Add1
logo
நெடுவாசலில் 19-வது நாளாக போராட்டம்: - உண்ணாவிரதம் இருந்த சிறுவர்கள் (படம்) || தொழிலாளர்களின் இல்லங்களில் இன்பம் பூத்துக் குலுங்கட்டும்!: மு.க.ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி || கொடநாடு கொலை-கொள்ளை விவகாரங்களை உள்துறை செயலாளர் கண்காணிக்க வேண்டும்!: மு.க.ஸ்டாலின் || இருசக்கர வாகனம் பேருந்தில் மோதி விபத்து: மூவர் பலி! || மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துச் செய்தி || தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த தகவல் தெரிவித்த விவகாரம்; தமிழக முதல்வர் உருவபொம்மை எரிப்பு! (படம்) || வெங்கடேஷுக்கு அழைப்பு விடுத்து போஸ்டர்: விவேக்கை ஆதரிக்கும் 30 எம்.எல்.ஏ.க்கள்: EPS-OPS அதிர்ச்சி || குடிதண்ணீரைத் திருடிய தனியார் குடிநீர் நிறுவனம்; வாகனங்களை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்! (படம்) || மே நாள் உறுதிமொழி: உலகத் தொழிலாளர்களின் உரிமைகள் காப்போம்! - தொல்.திருமாவளவன் || எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? இளங்கோவன் கேள்வி || எச். ராஜா நடமாட முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை || 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தலைமறைவு || முரண்பாடாக பேசி வருகிறார்கள்: ஓ.பி.எஸ். அணி மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு ||
Logo
இனிய உதயம்
01-04-2017


ரைச்சல்மிக்க நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்ட நிலையில் நாங்கள் ஊரப்பாக்கத்தில் குடியேறினோம். அந்த வீட்டைச்சுற்றிலும் மரங்கள் வளர்க்கவேண்டுமென்று அத்தா விரும்பினார்கள். 

வீட்டின் முன்புறத்தில் ஒரு மாமரத்தையும் வீட்டின் இரண்டு பக்கங்களிலும் நெல்லிமரம் ஒருபக்கவாட்டிலும் மற்றொருபக்கம் வாழை, தேக்கு மரங்களையும்  நட்டு வைத்தார்கள். வீட்டின் பின்புறத்தில் தாராளமாக இடமிருந்ததால் மூன்று தென்னை மரங்களையும் ஒரு சப்போட்டா, மூன்று தேக்கு மரங்கள் மற்றும் செடி கொடிகள் என வீடே பசுமை சூழ்ந்து காணப்பட்டது. அதனால்தான் அவ்வீட்டிற்கு பசுங்குடில் என்று பெயர்சூட்டினார்கள்.

வளர்ந்த மரங்களின் நிழல் குளுமைசேர்த்தது. பறவைகளின் ஓசை அத்தாவின் கவிதைகளுக்கு வலிமை சேர்த்தது.

அத்தாவிற்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு அவர்களைச் செயல்படவிடாமல்  சோர்வை ஏற்படுத்தியது.  மருந்துகளின் உதவியோடும் எங்களின் அன்போடும் தோழர்களின் கனிவோடும் இயங்கிக் கொண்டிருந்தார்கள் அத்தா வீட்டிலிருக்கும் நேரங்களில் பெரும்பாலும் புத்தகங்களோடு லயித்துப்போவார். மற்ற நேரங்களில் பேரப்பிள்ளைகளோடு விளையாடுவதில் விருப்பம் காட்டுவார்கள். இறகுப்பந்து, கால்பந்து விளையாடுவார்கள் . சிலம்பம் சுழற்றிக் காண்பிப்பார்கள். அவர்கள் மிகவும் விரும்பிய விளையாட்டுகளில் சிலம்பமும் ஒன்று.

பேரப்பிள்ளைகளுக்கு கதைகளும் நிறைய சொல்வார்கள். நாங்களும் சிறுபிள்ளைகளாக இருக்கையில் கதைகள் கேட்டு உறங்கியதுண்டு.

அம்மா மூட்டுவலியின் காரணமாக நடப்பதற்கு சிரமப்பட்ட வேளையில் அத்தா உறுதுணையாக இருந்தார்கள். எங்கேயாவது பொதுக்கூட்டங்களுக்குச் செல்வதாக இருந்தாலும் மாலைக்குள் திரும்பிவர வேண்டும் என்ற நிலையில்தான் வெளியே செல்வார்கள்.

அத்தாவின் மறைவு அனைவருக்கும் பேரிழப்பாக ஆனது. ""என்னைக் குழந்தை போல பார்த்துக்கொண்டார்களே'' என்று அம்மா சொல்லி அழுதபோது ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. இழப்பின்வலியை ஆற்றும் சக்தி காலத்திடம்தான் உள்ளது.

அத்தாவின் மறைவுக்குப்பின்னர் சென்னையைத் தாக்கிய வர்தா புயல் பசுங்குடிலையும் பதம்பார்த்தது. வீட்டிலுள்ள மரங்கள் சிதைந்துபோயின.  வீட்டின் பின்புறமாக வளர்ந்திருந்த வேம்பும் தேக்கும் சாய்ந்தது.

முன்பக்கத்தில் இருந்த மாமரம் முறிந்து போனது.

மரங்கள் சிதைந்த வீட்டைப்பார்த்து அம்மா சொன்னார்கள், ""அத்தாவோடு சேர்ந்து மரங்களும் போய்விட்டன''.





தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :