- தந்தையரை பிள்ளைகள் அனுசரித்துச் செல்வார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர் மற்றும் துர்க்கை யம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். சாமர்த்தியமான பேச்சும், நகைச்சுவை உணர்வும் கொண்டவர்கள். எப்போதுமே மனநிறைவுள்ளவர்கள். நீங்கள் எடுத்துக்கொண்ட புதிய தொழில் முயற்சிகள் கைகொடுக்கும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் கையில் காசு இல்லையென்ற நிலைமை வராது. பிரிந்துசென்ற தம்பதிகள் ஒன்றுகூடுவர். வழக்குகள் சாதகமாகும். ரேஸ், ஷேர் மார்க்கெட்டில் லாபம் பெருகும். இளைஞர்கள் அயல்நாடு செல்லும் திட்டம் நிறைவேறும். ராணுவத்தில் சேரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அரசு ஊழியர்கள் நினைத்தபடி மாறுதல் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழிகளில் லாபம் பெருகும். வியாபாரிகள் ஏற்கெனவே வாங்கி வைத்த சரக்குகளை விற்கவேண்டும். மேலும் கொள்முதல் செய்வதைத் தவிர்த்தால் நஷ்டத்திலிருந்து மீளலாம். தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் ஒத்துழைப்பால் லாபம் பெறுவர். இதுவரை வராமலிருந்த பூர்வீகச் சொத்துகள் வந்துசேரும். எதிரிகள் தொல்லை விலகும். வாகனங்களில் நிதானமாகச் செல்லவேண்டும். நீங்கள் நேசித்த ஒருவரைப் பிரிய நேரலாம். பேங்க் பேலன்ஸ் கூடும். பெண்களால் நன்மையுண்டு. மனைவி சொல்லே மந்திரமாகக் கொள்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். காவல்துறையினர் பதவி உயர்வு பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள், தங்களது முயற்சி மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டுமென்ற உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள். வியாபாரிகள் புதிய யுக்தியுடன் வியாபாரத்தைப் பெருக்குவர். உடல்நிலை சீராக இருக்கும். உடன்பிறந்தவர்கள் நேசம் கூடும். அரசு ஊழியர்கள் பிரச்சினை எதுவுமின்றிப் பணியாற்றும் காலம். தொழிலாளர்- முதலாளி கருத்து வேறுபாடுகள் நீங்கும். வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். மனைவி பயன்பெறும் மாதம். விலைபோகாமலிருந்த பூர்வீக சொத்து நல்ல விலைக்குப் போகும். சில இளம்பெண்கள் மாந்திரீகர்கள் தொந்தரவால் அவதிப்படலாம்; எச்சரிக்கை தேவை. கணவன்- மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். வெளியூர்ப் பயணம் மேற்கொள்பவர்கள் உடமைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் வாங்கிப் போட்டுள்ள இடம் விற்றுவிடும். வெளிநாட்டுத் தகவல்கள் வந்துசேரும். தாய்- தந்தையரது அனுசரிப்பு உண்டு. வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். பொற்கொல்லர்கள், விவசாயத் தொழில்புரிவோர், ஷேர் மார்க்கெட் முதலீடு செய்வோர் அதிக லாபம் பெறும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்க வேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

கேது ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எண்ணியதை எண்ணியபடி நடத்தும் ஆற்றல் பெற்றவர்கள். இருந்தாலும் எப்போதும் மனதில் ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும். ஒரு செயல் நிறைவு பெறும்போது மற்றொரு குறை வந்துவிடும். அலைந்து திரிந்து வேலை செய்தாலும் சரியான வருமானம் இல்லை என்று இருப்பவர்கள் இந்த மாதம் நல்ல லாபத்தைப் பெறுவர். சந்தேகமே உங்களது பின்னடைவுக்குக் காரணம். அரசு ஊழியர்களுக்கு வேலைப்பளு கூடும். மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். நண்பர்களால் லாபம் பெறலாம். வேலை பார்க்குமிடத்தில் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிலர் பூமியிலிருந்து புதையல் போன்றவற்றைப் பெறுவர். பூர்வீக பூமிகளில் கிடைக்க வாய்ப்புண்டு. கடன் தொல்லை நீங்கும். வழக்குகள் சாதகமாகச் செல்லும். பிள்ளைகளுக்குத் தடைப்பட்டுவந்த திருமணம் கைகூடும். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவர். வாங்கி வைத்த சரக்குகள் உடனுக்குடன் விற்பனையாகும். தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலை கட்டும் திட்டம் நன்றாக நடக்கும். அரசாங்க ஆதரவு கிட்டும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்து, பெரிதாகாமல் விலகிவிடும். மாணவர்கள் திட்டமிட்ட உயர்கல்வி கைகூடும். பெண்கள் தங்க ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாடு சென்ற கணவர் இதுவரை அனுப்பியதைவிட அதிகமாக பணத்தை அனுப்புவார். ஆறுதலான மாதம். கடனும் தீரும் மாதம்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சனி பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள், உங்கள் சொல்மீது அதிக நம்பிக்கையும், பிறரை மதிக்கும் உள்ளமும் கொண்டவர்கள். இந்த மாதம் நீங்கள் எதிர்பார்த்தபடி அனைத்து காரியங்களும் நிறைவேறும். நன்மையான பலன்கள் நடக்கும். பிரிந்துசென்ற உறவினர்கள் வந்து கூடுவார்கள். அரசு ஊழியர்களுக்கு இதுவரை தாமதமாகி வந்த சலுகைகள் தடையின்றிக் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரிகள் கொள்முதலை உயர்த்திக்கொள்வார்கள். பெண்களில் சிலர், "கணவர் பேச்சைமீறி ஏன் தாய்வீடு சென்றோம்' என்று மனம் வருந்தி, மீண்டும் கணவர் வீடு வந்து சேர்வார்கள். தந்தை- மகன் உறவு சுமுகமாக இருக்கும். தொழிலாளர்கள் கூடுதல் லாபம் பெறுவர். தொழிலாளர்களை நிர்வாகம் பாராட்டும். கலைஞர்கள் திட்டமிட்டபடி புதிய வாய்ப்பினைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்களின் தரத்தை உயர்த்துவார்கள். லாபம் இரட்டிப்பாகும். காலதாமதமாகி வந்த திருமணம் கைகூடும். ரியல் எஸ்டேட் அதிபர்கள் லாபம் அதிகம் பெறுவார்கள். நேர்மையானவர்கள் பாராட்டப்படுவார்கள். நேர்மை தவறியவர்கள் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாவார்கள். பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். குழந்தைகளால் பெருமையடைவார்கள். மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில்வதன்மூலம் எதிர்கால வேலைக்கு அடித்தளமிடுவார்கள். பெண்களாலும் நண்பர்களாலும் சிலர் லாபம் அடைவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் கூர்மையான சிந்தனை உள்ளவர்கள். உதவி என்று வந்தவர்களுக்கு முடிந்ததை மறக் காமல் செய்யும் எண்ணம் கொண்டவர்கள். இந்த மாதம் உங்கள் வீட்டுத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும் நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பேச்சைக் குறைத்து செயலில் ஆர்வம் காட்டினால் நிறைய சம்பாத்தியம் வரும். கடன் தொந்தரவுகளிலிருந்து விடுபடுவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். வீட்டு வசதிகளை செய்துகொள்வதில் அதிகமான அக்கறை காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் செய்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். தடைப்பட்டு வந்த பிள்ளைகளின் திருமணம் கைகூடும். பிள்ளைகளால் பெருமைப்படும் மாதம். வியாபாரிகள் கூடுதல் கொள்முதல் செய்வதால் எதிர்காலத்தில் அதிக லாபம் கிட்டும். வேலையாட்கள் நல்ல லாபத்தை ஈட்டித்தருவார்கள். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம்மூலம் இரட்டிப்பு லாபம் காண்பார்கள். இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தன்னை நம்பியுள்ள குடும்பத்தாருக்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசு ஊழியர்களின் வேலைப்பளு கூடினாலும், மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். தொழிலதிபர்கள் தங்கள் நிர்வாகக் கணக்குகளில் கவனம் செலுத்தவேண்டும். கணவன்- மனைவி உறவு சுமுகமாக இருக்காது. மனைவியால் வீண்செலவுகள் வரும். கணவர் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. எப்போதும் கையிருப்பு குறையாது.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேணடிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :