Add1
logo
பா.ஜ.க. அரசு தேசிய அளவில் வீழ்த்தப்பட்டு ராகுல் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும்: திருநாவுக்கரசர் || புதியப் பாடத்திட்டம் ஒரு மாதம் தாமதம்: நோக்கம் நிறைவேறுமா? அன்புமணி || சத்துணவில் முட்டை நீக்கமா? கி. வீரமணி கண்டனம் || முதல்வரும், அமைச்சர்களும் மத்திய அரசின் கொத்தடிமைகள்: ஜவாஹிருல்லா || எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் திட்டங்கள் நிறைவேறுமா? ஈஸ்வரன் சந்தேகம் || காய்ச்சலால் வடமாநில வாலிபர் உயிரிழப்பு || ராமர் வேடமணிந்து கலெக்டரிடம் மனு || கோலியின் சதத்துடன் இந்திய அணி டிக்ளேர்! || பாஜகவில் இணைந்த ஜி.கே.நாகராஜுக்கு துணைத் தலைவர் பதவி || சென்னை - குமரி சாலையில் மறியல்: திமுக, டிடிவி அணி, விவசாய சங்கம் சார்பாக கடையடைப்பு || 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பாடத்திட்டம்! அடுத்த கல்வியாண்டு முதல் அமல்!! || கமல் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது: அமைச்சர் ஜெயக்குமார் || ராகுல்காந்தியை தலைவராக்க காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானம்! ||
Logo
பொது அறிவு உலகம்
மிரட்டும் நீட் கலக்கும் IAS - சவால் இளைஞர்கள்
 ................................................................
TET தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்!
 ................................................................
தேசிய சுகாதார இயக்கம்
 ................................................................
5 மாநில சட்டசபை தேர்தல் - 2017
 ................................................................
தமிழக பட்ஜெட் 2017-18
 ................................................................
01-04-17

5 மாநில சட்டசபை தேர்தல் - 2017*    உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

*    இதில் உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது.

*    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை ஒழித்தது பற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த தேர்தல் நடந்தன.

*    எனவே இந்த தேர்தல் முடிவு மத்திய அரசின் நடவடிக்கைக் குறித்த மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக அமையும் என்று கருதப்பட்டது.

*    இந்த 5 மாநிலங்களில் உத்தரபிரதேசம் இந்தியா விலேயே பெரிய மாநிலம் என்பதால், அந்த மாநில தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.

*    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் மற்ற கட்சிகளை விட பாரதீய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

உத்தரபிரதேசம்


*    கருத்து கணிப்புகளையும் மிஞ்சும் வகையில் உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றது.

*    மும்முனைப்போட்டி நிலவிய உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 இடங்களில் 384 இடங்களில் போட்டியிட்ட பாரதீய ஜனதா 312 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

*    அதாவது மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான மெஜாரிட்டியுடன் சமாஜ்வாடியிடம் இருந்து பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்து உள்ளது.

*    உத்தரபிரதேசத்தில் இதற்குமுன் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டு வரை முதலமைச்சர் ராஜ்நாத் சிங் (தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர்) தலைமையில் பாரதீய
ஜனதா ஆட்சி நடைபெற்றது.

*    அதன் பிறகு அங்கு பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தன. 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அங்கு பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

*    2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 15 சதவீத வாக்குகளை பெற்று 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த பாரதீய ஜனதா, இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த தேர்தலில் ஆளும் சமாஜ்வாடியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. சமாஜ்வாடி கட்சி 298 தொகுதிகளிலும், காங்கிரஸ் 105 தொகுதி களிலும் போட்டியிட்டன. 54 இடங்களிலேயே இந்த கூட்டணி வெற்றி பெற்றது. சமாஜ்வாடி கட்சிக்கு 47 இடங்களும், காங்கிரசுக்கு 7 இடங்களும் கிடைத்தன.

உத்தரபிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.

*    மொத்த தொகுதிகள் - 403
      பாரதீய ஜனதா கூட்டணி - 325, சமாஜ்வாதி - 47, காங்கிரஸ் - 7, பகுஜன் சமாஜ் - 19, பிற கட்சிகள் - 5

உத்தரகாண்ட்


*    உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 57-இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது.

*    காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே பிடித்தது. சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

*    காங்கிரஸ் சார்பில் ஹரித்துவார் ரூரல் மற்றும் கிச்ஹா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் ஹரிஷ் ராவத் அந்த 2 தொகுதி களிலுமே தோல்வி கண்டார்.

*    உத்தரகாண்ட் உருவாக்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆகும் நிலையில் அந்த மாநிலத்தில் எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்ததில்லை.

*    தற்போது முதல்முறையாக பாரதீய ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.

*    அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக பாரதீய ஜனதா கட்சியின் திரிவேந்திர சிங் ராவத் பதவியேற்றார்.

*    மொத்த தொகுதிகள் - 70
    பாரதீய ஜனதா - 57, காங்கிரஸ் - 11,
    பிற கட்சிகள் - 2

கோவா


*    பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் கோவா மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

*    இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிபெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், அதற்கு அடுத்தபடியாக பாரதீய ஜனதா 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.

*    பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில் சுயேச்சைகள் மற்றும் மாநில கட்சிகளான மகாராஷ்டிரவாதி கோமந்த கட்சி, கோவா ஃபார்வார்டு கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு பாரதீய ஜனதா ஆட்சி அமைத்துள்ளது.

*    கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்றார். அவருக்கும், 9 அமைச்சகர்களுக்கும் மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா, பதவி பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

*    மொத்த தொகுதிகள் - 40
       காங்கிரஸ் கூட்டணி - 17, பாரதீய ஜனதா - 13, எம்ஜிபி கூட்டணி - 3, பிற கட்சிகள் - 7

பஞ்சாப்


*    117 உறுப்பினர்களை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றி பெற்று, சிரோமணி அகாலிதளம்-பாரதீய ஜனதா கூட்டணியிடம் இருந்து ஆட்சியை பறித்தது.

*    அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி  20 இடங்களில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்தது. அதன் கூட்டணி கட்சியான லோக் இன்சாப் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன.

*    94 இடங்களில் போட்டியிட்ட சிரோமணி அகாலிதளத்துக்கு 15 இடங்களும், 23 இடங்களில் போட்டியிட்ட பாரதீய ஜனதாவுக்கு 3 தொகுதிகளும் கிடைத்தன.

*    117 இடங்களில் தனித்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

*    இதனையடுத்து அம்மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் அம்ரீந்தர் சிங் பதவியேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான அமைச்சரவையில் இரண்டு பெண்கள் உள்பட 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.

*    பஞ்சாப் முதல்வராக அம்ரீந்தர் சிங் பொறுப்பேற்பது இது இரண்டாவது முறையாகும்.

*    பாரதீய ஜனதாவிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கும் அமைச்சர் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

*    மொத்த தொகுதிகள் - 117
      
காங்கிரஸ் - 77, ஆம் ஆத்மி - 20 அகாலிதளம் - 15, பாரதீய ஜனதா - 3,  பிற கட்சிகள் - 2

மணிப்பூர்

*    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

*    இங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிபெரும்பான்மை கிடைக்கவில்லை.  ஆளும் காங்கிரஸ் 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதீய ஜனதாவுக்கு 21 இடங்கள் கிடைத்தன.

*    நாகா மக்கள் முன்னணியும், தேசிய மக்கள் கட்சியும் தலா 4 இடங்களில் வெற்றி பெற்றன. பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி ஒரு இடத்தை கைப்பற்றியது.

*    இந்நிலையில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, லோக் ஜனசக்தி மற்றும் ஒரு சுயேட்சையின் ஆதரவுடன் அங்கு பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது.

*    மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மாநிலத்தில் புதிய முதல்வராக பாரதீய ஜனதாவின் பீரேன் சிங் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

*    மணிப்பூர் மாநில வரலாற்றில் அங்கு பாரதீய ஜனதா தலைமையிலான அரசு ஆட்சி அமைப்பது இதுவே முதன்முறையாகும்.

*    மொத்த தொகுதிகள் - 60
      காங்கிரஸ் - 28,     பாரதீய ஜனதா - 21,  என்பிஎஃப் - 4, பிற கட்சிகள் - 7


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :