Add1
logo
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு! || மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி || பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்! || பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன் || ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் || பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன் || மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர் || பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது || பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது || ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்) || எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம் || 7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் ||
Logo
பொது அறிவு உலகம்
மிரட்டும் நீட் கலக்கும் IAS - சவால் இளைஞர்கள்
 ................................................................
TET தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்!
 ................................................................
தேசிய சுகாதார இயக்கம்
 ................................................................
5 மாநில சட்டசபை தேர்தல் - 2017
 ................................................................
தமிழக பட்ஜெட் 2017-18
 ................................................................
01-04-17

தமிழக பட்ஜெட் 2017-18* தமிழக அரசின் 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள், வரிச் சலுகைகள் இல்லை.

*    ஒரு லட்சம் பெண்கள் ஸ்கூட்டர் வாங்க ரூ.200 கோடி மானியம், விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி பயிர்க்கடன், சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு 10,500 பேர் தேர்வு என பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:

*    தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 2016-17-இல் 7.94 சதவீதமாகவும், 2017-18-இல் 9 சதவீதமாகவும் இருக்கும். சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதால் மாநில சரக்கு, சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவுள்ளது. தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 363 கோடி, மொத்த செலவுகள் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 293 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வருவாய்பற்றாக்குறை ரூ.15,930 கோடி, நிதிப் பற்றாக்குறை ரூ.41,977 கோடியாக இருக்கும்.

*    2018 மார்ச் இறுதியில் தமிழக அரசின் நிகர கடன் நிலுவை ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடியாக இருக்கும். 2017-18-ஆம் ஆண்டில் ரூ.41,965 கோடி மட்டுமே கடன் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

* தேசிய, உலக பொருளாதார மந்த நிலையில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய் பாதிக்கப் பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறையால் தமிழகம் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மதிப்புக் கூட்டு வரி முறைக்குப் பதிலாக ஜிஎஸ்டி வரி முறை செயல்பாட்டுக்கு வர உள்ளதால் வரிச் சலுகைகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

*    2017-18-இல் வணிகவரி வருவாய் ரூ.77,234 கோடி,ஆயத் தீர்வை வருவாய் ரூ.6,903 கோடி, முத்திரைத் தாள், பதிவுக் கட்டண வருவாய் ரூ.8,220 கோடி, மோட்டார் வாகன வரி வருவாய் ரூ.5,418 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் நிதியாண்டில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய் ரூ.99,590 கோடி, வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடியாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

*    கடந்த 2015-16 முதல் மத்திய அரசு நிதி உதவியில் செயல்படும் திட்டங்களுக்கான நிதியில் தனது பங்கை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் தமிழக அரசின் நிதிச்சுமை கூடியுள்ளது.

* மத்திய வரிகளில் மாநில அரசின் பங்காக கிடைக்கும் தொகை 2016-17-இல் ரூ.24,538 கோடி, 2017-18-ஆம் ஆண்டில் ரூ.27,224 கோடி, மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் உதவி மானியங்கள் 2016-17-இல் ரூ.20,709 கோடி, 2017-18-இல் ரூ.20,231 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பற்றாக்குறை


* 2017-18 பட்ஜெட்டில் தமிழகத்தின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 363 கோடியாகவும், மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 293 கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது. இதனால் வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடியாக இருக்கும்.

*    2016-17-இல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ரூ. 22,815 கோடி கடனை அரசு ஏற்றுள்ளது. இதனால் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதத்தை காட்டிலும் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும். இதற்காக தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.

*    2017-18-இல் நிதிப் பற்றாக்குறை ரூ. 41,977 கோடியாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.79 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு உட்பட்டே இருக்கும். 2018 மார்ச் இறுதியில்
நிகர கடன் நிலுவை ரூ. 3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடியாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 20.90 சதவீதமாக இருக்கும். இது அனுமதிக்கப்பட்ட 25 சதவீதத்துக்குள் இருக்கும். நிதி ஆதாராங்கள் குறைந்து வரும் நெருக்கடியான சூழலில் இந்த பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளது. உறுதியற்ற நிலையில் உள்நாட்டுப் பொருளாதாரம் இருக்கும் சூழலில் தமிழகத்தின் பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் கடினமான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

விவசாய கடன்


*    சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய குறுகியகாலப் பயிர் கடன்களையும், நடுத்தரகால மற்றும் நீண்டகால விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் செலுத்தப்பட வேண்டிய ரூ.4,893.48 கோடி மூலக் கடனும், ரூ.386.77 கோடி வட்டித் தொகையுமாக, மொத்தம் ரூ.5,280.25 கோடி நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தொகையை 5 கட்டங்களாக திரும்பச் செலுத்துவதால் ஏற்படும் கூடுதல் வட்டித் தொகை ரூ.760.49 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6,040.74 கோடி நிதிச்சுமையை அரசு ஏற்றுள்ளது. இதனால், 12.02 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இதில், 1,794.66 கோடி கடந்த ஆண்டில் கூட்டுறவு வங்கிகளுக்கு திரும்பத் செலுத்தப்பட்டது. இதற்காக ரூ.1,830.50 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2017-18-ஆம் ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர் கடன்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வீட்டு வசதி


*    2016-17-ஆம் ஆண்டில் ஏழைகளுக்கான வீட்டுவசதி இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது. பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (ஊரகம்) கீழ் 2016-17-ஆம் ஆண்டில், தமிழகத்தில் 1.78 லட்சம் வீடுகளைக் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. 2016-17-ஆம் ஆண்டில் முதலமைச்சரின் சூரிய சக்தி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் மேலும் 20 ஆயிரம் வீடுகள் ரூ.420 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (ஊரகம்) கீழ் 2017-18-ஆம் ஆண்டில் வீடு ஒன்றுக்கு ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் 1.76 லட்சம் வீடுகளை இந்த அரசு கட்ட உள்ளது. இதில் வீடு ஒன்றுக்கு மத்திய அரசின் பங்கு ரூ.72 ஆயிரமாகவும், மாநில அரசின் பங்கு கான்கிரீட் கூரை அமைக்க வழங்கப்படும். ரூ.50 ஆயிரம் உட்பட ரூ.98 ஆயிரமாக இருக்கும். எனவே, இந்த திட்டத்துக்கான மொத்த ஒதுக்கீடான ரூ.3,082.39 கோடியில் மாநில அரசின் பங்கு நிதி ரூ.1,761.98 கோடி ஆகும். முதலமைச்சரின் சூரிய சக்தி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2017-18-ஆம் ஆண்டில் ரூ.420 கோடி செலவில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். 2017-18-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தமாக ரூ.3,502.39 கோடி செலவில் 1.96 லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் ஸ்கூட்டர் திட்டம்


*    மகளிருக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட முன்னோடி திட்டங்களான பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், தொட்டில் குழந்தைகள் திட்டம் ஆகியவை பெண் குழந்தை களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகின்றன. இந்த திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருமண உதவி திட்டங்களின் கீழ் மாங்கல்யத்துக்காக 8 கிராம் தங்கம், பட்டதாரி அல்லாத பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம், பட்டப் படிப்பு, டிப்ளமா படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங் களுக்கு ரூ.723 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.20 ஆயிரத்துக்கு மிகாமல் 50 சதவீத மானியம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மானியம்


*    தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு என்ற தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் முக்கிய கொள்கையில் எந்தத் தளர்வும் செய்யாமல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் மானிய விலையில் தொடர்ந்து வழங்கப்படும். 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்டமதிப்பீடுகளில் உணவு மானியத்துக் காக ரூ.5,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சந்தை அளவில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக விலைக் கட்டுப்பாட்டு நிதியம் ரூ.100 கோடி அளவில் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. பண்ணைப் பசுமை நுகர்வோர் மையங்கள், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் மற்றும் அம்மா உப்பு போன்ற பல்வேறு புதுமை முயற்சிகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

முதல்வர் காப்பீட்டு திட்டம்


*    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் இந்த அரசின் முன்னோடித் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் 1.58 கோடி குடும்பங்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உயர்தர மருத்துவ வசதிகளைப் பெறும் வகையில் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 2016-17-ஆம் ஆண்டில் ரூ.662.86 கோடி அளவுக்கு 3.39 லட்சம் நோயாளிகள் சிகிச்சைப் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகள் ரூ.225.28 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அந்த வருவாய், மருத்துவமனைகளின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டம் 2017-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 312 கூடுதல் சிகிச்சைகள் சேர்க்கப்பட்டு, சிறப்பு சிகிச்சைகளுக்கு ரூ.2 லட்சமாக காப்பீட்டு அளவு உயர்த்தப்பட்டுள்ளது. 2017-18-ஆம் ஆண்டு வரவு-செலவு திட்ட மதிப்பீடு களில் இத்திட்டத்துக்கு என்று ரூ.1,348 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ பட்ட மேற்படிப்பு


*    தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 4 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. போதுமான தகுதி வாய்ந்த டாக்டர்களின் இருப்பு எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2011-ஆம் ஆண்டில் 1,945 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை, 2016-17-ஆம் ஆண்டில் 2,750 ஆக உயர்ந்துள்ளது. இந்த அரசு எடுத்த முயற்சியின் விளைவாக, 2016-17-ஆம் ஆண்டில் 1,188 ஆக இருந்த மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களின் எண்ணிக்கை 2017-18-ஆம் ஆண்டில் 1,362 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

7-வது ஊதியக்குழு பரிந்துரை


*    தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள அனைத்து கூறுகளையும் ஆய்வுசெய்து அதன் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்கும் பொருட்டு உயர் அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.

*    புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.290 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஓய்வூதியதாரர்கள் பயன் அடையும் வகையில் இந்த திட்டம் அவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்துவ தற்காக ரூ.123 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்காக ரூ.22 ஆயிரத்து 394 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி


*    பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புவியியல் தகவல் முறையில் (ஜிஐஎஸ்) தயாரிக்கப்பட்ட பள்ளி இருப்பிட வரைபட செயலி உதவியுடன், கல்வி வசதி இல்லாத பகுதிகள் கண்டறியப்பட்டு 2011-ஆம் ஆண்டு முதல் 226 புதிய ஆரம்பப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. வசிப்பிடங்களுக்கு அருகேயுள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் சேர்க்கையை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து உதவிகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 113 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 829 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, 2017-18-ஆம் ஆண்டில் 150 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். பள்ளிக்குச் செல்லவில்லை என்று கண்டறியப்பட்ட 36 ஆயிரத்து 930 குழந்தைகளை வரும் ஆண்டில் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல் துறை


*    2011-ஆம் ஆண்டிலிருந்து ரூ.1,655 கோடி செலவில் 14,172 வீடுகள் கட்டுவதற்காக ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. 2017-18-ஆம் ஆண்டில் ரூ.450 கோடி செலவில் கூடுதலாக 3 ஆயிரம் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும். 2017-18-ஆம் ஆண்டில் ரூ.30 கோடி செலவில் கூடுதலாக 49 காவல் நிலையங்களுக்கு கட்டிடங்கள் கட்டித் தருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் காலியாக உள்ள இடங்களுக்கு மேலும் 10,500 பேரை 2017-18-ம் ஆண்டில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தேர்வு செய்யும். காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்துக்காக ரூ.47 கோடியே 91 லட்சம் உட்பட காவல் துறைக்காக ரூ.6,483 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2016-17-ஆம் ஆண்டில் 15 நீர் தாங்கி வண்டிகள் மற்றும் 5 சிறிய நுரை தகர்வு வண்டிகள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 2017-18-ஆம் ஆண்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ரூ.253 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2017-18-ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் சிறைச்சாலைகள் துறைக்கு ரூ.282 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை


*    2017-18-ஆம் ஆண்டில் எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு ரூ.2,656 கோடியும், ஆர்எம்எஸ்ஏ திட்டத்துக்கு ரூ.1,194 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.26 ஆயிரத்து 932 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. கல்வியில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் முதல் தலைமுறை பட்டதாரி மாணவ-மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 2 லட்சத்து 29 ஆயிரம் பேர் பயனடைந்தனர். வரும் ஆண்டிலும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த ரூ.680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் காரணமாக 2015-16-ம் ஆண்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 44 சதவீதமாக உயர்ந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ரூ.139 கோடி உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்க பட்ஜெட்டில் ரூ.320 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்காக ரூ.3 ஆயிரத்து 680 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

மாநில நெடுஞ்சாலைகள்

*    கடந்த 6 ஆண்டுகளில் 864 கி.மீ. நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் ரூ.507 கோடி செலவில் இருவழித்தட சாலைகளாகவும், 3,019 கி.மீ. நீளமுள்ள மாவட்ட முக்கிய சாலைகள் ரூ.1,555 கோடி செலவில் இருவழித்தடங்கள் அல்லது இருவழிச் சாலைகளாகவும் அகலப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 115 கி.மீ. நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளும், 107 கி.மீ. நீளமுள்ள மாவட்ட முக்கிய சாலைகளும் ரூ.160 கோடி செலவில் வரும் 2017-18-ஆம் ஆண்டில் அகலப்படுத்தப்படும். ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2017-18-ஆம் ஆண்டில் 1000 கி.மீ. தூர சாலைகளை அகலப்படுத்தும் பணிகளையும், 3,000 கி.மீ. தூரமுள்ள சாலைகள் மேம்பாடு, 200 பாலங்கள்/சிறு பாலங்கள் கட்டுவதற்கான பணிகளையும் அரசு மேற்கொள்ளும். இத்திட்டத் துக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் கோட்டங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை மேம்படுத்தி பராமரிக்கும் பணிகள் ரூ.1,774.31 கோடி திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2017-18-ஆம் ஆண்டில் செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தமுறை விருதுநகர் கோட்டத்துக்கும் விரிவுபடுத்தப்படும். அதிக சாலை விபத்துகள் ஏற்படும் இடங்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கான விரிவான திட்டம் ரூ.1,130 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்த ஆண்டில் ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் ரூ.200 கோடியிலும், சிறப்பு சாலைப் பாதுகாப்பு திட்டப் பணிகள் ரூ.100 கோடியிலும் மேற்கொள்ளப்படும். அரசு, தனியார் பங்களிப்பு முறையில் ரூ.1,400 கோடியில் 146 கி.மீ. நீளமுள்ள சாலைகளை நான்குவழிச் சாலைகளாகத் தரம் உயர்த்தும் பணிகள் இந்த ஆண்டில் தொடங்கப்படும். இதற்காக ரூ.1,508 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் நபார்டு வங்கி கடனுதவியுடன் ரூ.200 கோடி செலவில் பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். நெடுஞ்சாலைத் துறைக்காக 2017-18 பட்ஜெட்டில் ரூ10,067 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மின்சாரம்

*    கடந்த 2011-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 1,040 யூனிட்களாக இருந்த தனிநபர் மின்பயனீட்டு அளவு, 2015-16-ஆம் ஆண்டில் 1,280 யூனிட்களாக உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவின் சராசரி தனிநபர் மின்பயனீட்டு அளவு 1,075 யூனிட்களாக உள்ளது. எண்ணூரில் விரிவாக்க திட்டம் 660 மெகா வாட், எண்ணூர் சிறப்பு மண்டலத்தில் 660 மெகாவாட் திறன் கொண்ட இரு அலகுகள், 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட வடசென்னை அனல் மின்திட்டம் உட்பட பல்வேறு மின்திட்டப் பணிகளை அரசு விரைவுபடுத்தி வருகிறது. 2016-17 ஆண்டில் இதுவரையில் காற்றாலை மூலம் 13,431.78 மில்லியன் யூனிட், சூரிய சக்தி மூலம் 1,721.37 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்பட்டுள்ளது.

ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் பசுமை ஆற்றல் மின்தொடர் திட்டத்தை ரூ.1,593 கோடி செலவில் அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், ரூ.5,014 கோடி செலவில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன் தமிழ்நாடு மின்தொடரமைப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களுக்காக 2017-18 பட்ஜெட்டில் ரூ.974 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் "உதய்' திட்டத்தில் தமிழ்நாடு இணைந்துள்ளது. இத்திட்டத்தின்படி, தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ரூ.30,420 கோடி அளவிலான கடன் தொகையில் 75 சதவீதமான ரூ.22,815 கோடி கடனை மாநில அரசே ஏற்றுக் கொண்டு அக்கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நிதியை திரட்டுவதற்காக வெளிச்சந்தையில் கடன் பத்திரங்களை வெளியிட்டு வருகிறது. மீதமுள்ள 25 சதவீதமான ரூ.7,605 கோடி கடன் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிடும் மின் கடன் பத்திரங்களாக மாற்றப்படும்.

சிறு மற்றும் நடுத்தரத் தொழில்


*    குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மற்றும் கரூர் மாவட்டங்களில் தலா ஒரு ஜவுளிக் குழுமம், தருமபுரியில் உணவுப் பொருட்கள் குழுமம், ராமநாதபுரத்தில் கடல் உணவுக் குழுமம் ஆகியன அமைக்கும் திட்டம் தமிழ்நாடு முதலீடு ஊக்குவிப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ்,
ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதி உதவியுடன் ரூ.100 கோடியில் செயல்படுத்தப் படும். நெகமம், பூதலூர், ஈரோடு ஆகிய இடங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட தென்னை நார் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களாகிய கட்டுமானப் பொருட்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலவளை பொருட்கள், தென்னை நார் ஒட்டுப் பலகைகள், தென்னை நார் இழைமக் கட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்க ரூ. 22 கோடியில் தென்னை நார் கயிறு குழுமங்கள் ஏற்படுத்தப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான மூலதன மானிய ஒதுக்கீடு ரூ.80 கோடியில் இருந்து ரூ.160 கோடியாக உயர்த்தப்படுகிறது. மதுரை, சேலம், திருச்சியில் வணிக ஊக்குவிப்பு மையங்கள் அமைக்க குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் சங்கங்களுக்கு தலா ரூ.5 கோடிக்கு மிகாமல் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத் துக்காக ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இத்தகைய தொழில் அலகுகளுக்கு சந்தை வாய்ப்புகளை பரவலாக்குவதற்காக பன்னாட்டு வர்த்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படும். இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் அயல்நாட்டுச் சந்தையில் போட்டியிடுவதற்கான திறனை அதிகரிப்பதற்கு ரூ.10 கோடியில் ஏற்றுமதியை ஊக்குவித்தல் மற்றும் சந்தைப்படுத்துவதற்கு ஆதரவு அளிக்க ஒரு சிறப்புத் திட்டம் தொடங்கப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அலகுகளில் மின் சேமிப்பை மேம்படுத்துவதற்கான ஒரு சிறப்புத் திட்டம் ரூ.5 கோடியில் செயல்படுத்தப்படும். மின் திறன் தணிக்கை அடிப்படையில் உரிய சலுகைகள் வழங்கப்படும். இந்த பட்ஜெட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைக்கு ரூ.532 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

குடிநீர்


*    தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை 62 சதவீதம் குறைந்துள்ளது இதனால் நிலத்தடி நீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது. சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவில் 10 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த வறட்சியான சூழ்நிலையை சமாளிக்க, புதிய ஆழ்துளை கிணறுகள் அமைப்பது, ஏற்கெனவே உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளைப் புதுப்பித்து, விசை பம்புகளை மாற்றுதல் மற்றும் தேவையான பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்தல் போன்ற பணிகளை கிராமப்புறங்களில் ரூ.460 கோடி, நகர்ப்புறங்களில் ரூ. 150 கோடி என மொத்தம் ரூ.610 கோடியில் அரசு செய்து வருகிறது.

புதிய குடியிருப்புகள்


*    குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினருக்கு வீட்டுவசதி அதிக அளவில் கிடைக்கும் வகையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வீடுகளைக் கட்டி வருகிறது.

*    குறைந்த வருவாய் பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு அவர்களது வாங்கும் திறனுக்கேற்ப போதிய வீட்டுவசதி கிடைக்கச் செய்ய தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக்கழகம் மூலம் வீட்டுவசதி நிதியத்தை செயல்முறைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தனியார் முதலீட்டையும் அதிக அளவில் ஈர்த்து, குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான வீடுகளை அதிக அளவில் கட்டி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த முயற்சியில் பங்குகொள்ள தேசிய வீட்டுவசதி வங்கியும் ஒப்புக்கொண்டுள்ளது.

*    தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் ரூ.3,707 கோடி மதிப்பீட்டில் ஏற்கெனவே கட்டப்பட்டு வரும் 22,178 குடியிருப்பு பணிகள் 2017-18-இல் முடிக்கப்படும். தவிர, ரூ.808 கோடி செலவில் 3,300 புதிய குடியிருப்புகளும் கட்டப்படும்.

சுகாதாரம்


*    "முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், நகர்ப்புற மருத்துவக் கட்டமைப்புத் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நினைவு மகப்பேறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங் களுக்காக 2017-18-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சுகாதாரத்துறைக்கு ரூ.10,158 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி


*    அரசியலில் பெண்கள் அதிகாரம் பெறும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளில், அவர்களுக்கான இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த செலவினங்களுக்காக 2017-18-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.174 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ பட்ட மேற்படிப்பு


*    தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 4 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. போதுமான தகுதி வாய்ந்த டாக்டர்களின் இருப்பு எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2011-ஆம் ஆண்டில் 1,945 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை, 2016-17-ஆம் ஆண்டு 2,750 ஆக உயர்ந்துள்ளது. இந்த அரசு எடுத்த முயற்சியின் விளைவாக, 2016-17-ஆம் ஆண்டில் 1,188 ஆக இருந்த மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களின் எண்ணிக்கை 2017-18-ஆம் ஆண்டில் 1,362 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா


*    மக்களிடம் கழிவறைகள் கட்டி பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், திடக்கழிவு மேலாண்மையை செம்மைப்படுத்தவும், இந்திய அரசு தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கி, அதன் மூலம் 100 சதவீத சுகாதார இலக்கை அடைய உறுதி பூண்டுள்ளது. 2016-2017 நிதியாண்டில் 15 லட்சம் வீட்டு கழிவறைகளும், 50 சமூக சுகாதார வளாகங்களும் ரூ.1821 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டது. 2017-18 நிதியாண்டில் தூய்மை இந்தியா இயக்கத்தின் (ஊரகம்) கீழ், 24 லட்சம் வீட்டு கழிவறைகளும், 50 சமூக சுகாதார வளாகங்களும் கட்டப்படும். ஊரகப் பகுதியில் திடக்கழிவுகளை சேகரித்தல், பிரித்தல் மற்றும் அகற்றுதல் போன்ற பணிகளுக்காக ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உள்ள 65 ஆயிரம் பணியாளர்களை தூய்மை காவலர்களாக இந்த அரசு பயன்படுத்தும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்

*    ""மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. மாநிலத்தின் இத்திட்டச் செயலாக்கம் குறித்து மத்திய அரசு வெகுவாகப் பாராட்டியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பண்ணைக் குட்டைகள் அமைத்தல், கழிவறைகள் கட்டுதல், மரம் நடுதல், கோழி மற்றும் கால்நடைகள் வளர்ப்புக் கொட்டகைகள் அமைத்தல் போன்ற புதுமையான பணிகளைத் தழுவி, தற்போது தேசிய அளவில் இவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நிலவி வரும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலை நாட்களின் எண்ணிக்கை நூறிலிருந்து நூற்று ஐம்பதாக உயர்த்தப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், தொழிலாளர் கூலிக்கான தொகை முழுவதையும் இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு வங்கி மூலம் மத்திய அரசே நேரடியாக விடுவித்து வருகிறது. பொருட்களுக்கான செலவில் மத்திய அரசு அதன் பங்கான 75 சதவீதத்தை, மாநில வரவு-செலவுத் திட்டத்தின் வழியாக விடுவித்து வருகிறது. இதனால், மாநில அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகை பெருமளவில் குறைந்துள்ளது. 2017-2018-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை


*    சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வேகமாக ஏற்பட்டு வரும் நகரமயமாதல் மற்றும் தொழில் வளர்ச்சித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, முக்கியமான நெடுஞ்சாலைகளை இணைக்கும் 141.60 கிலோமீட்டர் நீளமுள்ள ஒன்பது முக்கியமான இணைப்புச் சாலைகளை, நான்குவழி அல்லது ஆறுவழிச் சாலைகளாகவும் மேம்படுத்து வதற்கு 744 கோடி ரூபாய் அளவிலான பணிகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பணிகளில், 232.20 கோடி ரூபாய்க்கான பணிகள் 2017-2018-ஆம் ஆண்டில் முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும். 13,000 கோடி ரூபாய் செலவிலான சென்னை சுற்றுவட்டச் சாலை திட்டம், ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் ஆய்வில் உள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டப் பணியான, தேசிய நெடுஞ்சாலை எண் 5-ஐ இணைக்கும், எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரையிலான வடக்கு துறைமுக அணுகுசாலையை அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டப்பணிக்காக 951 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்


*    மாநிலம் முழுவதும் 35 மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூக்கையூரில் 113.90 கோடி ரூபாய் செலவில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைப்பது உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் 171.12 கோடி ரூபாய் செலவில் 2017-2018-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் படும். கடல் அரிப்பினால், கடலோர கிராமங்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. கடலோரப் பாதுகாப்பிற்காக, மணல் நிரப்பப்பட்ட புவிசார் செயற்கை குழாய்களால் தயாரிக்கப்பட்ட நீரடி நீர்க்கால்களை, சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப மையம் வடிவமைத்துள்ளது. இத்தொழில்நுட்பத்தை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடலூர்- பெரியகுப்பம் கிராமத்தில், முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தொழில்நுட்பம், கடல் அலைகளிலிருந்து கடலோரப் பகுதியைப் பாதுகாப்பதுடன், மீன்வளத்தையும் அதிகரிக்கிறது. எனவே, நபார்டு வங்கி கடனுதவியுடன், அதிக கடல் அரிப்பு ஆபத்துள்ள பகுதிகளில் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 2017-2018-ஆம் ஆண்டில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல் அரிப்பைத் தடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 2017-2018-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மீன்வளத் துறைக்கு, மொத்தமாக 768 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திறன்மிகு நகரங்கள்

*    2016-17-ஆம் ஆண்டில் திறன்மிகு நகரங்கள் இயக்கத்தின் கீழ் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் மாநகராட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 2015-16-ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் சென்னை, கோவை மாநகராட்சிகள் ஏற்கெனவே சேர்க்கப்பட்டன. அவற்றுக்கான சிறப்பு நோக்கு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, திட்டப் பணிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய மதிப்பீடுகளில் திறன்மிகு நகரங்கள் இயக்கத்தின் கீழ் ரூ.772 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் திறன்மிகு நகரம் இயக்கத்தின் கீழ் ரூ.1,200 கோடியும், நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான திட்டங்களுக்காக ரூ.1,400 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் நடைபெறும் பணிகளை நிறைவு செய்ய ரூ.386 கோடியும், சென்னை பெருநகர மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நிறைவு செய்ய ரூ.400 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.2,451 கோடியே 84 லட்சத்தில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் 2015-ஆம் ஆண்டு ஜூன் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

*    இத்திட்டத்தின் கீழ் ஏழு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.2,223 கோடியே 88 லட்சத்தில் 13 திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இது வரை ரூ.403 கோடியே 63 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ரூ.563 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நீர் ஆதார மேலாண்மை


*    நீர் ஆதாரங்களைச் சிறப்பாக மேலாண்மை செய்வதற்காகவும், முழுமையான அளவில் அவற்றைப் பயன்படுத்துவதற்காகவும், ஒருங்கிணைந்த முயற்சிகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் நீர் ஆதார மேலாண்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.300 கோடியாக உயர்த்தி குடிமராமத்து முறையை அரசு வலுப்படுத்தும்.

*    காவேரி வடிநிலைப் பகுதியின் வெண்ணாறு உப வடிநிலப் பகுதியில், பருவநிலை மாற்றத் தழுவல் திட்டத்தின் முதல்கட்ட பணிகளை ரூ.960.66 கோடி செலவில் 2015-16 ஆண்டுமுதல் ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக 2016-17 பட்ஜெட்டில் ரூ.71 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2017-18 பட்ஜெட்டில் ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*    நீர்வள, நிலவளத் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை உலக வங்கி கடனுதவியுடன் ரூ.3,042 கோடி மதிப்பீட்டில் 2017-18-இல் செயல்படுத்த அரசு வழிவகுத்துள்ளது. தமிழகத்தில் உலக வங்கி உதவியுடன் 107 அணைகளில் மேற்கொள்ளப் பட்டுள்ள அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டப் பணியில் தற்போது 22 அணைகளில் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மற்ற அணைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத் செலவுகளுக்கு 2017-18 பட்ஜெட்டில் ரூ.354 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

*    தாமிரபரணி நதியை நம்பியாற்றுடன் இணைப்ப தற்கான பணிகள் 4 கட்டமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப் படும் விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அத்திக்கடவு - அவிநாசி பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு இந்த பட்ஜெட்டில் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*    நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப் படும் பாசனத் திட்டங்களுக்காக 2017-18 பட்ஜெட்டில் ரூ.279 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நீர்வள ஆதாரங்கள் துறைக்கு ரூ.4,791 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

செ
ன்னை மெட்ரோ ரயில்

*    மெட்ரோ ரயில் திட்டத்தில் 45 கி.மீ. தொலைவுக்கு தொடங்கப்பட்ட முதல் கட்ட பணிகளில் கோயம்பேட்டில் இருந்து பரங்கி மலை மற்றும் சின்னமலையில் இருந்து விமான நிலையம் என 21 கி.மீ. தொலைவுக்கு உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

*    சுரங்க வழித்தடப் பகுதிகளிலும் பணிகளில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு நேரு பூங்கா வரையிலான முதல் சுரங்க வழித்தடப் பகுதியில் மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடத்தை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர்/ விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கும் பணிகள் ரூ.3,770 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டத்தில் 2-வது கட்ட பணிகளாக, மொத்தம் 107.5 கி.மீ கொண்ட 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கும் திட்டம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் சுழல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

முக்கியமான நெடுஞ்சாலை இணைப்பு


*    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வேகமாக ஏற்பட்டு வரும் நகரமயமாதல் மற்றும் தொழில் வளர்ச்சித் தேவைகளைக் கருத்தில் கொண்டு முக்கிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் 141.60 கி.மீ நீளமுள்ள 9 முக்கியமான இணைப்பு சாலைகளை நான்குவழி அல்லது ஆறு வழிச் சாலைகளாகவும் மேம்படுத்த ரூ.744 கோடி அளவிலான பணிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு முதல்கட்டமாக 2017-18 பட்ஜெட்டில் ரூ232.20 கோடி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.13 ஆயிரம் கோடி செலவிலான சென்னை சுற்றுவட்டச் சாலை திட்டம், ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் ஆய்வில் உள்ளது. இத்திட்டத்தின் முதல்கட்டப் பணியான, தேசிய நெடுஞ்சாலை எண் 5-ஐ இணைக்கும் எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரையிலான வடக்கு துறைமுக அணுகுசாலையை அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டப் பணிக்காக ரூ.951 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

தொழில் துறை


*    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.532 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் "உதய்' திட்டத்தில் சேர்ந்ததன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.1,335 கோடி மிச்சம் ஆகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் பிளாஸ்டிக் தொழில் பூங்கா அமைக்க ரூ.264 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. மூலதன மானியம் ரூ.80 கோடியில் இருந்து ரூ.160 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

*    மதுரை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் எம்எஸ்எம்இ சங்கங்கள் மூலம் வர்த்தக மையம் அமைக்க அதிகபட்சமாக 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்கோ தொழிற்பேட்டையில் 3 தர பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் ரூ.3,957 கோடி முதலீட்டில் நில வங்கி அமைக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

உயர் கல்வித்துறை


*    கல்வியில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் முதல் தலைமுறை பட்டதாரி மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டத்தைஅரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 2 லட்சத்து 29 ஆயிரம் பேர் பயனடைந்தனர். வரும் ஆண்டிலும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த ரூ.680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் காரணமாக 2015-16-ஆம் ஆண்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 44 சதவீதமாக உயர்ந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ரூ.139 கோடி உள்பட அனைத்துப் பல்கலைக்கழகங் களுக்கும் மானியம் வழங்க பட்ஜெட்டில் ரூ.320 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் உயர் கல்வித்துறைக்காக ரூ.3 ஆயிரத்து 680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலவச வீட்டுமனைப் பட்டா

*    2016-2017 -ஆம் ஆண்டில், 2.72 இலட்சம் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை இந்த அரசு இதுவரை வழங்கியுள்ளது. 2017 - 2018 நிதியாண்டிலும் ஏழைக் குடும்பங்களுக்கு 3.50 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்க அரசு
இலக்கு நிர்ணயித்துள்ளது.

தமிழ் வளர்ச்சித்துறை

*    பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் ஆராய்ச்சிப் பணிகளுக்கு உள்ள வசதிகளை 4.36 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் இந்த அரசு மேம்படுத்தி உள்ளது. மேலும், மதுரையிலுள்ள, உலகத் தமிழ்ச் சங்கத்தில் பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்காக 37 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களின் உயரிய கலாச்சார பாரம்பரியத்தினை பறைசாற்றும் விதமாக, இத்தமிழ்ச் சங்கத்தில் தமிழர் கலாச்சார பாரம்பரிய அருங்காட்சியகத்தை இந்த அரசு நிறுவும். 2017-2018-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக 6 கோடி ரூபாய் உட்பட, தமிழ் வளர்ச்சித் துறைக்காக 48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

ஆவின் பாலகங்கள்


*    ஆவின் பொருட்களை பிரபலப்படுத்தும் விதமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 200 புதிய ஆவின் பாலகங்கள் நிறுவப்படும். மதுரையில் நாளொன்றுக்கு 25,000 லிட்டர் கொள்ளளவு திறன்கொண்ட, பல்வேறு வகையான நறுமண பால் தயாரிக்க புதிய உயர்வெப்ப நிலையில் பதப்படுத்தப்படும் ஆலை ரூ.40 கோடி செலவில் அமைக்கப்படும்.

உயர்நிலைப் பள்ளி


*    2017 - 2018 நிதியாண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

அரசால் கண்டறியப்பட்டுள்ள 36,930 பள்ளி செல்லாத குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.552 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மாணவ, மாணவியருக்கு சீருடை, புத்தகப்பை, சைக்கிள் உள்ளிட்டவை வழங்க ரூ.1,503 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.விலையில்லா மடிக்கணினி வழங்குவதற்காக ரூ.758 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு பயிற்சி

*    2017-2018-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஒரு இலட்சம் இளைஞர் களுக்கு பயிற்சியளிப்பதற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில், மத்திய அரசின் நிதியுதவியுடன் இந்தியப் பன்னாட்டு திறன்பயிற்சி மையங்களை நிறுவிட இந்த அரசு முடிவு செய்துள்ளது.

அயல் நாடுகளில் வேலை வாய்ப்பைத் தேடுபவர்களுக்கு, மேம்பட்ட பயிற்சிகளையும், அயல்நாட்டு மொழிப் பயிற்சிகளையும் இம்மையங்கள் மூலமாக வழங்கவும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவும் இத்திட்டம் உதவும். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை இரட்டிப்பாக்கியதன் மூலம், மற்றுமொரு தேர்தல் வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. இதன்படி, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் களுக்கு 100 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 150 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 200 ரூபாயிலிருந்து 400 ரூபாயாகவும், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு கல்வித்தகுதி உள்ளவர்களுக்கு 300 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும் மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களின் தகுதிக்கேற்ப திறன் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர அரசு நடவடிக்கை எடுக்கும்.

கடன் சுமை

*    தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை ரூ.3 லட்சம் கோடி (ரூ.3,14,366 கோடி) என்றார். இதில் பெரும்பான்மையானயான கடன் சுமை தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலமாக ஏற்பட்டதாகும். நிதிப் பற்றாக்குறை ரூ. 41,977 கோடி என்ற அளவில் உள்ளது.

முக்கிய ஒதுக்கீடுகள்

*    தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு ரூ.2 ஆயிரம் கோடி.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி.

*    தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி.

* வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ.741 கோடியே 12 லட்சம்.

*    ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க ரூ.150 கோடி.

*    தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு 10,500 இளைஞர்கள் தேர்வு.

*    உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இயற்கை மரணம் அடையும் விவசாயிகளின் குடும்பத்தினருக்கான நிவாரணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்வு.

*    2017-18-இல் 1 கோடி மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம்.

*    பயிர்க் காப்பீடு மானியத்துக்கு ரூ.522 கோடியே 70 லட்சம்.

* 1 லட்சம் ஏக்கரில் நுண்ணீர்ப் பாசனத்துக்கு ரூ.369 கோடி.

*    2 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தொடங்க ரூ.100 கோடி.

*    12 ஆயிரம் கறவைப் பசுக்கள், 6 லட்சம் ஆடுகள் வழங்க ரூ.182 கோடி.

*    நாட்டு மரபின மாடுகளைப் பாதுகாக்க கூடுதல் நிதி.

* மதுரையில் ரூ.40 கோடியில் ஆவின் பதப்படுத்தும் ஆலை.

*    கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 200 ஆவின் பாலகங்கள்.

*    மீன்பிடி தடை காலங்களில் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.4,500 ஆக உயர்வு

*    கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி பயிர்க்கடன்.

*    குடிமராமத்து திட்டத்துக்கு ரூ.300 கோடி.

*    நீர்வள, நிலவள திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகளுக்கு ரூ.814 கோடி.


*    அணைகள் புனரமைப்பு, மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.354 கோடி.

*    தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் 3-வது, 4-வது கட்டப் பணிகளுக்கு ரூ.300 கோடி.

*    அத்திக்கடவு - அவிநாசி பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல், குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ரூ.250 கோடி.

*    எண்ணூர் துறைமுகம் - தச்சூர் வடக்கு துறைமுக சாலை திட்டத்துக்கு ரூ.951 கோடி.

*    உதய் திட்டத்தில் இணைந்த தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,335 கோடி சேமிப்பு.

*     மின்சார மானியம் ரூ.8,538 கோடி.

*    107.5 கி.மீட்டரில் 3 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகளை செயல்படுத்த திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

*    நடப்பு ஆண்டில் 1,000 கிராமக் கோயில்கள் புதுப்பிக்கப்படும்.

*    தொழில் தொடங்க இணையதளம் மூலம் அனுமதி.

*    உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ரூ.75 கோடி.

*    விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்க ரூ.490 கோடி.

*    பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டத்துக்கு ரூ.758 கோடி.

*    தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.800 கோடி.

*    ஊரக தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.980 கோடி.

*    நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.600 கோடி.

*    ரூ.3,502 கோடியே 39 லட்சத்தில் 1 லட்சத்து 96 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.

*    ரூ.2 ஆயிரம் கோடியில் 20 ஆயிரம் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டப்படும்.

*   மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.1,348 கோடி.

*    சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.3,790 கோடி.

*    நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.13,996 கோடி ஒதுக்கீடு

*    காவல்துறையினர் வீட்டு வசதிக்கு ரூ. 450 கோடி ஒதுக்கீடு:

*    விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு

*    மின்சாரம் - எரிசக்தித் துறைக்கு ரூ.16,998 கோடி ஒதுக்கீடு அதன் விவரம்: மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு: அமைச்சர் தகவல்

*    கால்நடை பராமரிப்பிற்கு ரூ.1,161 கோடி நிதி ஒதுக்கீடு

*    திருமண உதவித் திட்டங்களுக்கு ரூ.723 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

*    விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு

*    வருவாய் பற்றாக்குறை ரூ.15,931 கோடி என மதிப்பீடு

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :